என் உயிரே !!! என் உறவே 6

Updated: Aug 4, 2020

அத்தியாயம் 6:

வழக்கம் போல் அன்றைய வேலைகளின் ரிப்போர்ட்களை பார்த்துக் கொண்டிருந்த பாலா, இன்னும் கீர்த்தியிடம் இருந்து அன்றைய பணியின் ரிப்போர்ட் வராததைக் கவனித்தான்.

கீர்த்தி ஏன் இன்னும் அனுப்ப வில்லை. அனுப்பாமலேயே அவள் அலுவலகத்தினை விட்டு கிளம்பிச் சென்றிருக்க மாட்டாள். அப்படி என்றால் அவள் இன்னும் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டும்என்று தனக்குள்ளாக யோசித்த படி வெளியே வந்தான் பாலா.

அவன் எண்ணியபடியே அவள் மானிட்டரின் மேல் பார்வையினை தீவிரமாக ஓட விட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த படியே மணியைப் பார்த்தான். மணி எட்டு அடிக்க இன்னும் 5 நிமிடங்களே இருந்தது.

ஆனால் கீர்த்தியோ நேரம் போய்க் கொண்டிருப்பதும் தெரியாமல், அவள் முன்னே பாலா நின்று கொண்டிருப்பதையும் அறியாதவளாய் கணினியோடு ஐக்கியம் ஆகியிருந்தாள்.

மாலை 5 மணியிலிருந்து போரடிக் கொண்டிருக்கிறாள். இன்னும் அவளது ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான ஒரு முக்கியமான ப்ரொக்ராம் வொர்க் ஆக வில்லை. அது மட்டும் ஓகே ஆகி விட்டால் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.கீர்த்தியும் முயன்று கிட்டத்தட்ட முடித்திருந்தாள்.

ஆனால் ஒரு