கண்மணி... என் கண்ணின் மணி-46-2

Updated: Oct 13, 2021

அத்தியாயம்-46-2“ஏன் டல்லா இருந்த… கேள்விக்கு மட்டும் பதில்” ரிஷி கண்மணியின் வார்த்தைகளை எல்லாம் அலட்சியம் செய்தவனாக தன் பிடியிலேயே நின்றான்…


“ஒண்ணும் இல்ல ரிஷி” கண்மணியி சொன்ன விதமே ஏதோ இருக்கின்றது என்பதை ரிஷிக்கு உணர்த்த அதைப் புரிந்து கொண்டவனாக …


“உனக்கு போன் பண்ணாமல் ரித்விகாவுக்கு கால் பண்ணதுக்கெல்லாம் நீ ஃபீல் பண்ண மாட்ட… வேற ஏதோ இருக்கு… சொல்லு.. எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்ம” ரிஷி தன் பார்வையைக் காணொளியில் தெரிந்த கண்மணியின் முகத்தில் மட்டுமே பதித்திருந்தான்… அவன் முகத்திலோ இலேசான கோபத்தோடு கலந்த தீவிர பாவம்


“ஏன்… எனக்கு கோபம் வரக் கூடாதா என்ன… என்னோட மொபைல் போனுக்கு இன்னைக்கு கொடுத்த அட்டென்ஷன் மாதிரி என்னைக்கும் நான் கொடுத்தது இல்லை ரிஷிக் கண்ணா..” சட்டென்று கோபமுகம் காட்டினாள் கண்மணி…


உண்மையிலேயே அவள் ரிஷியின் காலை தனது அலைபேசியில் எதிர்பார்த்திருக்க… ரித்விகாவுக்கு வந்த அழைப்பில் மனம் சுணங்கியதுதான்… இருந்தாலும் பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை… அதற்காகவெல்லாம் சண்டையோ இல்லை முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவளும் கண்மணி இல்லை என்ற போதும்… ரிஷி அவனாக அவளைக் கணித்துச் சொன்னதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அவளையுமறியாமல் கோபம் வந்து விட… தன் கோபத்தையும் அவனிடம் காட்டி விட்டாள்..


தன் மீதான அவளின் உரிமைக் கோபத்தைக் கண்டவன்.. மனம் விட்டுச் சிரிக்க… அதுவரை இருந்த இறுக்கமான முகம் மறைந்து…. இப்போது இலகுவாகி இருந்தது…


“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலைங்க மேடம்…” தன் பிடியிலேயே நின்றாலும் அவனது கோபமில்லா செல்லமான தொணியில் கேட்க


”எனக்கு போன் பண்ணாததும் கோபம்தான்” மெல்லிய குரலில் சொல்லலாமா வேண்டாமா என்பது போல் வெளி வந்த வார்த்தைகளோடு இதழ் சுழித்த போது கண்மணியும் சிறு குழந்தை ஆகி இருந்தாள்


“சரி… சாரி… உனக்கு முதல்ல போன் பண்ணாததுக்கு… அப்போ நான் போன் பண்ணாதது உனக்கு செகண்ட் பிரையாரிட்டி…. ஆக்சுவலா எதுக்கு கோபம்... அந்த ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி என்ன… அதைச் சொல்லுங்க பார்க்கலாம்”


“ப்ச்ச்..” கண்மணி இப்போதும் பதில் சொல்லாமல் சலிக்க… அவளது கன்னக் குழிகளும் சலிக்காமல் அவளோடு உறவாட ஆரம்பித்திருக்க… ரிஷியோ தடுமாறினான் தனக்குள்… அவளைப் பார்க்க முடியாமல்


“சரி விடு போனைக் கட் பண்றேன்… ஆஸ்திரேலியா டூ இந்தியா ஃப்ளைட் டிக்கெட் பார்க்கனும் எனக்கு…” என்றவன் இப்போது கண்மணியைப் பார்க்காமல்.. அலைபேசியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தபடி தலையைக் கோத


“அர்ஜூன் வந்திருக்காரு…” கண்மணி சொன்ன போதே… தலை முடியைக் கோதிக் கொண்டிருந்த அவனது விரல்கள் சிகைக்குள் சிக்கிக் கொண்டது போல் வேலை நிறுத்தம் செய்திருந்தன…


“அப்போ நான் தானே டென்சன் ஆகனும்… எனக்குத்தானே கோபம் வந்திருக்கனும்” ரிஷியிடமிருந்து பட்டென்று வார்த்தைகள் வந்திருந்தன… அவன் முகத்தை கைகள் மறைத்திருக்க… அவன் முகத்தின் உணர்வுகளை கண்மணியால் கவனிக்க முடியவில்லை… அவன் முகத்தைப் பார்க்க முடியாததால்… கண்மணி அறையை நோட்டமிட… அப்போதுதான் தன் தந்தையின் ஞாபகம் வர…


”அப்பாக்கு ஏன் உடம்பு சரி இல்லை… என்ன டென்சன் அவருக்கு” கண்மணி கேட்க…


“டென்சனா…” ரிஷி புருவம் சுருக்க…


“அவர் ஏதாவது நினைத்து குழம்பினால் தான் வீசிங் ப்ராப்ளம் வரும்… என்ன நடந்துச்சு…” அறிந்தோ அறியாமலோ… இருவருமே அர்ஜூனை தவிர்க்க நினைக்க… தானாகே பேச்சு திசை மாறியது…


ரிஷியும் யோசித்துப் பார்த்தான்… ஏர்ப்போர்ட்டுக்கு இவர்களின் ஸ்பான்ஸர் வந்திருந்தனர்… அடுத்து ஹோட்டெல் என வந்து சேர்ந்து விட்டனர்… இந்த நிகழ்வுகளில் தன் முதலாளிக்கு மனம் வருந்தும்படி என்ன நடந்திருக்கப் போகிறது… ரிஷியும் யோசிக்க வித்தியாசமாக நடந்தது போல் ஏதும் அவன் உணரவில்லை… ஆனால் ஏர்போர்ட்டில் இருந்த வரை நட்ராஜ் நார்மலாகத்தான் இருந்தார்…


”வேறு என்னவாக இருக்கும்” ரிஷி யோசித்தபடி இருக்க…


“ஒருவேளை அம்மா ஞாபகம் வந்திருக்கும்… பார்த்துக்கங்க ரிஷி” கண்மணி ஆதங்கமாகச் சொல்ல… இப்போது ரிஷி… தன்னையுமறியாமல் அவளிடம் தலை அசைத்திருந்தான்…


”அப்பா… எங்க… நான் பார்க்கனும்” என்ற கண்மணியிடம் அலைபேசியைத் திருப்பி அவளிடம் காட்ட… தன் தந்தையைப் பார்த்து திருப்தி பாவத்தில் கணவனைப் பார்க்க… அவனை காண வில்லை…


“ரிஷி” கண்மணி சத்தமாகக் கூப்பிட…


“இதோம்மா…” என்றவன் இப்போது தலையணையை கையில் வைத்திருக்க…


அவர்களின் நேரம் நள்ளிரவுக்கு மேல் என்பதால்… கண்மணியும் அவனை தொந்தரவு செய்கிறோமோ எண்ணியபடி


“தூங்கப் போறீங்களா ரிஷி” என்றபோதே அவளது குரலில் அவளே எதிர்பார்க்காத ஏமாற்றம் வந்திருக்க… அதை ரிஷி உணர்ந்தானோ இல்லையோ… கண்மணி உணர்ந்திருக்க… தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி… தனக்கு என்னாயிற்று… ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தில்…


”தூங்கனும்… ஆனால் தூக்கம்தான் வரலை” ரிஷி சொல்ல


“கைல பில்லோ வச்சுட்டு தூக்கம் வரலேண்ணா என்ன அர்த்தம் ரிஷி… மணி என்னாச்சு…” என்று செல்லமாக அரட்டியவளிடம்


“ப்ச்ச்… இது வேற கதை“ என்றவன் தலையணைப் பார்த்தபடியே கவலையோடு பேச


“என்னாச்சும்மா…” கண்மணி என்னவோ… அவன் கவலையை இங்கிருந்தபடியே உடனே தீர்த்து விடுபவள் போலக் கேட்க…


“டபுள் காட்… பெருசுதான்… ஆனால் செபரேட் பண்ண முடியலை… “ அங்கிருந்த கட்டிலைப் பார்த்தபடியே ரிஷி சொல்லிக் கொண்டிருக்க


கண்மணிக்கோ அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க ஆரம்பித்திருந்தாள்…


“நான் மட்டும் தனியா படுத்தா பிரச்சனை இல்லை… பக்கத்தில யாராவது படுத்திருந்தால் கால் போட்ருவேன்… சார் மேல போட்ருவேனோன்னு பயமா இருக்கு கண்மணி…” அந்த 26 வயது இளைஞன் நொடியில் சிறுவனாக மாறியிருந்த தோற்றம் கண்மணிக்கு… அவளையுமறியாமல் ரிஷியைப் பார்த்து புன்முறுவல் பூத்தவள்…


”அதெல்லாம் போட மாட்டீங்க… சும்மா படுங்க… நீங்க அப்படிலாம் போட மாட்டீங்க”


“ப்ச்ச்… விக்கிக்கிட்ட கேட்டுப் பாரு தெரியும்… என் பக்கத்திலயான்னு அரளுவான்… சம்டைம் கிரிக்கெட் பார்க்க ஹால்ல படுப்போம்… அப்போ அங்கேயே தூங்கி்ருவோம்… அப்போதெல்லாம் எனக்கும் அவனுக்கும் இடையில் பில்லோ பாலம் கட்டிட்டுத்தான் படுக்கவே செய்வான்… அந்த அளவுக்கு நான் டெர்ரர் காட்டிருக்கேன்… அப்படியும்… நான் கால் போட்டுட்டேன்னு திட்டிட்டு இருப்பான்”


”சரி… அப்புறம்” கண்மணி ராகமாக இழுக்க…


“என்னடி… ராகம் பாடற… சார் பக்கத்திலயும் படுக்க முடியாது… கீழயும் படுக்க முடியாது… ஏற்கனவே ஜலதோஷம்… ஜன்னி வந்து சாக வேண்டியதுதான்னு நானே புலம்பிட்டு இருக்கேன்… என் நெலமையப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது… ரொம்ப்ப கிண்டலா இருக்கோ… ராகம் பாடிட்டு இருக்க” கடுப்போடு சொல்ல


“அதுதான் நான் தான் சொல்றேன்ல…. அது அப்போ… இப்போல