top of page

கண்மணி... என் கண்ணின் மணி-58

அத்தியாயம் 58


நட்ராஜும் ரிஷியும்… எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு… சுட்டெறித்த வெயிலுக்கு இதம் தேடி… ஓரமாக கடற்கரை மணலில் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தனர்… ரிஷி கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருக்க… நட்ராஜ்… தன் மருமகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்…


நேற்றைய தினம்… ரிஷி அவனது அன்னையுடன் பேசிய பின்… உற்சாகத்துடன் தான் இருந்தான்… இன்றுமே அதே உற்சாகத்தோடு இருக்க… மனம் அவருக்கு நிம்மதி ஆகி இருந்தது…


கண்மணி அவர் வாழ்க்கையில் முக்கியமானபின் அவர் நாட்களெல்லாம் மகளுக்காக மட்டுமே… இந்த ஒரு நாளைத் தவிர…


இந்த தினத்தை ‘பவித்ரா’ வுக்காக மட்டுமே இதுவரை இருந்திருக்க… யாருக்காகவும் இந்த தினத்தை ஒதுக்காதவர்… இன்று ரிஷிக்காக தனது மருமகனுக்காக… அவன் முகத்தில் சந்தோசம் உற்சாகம் பார்க்க அவனோடு செலவழித்திருக்க… மகளுக்காக மாறி… இன்று மருமகனுக்காகவும்…


ஆனாலும் தான் மாறி இருந்த விநோதம் அவருக்குமே பிடித்திருந்தது…


நட்ராஜ் அப்படி இருக்க… ரிஷியின் மனதில் நேற்றிருந்த அளவு கோபம்… சோகம் எல்லாம் இல்லை… எல்லாவற்றிற்க்கும் மேலாக… தன் அன்னை கிட்டத்தட்ட சரி ஆகி விட்டார் என்பதே அவனுக்கு பெரும் ஆறுதல் கொடுத்திருந்தது …


தன் தாயை உடனே பார்க்க முடியவில்லைதான்… ஆனாலும்… அவரோடு பேசியதிலேயே மனம் நிறைந்திருந்தது…


’ரிஷிக்கண்ணா” என்ற அவரது தெளிவான அழைப்பு… எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனை இளைப்பாற வைத்தார் போன்று மன அமைதியைக் கொடுத்திருக்க…


’உன் அவஸ்தையான போராட்டம் எல்லாம் இன்னும் சில காலமே…’


அவனது தாயின் அன்பான குரல்… அவனது செவிகளை அடைந்த போது… இந்த நம்பிக்கை ஒளியைத்தான் அவனுக்குள் ஏற்றி வைத்திருந்தது…


இது எல்லாவற்றையும் மீறி… ஓர் இன்ப அவஸ்தையான ஓர் உணர்வு… அவனது கண்மணி அவளுக்கு கொடுத்திருந்தாள்… யாரிடமும் இதுவரை உணராத உணர்வு…


பேசவில்லைதான் அவள்… ஆனால் அவனை விட்டு விலகி இருந்தாள் தான்… ஆனால் அவளது விலகல்… ஒதுக்கத்தையும் மீறி… உனக்காக நான் இருக்கிறேன்… என்ற அவளது நிலைப்பாடு… அவளை இன்னும் இன்னுமே தேட வைத்துக் கொண்டிருந்தாள்… கோபம் இருந்தாலும்… விலகல் இருந்தாலும் இவனுமே அவளைத் தேடுகிறான்… அவளைக் கண்ட நாள் முதல் இன்று வரை… அவள் நினைவுகளின் சுகம் சேர்த்து….


நேற்றைய வீம்பு… கோபம் எல்லாம் இல்லாமல்… இந்த உணர்வை சந்தோசமாக… அனுபவித்தான்… அனுபவித்துக் கொண்டே இருந்தான் ரிஷிகேஷ்…


அனுதினமும் அவள் பேசும் போது கூட… அந்த நேரம் மட்டும் தான்… அதன் பின் தான்… தன் வேலை என மூழ்கி விடுவான்… ஆனால் தன்னைத் அவளை மட்டுமே அவளது நினைவுகளை மட்டுமே தேடவிடும்… தவிக்க விடும் அவளின் கோபத்தை… பிடிவாதத்தை… ரசித்தான்… போதை என்று ஏதேதோ சொல்கிறார்கள்… இவனுமே அதை எல்லாமே அனுபவித்திருக்கிறான்…. அது எல்லாமே வெறும் வார்த்தை என முதன் முதலாக அவனவள் காட்டி இருந்தாள் … ஒரு பக்கம் தன்னிடம் பேச மாட்டாளா என்ற ஏக்கம்… இன்னொரு பக்கம் என்னிடம் பேசாமல் எத்தனை நாள் இருப்பாள் என்ற போட்டி… ஒரு மாதிரி… சந்தோசம்… துக்கம்… என்று இரண்டுமே அந்த உணர்வு தந்திருக்க… ஒரே உணர்வு அது எப்படி இரண்டையும் தரும்… ஆச்சரியத்தைத்தான் தந்தது…


“ரவுடி… இன்னைக்கு இண்டெர்வியூ டெலிகாஸ்ட் ஆகும்… பார்த்துட்டு… போன் போடாமல் மட்டும் இரு… அம்மாகிட்ட போனைக் கொடுத்துட்டு… ‘ரிஷிக்கண்ணா… சொல்லுங்கன்னு’ இன்ஸ்ட்ரக்‌ஷன் வேற… என் அம்மாவுக்கே கத்து கொடுக்கற… இருக்குடி உனக்கு…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்… வெகு காலமாக தான் மறந்திருந்த அங்கிருந்த கேளிக்கை சாகச விளையாட்டுகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவன்… நட்ராஜுக்கு… அவரது வயதுக்கு ஏதுவாக இருந்த விளையாட்டுகளில் அவரையும் விளையாட வைத்து அன்றைய தினத்தை தன்னால் முடிந்த அளவு உற்சாகமாக மாற்றிக் கொண்டிருந்தான் ரிஷிகேஷ்


----

சென்னை டிசம்பர் 25


ரித்விகாவுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு… சந்தோஷம் சந்தோஷம் மட்டுமே…


“இன்னைக்கு ’அம்மா’ விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்… ” இலட்சுமியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள் ரித்விகா


“அண்ணா இண்டெர்வியூ டெலிகாஸ்ட் ஆகுது… ஸ்பெஷல் கிளாஸ்லாம் அட்டென்ட் பண்ண மாட்டேன்…” காலையிலேயே சொல்லி விட… ரிதன்யாவுக்கும் ரித்விகா அளவு சந்தோசம் தான்… ஆனால் அதை அனுபவிக்கத்தான் முடியவில்லை…


காரணம் நேற்று ஆரம்பித்து இப்போது வரை வந்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பால்…


”நானும் அப்பாவும்… உங்க மூணு பேர்ல நீ மெச்சூர்ட்னு சொல்லி சொல்லிப் பெருமைப்பட்டுக்குவோம்… அப்பா கூட சொல்வார்… ரிஷி இல்லைனாலும்… ரிதன்யா நம்மை, நம்ம குடும்பத்தை… பிஸ்னஸை பார்த்துக்குவான்னு சொல்லிட்டே இருப்பார்…. அவ்ளோ நம்பிக்கை உன் மேல அவருக்கு… எங்க ரெண்டு பேர் நம்பிக்கையும் எல்லா விசயத்திலும் தப்புனு இப்போதான் புரியுது… ’மகிளா’ நம்ம வீட்டுப் பொண்ணுதான்… நான் வளர்த்த பொண்ணுதான்… என்னாலும் விட்டுக் கொடுக்க முடியாதுதான்.. ஆனால்… ’கண்மணி’ ன்னு வரும் போது எனக்கு என் மருமகள்தான் முக்கியம்… கண்மணிக்கான மரியாதை முக்கியம்… உன்னை விட ஒரு வயது கம்மினாலும்… ’அண்ணி’னுதான் நீ இனிமேல கூப்பிடனும்… அதை எல்லாம் விட… என்னால எவ்ளோ கஷ்டம் உங்க எல்லாருக்கும்… நீ அம்மான்னு என்னைக் கவனிச்சுக்கிட்ட… ஆனால் கண்மணிக்கு என்ன தலை எழுத்து ரிதன்யா… என்னை மட்டுமல்ல… நம்ம எல்லாரோட தேவையையும் அவ பார்த்துட்டு இருக்கா…. நீ எவ்வளவோ அவளை ஒதுக்கியும்… யார் கிட்டயும் அவ அதைக் காட்டினது இல்லை…” இலட்சுமி கண்கலங்க


ரிதன்யா கடுப்போடு அமர்ந்திருந்தாலும்… அன்னையை எதிர்த்துப் பேசவில்லை… அமைதியாகத்தான் அமர்ந்திருந்தாள்… ஏதாவது பேசினால் கண்டிப்பாக அது அன்னைக்கு கஷ்டம்தான்… தன் அன்னையைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை… பிடிக்கவில்லை… அவரது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டாள்… அவ்வளவுதான்


“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னவள்…


“புரியுதும்மா… ஆனால் கண்மணி செய்ததை… காசைக் கொடுத்திருந்தால் யார் வேணும்னாலும் பண்ணிருப்பாங்களே… அதை அண்ணன் செஞ்சுருக்கலாமே… ஒரு நர்ஸ்… ஒரு வேலைக்காரி… இது தான் நம்ம தேவை… அதை ஏன் அண்ணின்ற உறவுல கூட்டிட்டு வந்தாரு…. “ ரிதன்யா அப்போதும் தன் நிலையிலேயே இருக்க…


இலட்சுமி அதிர்ந்து போய் பார்த்தவராக…


”உன் அண்ணாகிட்ட இதைக் கேட்ருக்கலாமே…” என்ற போதே…


“ப்ச்ச்… இனி என்ன கேட்கிறது…. ஆனால் அந்த ‘கண்மணி’ நாராயண குருக்களோட.. அவரோட கோடி கோடியான பணத்துக்கு வாரிசா இருக்கலாம்… பவித்ராவோட பொண்ணா இருக்கலாம்… ஆனால் குப்பத்துல வளர்ந்த… ” என்று நிதானித்தவளாக


”நட்ராஜ் மாமா பொண்ணா கூட என்னால ஏத்துக்க முடியலம்மா… அந்த காந்தம்மா அவங்க வளர்த்த ஒரு பொண்ணாத்தான் என்னால பார்க்க முடியுது… அந்தக் கெழவி… ச்செய்ய்… அந்தப் பாட்டி வரும்போது… கண்மணியைப் பாருங்க… ரெண்டு பேருக்கும் வித்தியாசமே தெரியாது… உங்களுக்கே புரியும்… ப்ச்ச்… என்னால ஏனோ ஏத்துக்க முடியலை… “


“ரிதன்யா…” என்று ஒரே அதட்டலில் ரிதன்யாவைப் பேசவிடாமல் தடுத்தவர்…


“என்ன வேணும்னாலும் சொல்லு… நாளைக்கு உனக்கு மேரேஜ்னு வரும் போது… அவதான் உனக்கு கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கனும்… ” என்ற போதே


”ஹ்ம்ம்… ஃபர்ஸ்ட் மேரேஜ் நடக்குதான்னு பார்ப்போம்… உன் மருமகள பார்த்தே… நாம இருக்கிற இடத்தைப் பார்த்தே எப்படியும் நம்ம சொந்தத்துல வரவே வரமாட்டாங்க… பார்க்கலாம்… அதுக்காக இந்த காதல் கீதல் அதெல்லாம் பண்ண மாட்டேன்… அண்ணன் கை காட்ற பையன்… அது யாரா இருந்தாலும் நான் பண்ணிப்பேன்… இது.. இது ஒண்ணுதான் என் கல்யாண விசயமா நான் மனசுல வச்சுருக்கிற ஒரே விசயம்” என்ற போதே ரிதன்யாவுக்கு விக்கியின் நினைவுகள்… வர… அவளையும் மீறி கண்கள் கலங்க ஆரம்பித்திருக்க


“ஏண்டா இப்போ வந்த… “ மனதோடு புலம்பிக் கொண்டவள்… அதன் வேதனையை அடியோடு மறைத்தாள் தான்…


இலட்சுமிக்குத்தான் இப்போது ரிதன்யாவைப் பற்றி அவள் நிலைப்பாடு குறித்து குழம்பி இருந்தார்…


“மற்ற விசயத்தில் எல்லாம்… முதிர்ந்த அனுபவத்தோடு இருப்பவள்… கண்மணி விசயத்தில் மட்டும் ஏன்…”


அவரையே புரியாமல் தவிக்க விட்டவளாகி இருந்தாள் ரிதன்யா… இதோ இன்றும் கண்மணி வீட்டில் இருந்தால் பெரும்பாலும் வெளியே கிளம்பி பழக்கத்தைக் கடைபிடித்தாள்


“அம்மா.. நான் வெளில கிளம்புறேன்… மகிளாவுக்கு வளைகாப்பு ஷாப்பிங்க்கு… “ என்றவளாக


“நீங்க எப்போ அவள பார்க்க வரப் போறீங்க… ” என்றும் இலட்சுமியிடம் கேள்வி கேட்டு நிறுத்த.. கண்மணியும் அங்கு இருந்தாள் தான்… அவளையெல்லாம் இருப்பதாக ரிதன்யா நினைத்தால்தானே


இலட்சுமி… யோசனையில் இருக்கும் போதே… ரித்விகா உடனடியாக…


“இன்னும் ஒன் மன்த் இருக்கு… அதுக்குள்ளேவா… என்னை மட்டும் விட்டுட்டுடீங்க…“ தன் சகோதாரியிடம் கேள்வி கேட்க


“அப்போ வா…” ரிதன்யா அவளையும் கூப்பிட


“இன்னைக்கு நோ… அண்ணாவோட இண்டெர்வியூ இருக்கு… நீ பார்க்கலையா” என்றவாறு சகோதரியைப் பார்க்க


“நான் மகிளா கூட சேர்ந்து பார்த்துக்கறேன்… இங்க இருந்தா வாயை மூடிக்கிட்டு ஆளுக்கொரு மூலையில தான் உட்கார்ந்து பார்க்கமுடியும்… என்ஜாய் பண்ணிலாம் பார்க்க முடியாது…” என்றபடி கிளம்பியும் விட்டாள்…


மூத்த மகளின் வார்த்தைகளில் இலட்சுமி… கண்மணியைக் கவலையோடு பார்க்க… அவள் முகமுமே சரி இல்லை… என்பது போல் தான் இருந்தது..


நேற்று கூட… உடம்பு சரி இல்லை என்பதால் அவள் முகம் அப்படி இருந்தது என்று நினைத்தார்… அதேபோல் தன்னைப் பேச விட்டு விட்டு ரிஷியோடு பேசாமல் அழைப்பில் இருந்து விலகி இருந்ததைக் கூட பெரிதாக நினைக்கவில்லைதான்…


ஆனால் மகனின் கண்கள்… அவனையும் மீறி… தன்னிடம் பேசிக் கொண்டிருந்ததையும் மீறி அலைபாய்ந்ததைக் கண்டறிந்த போதுதான்.. மகனுக்கும் மருமகளுக்கும் ஏதோ பிரச்சனை என்பதையே அறிய முடிந்தது….


ஆனாலும் இலட்சுமி கேட்கவில்லை… கணவன்–மனைவி… அவர்களுக்கிடையாயான ஏதோ ஊடல்… என்று விட்டு விட்டார்… அது மட்டுமல்லாமல் நட்ராஜிடமும்… ரிஷியிடமும்… தனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்ல வேண்டாம் என்று இலட்சுமியிடம் சொல்லி விட்டாள் கண்மணி… அவர்கள் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் தேவையில்லாத கவலைப்படுத்தக் கூடிய விசயங்களை அவர்கள் காதுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கண்மணி சொல்ல.. இலட்சுமிக்குமே அது சரி எனப் பட விட்டு விட்டார்…


ஆக மொத்தம் பெரிதான பிரச்சனை இல்லை என்பது மட்டும் நிச்சயம்… அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று நினைத்திருக்க… ரிதன்யா இலட்சுமியிடமு விக்கி கண்மணி பிரச்சனையை சொல்லியிருக்க… கேட்டவருக்கு… தன் மகன் கண்மணியிடம் என்ன சொல்லி இருப்பான் என்று உணர்ந்தவராக… கண்மணியா? ரிஷியா? யார் பக்கம் நியாயம் சொல்ல என்ற எண்ணப் போக்கே அவருக்கு…


கண்மணியின் உடல்நிலையையும் மீறி… மனதளவில் அவள் கஷ்டப்படுகிறாள் என்றே அதன் பிறகுதான் இலட்சுமிக்குத் தோன்ற… ரிதன்யா சென்ற பிறகு பேச ஆரம்பித்திருந்தார்…


---


டிசம்பர் மாதக் குளிர் வேறு… காய்ச்சல் வேறு… போர்வையைப் போர்த்தியபடி…. சோபாவில் அமர்ந்திருந்தவள்…


இலட்சுமி ரிஷியைப் பற்றி பேச வரும் போதே… அவரைப் பேசவே விடவில்லை கண்மணி…


“ஒரு ஆறு வருசம் இருக்குமா அத்தை நீங்க ரிஷிய ஒதுக்கி வைத்திருந்தது… உங்களால கூட ரிஷியோட பேசாமல் இருக்க முடியும் அத்தை… என்னால அது முடியாது… இப்போ கூட கோபத்துல பேசாமல் இருக்கல… அவருக்குமே என் மேல கோபம் இல்லை… அது எனக்கும் தெரியும்… நாங்க பார்த்துக்கிறோம்… இந்த ஃபீல் கூட நல்லாத்தான் இருக்கு… ” என்ற மருமகளின் சிரிப்பில் இலட்சுமிக்குமே ஆச்சரியமே…


“என்ன பொண்ணும்மா நீ… ” என்று சொன்ன போது இலட்சுமியின் மனநிலையுமே மாறி இருக்க…


“ரிதன்யா சொல்லிட்டா… விக்கி பிரச்சனை முதற்கொண்டு… நல்ல பையன் தான்… பேசுனது தப்புதான்… சரின்னு சொல்லலை… ஆனால் “


“நீங்களும் என்ன சொல்லப் போறீங்க… அந்த விக்கிய அடிச்சது தப்புன்னு… இதே தான் ரிஷியும் சொன்னாரு… நீங்க சொல்றதை கேட்டுக்குவேன்… ஆனால் ரிஷி சொல்றதை கேட்க முடியாது… நான் தப்பே செய்தாலும் ரிஷி என் பக்கம்தான் இருக்கனும்… இருக்க வேண்டும் நான் தான் அவருக்கு முதல்ல… மற்றவங்கள்ளாம் ” என்ற போதே… யாரிடம் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்ந்தவளாக…


“ ’ரிஷிக்கண்ணா’ நீங்க கூப்பிட்ட போது கொஞ்சம் எனக்கு கடுப்பாத்தான் இருந்தது… ப்ச்ச்… பரவாயில்ல… கூப்ட்டுக்கங்க” கண்மணி குறும்பாகச் சொல்ல…


“எனக்கே போனால் போகுதுன்னு… விட்டுக் கொடுக்கறீங்களா மேடம்” இலட்சுமியின் கண்களில் உண்மையிலேயே ஆனந்தக் கண்ணீர்தான்…


”சரி உன் ’ரிஷிக்கண்ணா’ பற்றி பேசலை… ரிதன்யா பற்றி பேசலாமா” என்றபோது கண்மணியும் அமைதி ஆகி விட… அதுவே சொன்னது ரிதன்யாவைப் பற்றி கண்மணி பேச விரும்பவில்லை என்று…


“ உங்க ரெண்டு பேருக்கும் உள்ள மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்”


“எனக்கு இல்லை… ரிதன்யா மேல எனக்கு எப்போதுமே கோபம் இருந்தது இல்லை… ஆனால் இப்போ கோபம்தான்… அதையும் இல்லைனு சொல்ல மாட்டேன்… கோபம் கூட இல்லை பெரிய வருத்தம்… எனக்கும் அவளுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்… அந்த விக்கி முன்னால… அதுதான் என்னொட வருத்தம்” கண்மணி தன் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்த


”சரி… ரிதன்யா… அவளுக்கு சப்போர்ட்டாலாம் பேசலை… இது வேற விசயம்…” ரிதன்யாவின் திருமண விசயத்துக்கு வந்தார் இலட்சுமி…


‘ரிதன்யாவுக்கு மேரேஜ்…. இப்போதைக்கு அதுதான் இந்த வீட்டுக்கு ஒரு மிகப்பெரிய மாறுதலா இருக்கும்… ரிதுவுக்கும், குடும்பம்னா அதுல இருக்கிற கஷ்டம்… சகிப்புத்தன்மை புரிய வரும்… புரிஞ்சுக்கிருவா… அப்போ உன்னையும் அவளுக்குப் புரியும்… “ என்றவர்… கண்மணியின் பார்வை உணர்ந்தவராக


“உன்னைப் புரியுறதுக்காகவெல்லாம் அவளுக்கு மேரேஜான்னு கேட்க வர்றது புரியுது… அவளுக்கும் வயசாகுது… இப்போவே பார்க்க ஆரம்பித்தால் தான்… அது மட்டும் இல்லை… இந்த ஏஜ்ல ஒரு பொண்ணு வீட்ல இருக்கும் போது… உங்க ரெண்டு பேருக்குமே பிரச்சனைதான் எல்லா விசயத்திலும்… இவ்ளோ நாள் இதெல்லாம் பேச முடியல… என்னால தான் ஏகப்பட்ட பிரச்சனை… எல்லா பிரச்சனையையும் நான் தான் சரிப்படுத்தனும் கண்மணி…” என அங்கலாய்த்தவரை கண்மணி சமாதானப்படுத்த… மருமகளின் வார்த்தைகளில் சமாதானமானவர்


”நம்ம குடும்பம்… இதோட நிலைமை எல்லாமே புரிந்த ஒரு இடம்… ரிஷிக்கு ரிதன்யா மேரேஜ்ல எல்லாம் இப்போதைக்கு அவசரம் இல்லைனு தோணுது எனக்கு… இவ வேற அண்ணா சொல்ற பையனத்தான் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு இருக்கா.. ” இலட்சுமி புலம்பிக் கொண்டிருக்க..


இலட்சுமி சொன்னபோதே… ரிஷி குடும்பத்தைப் பற்றி… அவரது தந்தை… எல்லாமே அறிந்த ஒருவன்… என்றால்… யோசித்த போதே ’பார்த்திபன்’தான் கண்மணியின் நினைவில் வந்தான்… ஆனால் இலட்சுமியிடம் அவனைப் பற்றி சொல்லவில்லை…


“உங்க தாத்தா பாட்டி… அவங்களுக்கு தெரிந்தவங்க கிட்ட சொல்லிவைக்கிறியா கண்மணி… உங்க மாமா எங்கள விட்டுட்டுத்தான் போனாரு… ஆனால் பணமே இல்லாமல் நடுத்தெருவுல விட்டுட்டு போகலை… உன் ’வீட்டுக்காரன்’ தான் அதெல்லாம் எடுக்க மாட்டேன்னு வீம்பு பண்றான்… கெத்து காட்றாராம்… அவரைப் பெத்தவகிட்டயே… சொல்லி வை உன் புருசன் கிட்ட…” ரிஷி மேலும் கோபம் கொண்டவராகச் சொல்ல… சிரித்தவள்


“பார்க்கலாம் அத்தை… ரிஷிகிட்டயும் பேசலாம்” பேசிக் கொண்டிருக்கும் போதே…


ரித்விகா சரியான நேரத்திற்கு ஆஜரானவளாக… அண்ணான் இண்டெர்வியூ டைமுக்கு 5 மினிட்ஸ் தான் இருக்கு… என்றவாறே…. தொலைக்காட்சியை ஒளிர்ப்பித்தாள்… சேனலையும் மாற்றி இருக்க… நிகழ்ச்சியும் ஆரம்பித்திருந்தது…


(உரையாடல்கள் முழுவதுமாக ஆங்கிலத்திலும் இல்லாமலும் தமிழிலும் இல்லாமல்… படிக்கின்ற வாசகர்களுக்கு ஏதுவாக இரண்டும் கலந்தே வரும்…)


நிகழ்ச்சியின் தொகுப்பாளர்… பேச ஆரம்பித்திருக்க…


”இந்த நிகழ்ச்சி… இதுவரை பாப்புலராக இருந்தாலும்… அந்தத் தொழில்சார்ந்த அதாவது… கனரக வாகனத் தொழில் சார்ந்த மக்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம்… ஆனால் இந்த சீசனை சாதரண மக்களுக்கும்… அதிலும் பெண்கள் மத்தியில் பிரபலாமாக்கிய பெருமை… மிஸ்டர் ஆர்.கே… அண்ட் மிஸ்டர் நட்ராஜ் காம்போ தான்… அதிலும் ஆர்.கே… ரிஷிகேஷ்… “ என்று தொகுப்பாளருக்கே உரிய படபட பட்டாசுக் குரலில் ஆரம்பித்திருக்க… நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் இந்த இண்டெர்வியூவுக்கு ஆர்கே-நட்ராஜ் காம்போ அட்ராசிட்டிஸ் பாருங்க… என அந்த பேட்டிக்குத் தயாராகும் முன் நட்ராஜை ஆயத்தப்படுத்த ரிஷியும் கார்லாவும் செய்த சேட்டைகள் எல்லாம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன


“ “RK’ விட… நட்ராஜ்தான் இன்னைக்கு ஃபோகஸ்… சோ… நீங்கதான் இன்னைக்கு ஹீரோ” கார்லா ரிஷியின் அருகே நின்றபடி அவன் கரங்களோடு தன் கரங்களோடு கோர்த்தபடி சொல்லிக் கொண்டிருக்க… கார்லாவின் ரிஷி மீதான அதிகப்படியான உரிமை பார்த்த நட்ராஜுக்கு முறைக்கக் கூட முடியவில்லை…


ரிஷியும் கார்லாவை விலக்காமல் தன் கைப்பிடிக்குள் அவளை வைத்திருக்க… நட்ராஜுக்கு ரத்தம் அழுத்தம் உயர் நிலைக்கு உயர்ந்தது என்றே சொல்லலாம்..


என்னதான் கார்லாவும் ரித்விகா போலதான்… … என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும்… ரித்விகா போல் கார்லாவின் தோற்றம் இல்லை… அது மட்டுமல்லாமல் அவளின் மேற்கத்திய உடைகள்… என எதுவுமே சரியாகப் படவில்லை நட்ராஜுக்கு… ரித்விகா போல என்று நினைத்துக்கொள்ளவும் முடியவில்லை… குறைந்த பட்சம் ’அண்ணா’ என்று விளிப்பு இருந்திருந்தால் கூட நட்ராஜ் இந்த அளவு வருத்தப்பட்டிருக்க மாட்டாரோ???… தனக்கே மரியாதை இல்லை… நேரடி பெயர் அழைப்புதான்… எனும் போது ரிஷியெல்லாம் எம்மாத்திரம்


ஆக மொத்தம் அவரால் கார்லோவோடு ஒட்டவே முடியவில்லை…


ஸ்பான்சரின் மகள் என்ற பெயரில்… நிகழ்ச்சிக்கும்… கேரேஜுக்கும்… ரிஷியைக் காணத் தவறாது வந்து விடுவாள்… ஆனால் இங்குமா என்று இருந்தது நட்ராஜுக்கு… ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை… கேமரா கண்களுக்கு நட்ராஜும் பழகி இருந்தார்… இந்த சில மாதங்களில்…


பார்த்துக் கொண்டிருந்த ரித்விகா.. கண்மணியிடம் கிசுகிசுத்தாள்…


“பாருங்க மாமாக்கே பிடிக்கலை… அவர் முகமே சொல்லுது… அண்ணா உங்க கையைக் கூட இப்படி பிடிச்சுக்கிட்டது இல்லை… “ ரித்விகா கடுப்போடு சொல்ல…


“ஆனால் உன் கையை இப்படித்தானே பிடிச்சுப்பாரு… உங்க அண்ணா…” கண்மணி கண் சிமிட்டிச் சொல்ல…


“விட்றாதீங்க… விட்டே கொடுத்துறாதீங்க… உங்க வீட்டுக்காரரை… “ என்றவள்


“ஆனால் என்னதான் கோபம் இருந்தாலும் அண்ணானாகிட்டாரே… இங்க பாருங்க…” கையில் இருந்த விசிலைக் காட்ட…


”அண்ணாவும் மாமாவும் வரும் போது… விசில் அடிக்கனும்… ஆனால் அடிக்கத் தெரியாதே…”


“இதை வச்சுத்தான் அடிக்கனும்…” என்று விசிலை வாயில் வைத்து அடித்துக் காட்டப் போகும் போதே… வேகமாக ரித்விகாவிடமிருந்து பறித்து தூக்கிப் போட்டிருக்க கண்மணி


”அண்ணி… நீங்களும் இந்த பழைய பஞ்சாங்கம் மாதிரி… இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லப் போறிங்களா” என்ற போதே அருகில் இருந்த இலட்சுமி முறைக்கத்தான் செய்தார்


“உனக்கு விசில் அடிக்கத் தெரியாதா… என்ன ரித்வி..” என்று பாவமாக கிண்டல் பார்வை பார்த்து கேலி செய்த கண்மணியிடம்


“இவ்ளோ நக்கலா அண்ணி… அப்போ உங்களுக்கு அடிக்கத் தெரியுமா…” பெரிய ஒப்புதலாக தலையை ஆட்டிய கண்மணியிடம்


”அண்ணி… அண்ணி… ப்ளீஸ்… அண்ணி அடிச்சுக் காமிங்க… “ என்ற ரித்விகாவிடம்


“என்னால இன்னைக்கு முடியாது… இருமி இருமி தொண்டை வலி… ஆனால் கத்து தர்றேன்… அடிக்கிறியா” என ரித்விகாவுக்கு சொல்லித் தரப் போக… ரித்விகாவும் கற்றுக் கொள்ள ஆயத்தமாகி இருந்தாள்


”டீல்… இந்த ப்ளூப்பர் முடிச்சு அப்புறம் ப்ரேக் அடுத்துதான் ஆக்சுவல் ப்ரோகிராம்… அதுக்குள்ள கத்துக்குவேனா” என்றவளை


“ரித்வி…” இலட்சுமி அதட்டலைப் போட


“ம்மா… ரவுடி நம்பர் 1 அண்ட் ரவுடி நம்பர் 2… இடையில யாரும் வராதீங்க… உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்றவளை இலட்சுமி முறைத்தவாறே…


“என்னமோ பண்ணுங்க…” என்று தொலைக்காட்சியில் கவனம் வைக்க ஆரம்பித்திருந்தார்… கூடவே கார்லாவையும்…


அவருக்குமே தெரியாத கோவா நிகழ்வுகளே… ஆனாலும் மகனைச் சந்தேகிக்கவில்லை… ரிஷி தான் யார் என்று இந்த ஆறு வருடங்களில் காட்டி விட்டானே… இனிமேலும் அவனின் வாய் வார்த்தைகள் அவருக்குத் தேவையா என்ன… அதை விட… கண்மணி… நேற்று வந்தவள் அவளே தன் மகனைப் புரிந்து கொண்டிருக்கும் போது… தான் மட்டும் என்ன… ஆக அவருக்கும் ‘கார்லா’ என்ற பெண் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை…


”என்னண்ணி… எனக்கு காத்துதான் வருது…. ப்ரேக் வேற முடியப் போகுது” என்று விசில் அடிக்க வராத வருத்தத்தில் சொல்ல…


“’ஆ’ காட்டு… ’நாக்கை மடி’ என .. அவளின் நாக்கு மடிப்பில் தன் விரலை வைத்து…” ரித்விகாவை ஊதச் சொல்ல… இப்போது ரித்விகாவுக்கு விசில் சத்தம் அவள் வாயில் இருந்து வந்திருக்க…


“இப்படியா அண்ணி… இப்படியா…” என்றவாறே அடித்துப் பார்க்க… ரித்விகாவுக்கும் ஒலி வந்திருக்க… துள்ளிக் குதிக்க ஆரம்பித்து இருந்தாள்…


கண்மணிக்கும் ரித்விகாவின் உற்சாகம் தானகவே தொற்றிக் கொண்டது…

’ட்ரை பண்ணு…’ எனும் போதே… ரிஷியும்… நட்ராஜும் தொலைக்காட்சித் திரையில் வந்திருக்க… கண்மணி அழகாக… ஸ்டைலாக… கம்பீரமாக நடந்து வந்தவனைப் பார்த்தவள்… ஏற்கனவே தன்னை மறந்திருக்க… தன்னையுமறியாமல்… சரவெடியாக விசில் ஒலி எடுத்து விட… ரித்விகாவும் அவனோடு சேர்ந்து சத்தம் வந்ததோ இல்லையோ… தன் பங்குக்கு விசில் அடிக்க… காதைக் கிழித்தது கண்மணியிடமிருந்து வந்த தொடர் விசில் சத்தம்…. யாருக்காகவும் பார்க்கவில்லை…. யாரையுமே பார்க்க வில்லை… ரிஷி மட்டுமே அவள் கண்களில்… அங்கு ஆரவாரம் அடங்கியதோ இல்லையோ… கண்மணியிடம் இருந்து வந்த விசில் சத்தத்துக்கு முடிவு இல்லாமல் இருக்க…


இலட்சுமி முதன் முறையாக கண்மணியை ஆச்சரியமாகப் பார்த்தார்… ரித்விகாவுக்கு கூட இல்லை… உதடுகள்… கன்னங்கள்… கண்கள்… விரல்கள் என தனித்தனி அபிநயம் காட்டிக் கொண்டிருக்க… வேறு ஒரு கண்மணியாக தனது மருமகளைப் பார்த்துக் கொண்டிருக்க… மகனைக் கூட அவர் கவனிக்க வில்லை…


கண்மணியின் இந்த அதிகப்படியான உற்சாகம்…. அதிகப்படியான சுறுசுறுப்பு… அவளது மித மிஞ்சிய வேகம்… முதன் முதலாக உணர்ந்தவருக்கு… தன் மகனால் இவளைச் சமாளிக்க முடியுமா???… என்ற கவலையோடு சேர்ந்த கேள்வி முதன் முறை வந்திருந்தது… இலட்சுமிக்குள்


”மக்களே… ஆக்சுவல் இண்டெர்வியூ… இன்னும் பத்து நிமிசம் கழித்து … ஆனால் அதுவரை… அந்த பத்து நிமிடம் நீங்க நட்ராஜ்… அண்ட் ஆர்கே கிட்ட ஜாலியா ஒரு ஃபன் சாட் பண்ணலாம்… “ கார்லா இப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறி இருக்க…


ரிஷி…. கார்லாவை கேள்விக்குறியோடு பார்க்க…


“பயப்படாதிங்க… நம்ம மக்களும் இருக்காங்க… ஜென்ரல் ஆடியன்ஸ் உங்களுக்கு அதிகம் தான்… அவங்க எல்லாருக்குமே எமோஷனல் மட்டுமே… இங்க பேசுறதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்க… அவங்க எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டாங்க… அந்த மாதிரி ஆடியன்ஸ் கொஞ்சம் பேர்தான் இங்க இருப்பாங்க… அது மட்டுமில்லாமல் நம்ம செலெக்ட் பண்ணி வச்சுருக்கிற ஆடியன்ஸும் இருப்பாங்க… அவங்க நமக்கு ஃபேவராத்தான் கேட்பாங்க… ஃபேக் லாம் இல்லை… பாப்புலாரிட்டி… சர்வே எல்லாம் பேஸ் பண்ணித்தான்… கேள்வி அவங்களுக்கு கொடுத்திருப்போம்… இதெல்லாம் ஒரு டிஆர்பி ட்ரிக்… 25% ரியல் ஆடியன்ஸை மட்டும் சமாளிச்சுருங்க… அவ்ளோதான்” கார்லா ரிஷிக்கு மிகப் பெரிய லெக்சர் கொடுத்து முடித்திருக்க…


கொஞ்சம் அதிர்ச்சி… கொஞ்சம் பெருமை… கொஞ்சம் நக்கல் எல்லாம் கலந்த பார்வையைக் காட்ட… “இதெல்லாம் மீடியால சகஜம்’ என்பது போல கார்லாவும் அவனைப் பார்த்து சிரித்தாள்


“Ok shoot your questions… time started” என்றவாறு கார்லா அங்கிருந்த பார்வையாளர்களிடம் சொல்ல…


தேர்வு செய்யப்பட்டு ஒரு பெண்ணிடம் மைக் கொடுக்கப்பட


“RK why are you this much of good-looking..” என முதல் கேள்வியாகக் கேட்க… ரிஷி புன்னகைத்தான்….


“Have to Thank my Parents only…” மென் குரலில் சமாளித்திருந்தான்…



தான்… தன் தோற்றம்… இது மட்டுமே அங்கு இலக்கு… கேள்விகளின் திசை எங்கு என்பதை புரிந்து கொண்டவனாக அவனுக்குள் புரிதலுக்கு வந்திருக்க… இப்போது கேள்விகளை சாவதனமாக எதிர்கொண்டான்..


“Care and Arrogant… Handsome and attitude… childishness and manliness... this deadly combo means ‘RK’ do you accept it’


தோளை குலுக்கியவனாக…


“Audience you only have to say… How can I comment about myself” ரிஷி ஒற்றை வரிகளில் தனது பதிலைச் சொல்லிக் கொண்டு வர…



“RK… I Love everything about you… can I get ‘R K’ from ‘RK’ ” கூட்டத்தில் இருந்த பெண்… சத்தமாக அதிரடியாகக் கேட்க…


“Romantic Kiss from ‘RK’ ” பார்த்துக் கொண்டிருந்த கண்மணி ‘ தனக்குள் விளக்கம் கண்டுபிடித்திருந்தாள்…


ரிஷி அந்தப் பெண்ணைப் புரியாமல் பார்த்தபடி…. நிற்க… கண்மணி அந்த என்ன நினைத்தாளோ அதையே அந்தப் பெண் சொல்ல…


ரிஷி இப்போது கொஞ்சம் தடுமாறினான் தான்… இருந்தும் சமாளித்தவனாக


“அம்மா ஷோ பார்ப்பாங்க… அவாய்ட் பண்ணலாமே இந்த மாதிரியான கேள்விகளை…” என்று ஆங்கிலத்தில் சொல்ல… அதுவும் பயந்தவனாகச் சொல்வது போல நடிக்க


“MOM’s SON…” என்று அங்கிருந்த பெண்கள் கூக்குரல் எழுப்ப


ரித்விகா… நக்கலாக தன் அன்னையைப் பார்த்தாள்…


“அம்மா… உன் பையன் உனக்குப் பயந்தவனாம்மா… நம்ப முடியுதா… அண்ணி பார்த்துட்டு இருப்பாங்கன்னு உன் பையன் என்னமா நடிக்கிறாரு… ’அவாய்ட் பண்ணலாமேன்னு என்ன ஒரு சமாளிப்பு… அண்ணி… அந்த பொண்ணு கேட்ட ‘R K’ கொடுத்தா… இங்க அண்ணியும் ’R’ ஃபார் ரிஷிக்கு ‘K’ ஃபார் கிக்(உதை) கொடுப்பாங்க… RK vs KK… நாங்களும் என்ஜாய் பண்ணுவோம்” என்று ரித்விகா கண்மணியை ஓட்டிக் கொண்டிருக்க..


“அதுதான் எஸ்கேப் ஆகிட்டார்ல… ஷோவைப் பாரு…” என கண்மணியும் ரித்விகாவை திசைதிருப்ப…



அடுத்தடுத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்திருந்தன…


“What the qualification needs to date with you… Just explain in one line” ரிஷியை வைத்து செய்து கொண்டிருக்க


“Do you think I am single” என்று ரிஷி கேட்க


“whatever it is… never mind… tell me the answer” என கேள்வி கேட்ட பெண் விடாமல் கேட்க… ரிஷியும் தயங்கவில்லை


“You can't get attention from me… So don’t date with me” சட்டென்று சொல்ல…


அருகில் இருந்த பெண்…


“what an arrogant male chauvinist“ என்று தன் அதிருப்தியைக் காட்ட…


“You are a liar.. we've seen your affection, attention, caring, towards Mr.NatRaj...”


ரிஷி சிரித்து மழுப்ப… கார்லா இப்போது இடையிட்டு நட்ராஜின் புறம் கேள்விகளைத் திருப்ப அப்போதும் அங்கிருந்த பெண்கள்… ரிஷியை விடாமல் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர்…


இப்போது கார்லாவுக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் உறவின் விளக்கம் பற்றி கேட்க… கார்லாவின் முகம் இப்போது மாற… ரிஷி… தன்னருகில் அவளை வைத்துக் கொண்டவனாக…


”நான் அவளைப் முதன் முதலா பார்த்தப்போ... 8 வயது குழந்தை… அப்போதும் இப்போதும் எப்போதும்… அவ எனக்கு குழந்தைதான்… ” என்ற போது கார்லா அவனை நெகிழ்வுடன் பார்த்தவள் கலங்கிய கண்களை மறைத்தவளாக அவன் கைகளைப் பிடித்துக் கொள்ள… தன்னைப் பிடித்திருந்த அவள் கைகளின் நடுக்கம் அன்று உணர்ந்தார்ப் போல.. இன்றுமே ரிஷியும் உணர… ரிஷி கண்களாலேயே அவளை சமாதானப்படுத்த… அவளுமே மீண்டும் இயல்புக்கு வந்திருக்க… நட்ராஜின் முகம் யோசனைக்குச் சென்றிருந்தது…


அடுத்த கேள்வி யாருமே எதிர்பார்க்காத கேள்வி….


ஏன் பார்வையாளர்களே எதிர்பார்க்காத கேள்வி… ரிஷியே எதிர்பார்க்காத கேள்வி…


“Natraj and you... sharing an intimate relationship???... of course... a lot of signs are indicating... the caring and attention between you and sharing the same room... etc etc....”



இது போன்ற கேள்விகள் நமது நாட்டில் எதிர்பார்க்க முடியாது… ஆனால் அந்த அந்நிய நாட்டில் சர்வ சாதரணமாக வந்திருந்தது… இப்படி ஒரு கேள்வியை கனவில் கூட நினைத்துப் பார்க்காத கேள்வி… ரிஷியின் முகம் சட்டென்று வேர்த்திருக்க… அசூசையான பாவம் வந்திருக்க… வேகமாக நட்ராஜைத் திரும்பிப் பார்க்க.. அவரின் முகமோ அதைவிட…. அவராலும் அந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ள முடிந்திருக்க… அவரின் முகத்தின் உக்கிரம் புரிந்தவனாக ரிஷி… தன்னை கட்டுப்படுத்த முயல… அந்தச் சூழ்நிலையைக் திறமையாக கையாள வேண்டிய நிலைக்கு ஆளாகி இருந்தான் ரிஷி…


பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமி அந்தக் கேள்வியைச் சீரணிக்க முடியாமல் நிற்கும் மகனின் நிலையைப் புரிந்தவரால்.. ரிஷியைப் பார்க்க முடியவில்லை… கண்கள் கலங்கிவிட… ரித்விகா புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருக்க…


கண்மணிக்கு முகத்தில் மாறுபாடே இல்லை… அவளது மொத்த கவனமும் கணவனிடம்… அவன் முக மாற்றத்தில் மட்டுமே


ரிஷிக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று உணர்ந்திருக்க… நிகழ்ச்சி நடந்ததில் இருந்து அவனோடு நேற்று பேசியது வரை… தனக்குள் ஓட்டிப் பார்த்தவள்.. அவனுக்கு காயம் என எங்கும் பார்க்கவில்லை இல்லை… அது போல ஊட்டியில் பேசியபோது இந்த இண்டெர்வியூ முடித்துவிட்டுத்தான் பேசினான் என்பதால்… அவன் அன்று பேசிய போது சந்தோசமாக உற்சாகமாகத்தானே பேசினான்… ஆக இங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்தவள்… மீண்டும் ரிஷியிடம் பார்வையை வைத்திருந்தாள்…


ரிஷியும் முதலில் கோபப்பட்டான்தான் ஆனால் அடுத்த நிமிடமே… கேள்வி யாரால் கேட்கப்பட்டிருக்கும் என தெரிந்து கொண்டவனாக… அமைதி ஆனவன்…



நட்ராஜையும் கண்களாலேயே சாந்தப்படுத்தியவன்..


“Soon… You will know..“ என்று முடித்துவிட்டு… கார்லாவின் புறம் திரும்ப… அந்தப் பார்வையே சொல்லியது… இந்த கேள்வி-பதில் பகுதியை இத்தோடு முடித்து விடலாம் என்பது போல…


“RK… the last question… which is one thing you admire the most in the girl… appearance-wise and character-wise…”


“இது என்னால சொல்ல முடியாது… ஒவ்வொரு மனிதனும்… ஒரு ஒரு தனித்துவ குணங்கள் இருக்கும்.. நிச்சயமா பெண்களுக்குமே… எல்லா பெண்ணிடமும் ஒரு தனித்துவம் இருக்கும்… “


“ஆனால்… எனக்கான பெண்ணுக்கான குணங்கள்… முன்னால கேட்ட கேள்விக்கு அதாவது டேட்டிங் குவாலிஃபிகேஷன் கேட்டிங்கதானே… அதுக்கும் இந்த பதில் பொருந்தும்”


”நான் நானா இருக்கனும்… என்னை பெர்ஃபெக்ட்டா காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல்… அதாவது நடிக்க தேவையே இல்லாமல் என்னை என்னோட இம்பெர்க்ட்டோட… அக்செப்ட் பண்ணிக்கிற… அண்டர்ஸ்டேண்ட் பண்ற… அண்ட் தோள் கொடுக்கிற பொண்ணு என்னைய அட்மையர் பண்ணுவா…


“ அண்ட் அப்பியரன்ஸ் வைஸ்… eyes… கண்… “

”இது நார்மலா எல்லா பசங்களுமே சொல்வாங்க… ஆனால் ஐ மீன் இட்…” என்றவன்


கள்ளச் சிரிப்போடு…


”இது ஏன்னு எனக்குத் தெரியாது… தோற்றத்தைத் தவிர… கண்ணை விட… அவங்க ’நோஸ் ரிங்…’ போட்ருந்தால் என்னை முதல்ல அதுதான் அட்ராக்ட் பண்ணும்… அந்த ஃபீல் எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கும்… அது என்னை சம்டைம் அட்ராக்ட் பண்ணும்… சம்டைம் டிஸ்ட்ராக்ட் பண்ணும்… இதுவும் ஏன்னு தெரியாது… பட் ஐ ஃபீல் சம்திங்க் இன் தேட் ஆர்னமண்ட்… எனக்கு கனெக்ட் ஆகும்…” என்றான் உணர்ந்து…


இலட்சுமியும் ரித்விகாவும்… கண்மணியைத் திரும்பிப் பார்க்க…


“யாரைப் பார்த்தாலும்னு தானே சொன்னாரு… சோ கண்மணிகிட்டன்னு ஸ்பெஷலான்னு சொல்லல…” இருக்கையில் இருந்தபடி கன்னத்திற்கு முழக்காலை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தவள்… கணவன் கொடுத்த மூக்குத்தி விளக்கத்திற்கு மறு விளக்கம் கொடுக்க வேண்டியதாகி இருக்க… கொடுத்தும் இருந்தாள் தன் இலட்சுமி மற்றும் ரித்விகா பார்வைகள் தாங்க முடியாமல்…


---


2,039 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page