கண்மணி என் கண்ணின் மணி -68-3

அத்தியாயம்-68-3

/*

ஹே..ஒரு பூஞ்சோலை ஆளானதே

ஹே.ஒரு பொன்மாலை தோள் சேருதே


சிங்கார வெண்ணிலா மண் மீதிலே

சங்கீதம் பாடுதே உன் கண்ணிலே


செந்தாடும் பொன் மயில் உன் தோளிலே

நின்றாட ஏங்குதே இந்நாளிலே


காதல் தேனாறு பாய்ந்தோடும் நேரம்

ஆசைத் தேரேறி ஊர்கோலம் போகும்


அழகிய சித்திரமே மதன் கலை புத்தகமே


இளமை எழுதும் இனிய கதையை

இரு உடல் அனுதினம் எழுதட்டுமே*/
ஷோவின் விருது விழாவில் கலந்து விட்டு… விருதோடு ஹோட்டல் அறைக்கு வந்தவர்களை வெளியிலேயே நிற்க வைத்திருந்தாள் கண்மணி…


”ஒண்ணா நில்லுங்க… ஆடாமல் நில்லுங்க… அப்படியே நில்லுங்க” ரிஷியையும் நட்ராஜையும் சேர்ந்து நிற்கச் சொன்னவள்

”ஊரு கண்ணு...

உறவு கண்ணு...

நாய் கண்ணு...

நரி கண்ணு...

நல்ல கண்ணு...

நொள்ள கண்ணு...

கொல்லி கண்ணு...”


அப்புறம் இந்தக் கண்மணிக் கண்ணு… எல்லா கண்ணும் போகனும் என்று கணவன் தந்தை இருவரையும் சுற்றிப் போட… நட்ராஜோ தன் மகளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்…


முழு நிலவாக.. கூடவே ஆயிரம் நட்சத்திரங்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது போல பிராகாசித்து ஜொலித்த தன் மகளை… அவள் துள்ளலை.. மட்டுமே


இதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன்… என்ற வலையில் மொத்த நிம்மதியும் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்திருக்க… கையில் இருந்த விருதெல்லாம்.. ஒன்றுமே இல்லை… தன் அருகில் நின்றிருந்த மருமகனை… ஆயிரமாயிரம் இல்லை கோடி கோடி நன்றியோடு நோக்க…. அவனோ அவரைப் பார்த்தால் தானே….


போலியாக முறைத்துக் கொண்டிருந்தான்… போலியான அந்த முறைப்பில் கூட… கண்மணியின் மீது அவன் வைத்திருந்த காதல் மட்டுமே தெரியுமா என்ன… மகளை ரசித்தவரின் பார்வை மருமகனையும் ரசிக்க ஆரம்பித்திருந்தது…


“என் புள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்” கண்மணி வெளியில் அவர்களுக்குள் சுற்றிக் கொண்டிருக்க… நட்ராஜோ தனக்குள் தன் மகளுக்கும் மருமகனுக்கும் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார்…


“ஹப்பா…. வாங்கினது தேர்ட் ப்ரைஸ்… அதுக்கு இவ்ளோ பில்டப்பா…” என்ற போது


“தேர்டோ... செகண்டோ... அவார்ட் வாங்குனீங்களா இல்லையா… அவ்ளோதான்…. இப்போ உள்ள போங்க…” என்று இருவரையும் உள்ளே விட்டவள் கண்களிலும் முகத்திலும் அவ்வளவு சந்தோசம்… அவள் கால் வெகுநாட்களுக்குப் பிறகு… தரையில் ஒரு இடத்தில் நில்லாமல்… உற்சாகப் பந்தாக வலம் வந்து கொண்டிருந்தாள் கண்மணி…


நட்ராஜ் மகளின் அருகே வந்தவராக…


“இந்த அவார்டெல்லாம் பெரிய விசயமில்லம்மா எனக்கு… நீ…. உன்னோட முகத்துல இருக்கிற… இந்த சந்தோசம் அதுக்கு ஈடா ஏதுமே இல்லை… “ என்று மகளிடம் நெக்குருகியவர்… ரிஷியிடமும் கை கூப்பினார்…


“இவ்ளோ தூரம் என்னை நம்பி கூட்டிட்டு வந்தது…. எனக்காக இருந்தது… இப்படி ஒரு மருமகன் யாருக்குமே கிடைக்காது ரிஷி… நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவன் போல… பவித்ரா… என் பொண்ணு… நீங்கன்னு… என் வாழ்க்கைலை எனக்குக் கிடைத்ததெல்லாம் மிகப் பெரிய வரம்தான்…” என்ற போதே… ரிஷி அவர் கைகளை விலக்கி… தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்…


“மாமா… நீங்க இதை விட மிகப் பெரிய இடத்துல இருக்க வேண்டியவங்க… அது நான் சொல்ல வேண்டியதில்லை… ஆனால் இன்னும் காலம் இருக்கு… பவித்ரா அத்தை ஆசைப்பட்ட மாதிரி கண்டிப்பா நீங்க இன்னும் அச்சீவ் பண்ணுவீங்க” இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க…


ரிஷியின் அருகில் கண்மணி அமர்ந்தவளாக… இருவரின் உரையாடல்களையும்… அதாவது இந்தியா சென்ற பிறகு அடுத்து என்ன செய்வது… என்று பேச ஆரம்பித்திருக்க… அதை…. புன்னகை முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்….


அன்றிரவே மீண்டும் இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்திருந்தபடியால்……


சில நிமிடங்களுக்குப் பிறகு….


“மணி எல்லாம் நேத்தே எனக்கு எடுத்து பேக் பண்ணி வச்சுருச்சு… எனக்கு ஏதும் வேலை இல்லை… கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன் ரிஷி… நீங்களுமே” என்றவர் கண்மணியிடம் திரும்பியவர் அவளைத் தனியே அழைத்து…


“அம்மாடா… தம்பியத் தூங்கச் சொல்லு… இங்க வந்ததிலருந்து இந்த ஷோ ஷோன்னு அல்லும் பகலும் ரிஷி ஒழுங்காவே தூங்கினாரான்னு தெரியலை… இடையில ஹாஸ்பிட்டல்ல வேற… இன்னைக்காவது நிம்மதியா தூங்கச் சொல்லு… ஊருக்கு போனா இன்னுமே ஓடனும் போல… பார்த்துக்கம்மா… ” என்று சொல்ல… கண்மணியும் தலையாட்ட… நட்ராஜும் அவர் அறைக்குச் சென்று விட்டார்…


---


“என்னடி… உங்க நைனா… தனியா கூப்பிட்டு… என்னமோ சொல்லிட்டுப் போறாரு… என்ன நடக்குது” அவளிடம் வேண்டுமென்றே… வம்பிழுத்தவனிடம்….


“ஹ்ம்ம்… அவர் எங்க நைனாவா பேசலை… உங்க முதலாளியா பேசிட்டுப் போறாரு… இந்த வளர்ந்த மீசை வைத்த குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கவாம்… “ என்ற போதே


ரிஷி காலரைத் தூக்கி விட்டபடி… கைகள் இரண்டையும் அந்த சோபாவில் நீளத்திற்கு விரித்தபடி


“என் முதலாளியே சொல்லிட்டார்ல… பத்திரமா பார்த்துக்கோ… ஹான் ரொம்ம்ம்ம்ப டயர்டா இருக்கு… உடம்பெல்லாம் ஒரே வலி… மெடிசின் அப்புறம் தெரபிலாம் கிடைக்குமா… பிரிச்ஸ்கிரிப்ஷன் நானே சொல்றேன்… அந்த மெடிசின் நேம் ‘கண்மணி’ --- காம்போஷிசன்/இன்கிரீடியண்ட்ஸ் இஸ் ஹனி லிப்ஸ் அண்ட் எக்சட்ரா எக்சட்ரா… ” கண்சிமிட்டியவனின் வாயிலேயே இவள் அடி போட…


அவளின் கைகளைப் பிடித்தபடியே… அவள் அடியில் இருந்து தப்பித்தவன்


”நோ சைட் எஃபெக்ட்ஸ்னு சொன்னாங்களேடி.. இல்லை போல” என தொடர்ந்தவன்…


“24 ஹவர்ஸும் இண்டேக் பண்ணிக்கலாம்… இப்போதைக்கு மூணு வேளையும்….” என்ற போதே…


அவன் வாயை கைகளால் மூடப் போனவளிடம் மாட்டாமல் தலையை மட்டும் விலகியவன்…


“இந்தியா போனதுக்கப்புறம்… மெடிசின் அவெயிலபிலிட்டி எப்படின்னு பார்க்கனும்” என்றவன் சொல்லி முடித்துதான் அவளைப் பார்க்க


“ஹப்பா… என்ன வாய்… இது… அடங்கவே மாட்டீங்களா ரிஷி” என்றவன்….“தங்களுக்குத் தெரியாதது தாங்கள் அறியாதது ஏதுமில்லை தங்கள் ரிஷிக்கண்ணாவிடம்… டவுட்னா டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறியா… ஆல்வேஸ் ஆம் ரெடி” வேண்டுமென்றே… அவளை நோக்கி அவள் அருகே போக… அவனைத் தள்ளி விட்டவள்… மீண்டும் அவளே அவன் அருகில் அமர்ந்தபடி…. அவனின் ஒருகையை தன் தோள்களில் போட்டபடி….அவன் இன்னொரு கையைத் தன் கைகளில் வைத்துக் கொள்ள


தன் கைகளைப் பிடித்தபடி… தன்னை