என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58:


யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்…………

”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா”

“இல்லை கீது……. அவ என்னைப் பேசவே விட வில்லை” என்று கூற……… எழுந்தாள் ஆவேசமாக

கூடவே பாலாவின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்தபடி உள்ளே போக

மதுவும் யோசனையில் தான் இருந்தாள்……….

அவள் பாலாவின் கோபத்தை எதிர்பார்த்திருந்தாள்……………. அவனோ முகம் வெளுத்தவனாய் வெளியேற…………… ஏதோ நடந்திருக்கிறது………. நாம் அவனுக்கு சொன்னது சாதகமான பதில்தான் போல……… அதனால்தான் கோபப் படாமல் போகிறான்…….என்று நினைக்கும் போதே அவன் வாழ்க்கையில் இன்னொருத்தி வந்து விட்டாளோ என்பதையும் அவள் மனம் உணரத் தொடங்கி இருந்தது….……… ஆனால் அது வலிக்கவில்லை அவளுக்கு………… 5 வருடத் தனிமையில் அவள் பாலாவை விட்டு வெகுதூரம் போயிருந்தாள்……….

உள்ளே…… பாலாவையும் இழுத்துக் கொண்டு…………. கீர்த்தனா நுழைய…………… மது வித்தியாசமாகப் பார்த்தாள் அவர்கள் இருவரையும்….

அதுவும் ஆவேசமும் கோபமுமாய் நுழைந்த கீர்த்தனாவை புரியாமல் பார்த்தாள்……….

”நீங்க இவரை திருமணம் செய்யச் சொன்னீங்களா” என்று அதிரடியாய் அவளிடம் பேச

பாலா ஆடிப் போனான்……..

பின்னால் வந்த அனைவருமே புரியாமல் விழித்தனர்………..

”இவள் ஏன் கோபப்படுகிறாள்……. ஒழுங்காகப் போய்க் கொண்டிருப்பதை குழப்புகிறாளே” என்று வினோத் அவளை பார்க்க

அவளோ மதுவையே பார்த்தபடி……………அவளின் பதிலுக்காக நிற்க

மதுவும் அசராமல் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்………….அவளையே பார்த்தபடி இருக்க

“நான் உங்க கிட்டதான் கேட்கிறேன் பதில் சொல்லாம இருக்கிங்க……..” என்று கேட்க

“நீங்க யாரு…. நான் எதுக்கு உங்ககிட்ட பதில் சொல்லணும்…….. ஒருவேளை நீங்க என்னைக் காப்பாற்றி இருக்கிறதால வேணும்னா நான் சொல்றேன்……. ஆமா சொன்னேன்… அதுனால உனக்கு என்ன பிரச்சனைமா” என்றபடி……..பாலாவின் கையை அவள் பிடித்த்க் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாள்…….. பாலாவும் அவள் கைப்பிடிக்குள் நிற்பதையும் உணர்ந்தாள்

“ஓ…….. உங்களுக்கு………… காதல் வந்துச்சுனா…. துரத்தி துரத்தி… அவர காதலைச் சொல்றவரை விடாமல் விரட்டி காதல் பண்ண வைப்பீங்க…….. இப்போ உங்களுக்கு காதல் இல்லைனா………. உங்கள விட்டு விட்டு இவர் வேற கல்யாணம் பண்ணிக்கனுமா” என்று கேட்க

தான் எடுத்த முடிவில்… எதிர்த்து கேள்வி கேட்ட கீர்த்தனாவை……. எதிர்கொள்ள முடியாமல் மது திணர………. பெரும்பாலும் அவள்… தான் எடுக்கும் முடிவுகள் யாரையும் பாதிக்காத வண்ணம்தான் முடிவெடுப்பாள்……. இப்போது கூட யாரையும் பாதிக்கவில்லைதான் என்று நம்பினாள்………

ஆனால் அவளை நினைத்துக் காத்திருந்த அவனின் காதல் மனதை அலட்சியம் செய்து விட்டாள்…….” என்று கீர்த்தனா நினைத்தாள்

ஆனால் தற்போதைய… கீர்த்தனாவின் பாலா…. அதை நினைக்கவில்லை………… அதனால் பாதிக்கப்படவும் இல்லை……….

அவன் மனைவிக்கோ…. அவன் மது மேல் கொண்டிருந்த காதலுக்கு அர்த்தமே இல்லாமல் போனது போல் ஆக……….கொதித்து விட்டாள் அவள்…….

பின்னே கூட இருந்து அனுபவித்தவள் அவள் அல்லவா……. அந்த உணர்வுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டதே………… மதுவுக்காக தவித்த அவன் காதலுக்காக மதுவிடமே சண்டைக்கு வந்து விட்டாள்………. பாலாவின் மனைவி………. கீர்த்தனா…….

முதலில் தடுமாறிய மதுவுக்கு….. பின்….. தன்னைக் காப்பாற்றியவள்….. பாலாவின் மனைவி என்பது திண்ணமாக விளங்க

மதுவும் அவள் கேள்வியை தைரியமாக எதிர்கொண்டாள்…….

”உங்க கோபம் எனக்கு ஏன்னு புரியல… நான் சொல்லியது எதுவுமே தவறு என எனக்குப் படவில்லை………மிஸஸ் பாலா” என்று அவளையும்……பாலாவையும் பார்த்துச் சொல்லி…… பாலாவை, கீர்த்தனாவை, மட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் அசர வைத்தவள்

“அதோடு மட்டுமில்லாமல்……….உங்களுக்கு நான் சொன்ன பதில் சாதகமானது கூட” என்று சொல்ல……..

இப்போது மதுவும் ஆவேசமாக பேச ஆரம்பித்து இருந்தாள்………..கோபப் படக்கூடாது என்றுதான் நினைத்தாள்………இப்போ என்ன இவளுக்கு வேண்டுமாம்……… அதுதான் பாலா வாழ்க்கைல கூட நான் குறுக்கே வர வில்லையே…. இவளுக்கு ஏன் இத்தனை கோபம்…… என்று தன்னைக் காப்பாற்றியவள் எனற எண்ணத்தில் முதலில் பேச ஆரம்பித்தாலும்.. இப்போது கோபமாக இருக்க………….

பாலா பேசவே இல்லை……….. மது சொன்னதில் தவறே இல்லை எனும் போது….. மது சொன்னது தவறு என்று…… கீர்த்தனாவுக்காகவா சப்போர்ட் பண்ணி பேச முடியும்…. பைத்தியக்காரத்தனாமய் பேசிக் கொண்டிருக்கும் கீர்த்தியை இத்தனை பேர் முன்னாலும் மற்றும் மதுவின் முன் திட்டவும் அவனுக்கு மன வரவில்லை……………

கீர்த்தானாதான் பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்று தெளிவாக விளங்கியதால்......அனைவரும் மதுவின் பக்கமே நியாயம் என்று நினைத்திருக்க

வினோத் கீர்த்தனாவிடம் எரிந்து விழுந்தான்………

“ஏய்க் கீர்த்தனா…….. இப்போ எதுக்கு பிரச்சனை பண்ற….……. மது உனக்கு நல்லதுதானே பண்ணி இருக்கா…………” என்ற போது………….

”நேற்று பாலா…. ’கீர்த்தி’ என்று வலியோடு கதறி அழைத்த விதம் மதுவுக்கு புரிய……. பாலாவை ஒரு பார்வை பார்த்தாள் மது….. ஆனால் பாலாவோ கீர்த்தனாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்……. ’ஏன் இப்படி பண்ணுகிறாள்’ என்று……… மனதில் கோபத்தோடு…….

கீர்த்தனா வினோத்துக்கு மறுமொழி புரிந்தாள்

”எனக்கு நல்லதுதான் பண்ணி இருக்காங்க வினோத்……….. ஆனா இவருக்கு……………” என்ற போது பாலா… அவளைப் பற்றி அறிந்திருந்ததால்…. இவளை விட்டால் கோபத்தில் இன்னும் கிறுக்குத்தனமா பேசிட்டே போவாள் என்று முடிவு செய்தவன்