என் உயிரே !!! என் உறவே !!! 7

அத்தியாயம் 7

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயாராகி தனது உடைகளை சரி செய்த படி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவனுக்கு, இது அவனது முகமா என்று யோசித்தவன் பின் வழக்கமான தனது இறுக்கமான முக பாவனையினை மாற்றி முகத்தில் புன்னகையினை மலர விட்டான்.

வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் துள்ளளாகமுன்நெற்றியில் தலைக் கேசம் ஆட இறங்கிய மகனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி சாப்பாட்டு மேசையின் மேல் பதார்த்தங்களை அடுக்கியபடி இருந்த அருந்ததியின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.

வாப்பா பாலா நீ இந்த மாதிரி இருப்பது மனதுக்கு நிறைவா இருக்கிறது. நீ இருண்ட முகத்துடன் இருப்பதை பார்க்க சகிக்க வில்லை ,முன்ன மாதிரி இல்லை என்றாலும் , ஓரளவுக்கு நீ முகம் மலர்ந்து இருப்பதை பார்க்கும்போது பெத்த மனதுக்கும் ஒரு ஆறுதலா இருக்கிறதுஎன்றபடி அவனது தட்டில் பூரியினை வைத்தாள்.

ஏம்மா அப்போ இவ்வளவு நாளும் கர்ணகொடுரமாக இருந்ததா என் முகம்? சொல்லவே இல்லயே நீங்கள்என்று அப்பாவி போல் அலுத்தவனை தலையில் செல்லமாகத் தட்டியவள்

அப்படி இல்லை பாலா நாம எவ்வளவுதான் அழகாயிருந்தாலும் முகத்துக்குனு ஒரு அருள் இருக்க வேண்டும்.அது இல்லையென்றால் அழகாயிருந்தும் பிரெயோஜனமில்லை. களையிழந்து இருக்கும் முகம். அதைச் சொன்னேன். அப்பா உன்னிடம் ஒரு ஒரு விசயத்தினை விளக்குவதற்குள்என்று இழுத்தவளிடம்

ம்ம்ம் என்ன மர மண்டைனு சொல்றீங்க. இன்னும் என்னென்ன என்ன பத்தி நினைத்து வைத்திருக்கிறீர்களோ ,அத்தனையயும் சொல்லிடுங்க உங்க திருவாய் மலர்ந்தருளஎன்றவனிடம்

உன்னைப் பற்றி சொல்ல இந்த டைம் பத்தாது .லேட் ஆகிறது. ஆஃபிஸுக்கு கிளம்ப வேண்டும் . உனக்கு free time கிடைக்கும் போது உன்னைப் பற்றி நல்ல விசயங்களையெல்லாம் சொல்லுகிறேன். இப்போ சீக்கிரம் கிளம்புகிற வழியினைப் பார்என்று அந்த நல்ல என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தாள்.

அருந்ததியின் வார்த்தைகளில் இருந்த ஆஃபிஸ் என்ற வார்த்தையில் கீர்த்தியின் முகமும், அவளை ஏமாற்றி வந்ததும் நினைவில் வர அவனையுமறியாமல் இதழின் ஓரத்தில் புன்னகை தவழ்ந்தது. அதைக் கண்ட அருந்ததி

என்னடா ஆஃபிஸ் என்றதுமே பிரகாசமாகுது, ஏதும் புது ப்ராஜெக்ட் அசைன் ஆகி இருக்கிறதாஎன்று மடக்கியவளை

இல்லையில்லைஎன்று வாய்க்குள்ளாக முணங்கியபடி , சட்டென்று முகத்தை மாற்றி சாப்பிட ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த அருந்ததிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. பேசாமல் இருந்திருக்கலாம். மறுபடியும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டானே என்று நினைக்கும் போதே ,

ஜெகநாதன் முகத்தில் கோபம் தாண்டவம் ஆட

பாலாஎன்று அழைத்தபடி வந்தார். அவருக்கு இருந்த கோபத்தில் மகன் சாப்பிடுவதைக் கூட அவர் கவனிக்க வில்லை.

அவரது அழைப்பில் கோபம் கனன்றதை உணர்ந்தவன் மெதுவாக நிமிர்ந்து புருவத்தில் முடிச்சிட

என்னப்பா , என்ன விசயம் இவ்ளோ கோபமா இருக்கீங்க என் மேலஎன்று வினவியவனிடம்

ஆமா நீ செய்த காரியத்திற்கு உன்னை உச்சி முகர்ந்து கொஞ்ச சொல்கிறாயாஎன்றவாறு நிறுத்தினார்

அப்படி என்ன நான் பண்ணி விட்டேன். நீங்க என் மேல் ஏற்கனெவே என் திருமண விசயத்தில் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரியும் . ஆனால் இன்னைக்கு கோபத்திற்கு அது காரணம் இல்லையென்று தெரியும். என்னவென்று சொன்னால்தானே தெரியும்

என்று முடிந்தவரை அமைதியாகவே பதில் கூறியபடி தந்தையைப் பார்த்தான் பாலா.

அப்போதுதான் அவனுக்கும் சௌந்தரியா ஞாபகம் வந்தது.ஆனாலும் அன்று நடந்ததில் அவனது தவறு என்று ஒன்றும் இல்லை. பின் வேறு என்னவாக இருக்கும் என்று வேறு ஒன்றும் புலப்படவில்லை

என்ன காரணம் என்று வேறு சொல்ல வேண்டுமா உனக்கு. போன வாரம் சௌந்தர்யாவினைப் பார்த்தாயா? அதை ஏன் என்னிடம் சொல்ல வில்லை. அது மட்டுமில்லாமல் அவளை மிரட்ட வேறு செய்திருக்கிறாய். உன்னை இந்த வேலையெல்லாம் யார் செய்ய சொன்னார்கள்.நாதன் கால் செய்து மிகவும் வருத்தப் பட்டார்.,,,,,

,,,,,,சௌந்தர்யா யாரிடமும் பேச மாட்டேன்கிறாளாம். சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறாளாம்.உனக்கு இக்ஷ்டம் இல்லையென்றால் என்னிடம் சொல்ல வேண்டும் அதை விட்டு விட்டு பாவம் அந்த சின்னப் பொண்ணை மிரட்டியிருக்கிறாய். அவள் பயந்து போய் விட்டிருக்கிறாள்.உனக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா . இல்லை அவங்களுக்கு உன்னை விட்டா வேறு யாரும் கிடையாதுன்னு நினைப்பா. …..

….ஒரு விசயம் மட்டும் தெரிஞ்சுக்கோ இந்த திருமணத்திற்கு அவர் சம்மதித்தற்கு முக்கிய காரணம் எங்கள் நட்புதான்

என்று பாலாவின் தந்தை உறுமியபோது அவனுக்கு சிரிப்பே வந்து விட்டது.சிரித்ததில் புரை அவன் தலைக்கேறி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டே அன்று சௌந்தர்யாவுடனான சந்திப்பை நினைத்தவனுக்கு. தன் தந்தை பேசிய நட்புக் காரணம் மேலும் சிரிப்பை வரவழைத்தது. மெதுவாக சிரிப்பை அடக்கியபடியே

நான்தான் பார்த்தேனே உங்க நட்பின் பெருமையைஎன்று எள்ளி நகைத்தவன் ,

சிரிப்பை அடக்கிவிட்டு அவனும் தீவிரமாக பேசினான்

அப்பா உங்க நட்பின் பெருமையினை , இல்லை உங்க நட்பின் வலிமையினை என் திருமண விசயத்தில் காட்ட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டதாய் உங்கள் ஆருயிர் நண்பரிடம் சொல்லி விடுங்கள்என்று மேற்கொண்டு எதுவும் பேச்சை வளர்க்காமல் சாப்பிட ஆரம்பித்தான்

ஆனாலும் அவன் தந்தை விடுவதாயில்லை

சௌந்தர்யாதான் என் மருமகள். உன்னைப் பற்றி தெரிந்தும் உன்னை திருமணம் பண்ணிக் கொள்ள வந்தாளே அது போதும் எனக்கு. உன்னோட சம்மதம் எனக்கு தேவையில்லை

என்றவர் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல்

உண்மையிலயே எனக்கு பிறந்தவன் என்றால் என் பேச்சை கேட்பாய் .

அதற்கு மேல் உன் இக்ஷ்டம்என்று தான் என்ன சொல்லியிருக்கிறோம் என்று கூட அறியாமல் அதற்கு மேல் அங்கே நிற்கவும் பிடிக்காமல் அவரது அறையினை நோக்கிச் சென்றார்.

அவரைப் பொருத்தவரை தன் மகனின் வாழ்க்கையினை திசை மாற்றியாக வேண்டும் . உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாத ஒரு பெண்ணுக்காக தன் வாழ்க்கையினையும் வீணாக்கிக் கொண்டிருக்கும் அவனது முட்டாள் தனத்தினை நிறுத்த வேண்டும். அவனுக்கு எப்படியாவது திருமணம் செய்து விட்டால் போதும் அதன் பிறகு கட்டாயம் அவன் மாறித்தான் ஆக வேண்டும்.

முதலில் கடினமாகத்தான் இருக்கும் . அதன் பிறகு நாளடைவில் சரி ஆகிவிடும். நோய் தீர வேண்டுமென்றால் கசப்பு என்றாலும் மருந்து சாப்பிட்டுதானே ஆக வேண்டும். இப்படித்தான் அவர் யோசித்து தன் மகனிடம் கடினமாக நடந்தது.அதனால்தானோ என்னவோ அவர் பேச்சு எல்லை மீறியதைக் கூடஅவர் உணர முடியவில்லை.

அப்பா

என்ற மகனின் வேகமான குரலில் திரும்பிப் பார்த்தவர் அப்போதுதான் அருந்ததியின் முகத்தில் கண் கலங்கியிருப்பதயும் உணர்ந்தார். காரணத்தை யோசித்த போது அவருக்கும் விளங்கியது. பாலாவுக்கோ தன் தாயின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

எனக்கு நல்ல பெயர் உன் அப்பாவிடமிருந்தே வாங்கி கொடுத்து விட்டாய்என்று சொல்லாமல் சொன்னது அவளது முகம்.

காலையில் அவன் இறங்கி வந்த போது இருந்த மலர்ச்சி , உற்சாகம் எல்லாம் அவன் முகம் துடைத்து எடுத்து விட்டு கல்லாய் இறுகி இருந்தது.

இதற்கு மேல் மௌனம் சாதிப்பது நல்லதல்ல . ஏனென்றால் சௌந்தர்யாவினை சந்தித்தை சொல்லி அவர்களது உண்மையான முகத்தினை அப்பாவிற்கு சொல்ல வேண்டும் என்றுதான் அவனும் முதலில் நினைத்தான்.

ஆனால் அதன் பிறகு யோசித்தவன் அதனால் தன் தந்தையின் மனம் …… இப்படி ஏமாற்றி விட்டார்களே என்று நோகும். ஏற்கனவே இவனால் நிம்மதி இழந்து தவிக்கும் அவருக்கு இதையும் சொன்னால் அவ்வளவுதான் சுருண்டு விடுவார். ஒரு தடவை இதய அடைப்பு வேறு வந்த …. அவரிடம் இதை சொல்லாமல் இருப்பதே சரி…. என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

மேலும் சௌந்தர்யாவின் மேல் தவறு இருப்பதாலும், இவன் முன் அவள் வேசம் கலைந்த காரணத்தினாலும் இனி ஒரு பிரச்சனையும் அவள் பண்ண மாட்டாள் என்றே அவனுக்கு தோன்றியது. ஆனால் இப்போது அவள் நீலிக் கண்ணீர் வடித்து தன் தந்தையிடம் முறையிட்டிருப்பதை அறிந்தவுடன் அவனுக்கும் வேறு எதுவும் தோன்ற வில்லை. இப்போது சொல்வதே சரி என்றே அவனுக்கு தோன்றியது.

அப்பா அந்த சௌந்தர்யாவும் அவள் அப்பாவும் நீங்க நினைப்பது போல் இல்லை. நம் பணத்துக்காத்தான் அவ என்னை திருமணம் செய்ய சம்மதித்ததே

என்று ஆரம்பித்தவனை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் இடையிலேயே நிறுத்தி

சௌந்தர்யா சொன்னாள் அப்போ நம்ப வில்லை. ஆனால் இப்போ தெரிகிறதுஎன்றவரை புரியாமல் பார்த்தான் பாலா.

அவனைப் பார்த்தபடி

இவ்வளவு சொல்லியும் அவள் உன் பேச்சை மறுத்ததால் உன் பணத்துக்காகத்தான் சம்மதித்தாக என்னிடம் நீ சொல்லிவிடுவேன் என்று அவளை மிரட்டியது உண்மைதானென்று இப்போது புரிகிறதுஎன்று நிறுத்தினார்.

இப்போது பாலாவுக்கு எளிதில் எல்லாம் புரிந்தது.அவன் நினைத்தது போல அந்த சௌந்தர்யா சாதரணமானவள் அல்ல‌ …, என்னவாய் திருப்பி விட்டு விட்டாள். இனி தன் தந்தையிடமும் பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவன்

உங்க மகன் நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள் ஆனால் யாரோ ஒரு ஏமாற்றுக்காரி அவள் சொல்வதை நம்புவீர்கள் .அப்படித்தானேஎன்றான் ஒரு மாதிரியான குரலில்

முதலில் நான் சொல்வதைக் கேள்.திருமணத்தைப் பற்றி உன் முடிவு என்ன. அதைச் சொல் அதன் பிறகு உன்னை நம்புவதை பற்றி முடிவு செய்யலாம்

என்றார் அவரும் எரிச்சலான் குரலில்.

இந்த விசயத்தில் உங்கள் பேச்சைக் கேட்காவிட்டால்

என்பதொடு மகன் நிறுத்தினான்.

அவர்களின் பேச்சின் தீவிரத்தை உணர்ந்த அருந்ததி யாருக்கு சமாதானம் செய்வது என்று தெரியாமல்

நீ சாப்பிட்டு முதலில் ஆஃபிஸ் கிளம்பு. உங்களுக்கு எப்போ என்ன சொல்வது என்றே தெரியாது.அவன் சாப்பிடும்பொதே

என்றவளை ஜெகநாதன் முறைத்த பார்வையில் அடங்கினாள்

என்னடா நீ கேட்காமல் போய்டுவியா நான் சொல்வதை என்றபடி , கேட்காவிட்டால்னு அதுக்கு பதில் வேறு கேட்கிறாயா

அதிகாரத் தோரணையில் அவர் குரல் அந்த அறை முழுவதும் மோதி திரும்பி வந்தது.

அவரது எந்த குரலுக்கும் சிறிதும் அஞ்சாமல் பிசிறில்லாமலும், அலட்டல் இல்லாமலும் பாலாவின் பேச்சு இருந்தது

சாப்பிடுபவனை இடையில் நிறுத்தி என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு பேசியாகி விட்டது.இதற்கு மேல் என்ன , நானும் தெளிவாகவே சொல்கிறேன். நான் நீங்க நினைப்பது போல் வாழ வேண்டுமென்றால் எனக்கு என் மது வேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் இருப்பேன். என்னை மாற்ற முயற்சித்தால் அது உங்களுக்கு தோல்விதான். அதனால் ……”

என்று பாலா முற்றுப் புள்ளி கூட வைக்க வில்லை. அதற்கு முன்னதாகவே

என் பேச்சினை கேட்காதவர்கள் என் வீட்டிலும் இருக்கத் தேவை இல்லை. இங்க யாரும் யாரையும் பணத் தேவைக்கு சார்ந்திருக்க வில்லை. பாசத்தில் சார்ந்திருந்தோம். அதுவே இல்லை எனும் போது அவரவர் வழியினை பார்த்துக் கொள்ளலாம். அங்கே யாரும் கேள்வி கேட்க வர போவதில்லை

எனும் போதெ தந்தையின் சுடு சொற்களை தாங்காதவன் அப்படியே தட்டில் கைகளை கழுவி விட்டு வேகவேகமாக மாடி ஏறி ஏதோ பேருக்கு துணிகளை எடுத்துக் கொண்டு தாயின் குரலையும் பொருட்படுத்தாமல் காரினுள் ஏறி சீற்றத்துடன் காரினை கிளப்பினான் பாலா.

பாலா கோபத்துடன் வீட்டை விட்டுக் கிளம்பியதைப் பார்த்த அருந்ததிக்கும் இப்போது கோபம் வந்தது.

உங்களுக்கு என்ன ஆச்சு இன்னைக்கு , அவன் சாப்பிட்டு கூட முடிக்க வில்லை. அதற்குள் அப்படி என்ன அவசரம். நம்ம பையனை விட அந்த பொண்ணு வார்த்தை முக்கியமா போச்சா உங்களுக்கு.

அவ வருவதற்கு முன்னாலே இப்படி என்றால் …….. நினைக்கும் போதே பயங்கரமாயிருக்கிறது. எனக்கு என் பையன் தான் முக்கியம். அவன் வீட்டுக்கு மட்டும் வராமல் இருக்கட்டும்.அதன் பிறகு இருக்கு உங்களுக்கு

என்று பாலாவை தடுக்க முடியாத ஆற்றாமையிலும் கொட்டித் தீர்த்தாள் அருந்ததி.

இதுவரை கோபத்தில் சிவந்திருந்த ஜெகனாதனின் கண்களில் மெல்ல நீர் துளிர்த்தது.

இல்லம்மா நான் அவனை நம்பாமல் இல்லை. எனக்கு நம்ம பையனை விட வேறு யாரும் முக்கியமில்லை. நான் இந்த பொண்ணுதான் மருமகள் என்று சொன்னால், சௌந்தர்யாவினை பிடிக்காமல் அவனாகவே வேறு ஏதாவது நல்ல முடிவு எடுப்பான். அதனால்தான் அந்த பொண்ணை நம்புவது போல் பேசினேன். கண்டிப்பாகப் பாரு நம்ம குடும்பத்துக்கு நல்ல வழியை காண்பிப்பான் அந்த இறைவன்

என்றவரைப் பொய்யாக முறைத்துப் பார்த்த அருந்ததி

உங்க நடிப்பெல்லாம் இருக்கட்டும் , இன்னைக்கு என் பையன் மட்டும் வராமல் இருக்கட்டும். ”

என்று மிரட்டியபடி உள்ளே போனவளிடம்

வருவான் வருவான் .நீயும் அவனுக்கு பொண்ணு தேடுகிற வழியினைப் பார். என்கிட்ட மோதி உன்கிட்ட தான் வந்து நிப்பான்,அண்ணன் பொண்ணை நினைத்து நீயும் கண்ணைக் கசக்கிட்டு எனக்கு மதுதான் மருமகளா வேண்டும் என்று நிற்காதே . அடிக்க அடிக்க அம்மியும் நரும் பாலாவும் மெல்ல மெல்ல நம்ம வழிக்கு வந்துருவான். அப்படி அவன் வரும்போது பொண்ணை தேடிட்டு இருக்க கூடாதுல்ல. அதனால தான் சொன்னேன்

என்று கேலி செய்தவரைப் பார்த்து ஒப்புக்காக சிரித்து வைத்தாள் அருந்ததி.

சொந்த அண்ணன் மகளை எடுக்க முடியாத விதியின் விளையாட்டு, மகனுடைய எதிர்கால வாழ்க்கைக்கான கேள்விக்குறி, கணவனின் உடல்நிலை என்று அவளைச் சுற்றிலும் கவலைகள் சூறாவளியாய் சுற்றிய போதும், அந்த சௌந்தர்யா இந்த வீட்டுக்கு வரப் போவதில்லை என்றவரையில் எங்கோ மனதின் மூலையில் ஒரு நிம்மதி.

ஏனோ அவளை அவளுக்கு பிடிக்க வில்லை.அந்த வகையில் ஒரு திருப்தி.மனதில் பல விதமான எண்ணப் போராட்டங்களுடன் சமயலறையினை நோக்கி நடந்தவள் இன்றே அவளது வருங்கால மருமகளை சந்திக்கும் சந்தர்ப்பம் நிகழப் போவதை அறிவாளோ??????

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon