கண்மணி... என் கண்ணின் மணி -36-2

அத்தியாயம்: 36-2


/*


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


இருளில் கண்ணீரும் எதற்கு..

மடியில் கண்மூட வா..

அழகே இந்த சோகம் எதற்கு..

நான் உன் தாயும் அல்லவா..விழியின் அந்த தேடலும்

அலையும் உந்தன் நெஞ்சமும்

புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


*/கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து… வேலன் தினகர் இருவருமாக உள்ளே வந்தவர்கள்… நட்ராஜைப் பார்த்து


“முதலாளி… மணி அக்கா உங்கள கூப்பிடுது போங்க…” என்றபடி


“சார் நீங்களும் தான் “ என்று தினகர் பார்த்திபனைப் பார்த்துச் சொல்ல… பார்த்திபனும் நட்ராஜும் அங்கிருந்து கிளம்பினர்…


அவர்களை கிளப்பி விட்டுவிட்டு… தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த… தினகரையும் வேலனையும் பார்த்த ரிஷி புரியாத பார்வையுடன்


“என்னடா நடக்குது… “ உரிமையான மிரட்டலுடன் அவர்களைக் கோபிக்க…


“சொல்றோம் அண்ணாத்த… அதுக்குள்ள அவசரப்பட்டா என்ன அர்த்தம்”


கேட்டபடியே… ரிஷியிடம் ஏதேதோ பேசி நேரத்தைக் கடத்தியபடி இருக்க… அப்போது… வேலன் அலைபேசியில் அழைப்பு ஒலி வந்து உடனேயும் நின்று போக..


“ஓகே தல… சிக்னல் வந்துருச்சு இப்போ போலாம் வாங்க” தினகர் ரிஷியை அழைத்தான்…


”எங்கடா… என்னங்கடா… சொல்லுங்கடா… சொல்லிட்டு எதுவா இருந்தாலும் பண்ணுங்கடா” புரியாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்த ரிஷியை இருவருமாக கையைப் பிடித்து இழுக்க… ஒரு கட்டத்தில் தனது கேள்விகளுக்கு இருவரிடமிருந்தும் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்தவனாக


“சரி சரி கையை விடுங்க… வர்றேன்….” என்ற ரிஷி கைகளை அவர்களிடமிருந்து விடுவித்தபடி… அவர்களோடு கூட நடந்தான்… அந்த அறை முன் வரும் வரை ரிஷியும் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி ஒன்றும் புரியாமல் வந்தான் தான்…


ஆனால் அறை வாசலில் நின்ற போது… கண்கள் அங்கிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகையில் இருந்த போது… அவனுக்கு தன்னை எதற்காக அழைத்தார்கள் என்பது தெரியாமல் போகுமா!!???…“மேனேஜிங் டைரெக்டர்” எழுத்துக்கள் தாங்கிய பலகை அவனைப் பார்த்து புன்னகைத்த போது…


அதைப்பார்த்த அந்த நொடியில் இருந்தே உணர்ச்சி வசப்படாமல் இருக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்து இருந்தான் ரிஷிகேஷ் என்ற ’ஆர்கே’…


மனதில் உணர்வுகளை மறைத்து பழக ஆரம்பித்தவனுக்கு… இன்றும் அது சாதாரணமாக வந்திருக்க.. முகத்தை இயல்பாக வைத்தபடி உள்ளே போனான் ரிஷி …


அங்கு பார்த்திபனும்… நட்ராஜும் ரிஷியை வரவேற்க… கூடவே அந்த அலுவலகத்தின் இன்னும் முக்கியமான சில நபர்களும் இருக்க… கண்மணி மற்றும் ரித்விகா சற்று தள்ளி நின்றனர்…


ரிஷியுடன் கூடவே உள்ளே வந்த தினகரும் வேலனும் அங்கு இத்தனை வருடம் வேலை செய்த உரிமையிலும்… ரிஷியின் கூடவே இருந்த பெருமையுடனும் பேச ஆரம்பித்தன்ர்


”அண்ணாத்த… இனி நீங்க வெறும் ஆர்கே இல்லை… ஆர்கே இண்டஸ்ட்ரீஸ் மேனேஜிங் டைரக்டர்…” என்றபடி ஆராவரம் செய்ய… கூடியிருந்த அந்த சிறு கூட்டமும் ஆமோதிப்பாக கைதட்டி உற்சாகமாக ரிஷியை வாழ்த்த… ரித்விகாவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை… அவளுக்கு தன் அண்ணனின் உயர்வில் அவ்வளவு ஆனந்தம்… உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்…


ஆனால் கண்மணியோ!!! அந்த சந்தோஷத்தில் உற்சாகத்தில் எல்லாம் கலந்து கொள்ள வில்லை… ஆர்ப்பரிக்கவும் இல்லை… அமைதியாக நின்று கொண்டிருந்தாள்…

அவள் விழிகள் ரிஷியி என்பவனிடம் மட்டுமே… அவன் முக மாற்றங்களை… அவன் கண்கள் காட்டும் உணர்வுகளை மட்டுமே கண்மணி பார்த்துக்கொண்டிருக்க… கண்மணிக்கு நேர்மாறாக ரிஷியின் கண்களோ அனைவரையும் சுற்றி வந்தது… கண்மணி என்பவளைத் தவிர… அவள் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது தெரிந்தும்.. உணர்ந்தும்


அதே போல அவனுக்கு தெரியாதா என்ன… இவை எல்லாமே கண்மணியின் ஏற்பாடு என்று… இருந்தும் கண்மணியின் பார்வையைத் தவிர்த்தான்… கண்டிப்பாக கண்மணியைப் பார்த்தால் உணர்ச்சி வசப்பட்டு விடுவோம் என்று கண்டிப்பாக அவனுக்குத் தெரியும்… தெரிந்தே அவளைத் தவிர்த்தான் ரிஷி


உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதால்… பேச வார்த்தைகளின்றி அனைவரின் முன் அமைதியாக நின்றவனிடம்… நட்ராஜ்தான் அருகில் வந்தார்…


“ரிஷி… இது உனக்கான இடம்… உட்காருப்பா” என்று அங்கிருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொல்ல… ரிஷி இப்போது மீண்டும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்… அந்த அறையின் வண்ணத்தில் இருந்து… மேஜை… நாற்காலி… அறை அமைக்கப்பட்ட அமைப்பு என… ஒவ்வொன்றும் அவனுக்கு பழகிய வகையில்… அதாவது… அவனது கண்மணி இல்லத்தை மாடியறை அமைப்பையே பிரதி எடுத்தது போல… அதே நேரம்… உயர் தரமாக வடிவமைக்கப்பட்டிருக்க… இப்போது கண்மணியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரிஷியால்… அவனின் அந்த சில நொடி ஆழப்பார்வைக்கு அவனின் மனைவியும் அதே பதிலடி பார்வை கொடுக்காமல் இருப்பாளா.…


கண்மணியிடம் சரணடைந்தது சில நொடிகள் தான்…


தன்னிலை மீண்டு ரிஷி அனைவரையும் பார்த்து பேச ஆரம்பிக்கப் போக… கண்மணி இப்போது அவளாகவே அவன் முன் வந்து…


“ரிஷிக்கண்ணா… இது என்னோட கிஃப்ட்…“ கண்மணியின் குரலில் பெருமிதமும்… குதூகலமும் கூடவே குழந்தையின் துள்ளலும் மட்டுமே…


இங்கிருக்கும் அத்தனையுமே அவளது ஏற்பாடு… இதில் பரிசுப் பொருள் என்று தனியாக வேறா…. மனைவியை உரிமையோடு பார்த்தபடி புன்னகையுடன் கையை நீட்டினான் ரிஷி…


அவன் நீட்டிய கையில்… அவனுக்காகவே வாங்கி வந்த பேனாவைப் பரிசளித்தாள் அவள் மனைவி….


“தேங்க்ஸ்…” என்றபடியே அதைப் பெற்றுக் கொண்டவனிடம்… இப்போது பார்த்திபன் அவன் கையில் வைத்திருந்த காகிதங்களை நீட்டினான்… கையெழுத்து போடுமாறு… அதை வாங்கிய ரிஷி கையெழுத்துப் போட குனிய… அங்கிருந்த அத்தனை கண்களும்… ரிஷி அவன் மனைவி கண்மணி கொடுத்த பேனாவில் தான் மேனேஜிங் டேரக்டராக முதல் கையெழுத்து போடுவான் என்று எதிர்பார்க்க…