என் உயிரே !!! என் உறவே !!!-9

அத்தியாயம் 9:

ஒகே கீர்த்தி, நீங்க கிளம்புங்க , நான் அந்த ஃபைலை மட்டும் அனுப்பி விட்டு கிளம்பி விடுவேன். ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணினால் நானே உங்களை ட்ராப் செய்து விடுகிறேன். 11 ஆகி விட்டது. அதனால்தான்என்றவனிடம்

இல்லை சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபடி அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் தனது லன்ச் பாக்ஸை எடுக்க அலுவலகத்தின் ஓய்வு அறைக்குள் உள்ளே நுழைவதற்கும் பாலாவின் தந்தை அந்த அறைக்குள் வருவதற்கும் சரியாக இருந்தது.

கீர்த்தி ஓய்வு அறைக்கு சென்றதும் , அன்று முடித்திருந்த மாடிஃபிகேசனை சரி பார்த்தபடி , முடிந்தவுடன் நேரே வீட்டிற்கு போக வேண்டும். அம்மாவும், அப்பாவும் அவன் வேற எங்கேயோ போய் தங்கப் போகிறான் என்று நினைத்துதான் பயந்து போய் கால் பண்ணியிருக்கிறார்கள் என்று நினைத்த போது அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

காலையில் வீம்பாக,பேசி விட்டு வீட்டிற்கு போகலாமா என்று கூட தோன்றியது. இன்று ஒருநாள் மட்டும் எங்கயாவது தங்கி விட்டு நாளை போகலாமா. ஒரு பயமாவது அவர்களுக்கு காட்ட வேண்டும் என்று கூட நினைத்தான். ஆனால் நேரம் செல்லச் செல்ல அது தவறு என்று தோன்றியதாலும்,காலையில் இருந்த கோபம் இப்போது இல்லை என்பதாலும், மேலும் தன் பெற்றோர்களின் மேல் இருந்த அளவுக்கு மீறிய அன்பினாலும், அவனது முடிவை எப்பவோ மாற்றி இருந்தான். கொஞ்சம் யோசித்தால் அவன் மேல் உள்ள அதீத பிரியத்தினால் தான் இந்த வருத்தமே என்பதே உண்மை. இவ்வாறெல்லாம் யோசித்திருந்தவனுக்கு தாய் தந்தை போன் செய்த பிறகு அங்கு இருக்கவே முடியவில்லை. வீட்டிற்கு போனது காலையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு, தன் நிலைமையினை தந்தையிடம் மெதுவாக அவருக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தபடி வேலையில் ஈடுபட்டிருந்தான்.

பாலா கீர்த்தியின் சீட்டில் அமர்ந்திருந்த படியால் , ஜெகனாதன் உள்ளே நுழைவதை உணர முடியாது. பாலாவின் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெகனாதன் ஒரு வளைவில் திரும்பும் போதுதான் தன் மகன் அங்கே இருந்த ஒருகேபினில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அருந்ததியை கார் பார்க்கினிலே நிற்க சொல்லிவிட்டு தான் மட்டுமே மேலே வந்திருந்தார். அவரே அவரது மகனை கூப்பிட்டு வர வேண்டுமாம்.இதற்கு ஓன்றும் குறைச்சல் இல்லை அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்றபடி அருந்ததியும் கீழேயே நின்று கொண்டிருந்தாள்.

தன் முன்னால் அசைவினை உணர்ந்த பாலா, கீர்த்திதானோ என்றபடி, சரி கீர்…… என்று நிமிர்ந்தவன் தன் தந்தையினை பார்த்தவன் அதிர்ச்சி ஆனான்.

விதி அவர் வந்திருந்த விதத்தினை நேர் மாறாக சிந்திக்க விடாமல்…… தான் அவ்வளவு தூரம் வருவதாகச் சொல்லியும் தனது தந்தை வந்திருக்கிறார் என்றார் என்ன அர்த்தம்…..என்று யோசித்தவன், கீர்த்தியும் இங்குதான் இருக்கிறாள் என்பதால் மெதுவான குரலில்

இப்போ எதற்கு இங்கு வந்தீர்கள்.என்றவனிடம்

அவன் இன்னும் கோபத்தில் இருக்கிறான் என்பது தெரிந்ததால் தணிந்த குரலில் அதே நேரத்தில் அழுத்தமாக

வா வீட்டுக்கு போகலாம் என்றார்.

ஏன் குற்றமுள்ள மனசு குத்துகிறதா அப்பா. காலையில் என் வீடு வெளியே போடா என்றீர்கள், இப்போது வா…. என்கிறீர்கள். நீங்க கூப்பிட்டால் நான் வர வேண்டும், போ என்றால் போக வேண்டும் என்றால். அப்போ எனக்கு என்ன தான் உரிமை அந்த வீட்டில் என்றவன், அமைதியாய் அவரை வெறித்துப் பார்த்தான்.

பிறகு மீண்டும்

இன்று வருவது சந்தேகம் தான். எனக்கு வேலை இருகிறது.அதனால் என்று… “

இழுத்து தன் சுய கவுரவத்தை காட்டிய‌ பாலாவுக்கு அப்போது நாக்கில் சனிதான் இருந்திருக்க வேண்டும்

ஸோ உனக்கு என் மேல் இன்னும் கோபம் அப்படித்தானேஎன்றவருக்கு மகனின் மவுனம் , அது உண்மை என்றே தோண்றியதால் சற்று முன் இருந்த மனநிலை மாறி கோபத்தில் கண்கள் சிவந்தது. வீட்டில் அவனை அவமானப் படுத்தியதாக நினைத்துக் கொண்டு அவனது அலுவலகத்தில் அவரை பழிவாங்குகிறானோ என்ற நினைத்தவரின் குரல் இப்போது அவரையுமறியாமல் உயர்ந்தது.

அதே நேரத்தில் கீர்த்தியும் ஓய்வு அறையின் வாசலை தொட்டிருந்தாள். பாலா யாருடனோ பேசிக் கொண்டிருந்த குரல் கேட்ட படியால் யாராய் இருக்கும் என்றபடி அவள் வந்த போது ஒரு நடுத்தர வயதுடையவரின் பக்கவாட்டு உருவம் தெரிந்தது. அவள் பாலாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று அடி எடுத்து வைத்தவள், அந்த பெரியவரின் குரலில் அப்படியே நின்றாள்.

என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. எனக்கு மனசு குறுகுறுக்கிறதா , நீ மத்த பசங்க மாதிரி குடும்பம், குழந்தை என்று இருக்க வேண்டும் என்று நான் நாயாய் அழைகிறேன், பார் எனக்கு வேண்டும் . அப்பா எதற்காக காலையில் அப்படி சொன்னேன் என்று யோசிக்கத் தெரியாத உன்னைத் தேடி …….. சாப்பிடக் கூட முடியாமல் , என் உடல் நிலைமையினைக் கூட பொருட்படுத்தாமல் வந்தேன் பார். என்னைச் சொல்ல வேண்டும். அப்படி என்னடா சொன்னேன் திருமணம் செய் என்றுதானே .அப்படி சொன்னதற்காக என் மனது குறுகுறுக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டும். என்று சற்று நிறுத்தினார்

:ச்சேய் அவசரப் பட்டு பேசிவிட்டோமே , பேசாமல் வீட்டிற்கே போய் இருந்திருக்கலாம்

என்று நொந்தவன் ஜெகனாதனை பேசாமல் எவ்வளவோ தடுத்து நிறுத்திப் பார்த்தாலும் முடியவில்லை.அவர் சற்று நிறுத்தியதும்

அப்பா இது ஆபிஸ், ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்என்று கூறியதுதான் தாமதம் ஜெகனாதன் இன்னும் கிளம்பி விட்டார்.

கீர்த்திக்கு வந்திருப்பவர் பாலாவின் தந்தை என்பது புரிந்தது.அவனது திருமண விசயத்தில் பிரச்சனை என்பதும்,அதனால் இன்று ஏதோ பெரிய வாக்கு வாதம் என்ற அளவுக்கு புரிந்தது. இப்போது அவளுக்கு என்ன செய்வது என்றே தெரிய வில்லை. சொல்லி விட்டு போகலாம் என்றால் அவர்கள் இடையில் போய் நிற்க வேண்டும். சொல்லாமல் போய் விடலாம் என்றால் அதுவும் நன்றல்ல.என்ன செய்வது என்று யோசித்தவளை அவளுக்கு சம்பந்தமில்லாத விசயம் ஒன்று மண்டைக்குள் குடையத் தொடங்கியது அது வேறொன்றுமில்லை பாலா ஏன் திருமணம் செய்ய மறுக்கிறான். என்ன காரணம் என்று யோசிக்கும் போதே

மதுஎன்ற ஜெகனாதனின் வார்த்தையில் மீண்டும் அவர்களை நோக்கினாள் கீர்த்தி

இது சாரோட ஆபிஸோ அதை மறந்து விட்டேன் நான். உங்களுக்கெல்லாம் வளருகிற வரைக்கும் தான் அப்பா அம்மாவெல்லாம். அதன் பிறகு நாங்கள் எல்லாம் கருவேப்பிலை மாதிரி. இப்போ என்னடா மதுவைத் தவிர வேற யாரையும் மணக்க மாட்டாய் அவ்வளவுதானே. இனி உன் விசயத்தில் ஒருபோதும் நான் தலையிட மாட்டேன்.உன்னிடம் கெஞ்சி கெஞ்சி வெறுத்து போய் விட்டேன். என்னுடைய உண்மையான பாசத்தையே சந்தேகப்பட்டு, ஏதோ குற்றம் செய்தவன் , குறுகுறுத்து வந்திருக்கிறாய் என்றெல்லாம் பேசுவதை என்னால் தாங்க முடியவில்லை பாலா. . இனி நீயாய் என்று வந்து திருமணம் என்ற பேச்சை எடுக்கிறாயோ அதுவரை நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். என்றவர் அதற்கு மேல் நில்லாமல் சிறிது தூரம் சென்றவர்

” i am really very very sorry” என்றவரைப் பார்த்து என்ன செய்வது என்றறியாமல் அப்படியே சிலையாய் நின்றிருந்தான் பாலா.

எதற்கு இந்த மன்னிப்பு என்று யோசிக்கிறாயா , நீ தொந்தரவு என்று நான் செய்ததை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாயே அந்த செயல்களுக்கெல்லாம். என்றவர் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட நிற்காமல் விருட்டென்று வெளியேறிச் சென்று விட்டார்.

இப்போது கீர்த்திக்கோ தர்ம சங்கடமான நிலைமை

அவனைப் பற்றிய உண்மை தனக்கு தெரிந்ததைப் பற்றி நினைக்கும் போது அவன் மனம் என்ன பாடு படும் , தான் முதலிலேயே கிளம்பி இருக்க வேண்டும் என்று நினைத்தபடி மெதுவாய் பாலாவின் முன் நின்றாள்.

சார் நான் கிளம்புகிறேன்என்றவளிடம் நிமிர்ந்து கூட பார்க்காமல்

சரி கீர்த்தி

என்றவுடன் அவளும் வேறு எதுவும் பேசாமல் ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பாள்.

அப்போது பாலா ஏதோ யோசித்தவனாய்

கீர்த்தி ஒரு நிமிடம், இங்க வாங்கஎன்று அழைத்தான்

ஒன்றும் புரியாமல் கீர்த்தியும் அவனை நோக்கி வந்தாள்

கீர்த்தி இப்போ வந்தது எங்க அப்பா என்றவன்….மேலும் எதோ சொல்ல வந்தவன் நின்றிருந்த படியால் அருந்ததியின் வருகையினை பார்க்க முடிந்தது.

அப்போதுதான் அவனது அம்மாவும் அங்கு வந்திருப்பது தெரிந்தது.

அம்மா நீங்க எப்போ வந்தீங்க அப்பா சொல்லவே இல்லைஎன்றவனை அனல் பார்வை பார்த்தவள்

அதையெல்லாம் சொல்கிற நிலைமையில்தான் உன் அப்பா இருக்கிறார்என்றபடி அருகில் இருந்த கீர்த்தியின் மேல் பார்வையினை ஓட்டினாள் அருந்த்தி.

யாரோ ஒரு மூன்றாம் பெண்ணின் முன்னால், அதுவும் தன் மகனிடம் வேலை பார்க்கும் பெண் முன்னால் எதுவும் பேசக்கூடாது என்று முடிவு செய்தவள்.

வா பாலா, அப்பா மட்டும் தனியாய் கிளம்பிப் போகிறார்”. என்று ஓற்றை வரியில் நிறுத்தினாள்.

தனது தாய் கீர்த்தி முன்னிலையில் அடக்கி வாசிக்கிறாள் என்று புரிந்த பாலா,இதற்கு மேலும் பிடிவாதம் கூடாது என்பதால் . 5 மினிட்ஸ் மா என்று .சிஸ்டமை ஆஃப் செய்யத் தொடங்கினான்

கீர்த்தியும் சொல்லிவிட்டு கிளம்பினாள்

அவள் சென்றதும் அருந்ததி

பாலா 11 மணி ஆகிவிட்டது, அந்த பொண்ணு இப்போது கிளம்புகிறாள். லேட் நைட்டில் எப்படி போவாள் அவள், என்ன வேலை என்றாலும் லேடி ஸ்டாப்ஸை எல்லாம் இரவு 7 மணிக்குள் அனுப்பி வைத்து விடு, ஏற்கனவே என்ன பாவம் பண்ணினமோ நாம இப்படி அமைதி இழந்து நிற்கிறோம்.இதில் இந்த பாவம் வேறயா என்றவளிடம்

வாங்க போகலாம் என்றபடி செக்யூரிட்டியிடம் சொல்லி விட்டுக் வெளியேறினான் பாலா

இல்லம்மா இன்னைக்கு மட்டும் இப்படி ஆகி விட்டது. அந்த பொண்ணு பேரு கீர்த்தனா. ரொம்ப நல்ல பெண்.ரொம்ப ஸ்மார்ட். அவ டீம் லீடரோட மனைவிக்கு டெலிவரி டைம் என்பதால் அவருக்கு பதிலாய் இருந்து முடித்துக் கொடுத்துவிட்டு போகிறாள் என்று அருந்ததியிடம் சொல்லியபடி இருவருமாய் கீழே இறங்கி வந்தனர்.

அங்கே கீர்த்தியின் பைக் அவளிடம் மக்கர் பண்ணிக் கொண்டிருந்தது. ” ”<