கண்மணி... என் கண்ணின் மணி-23-2

அத்தியாயம் 23-2:


கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருக்க… அவனை சுய நினைவுக்கு கொண்டு வந்தது அவன் அலைபேசி ஒலியே… லட்சுமி தான்… எடுக்க வில்லை அவன்… அடுத்து ரிதன்யா.. மகிளா என மாறி மாறி வந்து கொண்டிருக்க… அவனிருந்த மனநிலையில் தன்னை பலவீனமாக்கும் தன் உறவுகளோடு பேசப்பிடிக்கவில்லை… பிடிக்கவில்லை என்பதை விட.. இவர்கள் யாராவது ஒருவரோடு பேசினாலும் அவனையும் மீறி உடைந்து விடுவான் என்பதே நிதர்சனம்…


முக்கியமான வேலையில் இருப்பதாகவும் மாலை அவனே அங்கு வருவதாகவும் ரிதன்யாவுக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி விட… அதன் பிறகு அலைபேசியும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை… அவனுக்கு தேவையான அமைதி மீண்டும் கிடைக்க…. கண்ணீரால் கசகசத்த முகத்தை தண்ணீரால் கழுவ நினைத்தவன்… எழுந்து வெளியே வந்தனாக… குழாயைத் திருப்ப… தன்ணீருக்குப் பதில் காற்றுதான் வர… புருவம் நெறித்தபடி வெளியே வந்து கீழே பார்க்க… சுற்று வட்டாரத்தில் ஈ காக்கை கூட காணவில்லை… மெலிதான பாடல் ஒலி மட்டும் கீழ் வீட்டில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தது…


அப்போதுதான் கண்மணி ஞாபகமே வந்தது இவனுக்கு


இவன் உள்ளே வரும் போது அவள் பெரிய ஏணியைக் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு போனது இப்போது ஞாபகம் வர…