அத்தியாயம் 58-2
இப்போதுதான் நிகழ்ச்சி குறித்த முக்கியமான பேட்டி ஆரம்பித்திருக்க… இது முழுக்க முழுக்க… நிகழ்ச்சி சம்பந்தப்பட்டதாக கேள்விகள்… அதிலும் கேள்வி கேட்க காத்திருந்தவர்கள் அனைவரும் நிருபர்கள்… ரிஷி இவர்களின் கேள்விக்கும் தயாரானான்… கழுத்தில் அணிந்திருந்த டையை சரி செய்தவன்… தான் இருந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கூர்மையான பார்வையோடு அவர்களை எதிர்நோக்க…. அப்போதும் அவனது ரசிகர்கள் இல்லையில்லை ரசிகைகள் அவனை விடவில்லை
“’Rishi…’ We miss your long Scarv and rogue look…” - கூட்டத்தில் இருந்து குரல் இவனை நோக்கி சத்தமாக ஒலிக்க…
ரிஷி கண்மணியின் காட்டன் துப்பட்டாவைத்தான் கழுத்தைச் சுற்றி அணிந்திருப்பான்…
கழுத்தைச் சுற்றி… தோள்களைச் சுற்றி… மாலை மாதிரி… ஸ்கார்ஃப் போல என வித விதமாக இவன் அதை அணிந்திருப்பது கூட பிரபலம் ஆகி இருக்க… இன்று கோட் ஷூட் என முழுக்க முழுக்க ஃபார்மலாக வந்திருந்ததைக் கூட கவனம் வைத்து இவனிடம் அதைச் சொல்லி இருக்க… ரிஷியின் நிலைதான் அங்கு திண்டாட்டம் ஆகி இருந்தது…
நிமிர்ந்து அமர்ந்திருந்தவன்… இப்போது தன் முகச்சிவப்பை மறைக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது… இருந்தும் முன் கேசத்தை சரி செய்வது போல குனிந்து ஒரே நிமிடத்தில் சமாளித்து நிமிர்ந்திருந்தான்…
”அண்ணி” ரித்விகா… நக்கலாக கண்மணியைப் பார்த்தபடியே… இழுத்தவள்…
கண்மணி திரும்புவாளா என்ன???
“சரி விடுங்க… ஏற்கனவே ரொம்ப ஓட்டிருக்கேன் இதை வச்சு… பொழச்சுப் போங்க… அங்க ஊரே ஓட்டிருச்சு உங்க ஆத்துக்காரர… பாவம் அவர் என்ன சொல்றதுன்னு தெரியாமல்… எவ்ளோ சீரியஸா ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு இருக்கார்…”
கண்மணியும் திணறியவளாக…
“எ… எனக்.. எனக்கே தெரியாதுன்னு… உன்கிட்ட ஆயிரம் தடவை சொல்லிருக்கேன்…” என்று தடுமாறிய போதே…
“வெட்கப்படுறீங்களா அண்ணி” என்று ரித்விகா அவள் முகத்தின் அருகே வந்து பார்க்க…
கண்மணி… நொடியில் முகத்தை மாற்றி இருந்தவள்…. முன்னே இருந்த தொலைக்காட்சியில் பார்வையை வைத்து தீவிரமாக அமர்ந்திருக்க…
இங்கு ரிஷியுமே மீண்டு அவன் நிலைக்கு வந்திருந்தான்… கூடவே அவனுக்குள் ஆயிரம் யோசனைகள்…
நட்ராஜ்ஜுக்கும் சேர்த்து அவன்தான் யோசிக்க வேண்டும்… அதுமட்டும் அல்லாமல் நட்ராஜை நோக்கி வரும் கேள்விகளுக்கும் இவன் தான் மொழி பெயர்ப்பாளாராக பதில் சொல்ல வேண்டும்… மிக மிகக் கவனமாக கேள்விகளை எதிர் கொண்டான்… இங்கு அனைத்து கேள்விகளும் நட்ராஜை நோக்கியே வரும் என்பதை உணர்ந்தவனாக
முதலில் கேள்விகள் சாதரணமாகவே வந்தன… எப்படி… ஏன்… இங்கு வருவதற்கான காரணங்கள்… இந்தப் போட்டிக்கான அவர்களது அணுகுமுறைகள் என்ன… நுணுக்கங்கள் என்ன.. என்பது போன்ற அடிப்படையாகவே இருக்க… ரிஷியும் சரி… நட்ராஜுமே சரி சுலபமாக எதிர் கொண்டனர்…. நேரம் செல்லச் செல்லக் கேள்விகளும்… மாற ஆரம்பித்திருந்தன…
”நட்ராஜ் அவரோட கண்டுபிடிப்புகள் எல்லாமே அவுட்டேட்டட்… அப்படி இருந்தும் இந்த ஷோல இவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பதற்கு காரணம்… ரிஷி.. உங்களோட இளமை… தோற்றம்… சார்ம்… கரிஸ்மா… இதுதான் நட்ராஜ் எலிமினேட் ஆகாமல் இருப்பதற்கு காரணம்… நீங்க வேணும் இந்த ஷோக்கு… அதுனாலதான்னு வச்சுக்கலாமா” கேள்வி ரிஷியிடம் வந்து நிற்க…
பேட்டியின் முதல் பகுதியில் தன்னைப் பற்றி… தன் தோற்றம் பற்றி… வந்த கேள்விகளுக்கு எல்லாம் மழுப்பலாக பதில்கள் சொன்ன ரிஷியின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருந்தது…
இந்த ரிஷி அலட்டிக் கொள்ளாமல்… தீர்க்கமாக நேர்ப்பார்வை பார்த்தான் தன்னிடம் கேட்ட கேள்வி நிருபரை
“இது 15 வது சீசன்… இவ்ளோ நாள் போயிட்டு இருக்கிற இந்த நிகழ்ச்சி… அதுவும் சக்ஸஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கிற நிகழ்ச்சிக்கு… இந்த சீசன் மட்டும்… இந்த ரிஷியோ.. நீங்க சொல்கிற சோ கால்ட் இளமை… தோற்றம் வேண்டுமா என்ன… வேடிக்கையா இருக்கு உங்க கொஸ்ட்டீன”
“ஒகே… உங்கள விட்றலாம்… நட்ராஜ் இவ்ளோ நாள் வருவதற்கு தகுதியே இல்லை… அவர் ஏன் இத்தனை தூரம் வந்திருக்கிறார்… அதுக்கு எக்ப்ளனேஷன்” நிருபரின் அடுத்த கேள்வி ரிஷியிடம் வர
“நான் அப்படி நினைக்கல… அவுட்டேட்டனு சொல்ற விசயம் இன்னைக்கு இருக்கலாம்… ஆனால் அவர் 20 வருசத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுர்க்கார்னா… அவர் எவ்ளோ அஹெட்டா இருந்துருப்பார்… அப்போ இன்னுமே அப்படித்தானே… கண்டிப்பா… அதைக் கொடுப்பார்னு பேனல் நினச்சுருக்கலாம்… அதுமட்டும் இல்லை… நீங்க அவுட்டேட்டட்னு சொல்ற விசயமே தவறு… காலேஜ்ல நாங்க செஞ்ச மாடல் கேள்விப்பட்டு வந்தவங்க பல பேர்… நட்ராஜ் அவரோட ஐடியா மட்டுமே அடிப்படையா வைத்து பண்ணினது… பேஸ் இஸ் நாட் அ அவுட்டேட்டட்… இம்ப்ளிமெண்டேஷன் அண்ட் ஓவர் ரைடிங் கான்செப்ட் தான் இங்க முக்கியம்… இன்னோவேட்டிவா இருக்கனும்… அது நட்ராஜ் கிட்ட இருக்கு… அதுக்கான உதவியா டெக்னாலஜி வைஸ் நான் பண்ணித் தருகிறேன்“ என்றவன் … பதில் சொல்லி முடித்தபின்….
“இந்த கேள்வி… எங்ககிட்ட வரக்கூடாது… இது ஜட்ஜஸ் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி…” என்று அடுத்த நிருபரிடம் பார்வையை மாற்ற…
”எஸ்கேப் ஆகுறீங்க ‘RK’ ” கேள்வி கேட்ட நிருபர் ரிஷியை மடக்கிய தொணியில் நக்கல் சிரிக்க…
ரிஷியும் அதே தொணியில் சிரித்தான்…
“ஆன்சர் சொல்லிட்டுத்தான்… அவுட் ஆஃப் போர்ஷன்னு சொன்னேன்… நோட் பண்ணலையா நீங்க” என்றவன் அதற்கு மேல் அந்த நிருபரிடம் தன் கவனத்தை வைக்காமல்… அடுத்த நிருபரின் கேள்விக்குத் தாவி இருந்தான்
“இங்க இவ்ளோ பாப்புலர்… இந்தியா… உங்க நாட்ல எப்படி…” என்ற போது..
“இனிமே தெரியும்னு நினைக்கிறேன்… இதுவரை பெருசா யாரும் தொடர்பு கொள்ளல… கண்டிப்பா… பொது மக்களுக்கு இல்லைனாலும்… ஆட்டோ மொபைல் இண்டஸ்டிரியல்ல இருக்கிறவங்ககிட்ட போய்ச் சேருவோம்னு.. சேர்ந்திருப்போம்னு நினைக்கிறேன்..” ரிஷி சீரியஸாகச் சொல்ல
“இந்த பாப்புலாரிட்டிய யூஸ் பண்ணி… இங்க ரெண்டு மூனு அட்வர்டைசிங் பண்ணிருக்கீங்க…. சோ மீடியால கண்டினியூ பண்ற வாய்ப்பு இருக்கா… ” ரிஷியிடம் கேட்க
”இல்ல… அப்படியே வந்தாலும்… நோ தான் என்னோட பதில்… என்னோட ஃபோகஸ் வேற… மீடியாலாம் எனக்கு இண்ட்ரெஸ்ட் கிடையாது”
“இவ்ளோ ஃபேன்ஸ்… மிஸ் பண்ண மாட்டிங்களா… உங்கள விடுங்க… அவங்க… உங்கள எப்போதும் பார்க்கனும்னு நினைப்பாங்களே… உங்களோட ப்ரசன்ஸ் இல்லாமல் போனா.. இந்த ஃபேன்ஸ் கண்டினியூ ஆவாங்களா…” மீண்டும் ரிஷியிடமே கேள்வி வர…
“சோசியல் மீடியால இருக்கேன்… அங்கயும் பெருசா ஆக்டிவ் இல்லை… ஆனால் கவலை இல்லை… ஃபேன்ஸ் ’வேவ்’ மாறிட்டே இருக்கும்… இன்னொரு பெர்சன பார்க்கலாம்… என்னைய மறக்கலாம்… நான் ஒரு மீடியா பெர்சனா இருந்தா இந்த அட்டென்ஷன் எனக்குத் தேவைப்படும்… சோ எனக்கு கவலை இல்லை… அதே நேரம் இந்த ஷோல எனக்கு அவங்க கொடுத்த வரவேற்பையும் நான் மதிக்கிறேன்… அதுனாலதான் இந்த மீட்டிங்… என்னால இன்னொரு இண்டெர்வியூ இதே பாப்புலரோட கொடுக்க முடியுமான்னு தெரியவில்லை… தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்…” அங்கிருந்த பார்வையாளர்களை நோக்கிச் சொன்னவன்…
”ஆனால்… எனக்கு எது முக்கியம்னு… நான் தான் டிசைட் பண்ணணும்… இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு… எனக்கு சம்பந்தமில்லாத இடத்துக்குலாம் போக முடியாது… ”
ரிஷி தெளிவாக தன் முடிவில் இருக்க… தொடர்ந்தான்
”எனக்கான சில குறிக்கோள்கள் இருக்கு… அதை நோக்கி ஓடிட்டு இருக்கேன்… அது பெரியதோ… சின்னதோ… அது எனக்கு முக்கியம்… அந்த வெற்றியை நோக்கி ஓடிட்டு இருக்கேன்… ஆனால் அது கிடைக்கிறதுக்கு முன்னாடியே… என் வாழ்க்கைல பல பொக்கிஷங்கள் எனக்கு கிடச்சிருக்கு…“ இந்த வார்த்தைகளில் சற்று முன் இருந்த அவனது திடமான குரல் கரகரத்திருந்தது… அவன் கண்கள் இலேசாகப் பனித்திருக்க… இப்போது அமைதி ஆகி இருந்தான் ரிஷி…
“பொக்கிஷம்னு சொல்றீங்க… எங்ககிட்டயும் சொல்லலாமே… நாங்களும் தெரிந்து கொள்வோமே” என மீண்டும் அந்தப் பேட்டி இயல்பு நிலைக்கு வந்திருக்க
ரிஷி சிரித்தபடி…
“பொக்கிஷம்னு சொல்லிட்டேன்… எப்படி சொல்லமுடியும்… எனக்கானது… அதை நான் மட்டும் தான் ஃபீல் பண்ண முடியும்… ஃபீல் பண்ணனும்… ” என்ற போதே
“இந்த பாப்புலாரிட்டியைத்தான் சொல்றீங்க கரெக்டா…” என்று நிருபர் கேட்க
யோசித்தவன்…
“கண்டிப்பா அதுவும்… இவங்களுமே” என்று முடிக்க… அவனுக்காக வந்திருந்த அவனது ரசிகர் கூட்டங்கள் ஆர்ப்பரித்தன இப்போது…
“முக்கியமான வேறொண்ணும் இருக்கு… சொல்ல மாட்டிங்க… அப்படித்தானே ‘RK’ … “ நிருபர் அவனைப் புரிந்து கொண்டவராக… அதோடு விட்டும் விட… ரிஷியும் தப்பித்த பெருமூச்சை தனக்குள் விட்டுக் கொண்டான் யாரும் அறியாமல்…
இப்போது கேள்விகள் பொதுவாக ஆரம்பிக்க…
”சக்ஸஸ்… இதுக்கு ஃபார்முலா என்ன… சொல்லுங்க?...”
“அண்டர்ஸ்டேண்ட் பண்ணிகிட்டா… திஸ் ஃபார்முலா இஸ் சிம்பிள்… ஈஸி…. இல்லைனா… வெரி காம்ப்லெக்ஸ் அண்ட் வெரி டிஃபிகல்ட்… ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட்… தெ ஃபார்முலா… அண்ட் ஆல்சோ பெர்சன் டூ பெர்சன் வேரி ஆகும்”
“Hard work… consistency… aim… habit… focus… determination இது எல்லாமே நமக்குள்ள வளர்த்துக்கற பழக்கம்…”
”ஆனால் என்னோட சக்ஸஸ் எனக்குள்ள இல்லை… அடுத்தவங்ககிட்ட இருந்து கைப்பற்றனும்… சோ…. அதை பேஸ் பண்ணி என்னோட ஃபார்முலா என்னன்னா…
“உன்னோட பலம் என்னன்னு… அதைத் தேடு… அதன் மூலம் எதிரியை வீழ்த்து… அதே நேரம்.. உன்னோட பலவீனம் என்ன என்பதையும் தேடு… அதையும் பலமா மாற்ற ட்ரை பண்ணு… இல்லை உனக்குள்ளே மறைத்து வைத்துக்கொள்ள கற்றுக் கொள்… பலத்தைக் காட்டுவதை விட பலவீனத்தை மறைக்க கற்றுக் கொள்வதுதான் மிகப் பெரிய சக்சஸ் ஃபார்முலா என்னைப் பொறுத்தவரை…”
“உன் ஒருத்தனுக்கு முன்னால 10, 100, 1000….. 1000000000 எத்தனை பேர் வேண்டும்னாலும் இருக்கலாம்… எண்ணிக்கை முக்கியமல்ல… உனக்கு அந்த பூஜ்ஜியத்தை இடம் மாற்ற தெரிந்தால் போதும்… learn to use your intelligence with Smart and intuitive அவ்வளவுதான்…
என்று முடிக்க… அதன் பின் சில கேள்விகள்… பதில்கள் என பேட்டியும் சுமூகமாக முடிந்திருக்க… மீண்டும் கார்லாவும் அந்த நிகழ்ச்சின் தொகுப்பாளரும் மேடையில் தோன்றி இருந்தனர்… நட்ராஜும் ரிஷியும் அவர்களோடு நின்றிருந்தனர்
”இந்த ஈவெண்ட்டோ கடைசி பார்ட்…. ஒரு சர்ப்ரைஸ் பார்ட்… கண்டிப்பா நமக்கு இல்லை… ’RK’s சர்ப்ரைஸ் கிஃப்ட் ஃபார் நட்ராஜ்” எனும் போதே…
நட்ராஜ் ரிஷியைப் பார்க்க… பதில் சொல்லாமல் ரிஷி அங்கிருந்த திரையைக் காண்பிக்க… கார்லா நட்ராஜைப் பார்த்து
“எனி கெஸ்” என்ற போதே
“என் பொண்ணு பேசுவா” என்று நட்ராஜ் ஆர்வமாக திரையைப் பார்த்திருக்க…
“உங்க கெஸ் கரெக்டான்னு பார்ப்போமா” என்றபடி அங்கிருந்த திரையை கையில் இருந்த தானியங்கி கருவியின் மூலம் உயிர்ப்பிக்க… அது ஒளிர… பவித்ரா மற்றும் நட்ராஜின் புகைப்படம்… முதன் முதலாக அவன் ’கண்மணி’ இல்லத்துக்கு வந்த போது ரிஷி பார்த்த நட்ராஜ்-பவித்ரா புகைப்படம்….
மகள் என்று நினைத்து ஆர்வமாக திரையை பார்த்தவரின் கண்களில் ஆயிரமாயிரம் உணர்வுகள் …
ரிஷி எப்படி முதன் முதலாக அந்த புகைப்படத்தைப் பார்த்து உணர்ந்தானோ… அதே உணர்வுதான் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவருக்குமே… …
“வாவ்…. ஷீ இஸ் சோ ப்ரிட்டி… ஸ்டன்னிங் ப்யூட்டி”
ரிஷி இப்போது திரையைப் பார்க்காமல்… நட்ராஜை மட்டுமே பார்த்தபடி இருந்தான்…
“தெ எபிக் டேல் பெட்வீன் மில்லியனர் டாட்டர் அண்ட் ஆட்டோ என்தூசியஸ்ட்…” என்று திரையில் வார்த்தைகள் ஆரம்பித்திருக்க
ரிஷி இப்போது பேச ஆரம்பித்திருந்தான்…
”ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்… நம்ம நட்ராஜ் சார்க்கும் அப்படி ஒரு பெண் இருந்தாங்க… அவங்களத்தான் நாம பார்க்கப் போகிறோம்… அண்ட்… அவங்க லைஃப்ல… அவங்க எக்ஸ்பெக்ட் பண்ணின அவங்க ராஜோட சக்சஸ்… அது அவங்களால இப்போ பார்க்க முடியலைனாலும்… அவங்க என்ன ஃபீல் பண்ணிருப்பாங்கன்னு… நாம பார்க்கலாம்”
ரிஷியைப் பார்த்த நட்ராஜுக்கு… இதழ் வளைத்த விரக்தி புன்னகை மட்டுமே…
அவருக்கு ஏதும் புதிதில்லையே… அனைத்தும் பார்த்தவைகளே…
“சாரி சார்…. உங்களுக்குத் தெரியாமல்…“ என்ற போதே நட்ராஜின் எண்ணங்கள் பவித்ராவின் டைரி, தன் மகள் என சென்றிருக்க… கையில் இருந்த மைக்கை ஆஃப் செய்தபடி…
”பவியோட டைரி… கண்மணிகிட்ட கொடுக்கல தானே… என் பொண்ணை நீயும் என்கிட்ட இருந்து பிரிச்சுறாத ரிஷி “ என்ற போதே முகம் வேர்த்திருக்க
பதில் சொல்லாமல் புன்னகைத்தவன்… திரையின் புறம் கைகாட்ட… அவனின் முகம் மாறிய புன்னகையே சொன்னது… ரிஷி ஏதோ முடிவெடுத்து விட்டுத்தான் இதெல்லாம் செய்கிறான் என்று…
“டைரிய என் பொண்ணுகிட்ட கொடுத்துட்டு வந்தியா…” நட்ராஜ் அங்கு யாரையும் கவனிக்காமல் தன் பிடிவாதத்தில் இருக்க… ரிஷிக்கும் வேறு வழி இல்லாமல் போக…
“இல்ல சார்… படித்திருந்தால்… அவ உங்ககிட்ட கேள்வி கேட்ருப்பா தானே… ஷோ போயிட்டு இருக்கு… ப்ளீஸ்…” மற்றவர்கள் அறியாமல் நட்ராஜும் ரிஷியும் பேசிக் கொண்டிருந்தனர்…
”உங்களுக்கு இது ஏதுமே சர்ப்ரைஸ் இல்லைனு எனக்குத் தெரியும்… இலட்சம் முறை பார்த்த போட்டோஸ்…. வீடியோஸ்… எனக்கும் தெரியும்… என் அத்தைக்கு அவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டேஜ்ல… உங்களப் பார்க்கனும்னுறதுதான் ஆசை… அந்த ஸ்டேஜ்ல அவங்க இருக்கனும்ன்றது அவங்க ஆசை… என்னால முடிந்தது… அவங்க வீடியோ… அவங்களோட இந்த ஆசையையாவது நாம நிறைவேற்றலாமே… ப்ளீஸ் எனக்காக” என்று முடித்தவனின் கெஞ்சல் வார்த்தைகளில்…. நட்ராஜ் திரையைப் பார்க்க ஆரம்பித்தார்..
ரிஷியோ திரையைப் பார்க்காமல் அங்கிருந்த பார்வையாளர்களைப் பார்க்க ஆரம்பித்திருந்தான் …
பவித்ராவின் புகைப்படங்கள் அடங்கிய காட்சிகள் ஓட ஆரம்பித்திருந்தன… பிறந்ததில் இருந்து பவித்ராவின் ஒவ்வொரு நிகழ்வும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தன….
நாராயணன் பவித்ராவைக் கைகளில் வாங்கிய நொடி முதல் ஆரம்பித்திருக்க… பவித்ராவின் ஒவ்வொரு அகவையிலும் அவளது சுவாரஸ்யமான நொடிகள் புகைப்படங்களாக ஓட… நட்ராஜ் கண்களில் காட்சி மறைந்திருந்தது… அவரது கண்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்திருந்த நீர்படலங்களால்…
வீணை வாசிக்கும் பவித்ரா… மேடையில் கர்நாடக சங்கீதம் பாடும் பவித்ரா… பரத நாட்டியம்.. குச்சுப்புடி அரங்கேற்றம் என முடிந்த போது…. சிறு வயது குழந்தையாக முடிந்திருக்க
அடுத்த நிமிடம் அதற்கு மாறாக…
வெஸ்டர்ன் டான்ஸ்… பாலே டான்ஸ்… ஹாக்கி ப்ளேயர்… நீச்சல்… கராத்தே… கூடைப்பந்து… என பதின்ம வயது மங்கையாக பவித்ரா அவளுக்கென தனக்கான திறமைகளை அவளே தேடி சென்ற காட்சிகள்…. அந்த பக்குவம் அந்த முகத்தில் வந்திருக்க
அடுத்து வந்த காட்சியில்… பவித்ரா மருத்துவம் பயிலும் மாணவியாக புகைப்படங்கள்… அதன் பிறகு புகைப்படங்கள் இல்லாமல் காணொளிக் காட்சிகள்… அவளே கேண்டிட் கேமரா வைத்து எடுத்தவைதான் அதில் பாதி…
பவித்ரா மேடையில் பேசிய மோட்டிவேஷனல் உரையாடல்களைத் தொகுத்து நூலாக மாற்றி…. அந்தப் புத்தகத்தை… மிகப்பெரிய பிரபலத்தை வைத்து நாராயணன் வெளியிட்ட காட்சி…
அவளது அடுத்த அவதாரமாக… இரு சக்கர வாகன பந்தய வீராங்கனையாக… என பவித்ரா காட்சி அளித்துக் கொண்டிருக்க…
”சாரி… இது ’ராஜ்’ க்கு தெரியாமல் நான் எடுக்கிற ஆயிரமாவது வீடியோ… ”
என்று பவித்ரா சொல்லியபடி… மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்த நட்ராஜை காணொளிக் காட்சியாக… பதிவு செய்த போதே நட்ராஜ் அவளைக் கண்டு கொண்டு முறைத்தாற் போல காட்சிகள்…
அடுத்து… திருமண வீடியோ… என இருக்க… அடுத்து கர்ப்பிணியாக… அவள் அமர்ந்திருந்த வீடியோ… ஆரம்பிக்கப்பட்டிருந்தது..
இப்போது ரிஷி கார்லாவிடம் சைகை காட்ட… வீடியோ நிறுத்தப்பட்டிருக்க அதில் புன்னகைத்துக் கொண்டிருந்த தன் மனைவியிடமிருந்து பார்வையை விலக்கவில்லை நட்ராஜ் இப்போது
முழுக்க முழுக்க நட்ராஜின் மனைவியாக மட்டுமே காட்சி அளித்துக் கொண்டிருந்தாள் பவிதரா அதில்…
கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு…. சாதாரண புடவை… அவளது கைகளில் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள்… அவள் பிறந்த வீட்டுச் சீதனம் என ஒரே சீதனமாக கொண்டு வந்திருந்த மூக்குத்தி கூட இப்போது அவளிடம் இல்லை… அதையும் இவனுக்காக உதறியிருந்த அவளின் காதல்…
தன் உணர்ச்சிகளை மறைக்க நட்ராஜ் போராடிக் கொண்டிருக்க… ஒட்டு மொத்த பார்வையாளர்கள் அத்தனை பேரின் பார்வையும் இப்போது நட்ராஜின் மேல் மட்டுமே… ரிஷிக்காக மட்டுமே வந்தவர்களின் கவனம் கூட அவர்களையும் அறியாமல் ரிஷியை விட்டு நட்ராஜிடம் வந்திருந்தது… உயிரோடு இல்லை என்ற போதிலும்… நிமிடங்களில் தன் கணவனிடம் ஒட்டு மொத்த கவனத்தையும் கொண்டு வர வைத்திருந்தாள் பவித்ரா…
“உங்களுக்கு குழந்தை இருக்கா…”
நட்ராஜ் மட்டுமே என்பது போல அவரை நோக்கி கேள்விகள் வர ஆரம்பித்திருக்க
”இது அவங்க லாஸ்ட் வீடியோ…” கார்லா அறிவித்த போதே…
“இப்போ அவங்க உயிரோட இல்லையா…” அங்கிருந்தோரின் முகங்களில் சோகம் பரவ ஆரம்பித்திருக்க…
வீடியோவில் இருந்த பவித்ராவோ உற்சாகமாக பேச ஆரம்பித்திருந்தாள்…
“ஹாய்… ராஜ்..” என்று கை அசைத்த போதே… அவளின் கைவளையல்களின் சத்தம் அந்த வீடியோவை ஆக்கிரமித்து இருக்க
“ராஜ்… இன்னைக்கு டிசம்பர் 25… ரெயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்த உடனே… இந்த வீடியோ… திட்டாதிங்க…. உனக்கு வேற வேலை இல்லையான்னு”
”ஃபெப்ரவரி தான்…. டெலிவரி டேட்… எனக்கென்னமோ… அதுக்கு முன்னாடியே பாப்பா வந்துருவான்னு… என் மனசு சொல்லிட்டே இருக்கு… என்னோட இண்ட்யூசன் எப்போதுமே தப்பாகாது உங்களோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் மீட் அப்போ…. நான் ஹாஸ்பிட்டல்ல இருப்பேன்னு தோணுது… நான் இல்லாமல் நீங்க டென்சன் ஆகிருவீங்க… சோ இந்த வீடியோ…”
“ராஜ்… நான் ஒரு முடிவெடுத்தா தப்பாகாதுன்னு என் அம்மா அப்பாகிட்ட … இந்த உலகத்துக்கிட்ட காட்றதுக்கான… அந்த நாள் சீக்கிரம் வரப்போகுது… இப்போதிருந்தே காத்துட்டு இருக்கேன்… நான் மட்டும் இல்லை… பாப்பாவும்…
“நான் எதுக்கெடுத்தாலும்…. ப்ராமிஸ் கேட்க மாட்டேன்… எனக்காக இது மட்டுமே… உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும்… என் அம்மா அப்பா என்ன சொல்வாங்கனும் தெரியாது ”
பவித்ரா நட்ராஜிடம் கேட்ட வாக்குறுதி பகுதி வராமல் அடுத்த வார்த்தைகளுக்கு வந்திருக்க…. ரிஷி எடிட் செய்துவிட்டுத்தான் வீடியோவை கொண்டு வந்திருக்கிறான் என்ற நிம்மதி நட்ராஜின் முகத்தில் வந்திருக்க… அவர் இயல்பாகி இருக்க… ரிஷியின் முகமோ இப்போது இறுகி இருந்தது…
”கர்ப்பமா இருக்கிற பொண்ணு… என்ன கேட்டாலும் செஞ்சு தரணும்… இந்த ப்ராமிஸ… நீங்க செய்து கொடுக்கனும்… இப்போ பிராமிஸ் பண்ணிருங்க… யோசிக்க 20, 21, இல்ல 25 வருசம் கூட எடுத்துக்கங்க… நான் எவ்ளோ டைம் கொடுத்துருக்கேன் பாருங்க…” என்று கண் சிமிட்டியவள்…
“உங்க சக்ஸஸ்க்கு எனக்கு ஒரு கிஃப்ட்னா வேணும்னா இதுதான்…. கண்டிப்பா நீங்க சக்சஸ் ஆவீங்க… பெரிய ஆளா வருவீங்கஇந்த வீடியோ ஸ்டேஜ்ல ப்ளே ஆனதுன்னா… ப்ராமிஸும் கண்டிப்பா கொடுத்துதான் ஆகனும்…. இந்த கிஃப்ட்டும் எனக்குக் கிடைக்கும்…”
”ஓகே முறைக்காதீங்க… தென் மோட்டிவேஷனல் ஸ்பீச் தான் “ என்ற போதே
நட்ராஜுக்கு அவர் இருந்த இடம்… மேடை எல்லாவற்றையும் மீறி அவர் முகத்தில் புன்னகை வந்திருக்க
”இருந்தாலும் பழக்க தோஷம் போக மாட்டேங்குது ராஜ்…”
”இப்போ உங்களுக்கு இல்லை… இந்த வீடியோ கேட்டுட்டு இருக்கிற மக்களுக்கு…”
“நிறைகுடம் தளும்பாது…. குறைகுடம் தளும்பும்… எல்லோரும் உங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க லைக் நிறைகுடமா இருங்கன்னு… பவிஸ் ஸ்டேட்மெண்ட் என்னன்னா…”
”உங்க லைஃப்ல… எந்த ஒரு விசயத்திலும்… நிறைகுடமாவும் இருக்காதீங்க… குறைகுடமாகவும் இருக்காதீங்க… குறைகுடம் உங்கள முடக்கும் வாழ்க்கையையே வெறுக்க வைக்கும்… நிறைகுடம் உங்கள சாந்தமாக்கிரும்… வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போய்விடும்…”
“அண்ட் எக்ஸ்பெக்டேஷன் இஸ் நாட் அ ராங் தின்க்… கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்பெக்டேஷன்… நிறைய நிறைய அண்டர்ஸ்டேண்டிங்….. லைஃப என்ஜாய் பண்ணுங்க… முக்கியமா ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்க்கு… எக்ஸ்பெக்டேஷன் இல்லாத தாம்பத்திய வாழ்க்கை ஒண்ணு கிடையவே கிடையாது… கீப் யுவர் எக்ஸ்பெக்டேஷன் அஸ் லோ கீ டு மேக் யுவர் லைஃப் அஸ் ஹேப்பி வித் இண்ட்ரெஸ்ட்டிங்…
”எப்போலாம் நான் ராஜ் கிட்ட கம்ளீட் ஃபீல் பண்றேன்னோ… அப்போதெல்லாம் நானே சின்ன எக்ஸ்பெக்டேஷன வச்சுக்குவேன்… அவரோட சண்டை போடுவேன்…. ஏன்னா என்னோட எக்ஸ்பெக்டேஷன் ராஜ்கிட்ட எப்போதுமே இருக்கும்… இருக்கனும்.. எக்ஸ்பெக்டேஷன் ஃபில் ஆகலேன்னா… நாம ஜென்மம் ஜென்மமா தொடர்வோமாம்… சோ ராஜ்… ஆல்வேஸ் நான் உங்கள தொரத்திட்டேதான் வருவேன்… பை எப்போதுமே நான் சொல்ல மாட்டேன்… இன்னைக்கும் இல்லை… டன்ஸ் ஆஃப் கிஸ்ஸஸ் அண்ட் டன்ஸ் ஆஃப் ஹக்ஸ்… வித் டன்ஸ் ஆஃப் லவ்…. ஒன்லி ஃபார் மை ராஜ்….” முகம் முழுக்க சந்தோசத்துடன் சொல்லி முடித்த அந்த பவித்ராவின் முகத்தோடு காணொளி முடிந்திருக்க
நட்ராஜின் பார்வையும் அவர் மனைவியின் முகத்தில் மட்டுமே நிலைத்திருக்க…
அதே நேரம் ரிஷியோ அந்த வீடியோவில் எல்லாம் கவனம் வைக்காமல்… தனக்கும் எதற்கும் சம்பந்தம் ஏதுமே இல்லைபோல.. அப்படிக் கூட சொல்ல முடியாது தான் அங்கேயே இல்லாதது போல… தலையைக் குனிந்து தன் அலைபேசியில் அதுதான் முக்கியம் என்பது பார்த்துக் கொண்டிருந்தவன்… வீடியோ நிறுத்தப்பட்டதும் நிமிர்ந்து பார்க்க… நட்ராஜ் உணர்வுகளின் தாக்கம் தாளாமல் அவனைக் கட்டிக் கொள்ள… ஆதுரமாக அணைத்திருந்தான் ரிஷி… அவர் தேடிய ஆறுதல் முழுவதும் ரிஷியின் இந்த ஒரு அணைப்பு மட்டுமே ஈடு செய்திருக்க… நட்ராஜ் அவனை விட்டு விலகவில்லை
“ஓகே… ஓகே… இப்போதான் நீங்க அத்தை நினைத்த மாதிரி… உங்க வெற்றியோட முதல் படில காலை வச்சுருக்கீங்க… இன்னும் இருக்கு… அதுக்கு ரெடி ஆகனும் சார்… ” சொன்ன ரிஷியிடம்… சிறு புன்னகை மட்டுமே அவன் இதழில்… பார்வையில் பெருமையும் கூடவே… அவ்வளவுதான் அவனிடம் பெரிதாக மாறுதல்கள் எல்லாம் இல்லை…
பார்வையாளர்கள் அனைவரும் நட்ராஜிடம் இப்போது தங்கள் கேள்விகளை மாற்றி இருந்தார்கள்…
“யூ ஆர் சோ லக்கி… அஸ் வெல் அஸ் சோ அன் லக்கி ”
“வாட் அ கேர்ள்… அன் பிலீவப்ல்… ஷீ இஸ் நோ மோர்” என தங்களுக்குள் பேசியபடியே இருக்க
பவித்ரா… கூடவே சேலை மறைத்திருந்த அவளது மேடிட்டிருந்த வயிறு… பார்வையார்கள் கவனத்தை ஈர்க்காமலா இருந்திருக்கும்…. கேள்விகள் நட்ராஜ்-பவித்ரா குழந்தையிடம் வந்திருக்க…
“உங்க குழந்தை… அதுவும் இறந்துருச்சா” என்று கவலையோடு குரல்கள் வர ஆரம்பிக்க… ரிஷி இப்போது வேகமாக
”பெண் குழந்தை... கண்மணி…. ஷீ இஸ் 23 இயர்ஸ் ஓல்ட்…. ” சொன்ன போதே
”வீ வான்ட் கண்மணி… கண்மணி போட்டோ…” ஒட்டு மொத்த கூட்டமும்…. ஒரே குரலில் கேட்க ஆரம்பிக்க… அரங்கம் முழுவதும் ’கண்மணி’ என்ற பெயர் மட்டுமே…
நட்ராஜ் ரிஷியைப் பார்க்க… இதை எல்லாம் ரிஷி எதிர்பார்த்திருந்தான் போல… அவன் முகத்தில் மருந்துக்கு கூட முகமாற்றம் இல்லை…
“ஷ்யர்… பட் நாட் ஃபார் டுடே….” என்று ரிஷி அழுத்தம் திருத்தமாக சொல்லி முடிக்க…
அங்கிருந்த மக்களோ… ரிஷிக்கு இணையாக அவர்களும் பிடிவாதம் பிடிக்க…
“’கண்மணி’… ’கண்மணி’… ’கண்மணி’… வீ வாண்ட் நட்ராஜ்-பவித்ரா டாட்டர்” இது மட்டுமே அரங்கம் முழுவதும் நிறைந்திருக்க… இப்போது ரிஷியுமே திணறினான்…. அவனிடம் கண்மணியின் தற்போதைய புகைப்படங்கள் ஒன்று கூட இல்லை… அது மட்டுமல்லாமல் இன்றைய நிகழ்வில் கண்மணியை அதாவது பவித்ரா-நட்ராஜ் மகளாகக் காட்ட அவன் விரும்பவில்லை… அதனாலேயே அவன் கண்மணியைத் தவிர்த்திருக்க… பார்வையாளர்களோ விடவில்லை…
வேறு வழி இல்லாமல்… நட்ராஜைப் பார்க்க…
“என்கிட்ட இருக்கு… ஆனால் சின்ன வயசுப் போட்டோ தான் எல்லாம்…” என்று தன் பர்சை எடுக்க…
ரிஷிக்கு தோன்றியது இதுதான்… பவித்ராவின் புகைப்படங்களை சுலபமாக சேகரித்தவனுக்கு மனைவியின் புகைப்படம் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருந்தது….
யோசித்தபடியே இருந்தவன் முன் நட்ராஜ் கண்மணியின் புகைப்படங்களைக் காட்ட…
”இவர் வைஃப… நான் எப்படிலாம் அழகு தேவதையா காண்பித்தேன்… என் பொண்டாட்டிக்கு… ஓ மை காட்” என்று நினைத்தான் தான்… ஆனாலும் அதையும் மீறி அந்தப் புகைப்படம் சிரிப்பை வரவழைக்க… பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டவன்…. அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டு…. அவரிடம் வேறு ஏதாவது புகைப்படம் இருக்கிறாதா என பார்க்க… அனைத்துமே பள்ளிச் சீருடையில் இருந்த கண்மணி தான்… அதாவது அடையாள அட்டை புகைப்படங்கள் மட்டுமே… “
வேகமாக தன் அலைபேசியைப் மீண்டும் பார்த்தான் ரிஷி… கண்மணியின் புகைப்படம் தன்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று… அவனின் அலைபேசி புகைப்படத்தொகுப்பு காறித் துப்பாதது மட்டும் தான் பாக்கி…
அப்போதுதான்… துரையும் மருதுவும் எடுத்திருந்த புகைப்படம்… மரத்தில் இருந்து கண்மணி குதிப்பது போல்…
நட்ராஜ் காண்பிக்க… அவள் முகத்தைப் பார்த்த ரிஷிக்கும் திருப்தியாக இருக்க…. கார்லாவிடம் கொடுக்க… அவள் திரையில் காண்பிக்க ஆரம்பித்திருந்தாள் அந்த புகைப்படத்தை
”நட்ராஜ்-பவித்ரா டாட்டர் போட்டோ தானே கேட்டிங்க… இதைப் பாருங்க… ” என்று பார்வையாளர்களிடம் சொன்னவன்… அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல முடித்து விட
“what was that Promise? fulfilled pavithra's promise????” நட்ராஜிடம் பல கேள்விகள் பாய்ந்து கொண்டிருக்க
"She looks like her mother" கண்மணியின் தோற்றத்தைப் பார்த்து சொல்ல
“She IS like her mother” இன்னொருவரோ… அவளின் அந்தக் குறும்புத்தனமான பாவனையில் கண்மணியின் குண இயல்புகளை பவித்ராவோடு வைத்து சொல்ல…
மேடையில் நின்று கொண்டிருந்த ரிஷி… யாரையும் கண்டு கொள்ளாமல்…. தன் உலகம் தனி உலகமென கையில் வைத்திருந்த தன் மனைவியின் சிறு வயது புகைப்படத்தில் இலயித்திருக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி….
---
நிகழ்ச்சி முடிந்து தொலைக்காட்சியும் அணைத்து வைக்கப்பட்டிருக்க…
ரித்விகாவும்…. இலட்சுமியும் கண்மணியைப் பார்த்தபடியே இருந்தனர்… ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தாலும்… கண்மணியின் உணர்ச்சிகள் துடைத்த கல் போன்ற முகம்.. அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தள்ளி வைத்திருக்க…
வழக்கமாக பவித்ரா – கண்மணி என்று ஒப்பீடு வரும்போது அனைவருக்குமே தோன்றும் எண்ணங்கள் தான்… கேள்விகள் தான்… அது அவளுக்கு வழக்கமான ஒன்றுதான்
ஆனால் இந்த காணொளி அவள் காணாதது….
அவளின் எண்ணங்களில் இப்போது அனைத்தையும் மீறி…. ரிஷியின் வார்த்தைகள்…. தன் தாய்… தந்தையிடம் கேட்ட அந்த வாக்குறுதி… இவை மட்டுமே….
“உன் அம்மாவோட ஆசை உனக்கு தெரிய வந்தால் நீ நிறைவேற்ற நினைப்பியா என்ன??…” ரிஷி அன்று கடற்கரையில் வைத்து அவளைக் கேட்டது ஞாபகத்துக்கு வர… கூடவே அர்ஜூனும் அவள் ஞாபகத்துக்கு வந்திருந்தான்
தொடர்பு படுத்திப் பார்க்கும் போது புரியத்தான் செய்தது… ஆனாலும் கண்மணி எதையும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை… சொல்லப் போனால்… இண்டெர்வியூ பார்த்துவிட்டு அவளாகவே ரிஷியை அலைபேசியில் அழைக்க நினைத்திருந்தாள் தான்…
ஆனால் ஏனோ இப்போது அவனோடு பேச மனம் இல்லை… கடந்த காலம்… தாயின் ஆசைகள் ஆயிரம் இருக்கட்டும்…. நான் இப்போது பவித்ரா-நட்ராஜின் மகள் இல்லையே… அவனது மனைவி… அந்த உரிமை… எல்லாவற்றிலும் இருக்கவேண்டும் தானே…
அவனது நண்பன் விக்கி விசயத்தில் மட்டும் நான் அவனது மனைவி… இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தவனுக்கு… பவித்ரா என்று வந்தபோதும் அதே உரிமைதானே இருக்க வேண்டும்… அது அவனிடம் இல்லையா… இல்லை என்னிடம் அவனது நம்பிக்கை இவ்வளவுதானா????…
கண்மணி இப்படி யோசித்துக் கொண்டிருக்க… ரிஷியோ… வெகு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்… மனைவியின் அலைபேசி அழைப்பை…
கண்மணி மேல் மிக மிக நம்பிக்கை வைத்து எதிர்பார்த்துக் காத்திருந்த அவனது ஆசை, எதிர்பார்ப்பு அத்தனையும் தகர்ந்திருந்தது… கண்மணியிடமிருந்து அழைப்பே வரவில்லை…
இண்டெர்வியூ பார்த்திருக்கின்றாள் என்பது ரித்விகா இலட்சுமியிடம் மூலம் பேசிய போது தெரிந்து கொண்டான்…
“அண்ணா… செமயா இருந்துச்சு இண்டெர்வியூ…. ஹேப்பி… ப்ரௌவ்ட் ஆஃப் யூ… அப்புறம் அம்மா, ரிதன்யா மகிளா வீட்டுக்கு போறாங்க… நானும் அண்ணியும் நாளைக்கு ஜாலியா மூவி அப்புறம் ஷாப்பிங் ப்ளான் பண்ணியிருக்கோம்…” ரித்விகா சொல்லி விட்டு தன் கடமை முடிந்து விட்டது என்பது போல வைத்துவிட்டாள்…
ஆக… கண்மணி… இயல்பாக இருக்கின்றாள்… தான் அவளிடம் பேசாமல் ஒரு நாளுக்கு மேல் ஆகிறது… அது எல்லாம் அவள் கவலை இல்லை…
“மூவி… ஷாப்பிங்… அதுவும் ஹேப்பியா…”
”நான் பேசலேன்னு ஒரு வருத்தம்… சின்ன ஃபீல் கூட இல்லை… அவ்வளவு திமிராடி உனக்கு…” என்று நேரிலேயே போய் அவளோடு சண்டை போட வேண்டுமென்ற ஆத்திரம் அவனை ஆக்கிரமிக்க… அப்போதே இந்தியாவுக்கு கிளம்பவேண்டும் என்ற எண்ணத்தை அது கொடுத்திருந்தது…
இந்த நிகழ்ச்சி… நட்ராஜ்… இந்த எண்ணங்களை மீறி… கண்மணி… அவளின் மீதான கோபம்… உரிமை… என அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்க… அவனின் ஆக்ரோஷம் எல்லாம் அவனிடம் மீண்டும் திரும்பியிருக்க… காட்ட வழி இல்லாமல்… யாரிடமும் சொல்ல முடியாமல்… பேருக்கு அன்றைய ஷூட்டுக்குப் போயிருந்தான்…
அங்கு அவனின் கோ கண்டெஸ்டெண்ட் ’ஆண்ட்ரூஸ்…. இவனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க… அதுவே சொன்னது…
”ஃபேன்ஸ் மீட்டில்…. நட்ராஜ்…ரிஷி பற்றி தேவையில்லாத கேள்விகள் வர… யார் காரணம் என்று… “
நேராக அவனிடம் சென்றவன்…
“உன் கூட சண்டை போடுவேன்லாம் எதிர்பார்க்காத… எவ்ளோ கோபப்படுத்தினாலும்… என்கிட்ட ரியாக்ஷன் இருந்து ரியாக்ஷன் வராது… வேற ஏதாவது ட்ரை பண்ணு…” ரிஷி அவனைத் தள்ளிவிட்டு செல்ல…
இன்று ஷூட்டிங் வந்தால் கண்டிப்பாக ரிஷி சண்டை போடுவான்… அதைக் காரணம் காட்டி… அவனை சுலபமாக வெளியேற்றி விடலாம்…. என்று எதிர்பார்த்திருந்த ஆண்ட்ரூஸ்க்கு பெரும் ஏமாற்றம்…
இங்கு ரிஷிக்கோ அந்த ஆண்ட்ரூஸை விட… அவனது கோபம் எல்லாம் வேறொரு ஆள் மீது… அவனது மனைவி மீது என்று சொல்ல வேண்டுமா… இதுவும் ஒரு காரணம் தப்பித்திருந்தான் ஆண்ட்ரூஸ்….
எல்லாமே சிலக் கணப் பொழுதுகள் தான்…. வேலையே ஓடவில்லை ரிஷிக்கு… இந்தியா எப்படி போவது…. என்ற யோசனை மட்டுமே… அது மட்டுமே…
நட்ராஜ் செய்யச் சொல்லியிருந்த மாற்றங்களுக்கான அவரது ஐடியாவை… அவரது கேள்வி ஞானத்தை… இன்றைய டெக்னாலஜிக்கு ஏற்றார் போல மாற்ற முடியுமா என ஆராய்ந்து பார்க்க… அதற்கு வாய்ப்பு இருக்க…. கடந்த வாரம் முழுவதும் அத்தனை ரெஃபெரன்ஸ் எடுத்து… ஆய்வுக்கட்டுரையாக எழுதி… நட்ராஜிடம் முடித்துக் கொடுக்க… நட்ராஜுக்கும் நம்பிக்கை வந்திருக்க இருவருமாக சேர்ந்து வேலை பார்க்க அப்போதுதான் ஆரம்பித்திருந்தனர்…
ரிஷியால் எதிலுமே கவனமே வைக்க முடியவில்லை…
”உன்கூட பேசுறது எனக்குப் பிடிக்கலைதான்… ஆனால் உன்னை விட உங்க அப்பா சக்ஸஸ் முக்கியம் எனக்கு.. என்னால வேறு எதிலும் கான்செண்ட்ரேஷன் பண்ண முடியல… அதுனாலதான் பேசுறேன்” இப்படி ஏதாவது காரணம் சொல்லி பேசலாமா என்று நினைத்த போதே
மனசாட்சி கூட வரவில்லை… அவனைத் திட்ட…
“ரொம்ப கேவலமா ப்ளான் பண்றியேடா ரிஷி… இவ்ளோதானா நீ… இதுக்கு நேராவே அவகூட உன்னால பேசாமல் இருக்க முடியலேன்னு சொல்லிறலாம்… உன் அப்பா… சக்ஸஸ்.. ஏண்டா இப்படி… “ ரிஷியே தன்னை நினைத்து நொந்து கொண்ட போதே… அவனின் கவனம் சிதற… அங்கிருந்த கருவியில் கை பட்டு விட… லேசாக விரலில் காயம்… பெரிதாக இல்லை என்பதால் ரிஷியும் சமாளித்திருக்க
“கவனம் ரிஷி” என்றார் நட்ராஜ் ரிஷியைக் கவனித்தவராக…
இப்போது நட்ராஜ் ரிஷியின் முகத்தைப் பார்க்க… வழக்கமாக அவனிடம் இருக்கும் உற்சாகம் இல்லை… என நன்றாகவே தெரிந்தது
”மணிக்கிட்ட பவித்ரா எழுதின டைரி கொடுத்தீங்களா ரிஷி… அதுனாலதான் ’மணி’ யோட பிரச்சனையா” நட்ராஜ் முதன் முதலாக ரிஷி-கண்மணிக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை பற்றி நட்ராஜ் கேள்வி எழுப்ப
சில நிமிட மௌனம் அவனிடம்
“ரூம்ல வச்சுட்டு வந்துருக்கேன்… ஆனால் நான் சொன்னாத்தான் அவளுக்குத் தெரியும்… இன்னும் அவ படிக்கல” அவரைப் பார்க்காமல் ரிஷி சொன்ன போதே
“அப்புறம் என்ன பிரச்சனை… அந்த டைரி படிச்சால் கூட உங்களுக்குப் பிரச்சனை இல்லையே…” மகளைப் புரிந்த தந்தையாகச் சொல்ல… ரிஷி இப்போது நிமிர்ந்தான்
“தேங்க்ஸ் சார்…” என்றவனிடம் நட்ராஜ் புரியாமல் பார்க்க
“அதை இவ்ளோ நாள் அவகிட்ட கொடுக்காமல் இருந்ததுக்கு…” அவன் சொன்ன விதத்தில் நட்ராஜின் முகத்தில் மருமகனைப் பார்த்து சிரிப்பு வந்திருக்க…
“ரிஷின்னு ஒருத்தன் வருவான்… அவனுக்குத்தான் என் பொண்ணக் கொடுக்கனும்னு காத்துட்டு இருந்தேன்… அதுதான் அவகிட்ட கொடுக்காமல் இருந்தேன்… ” நக்கலாக மருமகனை நட்ராஜ் ஓட்ட… ரிஷி வழக்கம் போல தனது நெற்றிக் கேசத்தை கோதிக் கொண்டிருந்தான்… தன் முகத்தை கைகளால் மறைக்க ஏதுவாக
“முழுக்க முழுக்க என்னோட சுயநலம் தான் ரிஷி… நீ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற… ” என்ற போதே இப்போது அவர் குரல் சுரத்தே இல்லாமல் ஒலிக்க…
”என்னைத்தான் மணி தப்பா நினைக்கும்… என்னதான் உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை… என்கிட்ட சொல்லுங்க” தீவிரமாக நட்ராஜ் கேட்க ஆரம்பிக்க… ரிஷி இப்போது சுதாரித்தபடி
“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்… அதெல்லாம் உங்ககிட்ட சொல்லவும் முடியாது… சொல்லவும் கூடாது… ” என்றவனின் குரல் முதலில் உயரத்தான் செய்தது… ஆனாலும் இருக்குமிடம் கேமெரா கண்கள் நடுவில்… சட்டென்று ரிஷியின் குரல் அடங்கி விட்டிருக்க… நட்ராஜுக்கும் இப்போது கோபம் வரத்தான் செய்தது…
“பவித்ராவைப் பற்றி… தன்னைப் பற்றி… அத்தனையையும் இவர் அனுமதி இல்லாமல் தானே ரிஷி செய்தது…. இவன் மட்டும் என் விசயத்தில் தலையிடலாம்… நான் தலையிடக் கூடாதா” கோபத்தில் அவர் ஒரு புறம் போய் அமர்ந்து விட…
இதை எல்லாம் இவர்களின் அருகில் இருந்த அந்த எதிரி போட்டியாளன் ’ஆண்ட்ரூஸ்” பார்த்துக் கொண்டேதான் இருந்தான்…
ரிஷியின் மனதில் இருந்த அனல் முகத்திலும் இருக்க… வியர்வை வழிய ஆரம்பித்திருக்க… கழுத்தைச் சுற்றி போட்டிருந்த அவனது மனைவியின் காட்டன் துப்பட்டாவை அனிச்சையாக எடுத்து முகத்தைத் துடைக்க ஆரம்பித்தவனுக்கு… அது இப்போது அவளை அவன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது…
அதுவரை அடக்கி வைத்திருந்த ஆக்ரோஷம் அவனுக்குள் மீண்டும் வர… கைகளை ஓங்கிக் குத்திக் கொள்ளப் போக
“அங்க போய்.. கோபம் வந்தால்… கண்ணாடியில குத்துறது.. சுவத்தில குத்திக்கிறதுன்னு…. ஏதாவது பண்ணுனீங்க… “
“ஏன் டிக்கெட் போட்டுட்டு என்னைப் பார்க்க வந்துருவியா” ரிஷி நக்கலாக கேட்டபோது…
“கண்டிப்பா… ஆனால் வந்து அந்தக் கையிலேயே நாலு போடு போடுவேன்…“ செல்லமாக கடிந்தவளிடம்
“பண்ணலை போதுமா… பண்ண மாட்டேன் போதுமா… நம்பு” என்று அவளிடம் சொல்லி விட்டு வந்தது ஞாபகத்துக்கு வர… தானாக கைகள் இறங்கி இருக்க அப்படியே அமைதி ஆகி இருந்தான் ரிஷி…
அதே நேரம் இவனைத் தாண்டி சென்ற அந்த ’ஆண்ட்ரூஸ்’ நட்ராஜிடம் சென்றிருக்க… தானாகவே எச்சரிக்கை ஒலி ரிஷிக்குள் ஒலிக்க… அவனின் கவனம் நட்ராஜிடம் மற்றும் அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆண்ட்ரூஸிடமும் சென்றது…
”ராஜ்… இண்டெர்வியூ சூப்பர்… எல்லாவற்றையும் விட… உன் பொண்ணு.. செம சூப்பர்… போட்டோ எடுத்தவன் ரசிச்சு எடுத்திருப்பான் போல… செம ஆங்கிள்… போட்டோ இன்னொரு காப்பி இருக்கா… அது கூட வேண்டாம்… இப்போ ரீசண்ட் போட்டோ இருக்கா ”
அதைக் கேட்க கேட்க…. ரிஷியின் கரங்கள் கண்மணியின் துப்பட்டாவை மொத்தமாக ஒரே கரத்தில் அடக்கியிருக்க…
நட்ராஜுக்கு…. ஆண்ட்ரூஸ் பேசுவது கொஞ்சம் புரிந்தும் … புரியாமலும் அவன் என்ன சொல்கிறான்… சொல்ல வருகிறான்… என்று தனக்குள் அர்த்தம் தேடிக் கொண்டிருக்க…
“கண்மணி… பேர் கூட சூப்பர்… ஐ வாண்ட் ஹெர்… ஐ வாண்ட் டூ *……” என்று முடிக்கவில்லை… மறு வார்த்தை பேச முடியாமல் அவன் பற்கள் சிதறியிருக்க… வாய் முழுவதும் இரத்தம் கொப்பளித்திருந்தது… ரிஷி அவன் முகத்தில் விட்ட அடியில்….
அடிபட்டவனின் வாயில் இருந்து வந்த இரத்தத்தின் சிவப்பை ரிஷியின் கண்களில் பரவியிருந்த சிவப்பின் அடர்த்து மிஞ்சியிருந்தது…. அப்போதும் அவன் ஆக்ரோஷம் அடங்கவில்லை… அவனையும் யாராலும் அடக்கவும் முடியவில்லை…
----------
Komentarze