கண்மணி... என் கண்ணின் மணி-22-1

அத்தியாயம் 22-1:


அதிகப்பட்சம் இருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்தது அவனது அறை... அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருந்தது அந்த அறை... குளியலறை கூட அறைக்கு வெளியே தான்....


லட்சுமியின் கண்கள் அவனின் அறையை ஒரே நொடியில் அலசி முடித்திருக்க… அந்த அறைக்கு அதற்கு மேலெல்லாம் நேரம் தேவைப்படவே இல்லை…


அறையின் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு நாற்காலி மட்டும்.... ரிஷியின் உடைகள் எல்லாம்... அங்கிருந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.... அது போக அவன் உபயோகப்படுத்தும் பாத்திரங்களாக சாப்பிடும் தட்டு, நீர் அருந்த ஒரு டம்ளர் என இரண்டு மட்டும் இருந்தன...


கண்கள் பனிக்க மகனையே பார்க்க... அவனோ.... தாயின் ஆராயும் பார்வைகளை எல்லாம் கவனித்தபடிதான் இருந்தான்… பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… அதே நேரம் அவன் கவலை எல்லாம் அவன் அன்னைக்கு இந்த இடம் உகந்ததாக இருக்குமா? அது மட்டுமே கவலையாக இருக்க…


“அம்மா… அட்ஜஸ்ட் பண்ணீக்குவீங்கதானே... கொஞ்ச நேரம் தான்... அப்புறம் காலேஜ் போய்ட்டா அங்கேயே நேரம் போய் விடும்... ஈவ்னிங் நாம அப்படியே ஸ்டேஷன் போ