top of page

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59:

அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்……………..

மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.………….

பாலா-கீர்த்தி வீட்டிலே வைத்து சிறிய அளவில் அதைக் கொண்டாட……….. கீர்த்திகா, வினோத் வீட்டிலும் வந்திருக்க…. கவி …சிந்து கேலியோடு விளையாட……….. ஜெகநாதன் அருந்ததியின் ஆசிர்வாதத்தோடு கீர்த்தனா-பாலா கேக் வெட்டிக் கொண்டாடினர்……….

ஒவ்வொருவரும் அங்கு சந்தோசமாய் இருக்க……. கவியும் சிந்துவும்………….. பாலா-கீர்த்திக்கு ஒரு கிஃப்டை இருவருமாக அளித்து…………. இதை இப்போதே நீங்க ரூம்ல பிரிச்சு பார்க்கனும்………….. போங்க என்று விரட்ட

இருவரும் கிளம்ப கவி மட்டும்

“அந்த கிஃப்டுக்கான டைம் 10 மினிட்ஸ் தான்” உடனே கீழ இறங்கி வந்துருக்கணும்……… என்று சொல்ல

இதப் பிரிச்சு பார்த்துட்டு வருவதற்கு இவ்ளோ டைமா…கவி……….5 மினிட்ஸ்ல வந்துருவோம்…. பேப்பர் மட்டும்தான் வச்சுருக்கீங்களா……….” என்றவளை முறைக்க

”சரி… சரி…… கவி……….. போறோம் போறோம்” என்றவள் வேகமா படி எற அதில் கொஞ்சம் தடுமாற…………. சட்டென்று பாலா பிடித்து விட்டான்…………… அதே நேரத்தில்

“உன்னை… அப்படி என்னடி அவசரம்” என்று திட்டவும் மறக்கவில்லை அவன்

”கீர்த்தி பார்த்து” என்று அனைவரும் பதற…………… சிந்துவோ……… ”கீர்த்திக்கா……… பார்த்து” அவளின் வார்த்தையும் கீர்த்தியின் காதில் விழ…….. கண் கலங்கியது கீர்த்திக்கு………… இத்தனை பேர் அன்பிலும் நெகிழ்ந்தாலும்…. கரைந்தாலும்…………….

“யார் யாரோ பாடினாலும் ஆரோரா ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா”

என்ற வரிகள் அவளைப் பொறுத்த வரை சத்தியம்,,,,,,,, அவளும் இதை உணர்ந்திருந்தாள் தன் பெற்றோரின் பிரிவில்…… உண்மைதானே அவர்களது இடத்தை யாரலும் நிரப்ப முடியவில்லையே…………

இருவரும் உள்ளே போய் கவி-சிந்து கொடுத்த கிஃப்டைப் பிரிக்க…… அது ஒரு சிடி

கவி சொன்ன 10 நிமிடம் புரிய

சிரித்தபடி பாலா அதைப் ப்ளேயரில் ஓட விட …….

“ஹாய் அக்கா……. “

ஹாய் கீர்த்தி”

உங்க ரெண்டு பேருக்கும்…………….. இப்போ ஒரு பாட்டை நாங்க டெடிகேட் பண்றோம்…. சாரி சாரி………… குட்டிப் பாப்பாக்கும்………….” இது உங்களுக்கான பாடல் மட்டும் அல்ல உங்க குழந்தைக்க்குமான பாடல் ………. சாரி சாரி…. இப்டி சொல்லாம சொல்லிட்டோம்…….. உங்க பாப்பாவுக்கான பாலகீர்த்தனம்……………. இதுதான் கரெக்ட்டா இருக்கும்

கேட்க ரெடியா…………. என்ற போதே பாடல் ஒலிக்க அதில் மெய் மறந்தனர் இருவரும்…….

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா

சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா

சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்

செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா

சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்

இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதே

மன்மத காவியம் முடியதே

அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்

அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா(…..)

தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்

என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்

எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்

என் மகன் காவிய நாயகனே

என் உயிர் தேசத்து காவலனே

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்

மானிடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா(…..)

மயங்கி இருந்த நிலை………. தொடர்ந்தது…………. இதை விட சிறந்த பரிசினை கணவன் மனைவிக்கு… அதுவும் அவள் தாயாகும் தருணத்தில் இருக்கும் நிலையில் வழங்க முடியுமா என்ன…………

கணவனுக்குள் அடங்கினாள் கீர்த்தனா…. அந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும்………. மனைவியைத் தன்னோடு சேர்த்து அதில் லயித்திருந்தான் பாலா

கவிதான் செய்திருப்பாள் என்று புரிந்தது கீர்த்திக்கு,,,,,,,,,,,, கவி எதார்த்தமாகத்தான் சிந்துவோடு சேர்ந்து இதைச் செய்தாள்

பாலாவும் நெகிழ்ந்திருந்தான்…………….. ஆனால் அவனுக்கு இன்னொரு சந்தேகம்…….. வந்தது,,,,,,,,,,,,, மதுவின் பாடல் இருந்த சிடியை கீர்த்தி கேட்டிருப்பாளோ……….. அதைக் கவியிடம் சொல்லி இருப்பாளோ………..என்று…………. வினோத்திடம் கூட மறைத்த தங்கள் விசயத்தை கவியிடம் கூறியவள் தானே ஒருவேளை மது பாடிய பாடலைக் கேட்டிருந்தால் கவியிடம் சொல்லி இருந்திருப்பாள்………. என நினைக்க மட்டும் செய்தவன்……… தற்போதுள்ள ரம்மியத்தை பேசி கெடுக்க நினைக்க வில்லை………… அவர்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் அவனுக்கு இதற்கு விடை கிடைக்காமலா போகும்………..

கீர்த்தியும் யோசித்தாள்………. நாம மது சீடியைப் பற்றி இவளிடம் சொல்லவே இல்லையே………..எப்படி…………கரெக்டா போடுறா…………. அப்படியே மது போலவே…. என்று யோசிக்க ஆரம்பித்து… பாலா ஏன் இன்னும் பண விசயத்தை மறைக்கிறான் என்ற நிலையில் நின்று… பின் அவன் எது செய்தாலும் காரணம் இல்லாமல் இருக்காது முடிவுக்கு வந்து சமாதானமானாள்……..

பாலாவுக்குதான் அவனது சந்தேகங்களின் விடைகள் காலத்தின் கையில் விடப்பட்டிருந்தது……..

ஆனால் கீர்த்தனாவின் சந்தேகம்……….. வெகு விரைவிலேயே தீரும் தருவாயில் தான் இருந்த்து……

இருவரும் பாடலிலும்………. அது தந்த நினைவிலும்……..பின் தங்கள் நினைவிலும் சுற்றிக் கொண்டிருக்க மணி அரை மணி நேரத்தைக் கடந்திருக்க…………..மொபைல் ஒலிக்க…………. கவிதான்

“10 நிமிடம் தான் கொடுத்தோம்…….. அரை மணி நேரமா சொன்னோம்………… இறங்கி வாங்க” என்று அழைப்பு விடுக்க

இறங்கிய போது பெரியவர்கள் யாரும் இல்லை…….

பிறகென்ன…… போதும் போதும் என்றவளவுக்கு அனைவரும் ஓட்டித்தள்ள………

கவியோ.. ”யாரோ 5 நிமிசம் போதும்னு சொன்னாங்க வினோத்” என்று விடாமல் ஓட்ட

அதைக் கேட்ட கீர்த்தனா கணவனின் மார்பில் ஒளிந்தவள்தான் நிமிரவே இல்லை……… அவளவனும் நிமிர விடவில்லை…….. அவர்களின் கேலிக்கெல்லாம் பயந்து தன் அரவணைப்பை விடவும் வில்லை…….

-----------------------

இரண்டு மாதங்களுக்குப் பிறகு............

வினோத்-கீர்த்திகா திருமணவிழாவில்

அந்த திருமண மண்டபத்தில் ஒவ்வொருவரும்......... பரபரப்பாய் இருக்க....... மணமகள் அறையில் கீர்த்திகாவிற்கு அலங்காரத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தாள் கீர்த்தி....

மதுவுக்கு கை நடுக்கம் இருந்த காரணத்தால் எந்த வேலையும் செய்ய வில்லை......

மதுவை… பாலா…… அடிக்கடி கீர்த்தனாவோடு போய்ப் பார்த்தான்……… மது அப்பா ஒன்றும் சொல்லவில்லை………….. மது… கீர்த்தனா இருவரும் அதிகம் நெருங்க முடியவில்லை………… என்னதான் இருவரும் பேசினாலும்……… ஒரு இடைவெளி இருவருக்கும் இருந்தது என்பதே உண்மை………. இதில் பாலா-கீர்த்தனா கடந்த காலம் வேறு கீர்த்திகா மூலம் மதுவுக்கு தெரிய……………… பாலா நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான் மதுவிடம்…………

கண்டிப்பாக…….. திரும்பி வரும் போது அவன் மதுவின் பாலாவாக இருந்திருந்தால் கூட…. தானே அவனை கீர்த்தனா கூடத்தான் வாழச் சொல்லி இருப்பேன்…… என்று கூறி அவனுக்கு பெரிய அர்ச்சனையே வழங்கி இருந்தாள்…………..

பாலா கீர்த்தானாவோடு சந்தோசமாக வாழ்வதில்…….. இன்று கீர்த்திகா------வினோத் திருமணத்தில் என்று………. காலம் தந்த மாற்றத்தை சந்தோசமாக ஏற்றுக் கொண்டாள்

கீர்த்திகா….. தனக்கு தாயின் பாசத்தைக் காட்டிய தன் தோழிக்கு மிகவும் ஆதரவாய் இருந்து அவளை மெல்ல மெல்ல போதைப் பழக்கத்தில் இருந்து வெளியேற எல்லா உதவியும் செய்து கொண்டிருந்தாள்….. மதுவும் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தாள்

கீர்த்தனாவுக்குதான் வேலை... 2 வீட்டுப் பக்கமும் வேலை பார்த்தாள் அவள்.

இதில் அவளுக்கு 4 மாதம் வேறு என்பதால் மார்னிங் சிக்னெஸ் அதிகமாக இருந்தது.....

இருந்தாலும் அங்கும் இங்கும் என்று ஓடிக் கொண்டிருந்தாள்

இதில் அவள் கவனிக்காமல் விட்டது அவள் கணவனைத்தான்........ அவள் அவனிடம் தனியாக சிக்கவே இல்லை....

மணமகன் அறையில் பாலாவும் வினோத்தும் தீவிரமான டிஸ்கஸனில் இருக்க..... கீர்த்தி வந்ததும் நிறுத்தினர்......... இருவரையும் பார்த்தபடி

“என்ன ரெண்டு பெரும் நான் வந்தவுடனே பேசினதை ஸ்டாப் பண்ணீட்டீங்க என்னடா திருட்டுதனம் பண்றீங்க.... என்றவள்……..

இருவரையும் சேர்த்துச் சொன்னதில்……. தான் பாலவையும் சேர்த்து ’டா’ சொல்லியதை யோசித்தவள்.... உடனே நாக்கை கடிக்க....

”விடு...விடு....... அப்டியே சொல்லாதவ மாதிரி சீன் போடாத........” அவனுக்கு கிடைத்த அவளின் அருகாமையில் அவள் கைகளை பிடித்து தன் அருகே நிறுத்தியவன்.. அவளிடம்

”வந்த வேலையை....பாரு.... கீர்த்தி” என்றவுடன்...

”டேய் லூசு....உன்னாலதான்ன் அவரையும் சேர்த்து சொல்லிட்டேன்..”. என வழக்கம் போல் வினொத்தை முறைக்க

”ஆ..வூனா....என் மேல தப்பு சொல்றதையே குறியா வச்சுக்கோ.........” என்றவனிடம்....

”விட்டா பேசிட்டே இருப்ப நீ என்றபடி.... தன் கையில் இருந்த பெட்டியை திறந்தாள்.அது ஒரு ப்ரேஸ்லெட்...

"ஹேய் என்ன இது..." என்று கேட்க

“அம்மா வாங்கினது உனக்காக……….. அவங்களுக்கு மருமகனா ஆகும் போது போடலாம் என்று…… அது முடியாம போச்சு…….. “ என்ற படியே அதை அவனுக்கு அணிவிக்க…..

வினோத் கண் கலங்கினான் மைதிலி-ராகவன் பாசத்தில்… அதைப் பார்த்த பாலா

”என்னதான் இருந்தலும்… மைதிலி அத்தைக்கு உன் மேல தனிப் பாசம்தான்டா..... என்னைக் கொஞ்ச நாள் வில்லனாகவே பார்த்தாங்க...... அவங்கள சமாளிக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன்” என்றவனைப் பார்த்து முறைத்த கீர்த்தி

"ஆமா இவரு பெரிய சாதனை செஞ்சுட்டாரு... அதுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறாரு…. " என்று நொடிக்க

"பின்ன உன்னை கல்யாணம் பண்ணியது சாதனைதானே….அது கூட சாதனை இல்லை" என்றவன்……..

வினோத் தானே இருக்கிறான் என்று

“உன்னை என் கூட வாழ வச்சுருக்கேனே………அதுதான் என் சாதனை…” என்று கண் சிமிட்ட……… கீர்த்தி வெட்க்கபட

வினோத்தோ

”டேய் இன்னைக்கு என்னோட கல்யாணம் டா……… இப்போ கூட நீங்க அலப்பறைய கூட்டனுமா….. இன்னைக்கு என்னோட நாள்……. சோ………..கொஞ்சம் அடங்கி……. எனக்கு கொஞ்சம் சான்ஸ் கொடுங்கடா…………” என்று பாவமாய் சொல்ல………….

இருவரும் சேர்ந்து சிரித்தே விட்டனர்………

மணக் கோலத்தில் இருந்த கீர்த்திகாவைப் பார்த்து அனைவருக்கும் உள்ளம் நிறைந்தது…….. மணமகள் அறையில் அனைவரும் இருக்க….. மது சாப்பாடோடு உள்ளே வந்தாள்…… கீர்த்திகா பசியோடு இருப்பாள்… என்று கை நடுக்கம் இருந்தும் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்…….

கீர்த்தி கண் கலங்க ….

“லூசு………. அழுது வடியாத….. போட்டோல அசிங்கமாகப் போகுது…….. நீ அழகுதான் … அதுக்காக ….. அழுத முகத்தோட இருந்தா யாரா இருந்தாலும் கேவலமாய்த்தான் இருக்கும்” என்று சொல்ல

கவி…. சிந்து சிரிக்க…… அங்கு கல கலப்புக்கு பஞ்சம் இல்லை……….

கீர்த்திகாவிற்கு ஊட்டியபடியே இருந்த மது……. கீர்த்தனாவைப் பார்க்க… கொஞ்சம் களைப்பாகத் தெரிய

“கீது நீ சாப்பிட்டாயா…” என்று கேட்க

மது பாலா சொல்வது போல கீர்த்தனாவை கீது என்றுதான் அழைத்தாள்………..அவன் கூப்பிடுவதாலோ……… இல்லை…………… கீர்த்தி என்றி தோழியை அழைத்ததாலோ அவள் கீது என்றே கூப்பிட பழகி இருந்தாள்…………………

மதுவின் கேள்விக்கு பதிலாய் ’இல்லை’ என்று தலையாட்ட

மது தயங்கி… பின் அவளுக்கு ஊட்ட கை நீட்ட……….. கீர்த்தனா சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்………… மதுவின் பாசத்தில் கண் அவளையுமறியாமல் கண்ணீரை வெளியேற்ற…………

”அம்மா தாயே……… நீ கண்ணை கசக்கினாய் என்றால்…… என் அத்தை மகன்………… எங்க இருந்தாலும் வந்து…….. என்னைத் திட்ட போறான்………. அவனுக்கு என்னைத் திட்டறதுனா அல்வா சாப்பிடற மாதிரி கீது……….. ப்ளீஸ்….. அவன் திட்டு எனக்குத் தேவையா”

என்று போலியாய் பாவமாகச் சொல்ல………. சிந்து… கவி……….. மணப்பெண் என அனைவரும் சிரிக்க……………… கீர்த்தனா அனைவரையும் முறைத்து

”இங்க பொண்ண கேலி பண்ணாம என்னை என்ன ஓட்டறீங்க” என்று எல்லோரையும் திசை திருப்ப……….கீர்த்திகா நிலை பாவமாகியது……….

சற்று நேரத்தில் பாலா கீர்த்திகாவை மண மேடைக்கு அழைத்துவரச் சொல்ல அங்கு வர

மது கீர்த்தனாவுக்கு ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அப்படியே நின்றான்……… உள்ளே செல்லாமல்

இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு…….. அனைவரையும் கீழே கிளம்பச் சொல்ல……….. அனைவரும் மணமகளை அழைத்துக் கொண்டு வெளியேற………..

அனைத்தையும் சரி பார்த்தபடி கீர்த்தனாவும் கடைசியாக வெளியேறப் போக…….அவன் அவளை போக விடாமல் பிடித்து உள்ளே இழுத்து….. கதவைப் பூட்டினான்…….

----------------

சிறிது தூரம் சென்ற பின் சிந்து கீர்த்தியைத் தேட……….

கீர்த்தி அக்காவை விட்டுட்டு வந்துட்டோமே……… இருங்க நான் கூட்டிட்டு வருகிறேன் என்று மீண்டும் போக எத்தனிக்க

வேகமாய் அவளைப் பிடித்து தடுத்து நிறுத்திய மது அவளிடம்……

“உங்க பாலா அண்ணா இருக்கார்ல……..அவர் கூட்டிட்டு வந்துருவாரு சிந்து…….. நாம போகலாம்…………..” என்று கூற

இருந்தும் சிந்து தயக்கமாகவே நிற்க…. கவி சிந்துவிடம்

“உன் பாசத்துக்கு அளவே இல்லை சிந்து……… வா வா” என்று சிந்துவை இழுத்துக் கொண்டு சென்றவள்… மதுவை நன்றியோடு…பெருமையோடு பார்த்தாள்…………

தன் தோழியை…… பாலாவோடான அவள் வாழ்க்கையை பொறாமையின்றி ஏற்று கொண்ட மது சாதாரண சராசரிப் பெண்ணாக கவி கண்ணுக்குத் தெரியவில்லை…………

கவியின் பார்வையை உணர்ந்த மது……… என்ன என்பது போல் பார்வையால் கேட்க……….. கவியோ ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டினாள்…….

--------------------

தன்னோடு தனியே மாட்டிய கீர்த்தியை…….கதவோடு சாய்த்தவன்……

”என்னடி………. கையிலயே சிக்காம தண்ணி காட்டிட்டு இருக்க” என்று வம்பிழுக்க……..

“பாலா விடுங்க பாலா………. இது என்ன விளையாட்டு……. தேடப் போறாங்க…….ப்ளீஸ்”

”சரி சரி விடறேன்……..ஆனா………. எனக்கு கொடுக்கிறத கொடுத்துட்டு போ….. மத்த எதுவும்தான் இல்லை………… இது மட்டும்தான் அதக் கூட தரமா சுத்திட்டு இருக்க……….. ” என்று அவளின் இதழ் நோக்கி குனிய…

”பாலா……………… மேக்கப்..ட்ரெஸ் எல்லாம் கலைஞ்சிரும் பிளீஸ்…………; என்று தயங்க……

இதுதானே உன் பிரச்சனை என்றவன் அவள் மேல் படராமல்…..

“ஏற்கனவே… அவளை விட்டு சற்று விலகிதான் இருந்தான் அவள் வயிற்றின் மேல் இடிக்காமல்… இப்போது இன்னும் விலகி……….. அவளை அணைத்திருந்த கைகளை கதவின் மேல் வைத்து………. தன்னை நிலைப்படுத்தி தன் வேலையை ஆரம்பிக்க…

கீர்த்தியும் அவனுக்கு சரி சமமாய் இறங்க ஆரம்பிக்க…….அவளுக்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் போக வேறு வழி இன்றி……… கணவனின் சட்டையை பிடித்து இழுத்து தன்னை நிலைப்படுத்தி……….. அவனுக்கு ஒத்துழைத்து……. பின் அவனை விட்டு விலகி… வெளியேறி இருந்தாள்……

அவள் பின்னாலேயே வெளியேறிய பாலா…….குனிந்து தன் சட்டையைக் கவனிக்க…….

“ராட்ச்சி……… அவ ட்ரெஸ்ஸ கசங்கக் கூடாதுன்னு…………….. என் சட்டைய ஒரு வழி பண்ணிட்டா………. என்று சொல்லியபடி நல்ல வேளையாக இதே போல் இன்னொரு பட்டு சட்டையும் தன் பட்டு வேஷ்டிக்காக வைத்திருக்க……… அதை அணிந்து கொண்டு வெளியேறினான்

----------------------

மணமேடையை நோக்கி போகப் போனவன்….. மது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்க………. அதிர்ந்து………. அவளின் அருகில் போய் ……. அவளை மேடைக்கு அழைக்க

“இல்ல பாலா………… எனக்கு கீர்த்தி அங்க சரியாத் தெரியல………. இங்கதான் வசதியா இருக்கு…… அவளோட முகத்தை……. அவளோட இந்த மணக் கோலத்தை பார்க்க…….” என்று தன் தோழியின் திருமணத்தில் நெகிழ்ந்து பேசியவளை உடனே விட்டுச் செல்லாமல்… அவள் அருகேயே அமர்ந்து விட்டான்……….

சில நிமிடம் கழித்து………

“பாலா………..கீர்த்தி அழகா இருக்காள்ள…… ” என்று தன் தோழியின் அழகில் மெய் மறந்து சொல்ல…..

“ஹ்ம்ம்ம்ம்………. கீர்த்தி ரொம்ப அழகா இருக்கா” என்று அவன் சொன்ன லட்சனமே அவன் கீர்த்திகாவை சொல்ல வில்லை…. அது கீர்த்தனாவை என்று புரிய….. மது வேகமாகத் திரும்பிப் பார்க்க

நினைத்தது போல அவன் மனைவியைப் பார்த்துக் கோண்டிருக்க……..

“பொண்டாட்டியவே சைட் அடிக்கிறியாடா……..” என்று அவன் கையைக் கிள்ள…….

“ஏய்………… வலிக்குதுடி……….” என்று சாதாரணமாய் அவன் அவளோடு பழகிய விதத்தில் ’டி’ போட… அது அவனறியாமல் வந்து விட்டது….. சொன்னதைக் கூட உணராமல் ……..அவன் முழுக்கை சட்டையின் கைப் பகுதியை சற்று மேலே தூக்கி கையைத் தேய்க்க………… மதுவுக்கு அவனின் ’டி’ என்ற சொல் எப்படி மனதில் பட்டதோ அதே போல் அவன் தீக்காய வடுவும் கண்ணில் பட……….

“என்னடா இது……. இவ்ளோ பெரிசா……… எங்க போய் சுட்டுகிட்ட…. நீ என்ன கிச்சன்ல போய் என்ன வேலை பார்த்த” என்று கிண்டலாகவும் கேட்க

சட்டென்று சட்டையின் கைப்பகுதியை இறக்கி விட்டான் பாலா………..

அவளிடம் பேசாமல் மேடையில் நின்ற கீர்த்தனாவையே பார்த்தபடி இருக்க……….

மதுவுக்கு ஒன்றும் புரிய வில்லை………… அவள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள்…….. பாலா சிறுபிள்ளைத்தனமாய்………….கீர்த்தனாவுக்காக இந்தக் காரியம் பண்ணியிருப்பான் என்று………. அதனால்

“என்னடா… எப்டி பட்டுச்சு” என்றவளிடம்

“ப்ச்ச் விடு மது……….. எப்டியோ…. தெரியாம பட்டுடுச்சு“ என்று அவன் சொன்ன விதமே அவனின் நிலையைச் சொல்ல

அவளும் அதற்கு மேல் கேட்க வில்லை…. ஆனால் அது வேண்டுமென்றே தெரிந்தே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள்………..

மண மேடையில் இருந்த வினோத் பாலாவையும்….மதுவையும் பார்த்து முறைத்தபடி இருக்க…….. அவனைப் பார்த்த பாலா முதலில் குழம்பியவன்…….பின் அவனின் கோபம் உணர்ந்து…………சிரித்தபடி

“மது…..உன் கீர்த்தி செல்லம் கழுத்துல அவ பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறவன் சந்தோசமா கட்டணும்ணா… அவன் கீர்த்தி செல்லத்துக்கிட்ட நான் போய் நிற்க வேண்டும்…… இல்ல பையன் அழுதுருவான்….” என்று சொல்லியபடி……….. எழுந்தான் பாலா………

போன பாலாவையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மது……….. மனம் அங்கு இங்கு போய்………. சரியான தீர்வைச் சொல்ல…….. அதன் பின் மணமக்களை பார்க்க ஆரம்பித்தாள்………

அனைவரின் ஆசிர்வாதங்களோடு வினோத் ……….கீர்த்திகாவின் கழுத்தில்…………. மங்கல நாணை அணிவித்தான்…..

வினோத் பெற்றோரும்………..கீர்த்திகாவின் பெற்றோரும் ஆனந்தக் கண்ணீர் வழிய தங்கள் பிள்ளைகளை வாழ்த்தினர்

--------------------------

எல்லாம் முடிந்து கிட்ட்த்தட்ட எல்லோரும் மண்டபத்தை விட்டு காலி செய்ய. உறவினர் கூட்டம் மட்டுமே இருக்க……. வினோத்……….கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு……… வெளியேறி இருந்தான்…….. கேட்ட பெரியவர்களிடம் கோவிலுக்கு என்று சொல்லி………. வேகமாய் வெளியேற……. வெளியே பாலா காரில் அவர்கள் இருவருக்காக காத்துக் கொண்டு இருந்தான்………..

“எங்கே“ என்று கேட்ட கீர்த்திகாவிற்கு இருவரும் பதில் சொல்லாமல்…..மௌனத்தையே தந்தனர்…….. வினோத்- பாலா இருவர் முகமும்……… இறுகி இருக்க…….. கீர்த்திகாவும் விட்டு விட்டாள்

மூவரும் சென்றது……. ப்ரதாப் இருந்த சிறைச் சாலைக்கு………… வினோத் பாலாவுக்கு கூடத் தெரியாமல் இதைச் செய்திருந்தான்……. காலையில் பாலாவிடம் சொல்ல….முதலில் அனுமதிக்க மறுத்தவன்…. பின் அவனை உணர்ந்து தானும் வருவேன் என்று சொல்லி….. அவனோடு கிளம்பி இருந்தான்….. வந்து பிரதாப் முன்னிலையில் நின்றனர்….

ப்ரதாப் யாரோ என்று பார்க்க வந்தவன்

“கீர்த்திகாவைப் பார்த்து அதிர்ந்து……… அவளையே பார்த்தபடி வர…………”

கீர்த்திகா அவன் பார்வையில் அரண்டாள்…

அவன் வினோத்தை வன்மமாய்ப் பார்க்க… வினோத் அலட்சியமாகப் பார்த்தபடி………..

“என்னடா………….. இவள எந்தக் கோலத்துல அடுத்தவனோட உன்னால பார்க்க முடியாதோ……..அதாவது மணமகள் கோலத்தில இருக்கா.... இப்போ இவ என்னோட மனைவி………… என்று அவளை அவன் முன்னாலே தன் அருகே தோளொடு சேர்த்தவன்………”” ப்ரதாப்பின் பார்வை கீர்த்தியின் மேலேயே இருக்க…… அதைக் கவனித்த வினோத் பாலாவை அழைத்து………

“பாலா இவள கூட்டிட்டு நீ போய் காரில் இரு……… நான் 5 நிமிசத்துல வருகிறேன்……….” என்றவனைப் பார்த்தி கீர்த்தி தயங்க…….

பாலா….. ப்ரதாப்பின் அருகே வந்து……….. ஆதீ கேஸ்ல……… தண்டனை அனுபவித்தும் திருந்தல…….. நீ………… இந்த முறை வெளிக் காற்றே நீ அனுபவிக்க முடியாதுடா……….. அந்த அளவுக்கு ஸ்ட்ராங்க ஃபைல் பண்ணி இருக்கோம்………….. வெளில வரும் போது…….. அனேகமா……… எங்க பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி இருப்போம்…….என்று நக்கலாகச் சொல்லி………கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு வெளியேற

“பாலா………..வினோ…………. அவனோட…..பயமா இருக்கு……” என்று தயங்க……….

“கீர்த்தி…………. வினோத்துக்கு ஒண்ணும் ஆகாது………… அவன் பேசிட்டு வருவான்……… அவனுக்கு எதுவும் ஆகாம…… நம்ம ஆதி பார்த்துப்பான்” என்று சொல்ல……… வெடித்து அழுத கீர்த்தியிடம்…. பதறி விட்டான் பாலா

“ஐயோ கீர்த்தி சாரி கீர்த்தி…….நான் உன்னை அழ வைக்கிறதுக்காக சொல்ல்லைமா………”

அவனுக்கு நீ நல்லா வாழனும் என்பது கடைசி ஆசை…….. அதுதான் வினோத் உனக்கு கிடைத்திருக்கிறான்……… அதுனால அப்படி சொன்னேன்…கீர்த்தி…….” என்றவனின் வார்த்தையில் சமாதானம் ஆனாள் கீர்த்தி….

உள்ளே ப்ரதாப்பிடம்

“என்னடா என்னமோ மயக்கமா இருந்த பொண்ணுகிட்ட காதல் காவியம் சொன்னியாம்……… மது சொன்னா………….. பெரிய தெய்வீகக் காதல் மாதிரி பேசுனியாம்…… உடம்பு மேல ஆசை இல்ல……….. மனசு மேலேனு…….. நீ அவ மனசு மேல காதலயும் வைக்கல… அவ உடம்பு மேலயேயும் ஆசை வைக்கலடா………. நீ அவ மேல வெறி வச்சுருந்த……….. அவ்வளவுதான்…… உன் பக்கத்தில அவ இருக்கணும்….. அது மட்டும்தான் உனக்கு வேண்டும்……… அவ மனச நேசித்து இருந்தாய் என்றால்………..அவ சந்தோசமான வாழ்க்கைய மட்டும் நினைத்து…….. அவ வாழ்க்கையில் இடையூறு செய்திருக்க மாட்ட…………… தன்னோட மனசுக்கு பிடிச்சவங்க நல்லா இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் அவங்கள உண்மையா நேசிச்சவங்க………. ஆதி அவள உண்மையா நேசிச்சாண்டா…. அதுதான் தான் போனாலும் கீர்த்திய இன்னொரு வாழ்க்கை வாழ வைக்கனும்னு மதுகிட்ட சத்தியம் வாங்கினான்……. அதுதாண்டா உண்மையான காதல்….. அதோடு மட்டுமில்லை உனக்கு கீர்த்திகா மேல வேற எந்த ஆசை இல்லேனும் தெரியும்……… ஏன்னு சொல்லவா…… இந்த 5 வருசத்தில நீ நினைத்திருந்தா…….. அவள அடையனும்னு நினைத்திருந்தால் அடைந்திருக்கலாம்……… அதையும் செய்யல……. ஆக மொத்தம் மது சொல்வது போல நீ ஒரு சைக்கோடா………… உனக்கு…….. பனிஷ்மெண்ட் இந்த ஜெயில் வாழ்க்கை இல்லை….. எங்க ரெண்டு பேரோட சந்தோசமான வாழ்க்கையும்தான்……….. இந்த ஜெயில்ல இருக்கிற வரை கீர்த்தியோட மணக்கோலம் தாண்டா……… உனக்கு தண்டனை……. என்றவன்……. அங்கிருந்து கிளம்ப………. ஆரம்பித்தான்……

கடைசியாக அவனிடம்…..

“இன்னொரு தடவை அவ மனச நேசித்தாய் என்று சொன்ன………. தொலைச்சுடுவேன் உன்னை…….. அவள விதவை கோலத்தில் கூட பார்த்து சந்தோசப் பட்ட கேவலமானவண்டா நீ……… நீ என்ன வேணும்னாலும் என்னை பண்ண ட்ரை பண்ணிக்கோ………….. பட் உனக்கு அது தோல்விலதான் முடியும்…….ஏனென்றால் எனக்கு ஆதியோட ஆசிர்வாதம் இருக்கு…. அது என்னை நிச்சயம் காப்பாற்றும்” என்று மனமாறச் சொல்லி………..ப்ரதாப்பை விட்டு வெளியேற………

ப்ரதாப்புக்கு….அவன் சொன்னதெல்லாம் மனதில் ஏறவே இல்லை…..கீர்த்தியின் மணக் கோலம் கண் முன்னே நிற்க……………. தாங்கமுடியால கம்பியிலேயே தன்னை முட்டிக் கொள்ள ஆரம்பிக்க………….. அவன் என்றும் மாறப் போவதில்லை……… ஆனால் வெளியே வரும்போது அவன் முற்றிலும் பைத்தியக்காரனாய்த்தான் வருவான் என்பது திண்ணம்………….. பைத்தியங்களுக்கு எங்கு இடமோ அங்குதான் அடுத்து அவன் போவான்………இதுதான் அவனுக்குத் தண்டனையாக விதி நிர்ணயித்து இருந்தது………….

வெளியே வந்த வினோத்திடம் ஓடிச் சென்றாள் கீர்த்தி…… அவனின் தைரியத்தினால் இப்போது… அவளின் விழிகளில் பிரதாப்பினால் இருந்த கலவரம் நீங்கி….. காதல் மட்டுமே இருக்க…….. அதை ஆசையோடு………… தன் கண்களில் நிரப்பினான் வினோத்

---------------------

இங்கு ப்ரதாப்பிடம் பேசி…. தன் காதலியின் பயத்தை நீக்கி தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை சந்தோசமாக தொடங்கிய சந்தோசத்தில் வினோத் இருக்க …

மதுவோ திருமண மண்டபத்தில் வேறு ஒரு சாதனையைச் செய்தாள்………அது 30 வருடமாய்த் தன் தந்தையின் பிடிவாதத்தை அசைத்திருந்தாள்………….

பாலா………சொன்ன அவனறியாமால் சொன்னான் தான்………… ‘டி’ என்ற வார்த்தையில் மது மனம் சற்று ஆடி மீண்டும் சம நிலைக்கு வந்திருந்தது………….. ஆனால் இது அவனருகில்……. எப்போதாவது………. மீண்டும் சாய்ந்து விடுமோ என்று அஞ்சியவள்……….. அது நடக்கக் கூடாதென்றால்……. அவனை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவள்……………. தான் சிகிச்சை பெற்று வரும் மறுவாழ்வு மையத்தின் தலைமைக்கு உடனே தொடர்பு கொண்டாள்…

அவர்கள் மதுவின் அதி ஈடுபாடுடன் கூடிய……. ஒத்துழைப்பைப் பார்த்து……. அதில் வென்றதையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி…… அவளை……. வெளி நாடுகளுக்கு இவளைப் போல் போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கும் மற்றவர்களுக்கு…….. ஆலோசனை வழங்க முடியுமா என்று கேட்டிருந்தனர்…….. முதலில் யோசிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தவள்…… இப்போது உடனே தன் சம்மதத்தை சொல்லி விட்டாள்……..

தன் தந்தையிடமும் அவள் முடிவைச் சொல்ல…………கண் கலங்கி விட்டார் ராஜன்…….

“அப்பா 5 வருசம் தனிமைல இருந்தப்ப…………அவன் நினைவு என்னைப் பாதிக்கலப்பா……… ஆனா அவன் பக்கத்தில இருக்கும் போது……. பயமா இருக்கு……… என்னை அறியாம என் கண்ல காதல் வந்திடுமோன்னு…………. அதுமட்டும் நடந்துச்சுனா…….பாலா சத்தியமா நிம்மதியா இருக்க மாட்டான்பா……… அந்த பொண்ணும் நிம்மதியா இருக்க மாட்டாப்பா……… நான் இனிமேல்….. இப்படியே இருக்கப் போறேன்னு சொல்ல்ல…….. ஒருவேளை நான் உங்க மகளா மட்டும்தான் இருக்கனும் என்பது விதினா..அதை சந்தோசமா ஏற்றுக் கொள்வேன் …… அதே நேரத்தில…….. என் மனசு இன்னொருத்தன் கிட்ட போனாக் கூட அதை மறைத்து வைக்க மாட்டேன்.. கண்டிப்பா அதை ஏற்றுக் கொள்வேன்……….. இப்போ சொன்ன ரெண்டும் நடந்தா யாருக்கும் பாதிப்பு இல்ல…….. ஆனா……. நான் முதலில் சொன்னது நடந்தா ………. அதுனால நான் போறேன் அப்பா…’” என்று சொல்ல

“அதுக்கு எதுக்குமா………எங்கள விட்டெல்லாம் போற………….. எங்க கூட வந்து இரு… என்னால உன்னை விட்டு இருக்க முடியாதும்மா” என்று சொன்னவரை பார்த்து சிரித்தாள் மது

“ஏன்ப்பா இருக்க முடியாது………… என்னை நீங்க கண்ணே மணியேனுலாம் கொஞ்சி வளர்க்கலப்பா…….. ஆனா நீங்க உங்க தங்கைய அப்டி வளர்த்தீங்கலாம் அம்மா சொன்னாங்க…………அவங்கள விட்டே பிரிஞ்சு இருக்கல………. அதுவே உங்களுக்கு கஷ்டம் இல்லாதப்ப……என்னைப் பிரிவதற்கும் கஷ்டம் இருக்காதுப்பா” என்று அவரை குறி பார்த்து அடிக்க

மனதில் அடி வாங்கிய மனதோடு அவரைப் பார்க்க……

அவரின் பார்வையில் கலங்கிய மது

”அப்பா…. நான் குத்திக் காட்டலப்பா……இப்போ கூட அத்தை கூட பேசுங்கன்னு சொல்லல…. அது உங்க தன்மானம்……. அதில் நான் குறுக்க வர வில்லை என்னைப் பிரிய முடியாதுன்னு சொன்னீங்கள்ள அதுக்கு பதில்தான் அது…..அவ்வளவுதான்…” என்றவள் சில நிமிடம் யோசித்து

“ஆனா அப்பா…..ஒருவேளை அத்தைய தள்ளி வைக்காம இருந்திருந்தா…………பாலாவும் நானும் சேர்ந்திருப்போமா………. இத்தனை வருசம் அவங்க தவிச்ச்சிட்டு இருக்கிற தவிப்புதான்… என் மூலமா……….உங்களுக்கு கிடைத்து விட்டதோ” என்று மகள் எங்கோ பார்த்த விழிகளோடு கலங்கிச் சொல்ல…….. அவளை அணைத்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தவர்……..

அடுத்த அரைமணி நேரத்தில் அருந்ததியோடு தன் வைரக்கியத்தை விட்டு…….. அவளோடு பேச ஆரம்பிக்க……… அங்கு சந்தோசம் குலுங்க ஆம்பித்து இருந்தது………….

அருந்ததியின் சந்தோசத்தைப் பார்த்து……… ஜெகநாதன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்……….. என்ன தன் மகன் தன் மருமகளுக்கு செய்த காரியம் மட்டும் இன்னும் தெரியாத அப்பாவியாகத்தான் இருந்தார் இன்னும் அவர்…..

மீண்டும் மண்டபத்துக்கு வந்த பாலாவுக்கு இது இன்ப அதிர்ச்சியாய் அமைய………..தன் மாமாவிடம் மனமார நன்றி சொல்ல……….. அவர் மதுதான் இதற்கு காரணம் என்று சொல்லி தன் நன்றியை அவள் புறம் திருப்ப……

“மாமா….. மதுவுக்கு……….. நான் சாரி சொன்னாலோ…. இல்லை தேங்க்ஸ் சொன்னாலோ பிடிக்காது மாமா” என்று கிண்டலாகச் சொல்ல

மது அவனைப் பார்த்து சிரித்தபடி……….

“அது அப்போ……..இப்போ எனக்கு ஒழுங்கு மரியாதையா தேங்க்ஸ் சொல்லுடா” என்று சொல்ல

“ஓ……. அப்ப சரி நீ என்னை அத்தான்னு சொல்லு….. என் மாமா மகளே… நானும் தேங்க்ஸ் சொல்கிறேன்” என்று பதிலுக்கு சொல்ல

கீர்த்தனா….. கவி சிந்துவோடு சற்று தள்ளி அமர்ந்திருக்க……. ஆனால் இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டேதான் இருந்தாள்……..

கவி சிந்துவைப் பார்த்து….. என்ன சிந்து……….. இன்னைக்கு பார்த்ததில இந்த கவி அக்காக்கு எதுனாச்சும் செட் ஆகிற மாதிரி இருந்ததா என்று சிந்துவை கூட்டணி சேர்த்து பேசிக் கொண்டு இருந்தாள்……….

கீர்த்தி சிந்துவைப் பார்த்து அனல் பார்வை பார்க்க

சிந்து அலறினாள்…….

”கீர்த்தி அக்கா………. சத்தியமா நான் அப்டிலாம பண்ணலை……… கவி அக்கா….. பொய் சொல்றாங்க……”. என்ற போது

”பொழச்ச……. நீ மட்டும் இவள மாதிரி எதுனாலும் பண்ன ஆரம்பிச்ச……. தொலச்சுடுவேன்…….. இவள என்னால திருத்த முடியாது…………. அது அவளுக்கு வரப் போறவன் பாடு…………” என்ற படி மீண்டும் பாலாவைக் கவனிக்க ஆரம்பித்தாள்…….

இப்போது பாலாவும் கீர்த்தியைப் பார்க்க……….

தன் கண்களாலே போர் முழக்கத்திற்கான செய்தியை அவனுக்கு அறிவிக்க…………..

”ஒகே……….. என் மேலிடம்……… கொஞ்சம் டென்சன் ஆகுது……….. நான் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன் இந்த அவையிலிருந்து….” என்று நகர்ந்தவனைப் பார்த்து அருந்ததி, மது, வினோத் , கீர்த்திகா….உள்ளிட்ட அனைவரும் சிரிக்க………

இப்போது பாலா கீர்த்தனாவின் அவையில் இருந்தான்……….

1,769 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

என் உயிரே !!! என் உறவே ??? - 57

அத்தியாயம் 57: வினோத் மற்றும் கீர்த்திகா… அறையின் வெளியே இருக்க……….. அருந்ததி தன் அண்ணன் மகளின் அருகில் இருந்தாள்…….. அவளயே பார்த்தபடி…….. கண்கள் வேறு கலங்கி கொண்டே இருந்த்து…. அவளுக்கு…. அவளின் நிலைய

Comentários


© 2020 by PraveenaNovels
bottom of page