என் உயிரே !!! என் உறவே !!! 8

அத்தியாயம் 8

அம்மா என்ற கீர்த்தியின் கத்தலில் சமய‌லறையில் இருந்து வெளியே வந்த மைதிலி அலுவலகத்திற்கு கிளம்பி நின்ற மகளைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றாள்.

கீர்த்திமா நீயா இது இவ்ளோ சீக்கிரம் ஆஃபிஸுக்கு என்றவளிடம்

சீக்கிரம் எனக்கு டிபன் எடுத்து வையுங்கம்மா , எனக்கு ஆஃபிஸ் போகனும். என்று பர பரத்தபடி

……. மைதிலி அசையாமல் அவளையே பார்த்தபடி நிற்க

தள்ளிக்கங்க நானே லஞ்சுக்கு எடுத்து வைத்துக் கொள்கிறேன். நீங்க கனவு கண்டுகொண்டே எனக்கு அட்லீஸ்ட் டிபன் மட்டுமாவது எடுத்து வையுங்கள்

என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

என்னங்க இவளுக்கு ப்ரமோசன் போட்டாலும் போட்டாங்க அநியாயத்துக்கு நம்மை ஆட்டி படைக்கிறா, என்னமோ அந்த ஆஃபிஸே இவளாலதான் நடக்கிற மாதிரி

என்று ராகவிடம் சத்தமாகவே அலுத்தாள் மைதிலி.

மைதிலி அங்க என்ன புலம்பல் கொஞ்சம் உள்ள வாங்க மேடம், நான் போன பிறகு உங்க ஆத்துக்காரரிடம் எவ்வளவு நேரம் உட்கார்ந்தும் பேசுங்க .

………” இப்போ எனக்கு டிபனை வையுங்க மத்ததை அப்புறம் கவனிங்க

என்று விளம்பர மாடல் போல் ஏற்ற இறக்கமாக பேசிய கீர்த்தியிடம்

அம்மா தாயே நீ முதலில் கிளம்புகிற வழியைப் பார். ஓண்ணும் கேக்காதீங்க அவளை அவ பேசுறதையெல்லாம் பார்த்து ரசிச்சு பார்த்து சிரிக்க மட்டும் தான் தெரியும் உங்களுக்கு என்றபடி அவளும் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

மைதிலி வார்த்துக் கொடுத்த தோசையினை வாயில் பிய்த்து போட்டபடி ராகவனின் அருகில் அமர்ந்த கீர்த்தி

என்னப்பா உங்க மனைவிக்கு வர வர என்னைப் பற்றி கம்ளெயின்ட் பண்றதே வழக்கமா போய் விட்டது. நீங்க ஒரு வார்த்தை கேக்கறீங்களா அவங்க பேசுறதெயெல்லாம் வாய மூடிட்டு கேட்க மட்டும் தான் தெரியும் உங்களுக்கு

என்று கீர்த்தியும் தன் பங்குக்கு ராகவனை குற்றம் சாட்ட

உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன ஏன் இழுக்கறீங்க , அம்மா பொண்ணு முட்டி மோதுங்க என்னமோ பண்னுங்க.. அத விட்டுட்டு என்கிட்ட வந்து நிக்காதிங்கஎன்றார் ராகவன்

அப்படி இல்லைப்பா , நீங்க எந்த சைடுன்னு செக் பண்ணிக்கிறோம் , நீங்க யார் சைடுல இருக்கீங்களோ அந்தப் பக்கம் கொஞ்ச்ம் ஸ்ட்ராங்கா இருக்கும்ல அதான் என்னம்மா அப்படித்தானே

என்று தன் அம்மாவையும் துணைக்கு இழுத்தாள்

ஆமாடா நானே இங்க தனியாளா ரெண்டு பொண்னுங்க கிட்ட இருந்து மாட்டி தவிக்கிறேன் . நீ மெஜாரிட்டி வேறயா பார்க்கிறாய் என்று மகள் மற்றும் மனைவியிடம் மாட்டித் தவிப்பதை கூறினார் ராகவ்

அவர் தன்னையும் தன் அம்மாவையும் பேசுகிறார் என்று தெரிந்த போதும், கண்களை அகலமாக விரித்தவள்

அப்பா என்கிட்ட சொல்லவே இல்லயே யாருப்பா அது இன்னொரு பொண்ணுஎன்றவளை

மைதி முதலில் இவளைக் கிளம்பச் சொல்லு. ராட்சசி என்ன உன்கிட்ட மாட்டி விடறதிலயே குறியா இருக்கா. கீர்த்திடா கிளம்புடா என்ன மாட்டி விடறதில் உனக்கு என்ன சந்தோசமோ. ஏதோ முக்கியமான் வொர்க்னு சொன்னியே என்றதும்

கீர்த்திக்கு அவள் அலுவலகம் ஞாபகம். வந்தது.

அய்யோ மறந்தே போய்ட்டேன் ,

என்றபடி வேக வேகமாகச் சாப்பிட்டவள் சில நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவளது வேகத்தைப் பார்த்த மைதி

அப்படி என்னதான் ஆஃபிஸ்ல இருக்கோ. இப்பொழுதெல்லாம் சீக்கிரமாகவே கிளம்புகிறாள், லேட்டா வருகிறாள். இப்படி ஒரு வேலை நம்ம கீர்த்தி பார்க்க வேண்டுமா , திருமணம் பண்ணலாமென்றால் அண்ணண் வேறு ஒரு வருடம் ஆகட்டும் என்று சொல்கிறார்.அதுக்குள்ளே என் பொண்ணு இந்த வேலை வேலை என்றே ஓய்ந்து விடுவாள் போல

என்று மகளைப் பற்றிய கவலையில் பேச

அவ என்றாவது இந்த வேலையில் கஷ்டம் என்று கூறியிருக்கிறாளா, அவளே பிடித்துப் போய்தானே இவ்வளவு அக்கறையாக உழைக்கிறாள். பிடிக்க வில்லை என்றால் நம்மிடம் சொல்லப் போகிறாள்.அவள் இதுவரை எதையும் நம்மிடம் மறைத்ததில்லை.துக்கமோ சந்தோசமோ , சின்னதோ பெரிதோ நம்மிடம் சொல்ல வில்லை என்றால் அவளுக்கு தலை வெடித்து விடும் . அப்படி அவள் இருக்கும் போது உனக்கு என்ன கவலை.கீர்த்தி இன்னும் சின்னப் பொண்னு இல்ல. அவளைப் பார்த்துக் கொள்ள அவளுக்கு தெரியும். என்றபடி வீணாக கவலைப் பட்ட தன் மனைவியை தேற்றினார் ராகவன்.

ஆனால் அவர் மகள் மிகப் பெரிய விசயத்தை மறைக்கப் போவதையும், அதை அவர் கடைசி வரை அறியவே முடியாத நிலைமையும் அவருக்கு உணர்த்த இந்த ஜென்மத்தில் யாருமில்லை…….

கீர்த்தி அலுவலகத்தை அடைந்த போது அவளது தளத்தில் யாருமே வந்திருக்க வில்லை. தன் இருக்கையில் அமர்ந்தவள் சிஸ்டத்தை ஆன் பண்ணிவிட்டு கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் நேற்று பாலா கம்ப்ளீட் செய்த ப்ரொகிராமை ஓப்பன் செய்து ரன் பண்ணியவள் , அதே நேரத்தில் தனக்கு வந்திருந்த மெயில்களையும் செக் பண்ண ஆரம்பித்தாள்.

ஒரு மெயில் விநோத்திடமிருந்து வந்திருந்தது. வழக்கம் போல் அவனால் கூப்பிடப் படும் செல்லப் பெயரால் ஆரம்பித்து அவளை வம்புக்கு அழைப்பது போன்று ஆரம்பித்து எழுதியிருந்தான்.அதில் இருக்கும் குறத்தி என்ற வார்த்தையிலே அவளுக்கு கோபம் தான் வரும். இருந்தாலும் ஒரு நாள் அவன் ”good morning ” மெயில் அனுப்பாவிட்டால் அன்று முழுவதும் என்னவோ போல் இருக்கும். சிரித்தபடியே வழக்கம் போல் அவனைத் திட்டி அனுப்பியபடி அவனுக்கு பதில் அனுப்பியவள் அவள் ரன் செய்த ப்ரொகிராம் எந்த ஒரு ரிசல்டயும் காண்பிக்காமல் இருந்ததை பார்த்தவள் யோசித்தபடியே அப்ளிகேசனைப் பார்த்த போது நேற்று விட்ட அதே எரரைக் காட்டியது.

கொஞ்சம் குழப்பமானவள் நேற்று கரெக்ட் பண்ணி விட்டேன் என்று பாலா சொன்னாரே என்றபடி மண்டையைக் கசக்கியவளுக்கு பாலாவை சற்றும் சந்தேகப் பட தோண்ற வில்லை. ஒருவேளை save பண்ண மறந்து விட்டாரோ என்று யோசித்தவளுக்கு சாப்ட்வேர் ஃபீல்டில் இருந்து கொண்டு ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி பெர்சென் save செய்ய மறப்பாரா என்றபடி அப்புறம் ஏன் முடித்து விட்டேன் என்று கால் பண்ணினார் என்று குழம்பியபடி மீண்டும் ஒருமுறை செக் பண்ணியவளுக்கு இப்போது தான் செய்திருந்த தவறு தெரிந்திருந்தது. அதைச் சரி செய்து ரன் பண்ணியவளை அவளது கம்ப்யூட்டர் ஏமாற்ற வில்லை.

வழக்கம் போல் அன்றைய பணிகளை ஆரம்பித்தாள், கவி அன்று லீவ் என்பதால், அரட்டைகளை தள்ளிவிட்டு வேலையில் கவனத்தை பதித்தவள் பாலா அலுவலகத்தினுள் நுழைந்த போதுதான் சற்று கவனத்தை திசைமாற்றினாள். நேற்று சரி செய்த முறையினை அவன் சொல்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவளது பக்கம் கூட திரும்பவில்லை அவன். உதடுகளைப் பிதுக்கியபடி சற்று யோசித்தவள், சரி செய்திருந்தால் தானே விளக்கம் எதிர்பார்க்க முடியும். என்று தன்னைத் தானே தேற்றியவளுக்கு அவன் மேல் கோபம்தான் மிஞ்சியது. பிறகு ஏன் நைட் அவ்வாறு கால் செய்தான். இவனிடம் கேட்டோமா. இல்லை இவனிடம் முடித்து தரச் சொல்லிக் கேட்டோமா….. இல்லை முடித்தவுடன் கால் பண்ணு என்று சொன்னோமா….. என்று மனதிற்குள் புலம்பியவாறே மீண்டும் தன் வேலையில் தொடர்ந்தாள்.

தன் அறைக்குள் நுழைந்த பாலா தொப்பென்று தனது சீட்டில் அமர்ந்தான்அவன் எண்ணமெல்லம் காலையில் நடந்த தன் தந்தையின் வாக்குவாத்திலும்மதுவின் நினைவிலும் சுற்றியது தலையினை கைகளால் பிடித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் தன் நண்பன் ரகுராமிற்கு கால் செய்தான். ரகுராம் பாலாவின் பள்ளித் தோழன். தனியாக பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருந்தான். அவனிடம் தான் பாலா ரகசியமாக மதுவைத் தேடும் பொறுப்பினையும் கொடுத்திருந்தான்.

ஹ‌லோ ரகு நான் பாலா பேசுகிறேன்டா , ”

டேய் பாலா, என்னடா இப்போதான் கால் பண்ற, என்ன டா ரொம்ப பிசியா, ” என்று நார்மலாக ஆரம்பித்தவனிடம்

சுள்ளென்று விழுந்தான் பாலா.

நீ பேசாம உன் டிடக்டிவ் ஏஜென்சிய மூடிட்டு வேற ஏதாவது தெரிந்த வேலை இருக்கானு பார்த்து அதை ஆரம்பி. உன்னை நம்பி உன்கிட்ட வருகின்ற கிளைன்ட்லாம் பாவம். என்றவாறு ஆரம்பித்தவனை

பாலா கூல் கூல் உன் கவலை எனக்கு புரிகிறது. மதுவை கண்டுபிடிக்க நானும் ட்ரை பண்ணீட்டுதான் இருக்கேன். நீ சொன்ன விவரங்கள் படி எனக்கு முதலில் எனக்கு மது அப்பா மேல தான் சந்தேகமே ஆனால் அவர் உன்னிடமே மதுவைப் பற்றி விசாரித்தது , அதன் பிறகு போலீசில் கம்ப்ளெயின்ட் செய்த போது அவர் மேல் இருந்த சந்தேகம் சற்று விலகியது. அதுமட்டும் இல்லாமல் அவரையும், அவரது குடும்பத்தினரையும் ரகசியமாய் வேவு பார்த்ததில் மது வேறு யாரிடமோ மாட்டியிருக்கிறாள். பணத்திற்காக என்றால் கண்டிப்பாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஸோ அந்த வகையிலும் இல்லை.எந்த மோட்டிவேசனில் அவள் கடத்தப் பட்டிருக்கிறாள் என்றே புரியவில்லை.அதுதான் இப்போதைய குழப்பம் என்றவாறு நிறுத்தியவனிடம்

ரகு மதுவோட உ..உயிருக்கு ஒண்றும் என்று முடிக்காமல் திணறியவனிடம்

இல்ல பாலா மது உயிரோடத்தான் இருக்கா , ஏனென்றால் கொலை செய்யப்பட்டிருந்தால் அவளது உடல் எப்படியாவது காவல் துறைக்கு கிடைத்திருக்கும்.என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். குற்றவாளி ஏதாவது ஒரு அடையாளத்தினை விட்டுச் சென்றிருப்பான்.

என்றவனிடம் பாலா,

இல்லடா நீ சொல்வது கொலை செய்யப்பட்டவர்களின் உடம்பு கிடைத்தால் , உடம்பே கிடைக்காதபடி செய்திருந்தால், அப்போ எப்படி சொல்வாய்என்று கேட்க பிடிக்காவிட்டாலும் எதிர்கேள்வி கேட்டான்

இருக்கலாம் பாலா ஆனால் அப்படி நடந்திருந்தால் கூட ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டிவிடுவான். இதற்கு எடுத்துக்காட்டாய் எத்தனயோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன். அதனால்தான் சொல்கிறேன்.மதுவின் உயிரைப் பற்றி கவலைப் படாதே. நன்றாய் யோசித்து சொல்லு மதுவுக்கும், உனக்கும் விரோதி என்று யாரும் இருந்தார்களா , இல்லை அவளை யாராவது விரும்பி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்களா, அந்த மாதிரி …… என்று நிறுத்தியவன் கொஞ்சம் யோசித்துப் பார் பாலா.

இல்லடா எனக்கு தெரிந்து அவளுக்கு விரோதி யாரும் இல்லை. அதே போல் நானும் மதுவும் ஒருவருக்கொருவருவர் விரும்புகிறோம் என்பதால் வேற மாதிரியான தொந்தரவுகளும் இல்லை என்று பாலா கூறியதும்

சிரித்த ரகு, அப்படியா பாலா உன் நண்பன் ஆதியும் அந்த பொண்ணு கீர்த்தியும் தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். கீர்த்திய பிரதாப் டார்ச்சர் பண்ணலயா. அதனாதானே ஆதியவே அவன் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனான். அப்புறம் எப்படி சொல்கிறாய் வேற மாதிரியான தொந்தரவுகள் இல்லையென்று ,” என்று ரகு கேட்டுக் கொண்டிருக்கும் போதே

பாலாவுக்கு ஒரு மின்னல் அடித்தது

ரகு மது எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மொபைல் வாங்கி பேசினாள் அல்லவா அந்த பெண்ணை கண்டுபிடித்தால் நமக்கு ஏதாவது ஒரு க்ளு கிடைக்கும் அல்லவா. ஆனால் நாம் அந்த நம்பரை வைத்து தேடிய போது ஒழுங்கான தகவல் கிடைக்க வில்லை.அதோடு விட்டுவிட்டோம்மறுபடியும் ட்ரை பண்ணலாமா? ஏதாவது விசயம் கிடைக்கும் அல்லவா

ம்.ஒகே பார்க்கலாம். சரி இன்னைக்கு ஏன் சார் இவ்ளோ ஹாட், வீட்டில் கல்யாண பேச்சை திரும்ப ஆரம்பித்து விட்டார்களா என்றவனுக்கு எதிர் முனையில் இருந்த மவுனமே விசயத்தை விளக்கியது.

சாரிடா , நானும் எப்படி எப்படியோ ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன் , என்றவன் பிரதாப் இங்கதான் இருக்கான் போல் , நீ போலிஸில் பிடித்துக் கொடுத்தும் என்ன பிரயோஜனம் சட்டத்தோட ஓட்டை வழியா வெளியே வந்துட்டான். இப்போ சென்னைலயே நடமாடுகிறான். கீர்த்தியிடம் சொல்லி வை என்றபடி போனை வைக்கப் போனவனிடம்

சரி நான் கீர்த்தியிடம் சொல்கிறேன் என்றபடி நீயும் மதுவை கண்டுபிடிக்க பாரு. முடிந்தால் அந்த பெண்ணையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய். எனக்காக கொஞ்சம் சீக்கிரம் ட்ரை பண்ணுடா என்று போனை வைத்தான்

அவனிடம் பேசி அடுத்த சில நிமிடங்கள் யோசித்தவன் கீர்த்திகாவிற்கு கால் செய்வோமா என்று கால் செய்யப் போனான் அவளுடன் பேசி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது . விதி ஆதி-கீர்த்திகா , பாலா-மது ஜோடியுடன் விளையாடிவிட்டது. கீர்த்திகா ஆதியும் சேர்ந்து வாழ முடியாமல் போய் விட்டது. பாலா மதுவும் சேர முடியாமல் விதி விளையடுகிறது என்று பெருமூச்சு விட்டவனின் சிந்தையில் கீர்த்திகாவின் விதவைக் கோலம் கண் முன் வந்து நின்றது.மதுவும் பாலாவும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இந்த கோலத்தில்தான் இருப்பேன் என்று பிடிவாதமாய் இருக்கிறாள்.

விதியின் கொடுரத்தினை நினைத்தபடி கீர்த்திகாவிற்கு கால் செய்தவன் அவளது அழைப்பு கிடைக்க வில்லை. அதன் பிறகு அவளது வீட்டிற்கு கால் செய்து பிரதாப்பை பற்றி விபரத்தினை சொல்லி அவளிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லச் சொன்னவன் அவள் வீட்டில் இல்லை என்பதால் வந்தவுடன் தனக்கு கால் செய்யும் படி கூறிவிட்டு தன் அலுவலக‌ப் பணியினைத் தொடர்ந்தான் அந்த அலுவலகத்தின் MD யாக

கிட்டத்தட்ட 5 மணி அளவில் கீர்த்திக்கு அவளது பழைய ப்ராஜெக்ட் லீடர் கால் செய்து அவரது மனைவிக்கு டெலிவரி என்பதால் தான் கிளம்ப வேண்டும். அந்த ப்ராஜெக்டில் மாடிஃபிகேசன் வந்திருப்பதால் இன்று ஒருநாள் மட்டும் இருந்து முடித்துக் கொடுக்கும் படி கேட்டதால் , கார்த்தியிடம் தன் வேலையினை மாற்றிக் கொடுத்துவிட்டு , கேசவன் சொன்ன வேலையினை ஆரம்பித்து இருந்தாள். கேசவன் கிளம்பும் போது பாலா சாரிடம் சொல்லி விட்டேன். இருந்தாலும் அவளையும் ஒரு முறை சொல்லச் சொன்னதால் பாலாவின் அறைக்குச் சென்றாள் கீர்த்தி.

கேசவன் சொன்னதை சொன்னவள் அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாய் கூறினாள்.

நன்றி கீர்த்தி. அவருடைய நிலமையினை புரிந்து உதவி செய்ததற்கு. கொஞ்சம் முக்கியம். இன்னைக்கே பண்ண வேண்டும்.என்றபடி

முடிச்சுடுவீங்கதானே.இல்லை நானே பார்த்துக் கொள்ளவா

என்றபோதுதான் நேற்று ஞாபகம் வந்தது.

சாரி கீர்த்தி

என்றவனிடம்

அவன் சாரி எதற்கு கேட்கிறான் என்று தெரிந்த போதும்

எதற்கு சார், என்று யோசித்தபடி பாவனை செய்தவள்

ஒ சாரி சார், நான்தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்ல மறந்துவிட்டேன். நீங்க நேற்று கரெக்ட் செய்து கொடுத்தற்கு என்று கரெக்ட் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தவள்

மீண்டும் ஒரு தாங்க்ஸ் கூறி அவனைப் பார்த்தாள்.

அவளது குத்தலை இதழில் ஒரு புன்னகையுடன் ரசித்தவன் ….

சாரி கீர்த்தி. இன்னைக்கு நீங்களே கம்ப்ளீட் பண்ணீட்டிங்கதானே. எனக்கு தெரியும்…..அதனால்தான்…..நேற்று உங்களை கிளப்ப அப்படி சொன்னேன். என்றவனைப் பார்த்து

இன்று கூட லேட் ஆகும் போல சார். இன்னைக்கு என்ன செய்யப் போகிறீர்கள் சார் என்ற வார்த்தைகள் அவளையும் அறியாமல் வெளியெ வந்து விட்டது.

சட்டென்று அவன் தனது எம்டி என்று யோசித்தவள் உடனே

சாரி சார் ஏதோ அவசரத்தில் தெரியாமல்என்று இழுத்தவளிடம்

அளவாய் புன்னகைத்தவன்

நேற்று ஏதோ உங்க நல்லதுக்கு சொன்னேன்.அது எனக்கே திரும்பி வருதா. இல்ல கீர்த்தி நேற்று ஓன்றும் அவசரமில்லை. ஆனால் இன்றோ முடித்தாக வேண்டும். ஆனால் அதற்காக நீங்கதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களால் முடிந்தவரை பாருங்கள். உங்க பழைய டீமில் வேறு ஒருவரை வைத்து முடித்துக் கொள்கிறேன் என்றான் பாலா

நானே முடித்து விடுவேன் சார்.ஏதாவது ஹெல்ப் வேணும் என்றாலும் கால் பண்ண சொன்னார் சார். ஸோ ஒரு ப்ராப்ளாமும் இல்லைஎன்று சிரித்தபடி விடைபெற்றவள்

தனது சீட்டில் அமர்ந்தவுடன் நேற்று போட வில்லை என்றால் எனக்கு எதற்கு கால் பண்ண வேண்டும். பெரிய ஸ்மார்டா காட்டவா , இன்னைக்கும் நேற்று போல் சொல்லட்டும் அதற்கு பிறகு இருக்கு என்று தனக்குள்ளாகவே திட்டியவள், தன் தலையில் தட்டியபடி

ஏன் கீர்த்தி நீ இப்படி புலம்புகிறாய், உனக்கு என்ன தலையெழுத்தா அவனுக்கே அவன் கம்பெனி மேல அவனுக்கே அக்கறை இல்லை போல. என்று உதட்டைச் சுழித்தவள் இது கேசவன் சாருக்காக‌ என்று சமாதானம் செய்த படி வேலையை தொடர்ந்தாள்.

கீர்த்தி பேசி விட்டுப் போன பிறகு காலையில் இருந்த கடினத் தன்மை மறைய …. வேலையில் தன் கவனத்தை பதித்தான்

கொஞ்சம் வேலைப் பளு அதிகம் இருந்த படியால் செல் போனை சைலென்ட் மோடில் வைத்திருந்தான் பாலா. அன்று காலையில் தான் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்திருந்ததை சுத்தமாக மறந்து போனபடி அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான் பாலா.

அருந்ததியும் , ஜகனாதனும் எத்தனை முறை கால் பண்ணியும் அட்டென்ட் பண்ணாததால் அப்செட் ஆகியிருந்தனர். போன வேகம் கொஞ்சம் பயமாய் இருந்தாலும் அவன் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருவருக்கும். இதய நோயாளியான ஜெகனாதனுக்கு உண்மையிலயே தன்னால்தான் வர வில்லையோ……….. என்ற குற்ற உணர்வு அவரையுமறியாமல் மெல்ல மெல்ல அவரை அழுத்தியது. அதை மனைவியிடம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செல்போனில் அழைத்துக் கொண்டே இருந்தார்.

கிட்டத்தட்ட 25 அழைப்புகளுக்கு பின் தான் பாலாவை தொடர்பு கொள்ள முடிந்தது.

பாலா எங்கே இருக்க . உடனே வீட்டிக்கு வா. என்ன இருந்தாலும் இங்க பேசிக்கலாம். வெளியே போய் தங்குகிற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதே , நான் காலையில் பேசின விதம் சரி இல்லைதான் அதற்காக என்னை மன்னித்துக் கொள். இப்போ கிளம்பி வாடா என்று படபட‌ப்பாய் போது அவரது குரல் தளர்ந்திருந்தது.

அவரிடம் இருந்து போனை வாங்கிய அருந்ததி

அப்பா சொன்னதை எல்லாம் மறந்து விடு பாலா. நான் அம்மா சொல்கிறேன் இல்ல , உனக்கு பிடிக்காதது எதும் செய்ய விட மாட்டேன்பா. நீ எங்கே இருக்க இப்போ என்றவளிடம்

கீர்த்தியின் அருகில் இருந்த காரணத்தினால்

அம்மா நான் இப்போ நம்ம ஆபிஸில்தான் இருக்கிறேன், அப்புறம் பேசுகிறேன்.முக்கியாமான வொர்க் முடிக்க வேண்டும். என்ற படி கீர்த்தியின் முன் தன் நிலை தெரியக் கூடாது என்ற வேகத்தில் அருந்ததியின் பதிலை எதிர்பாராமல் போனை கட் செய்தான்.

ஸ்பீக்கரில் இருந்ததால் அவனது கூறியதை எல்லாம் கேட்ட ஜெகனாதன்

அவன் இன்னமும் என் மேல கோபமாயிருக்கான் அதான் உன்கிட்ட கூட ஒழுங்கா பேச வில்லை. நான் இவ்ளோ சொல்லியும் வருகிறேன் என்று சொன்னானா. அப்புறம் பேசுகிறானாம். அவன் சரிப் பட மாட்டான் , வா நாம அவனைப் போய் கூட்டிட்டு வரலாம்

என்றபடி கிளம்பியவரை தடுத்த அருந்ததி. அதெல்லாம் வேண்டாம் , இப்பொழுதுதான் மாத்திரை போட்டிருக்கிறீர்கள் என்றவளை மறுத்து வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றார் ஜெகனாத்

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon