top of page

என் உயிரே !!! என் உறவே ??? - 56

அத்தியாயம் 56:

கீர்த்தனா……..காரில் வரும் போது……..கெஞ்சினாள்………..மிஞ்சினாள்…………… கோபம் கூட பட்டாள்……….. பாலா வாயைத் திறக்கவே இல்லை……………. கோபமும் குறையவே இல்லை. அவனுடைய இந்தக் கோபம்……….. அவளுக்கு புதிது………….. எப்போதும்……….இவள் கோபமாய் இருப்பாள்……….அவன் கெஞ்சிக் கொண்டிருப்பான்…. இல்லை…… சில நேரம் அவனும் கோபப்படுவான் பதிலுக்கு…………. ஆனால் பேசாமல் இருந்ததே இல்லை………….. அவளைச் சீண்டியாவது தன் கோபத்தை தீர்த்துக் கொள்வான்………….

கல் போல் இறுகியிருந்த அவன் முகமே அவளுக்கு புதியதாய் இருந்தது…..பயமாய் வேறு இருந்தது……….. இருந்தாலும்………….. அவன் காதல்தான் அவளுக்கு தெரியுமே……….. அதனால் அவனிடம் பேசிக் கொண்டே வந்தாள்…………..பலன் பூச்சியம் தான்…………

காரில் FM கூட அவளைக் கைவிட்டு விட்டது……………

ஒருவழியாய் வீடு வந்து சேர

அங்கு கவி,சிந்து குடும்பம், விஸ்வம் மற்றும் மோகனா இவளுக்காக காத்திருந்தனர்……

கீர்த்தனாவைப் பார்த்ததும் சிந்து ஓடி வந்து கட்டிக் கொண்டாள்……..

“என்னாலதான் அக்கா…………உங்களுக்கு….” என்று தேம்பி அழ ஆரம்பித்தவளை…….கீர்த்திதான் சமாதானப்படுத்தினாள்

“நீ எப்போதுமே உன் அக்காக்கு நல்லது தாண்டா பண்ணுவ…….. இன்னைக்கு உன் கூட வரவில்லை என்றால்……… அக்கா மனசுல இருந்து அறுத்துட்டு இருந்த பல விசயங்களுக்கு பதில் கிடைக்காமல் போயிருக்கும்…. சரி அத விடு…………. ஃபங்க்‌ஷன் எப்படி போனது” என்று கேட்க

தேம்பியதை நிறுத்தாமல்

“நானும்….. கவி அக்காவும் பாதியிலேயே வந்து விட்டோம்……………….. பார்டிசிப்பேட் பண்ணவே இல்லை………” என்று சொல்ல………… அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் கீர்த்தி……..

அடுத்து விஸ்வம்-மோகனா…….. அவளைத் திட்டியும்….. அதன் பிறகு.. அவளைக் கொஞ்சியும் தங்கள் வீட்டிற்குச் செல்ல………..

பாலாவது பேசமல் அவளை விட்டு விட்டான்

கவி………….அவளைத் திட்டிய திட்டலில்……………கீர்த்தனா அழுதே விட்டாள்………

”ஏண்டி……… இப்டி திட்டற…. அந்த மனுசன் கூட பரவாயில்லடி…………….. பேசாம கொல்றாரு…….. நீ இப்டி பேசியே கொல்றியே”

”பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா…….. உனக்கு……… வர வர கொழுப்பு ஜாஸ்தியாத்தான் போச்சு..

பெரிய இவன்னு நினைப்பு…………… நான் உன் கூட தான இருந்தேன்……………. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் கூட வந்திருப்பேன்ல………..இப்போ நான் எப்படி பாலா சார் முகத்தில விழிக்கிறது” என்று குதிக்க

கீர்த்தனா விழித்தாள்………. இது எதற்காக என்றால்

“பாலாவுக்கு வேற இவளைப் பற்றி தெரிந்து விட்டதே…” என்று நினைக்கும் போதே………….

பாலா கீழே இறங்கி வந்திருந்தான்…… சாப்பிடுவதற்காக

ஹாலில்………. கவியும்… கீர்த்தனாவும் மட்டும் தான் இருந்தனர்………..

வந்தவன்

கவியிடம்……..

“நீ சாப்பிட்டாயா கவி…………” என்று கேட்க

இல்லை என்று அவள் தலையாட்ட

“சரி வா………..நாம சேர்ந்து சாப்பிடலாம்…………..” என்று கூறியபடி முன்னே செல்ல…………

கவி…கீர்த்தியைப் பார்க்க

“போன.. மவளே கொன்னுடுவேன்” என்ற தொணியில் கீர்த்தி கவியைப் பார்த்து நிற்க

கவி தயங்கி

“இல்ல சார்… நானும் கீர்த்தியும் பிறகு சாப்பிடுகிறோம்………. நீங்க முதலில் சாப்பிடுங்க” என்று கீர்த்தியின் கோபத்துக்கு பயந்து ஜகா வாங்க

”அவள்லாம் கொட்டிகிட்டா……….. நீ வா” என்றவன் போகாமல்

கவிக்காக நிற்க……..

கவி வேறு வழி இன்றி ………. கீர்த்தியைப் பார்க்க………… அவளிடம்

“போ போ………… எனக்கு சாப்பாடு போடற வேலை மிச்சம்…..“ என்றபடி மாடி ஏறி விட்டாள்………..

பாலா கவியைப் பற்றி கீர்த்தி சொல்லியது எல்லாவற்றையும்……. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டிருந்தான்……..

சாப்பிட்ட பின்

பாலா…..கவியிடம்

“இனிமேல்………ஹாஸ்டெல் எல்லாம் போக வேண்டாம்……….இங்கேயே தங்கிவிட்டு காலையில் போகலாம் “ என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தான்

கீர்த்தனா…… கணவனின் வருகையை…….. எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல்…… உள்ளே வந்தவனை வந்ததும் வாராததுமாய்க் கட்டிப் பிடித்து அவனை குளிர்விக்க நினைக்க…….. அவனோ அவளைத் தள்ளி விட்டு விட்டு படுக்கையில் ஏறி படுத்தும் விட்டான்...

பண்ணியது தவறு என்று தெரிந்து இறங்கிப் போனால் ………….ரொம்பத்தான் படுத்தறான் என்று எண்ணியபடி…………….அவனருகே சென்று அமர்ந்தவள்……..

“பாலா……….இப்போ என் கூட பேசல…………… நான் பழையபடி என் இடத்துக்கே போயிருவேன்” என்று அவள் சொல்லி…. இல்லையில்லை மிரட்டி முடிக்கவில்லை……… அவள் தலையணை கீழே பறந்தது……………. அவள் மிரட்டலுக்கு பதில் சொல்லும் விதமாய்………

இப்போது கீர்த்தனாவுக்கும் கோபம் வர………… கடுப்பில் கீழே படுத்தும் விட்டாள்………… அதுகூட சிறிது நேரம்தான்…….. கணவனின் கை அணைவில் படுத்து உறங்கியவளுக்கு பாழாய்ப் போன தூக்கம் கூட வராமல்……… அவள் கணவனோடு சேர்ந்து அவளுக்கு எதிராய்க் கூட்டுச் சதி செய்ய……………..

வேறு வழி இன்றி வெட்கத்தை விட்டு கணவனின் அருகில் போய்த் தானாகவே படுத்தாள்………

பாலாவும் நேரம் ஆக ஆக அவள் மேல் உள்ள கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்து இருந்தான்………….

ஆனாலும்

“டேய்…………அட்லீஸ்ட்…………… ஒரு நாள்… இல்லை இன்னைக்கு நைட் மட்டுமாவது அவளோடு பேசித் தொலையாத………….. அதன் பிறகாவது……………..உன் கோபத்திற்கு பயந்தாவது இன்று செய்த மாதிரி லூசுத்தனம் எல்லாம் இனி பண்ணாமல் இருப்பாள் என்று கோபத்தினை நிலை நிறுத்தி வைக்க போராடிக் கொண்டிருக்க கொண்டிருக்க………… அப்போது

அவளது மொபைலில் ஏதோ ஒரு பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க ஆரம்பிக்க……….. அந்த இசையில் அதிர்ந்தான் பாலா…….. ஏனென்றால்…. அவன் போடுவதெல்லாம் இசைஞானி பாடல்கள் தான்……… இவள் போட்டதோ…………கொஞ்சம் துள்ளளுடன் ஆரம்பிக்க…………

அதிர்ந்து… சட்டென்று பாலா திரும்பி பார்க்க……… கிடைத்த சமயத்தை சரியாகப் பயன் படுத்தி……….பாடலை நிறுத்தியவள்….. எழுந்து உட்கார்ந்தாள்………….

“எனக்கு உங்கள மாதிரி எல்லாம்………பாட்டெல்லாம் போட்டு ஆளை எல்லாம் அசர வைக்கத் தெரியாது…………..ஆனாலும்……….கீர்த்தனா…………..கொஞ்சம் வளர்ந்துட்டா………….. அவ பேருக்கு பின்னால இருக்கிற பாலான்ற பேரைக் காப்பற்ற வேண்டாம்…………. என்ற படி………மொபைலை அவன் காதுக்கு கொஞ்சம் அருகாமையில் வைத்து பாடலை ஒலிக்க விட…………….அது பாட ஆரம்பிக்க

என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு நான் ஓயாத வாயாடி பேசாம போனேன் பொட்டுச் செடி நான் முட்டு வெடிச்சேன் ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு கண்ணாடி பாத்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே .. ம் நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன் பச்ச நெருப்பா பத்திகிடுறேன் விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல

பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே அதை அணைத்து…… கீர்த்தனாவை ஏளனமாக பார்த்தபடியே மொபைலை தன் புறம் எடுத்து வைக்க……….

அவனது பார்வையே சொல்லாமல் சொல்லியது……………………… பாடலுக்கும்………. அவள் இன்று செய்த காரியத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல

”ஹலோ நீங்க போட்டா மட்டும் நான் முழுசா கேட்கலை……….. என்றவள்……………

தலையில் கை வைத்த படி…

“அய்யோ……….. என் கூட பேசுங்களேன்……………. அட்லீஸ்ட் நாலு திட்டாவது திட்டுங்களேன்…….. “ என்று அவனைப் பார்த்தவள்……… அவனும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து

முகத்தை அப்பாவி போல் மாற்றி

“அட்லீஸ்ட்…………….எக்ஸ்ட்ரா சாப்பிட்ட தோசைக்காகவது………………….செரிமானம் ஆகிறதக்காகவாது.. ப்ளீஸ்” என்று அவள் சொன்ன விதத்தில் பாலாவால் சிரிப்பை அடக்க முடியவில்லைதான்….. இருந்தாலும் அடக்க………. அவனின் இதழோரத்தில் அடக்கபட்ட சிரிப்பு……….. அவள் கண்களுக்கு தப்பாமல் தெரிய

“ஹைய்ய்ய்ய்ய்ய்ய் ……………..பாலா சிரிச்சுட்டீங்க……………….. சோ ஆட்ட்த்திலிருந்து அவுட்.” என்று குதிக்காத குறையாக துள்ள…….

உடனே பாலா தான் அவுட் ஆகவில்லை என்பதை நிருபிக்கும் பொருட்டு

“நான் ஒண்ணும் சிரிக்கவே இல்லை…..” என்று உம்மென்று இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல…………

“இப்போ……………… உண்மையாவே………….. அவுட்……… பேசிட்டிங்களே……….. எப்படி……. கீர்த்தனாவா…..கொக்கா” என்று கட்டை விரலை ஆட்டிச் சொன்னவளிடம்……… இன்னுமா கோப்ப்பட்டிருப்பான்…………………

தன் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவளை…. தன்னொடு அணைத்து தனது அருகே சாய்த்தவன்

வாய் மொழி மௌனமாக ……… தன் கண் மொழியில் அவளது கண்களோடு கலந்து சிறிது நேரம் கவி பாடியவன்………….

“உயிர் மொத்தம் கருகிருச்சு கீர்த்தனா………….. ஒரு தடவை பைத்தியக்காரனா இருந்து தெளிஞ்சு வந்தவன்தான்………….. அதுக்கு மருந்தா நீ இருந்த…….. ஆனா…………இந்த தடவை……………….” என்று சொன்னபோதே அவனது அணைப்பு இறுகி இருக்க

”அதுக்கு வைத்தியமே இருந்திருக்காது……………”

என்று குழந்தை போல் சொன்னவனைத் தாங்காமல் தன் மார்போடு சேர்த்து கீர்த்தனா அணைக்க……………

பாலா………. என்கின்ற அந்த மீசை முளைத்த குழந்தை…………. காலையில் பட்ட வேதனைக்கெல்லாம்……….. வதைக்கெல்லாம்……………. வடிகாலாய்……….. அவளின் அரவணைப்பில்…………… சுகமாய் அடங்கினான்…………….

எத்தனை நேரம் இருந்தானோ இல்லை இருந்தார்களோ தெரிய வில்லை…………….. பாலா………. தன் நிலைக்கு வந்து…………..தன்னை அவளிடமிருந்து பிரித்து……… அவளைச் சீண்ட ஆரம்பித்தான்

“கீர்த்தனா………. பாட்டெல்லாம் பிச்சு உதறுர………… ஆனா என்ன மரியாதைதான் இல்ல……… பரவாயில்ல…………. என் பொண்டாட்டி காதல் செய்றதுல……கொஞ்சம் தேறிட்டா” என்ற போதே…………

கீர்த்தனா சீரியஸாக பேச ஆரம்பித்தாள்

“சாரி பாலா…… நான் காலையில………. அவனைப் பார்த்தவுடனே” என்று கணவனைத் தவிக்க விட்ட குற்ற உணர்ச்சியில் பேச ஆரம்பிக்க..,,,

அவளை நிறுத்தினான் பாலா

“ப்ளிஸ்………… திரும்ப திரும்ப அதையே பேச வேண்டாமே……….இனிமே………..இந்த மாதிரி…………. பண்ணாத…..” என்று முடித்தவன்

“மது………….. அவ…… கிடைச்சுட்டா………. கீர்த்தி……………..நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா……….. ஆனா…………இந்த பைத்தியக்கரன் கிட்ட……… நினைக்கு போதே ………….உடம்பெல்லாம் எரியுது எனக்கு………. ஆனா மது ரொம்ப மன திடமுள்ள பொண்ணு……….. ஈசியா இப்போ இருக்கிற நிலையைக் கடந்துடுவா………..” என்று அவளின் நினைவு தந்த வேதனையில் தன்னை தொலைத்தவன்…………

மனைவியின் அருகாமையில் உடனே தன்னை மீட்டெடுத்து………..அவளைத் தன்னருகே இன்னும் அதிகமாய் இழுத்து……………. தன் வேதனைக்கெல்லாம் தீர்வு காண தன்னைப் அவளிடம் புதைக்க ஆரம்பிக்கத் தொடங்கி இருக்க

கீர்த்தனா நெளிய ஆரம்பித்தாள்

“கீது…………. செமினார் ஸ்டார்ட் பண்ணலாமா…………..” என்று குறும்பாய்த் தொடங்கியவன் அவள் பேந்த பேந்த விழிப்பதைப் பார்த்து………… வாய் விட்டுச் சிரித்தவன் ரசித்தபடியே

“என்ன திருவிழாவில தொலைந்து போன குழந்தை மாதிரியே முழிக்கிற………….. இப்டிலாம் முழிச்சா……….விடுவாங்கன்னு நினைப்பா…………. இப்போ நான் எடுக்கப் போற இந்த செமினார்க்கு மேடத்துக்கு மட்டும்தான் அனுமதி…………….சோ………..யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாம்……..” என்றவன்………… அவன் சொன்ன செமினாரை………… வாய் மொழி இல்லாமல்…………….தன் கைகளாலும்………. தன் உதடுகளாலும் அவளுக்கு சொல்ல ஆரம்பிக்க……. என்ன செய்வதென்று தெரியாமல்…………. முதலில் சாதரணமாய் விலக எத்தனிக்க…………. ஆனால் அவன் ஆக்டோபஸ் போல் அவளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்திருக்க …. சாதரண முயற்சி பலன் கொடுக்க வில்லை வேறு வழி இன்றி……

கீர்த்தனா……….பட்டென்று வலுக்கட்டாயமாக அவனைத் தள்ளி………..எழுந்து உட்கார……….

இதை அவளிடமிருந்து எதிர்பார்க்காத பாலா……..அதிர்ந்து…………பின்……தன் நிலை மீண்டு……………அடுத்து கோபமாய் அவளைத் தன்புறம் திருப்ப

கீர்த்தனாவோ………..அவனின் நிலை உணராமல்

”இப்போ…………..இனிமேல்……… இது வேண்டாமே” என்று வெட்க்கப்பட்டுக் கொண்டே சொல்ல………..

பாலாவோ அதற்கு நேர் மாறாய்

“என்னடி………….வேதாளம் மறுபடியும் ஏறுதோ” என்று அனலைக் காட்ட

கீர்த்தனா………அவன் குரலின் மாறுபாடை உணர்ந்து…………….. வேகமாய் அவனிடம் திரும்பி

“அய்யோ பாலா…………… நான் என்ன சொல்ல வந்தேனா………….இப்போதைக்குனா… இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும் வேண்டாம் என்றேன்” என்க

கணவனோ

“புரியல…….. இந்த கொஞ்ச நாளைல என்ன வந்துச்சு” என்று எரிச்சலுடன் கேட்க

அவனின் வெற்று மார்பில் வெட்கப் கோலம் போட்டபடி……………..சொல்ல வந்த சரியான விசயத்தை மிகவும் தப்பான நேரத்தில் சொல்ல……..அது பாலாவிற்கும் தவறாக தப்பிதம் இல்லாமல் போனது

“அது…. அது…. வந்து..”

”வந்துட்ட இல்ல………போய்ட்ட” என்று கடுப்படிக்க

“நம்ம ரெண்டு பேருக்கும் இடையில்………….. இப்போ இன்னோரு ஆளு வந்தாச்சுல……. .சோ அவங்களுக்குதான் இனி முதலிடம்” என்று சொல்லி முடிக்க வில்லை…………..

கணவன் அக்னிப் பிழம்பாய் மாறி இருக்க………….அது கை மூலம் அவள் கன்னத்தில் விழ………கீர்த்தனாவின் கன்னம் எறிய ஆரம்பித்து இருந்தது…………….அவன் ஏன் அறைந்தான் என ஒரு நிமிடம் யோசிக்க…… அடுத்த நிமிடம்……. அவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மூளை உடனே எடுத்துக் கொடுக்க… அந்த நிமிடமே……….. அவள் கை அவன் கன்னத்தில் இறங்கியது

”லூசாடா நீ…………..நான் என்ன சொல்ல வந்தேன்…………..நீ என்ன புரிஞ்சு தொலச்ச………………. அப்டிலாம் உனக்கு ஒரு எண்ணம் இருக்கா………… மவனே தொலச்சுடுவேன்…….ஜாக்கிரதை…….” என்று சுட்டு விரல் காட்டி எச்சரிக்க

தன் கன்னத்தில் கை வைத்தபடி “விழித்தான்” கணவன்,,,,,,,

கண்ணில் நீர்…….. அவள் விரும்பாவிட்டாலும்……….அடித்த அறையில்… வலியில்…… அவள் சொல் கேட்காமல்……….வழிந்து கொண்டிருக்க

மூக்கை உறிஞ்சியபடியே

கன்னத்தில் வைத்திருந்த அவனது கையை எடுத்து………….

தன் வயிற்றில் வைத்தபடி

“டேய்……… உங்க அப்பாக்கு……….. வர வர புத்தி ரொம்ப நல்லா வேலை பண்ணுது போல……. சொல்லி வை…………. இப்போ அவர் நினைக்கிற மாதிரி,,,,,,,, முதல்ல போல உங்க அம்மா யாரும் இல்லாத ஆள் இல்லை இப்போ……… நீ இருக்கேனு………… பயமே இல்லடா………….உங்க அப்பாக்கு……….எனக்கு கேக்க ஆள் இல்லைனு………. இஷ்டத்துக்கு ஆடறாரு……… சீக்கிரம் வெளில வந்து ………. இவர ஒரு வழி பண்ணு………..” என்று அவள் தேம்பிய வார்த்தைகளிலே சொல்ல……..

கீர்த்தனா சொன்ன……….. அந்த இன்னொருவர் யார் என்று இப்போது பாலாவுக்கு விளங்க………….. பாலா ஆனந்த அதிர்ச்சியில் வாயடைத்து நின்றவன்…………. அடுத்த நொடி…….. தன் மனைவி இன்று மாட்டிய ஆபத்தை எண்ண………. அவன் உடல் நடுங்கியது………….அவனது நடுக்கம்…………அவன் கைகளிலும் பரவ………அது கீர்த்தனாவும் உணர…….. அங்கு உணர்ச்சிகளின் போராட்டம் ஆட்சி செய்ய ஆரம்பித்து இருந்தது

”இன்னைக்கு……… ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணுனியா கீர்த்தி….”

என்று…………மனதில் உணர்ச்சிகளின் போராட்டம் இருந்த போது…………. வெளியில் சாதாரணமாக கேட்டான்………..

“ம்ஹூம்………….. நானே காலையில டெஸ்ட் பண்ணிக்கிட்டேன்……….3 நாளா டவுட்…… ஒரு நிமிடம்” என்ற படி

தனது ஹேண்ட்பேகில் இருந்த அந்த அட்டையைக் எடுத்து வந்து அவனிடம் கொடுக்க……….

அவன் கண்ணில் தான் இரண்டு முறை பட்டதே அது………அலட்சியமாக தூக்கிக் கூட எறிந்தானே”

“காலையிலயே ஏன் என்கிட்ட சொல்லலை…………..“ மறுபடியும் கண்ணில் அனல் வர………..

“நாளை மறுநாள்…….. நம்ம கல்யாண நாளுக்கு……ச ஸ்பென்ஸா வச்சு சொல்லலாம்னு நினைத்தேன்….. ஆனா இன்னைக்கு நடந்த களேபரத்தில இன்னறைக்கே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்”

“சோ தெரிஞ்சே……….. இத்தனை காரியமும் பண்ணி இருக்க………… யாரு என்ன கேப்பாங்கனு தெனாவெட்டு………… உனக்கு இல்ல நம்ம குழந்தைக்கு எதாவது ஆகி இருந்த்துனா” என்றவனிடம்

”சாரி பாலா……………… என்று தலை குனிந்தாள் அவள்……… என்ன இருந்தாலும் குழந்தை அவர்கள் இருவருக்குமான உரிமை…… இவளால் எதாவது ஆகி இருந்தால்…… பாலா மற்றும் அவன் குடும்பத்தின் முன் தலை குனிந்துதான் நிற்க வேண்டும்……. சில நிமிடம் கழித்து தயங்கியவளாய்

“நான் இந்த நிலைமையில இல்லேனா………. ஒரு வேளை நான் உங்கள விட்டு போய் இருந்துருப்பேன் தான் பாலா………என்ற போதே தன்னை நீங்கிய அவனது நிலை உணர முடிந்தவளின் மனம் பாரமாகியது… அது மட்டும் இல்லை பாலா

“நான் மதுவை அன்னைக்கே காப்பாற்றி இருந்தா……. இது……..இந்த இடம்…….இந்த நிமிடம்….. என் பாலாவோட மனது… எல்லாமே மதுவோடதாகவே இருந்திருக்கும் பாலா……….நான்….அவங்களுக்கு துரோகம் பண்ணிட்டேனோ பாலா…. ஆனா நான் இப்போ அவங்கள காப்பாத்திட்டேன்………. அதுனால அதுல எனக்கு உயிர் போயிருந்தா கூட” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே

“ஏய்ய் ஏய்ய்….. ஏண்டி……….. மறுபடியும் லூசு மாதிரியே பேச ஆரம்பிக்கிற……… ஆரம்பிச்ச இடத்திலேயே வந்து நின்றாதடி…………. பக்கு பக்குனு இருக்கு,…………………………………”

அவன் சொன்ன விதத்தில் சிரித்தவள்……..

”அவ்வளவு சீக்கிரமாக விட்ருவீங்களா என்ன…………. ட்ரம்ப் கார்டு ஒண்ணு கையோடவே ஒபன் பண்ணாம வச்சுருக்கீங்களே பாஸ் ” என்று சீண்ட

அவள் குழந்தையைத்தான் சொல்கிறாள் என்று விட்டவன்

“சாரி கீது…………. இன்னைக்கு………… 3 தடவை……. ச்சேய்………. இந்த நிலையில நீ இருக்கும் போது………….” என்று வருந்த ஆரம்பிக்க

“அப்போ அடிச்சதுக்கு கோபம் வரலை………. ஆனா…………. இப்போ பயங்கர கோபம்தான்………” என்றவள்

”பழிக்கு பழி வாங்கியாச்சு……………. ரொம்ப நாளா………… நான் உங்களுக்கு கொடுத்த அறை டீல்லேயே நின்னுட்டு இருந்துச்சு…………..பைசல்……….பண்ணி……இப்போ எனக்கு இப்போ ஒரு அறை டீல்ல நிக்குது” என்று ராகவனின் மகளாக பேச

“சரிங்க பேங்க் மேனேஜர் பொண்ணு………….. தேவையில்லாததுக்கு எல்லாம் கணக்கு எடுத்தே……………..என்னைக் கொல்றடி…….. எதுக்கெடுக்கணுமோ அத விட்ரு…………….”

“வேற எதுக்கெடுக்கணும்…………. ” என்றாள் கணவன் சொன்ன விபரம் தெரியாமல்

“இந்த ஒரு வாரம்…………… அதைக் கூட காந்தி கணக்குல விட்ரலாம்……….ஆனா…………… 10 மாசம்…………… சுத்தமாவே………..கூடாதாடி……..” என கணவனாய் ஏங்க ஆரம்பிக்க………..

மனைவி அதற்கு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க……………

வழக்கம் போல……….கணவன் மனைவியின் சொல்லுக்கு அடங்கி……… தன் கணக்கு வழக்குகளை எழுதி வைத்து………… பைசல் பண்ண வேண்டிய காலத்தில் வசூலிக்கலாம் என்ற மனைவி எடுத்த விளக்கவுரையின் முடிவில் மூக்கால் அழுது கொண்டே ஒத்துக் கொள்ள……….. அவனுக்கு………… தன்னால் குடுக்க முடிந்தவற்றை மட்டும் வழங்கி………….தன் கணக்கில் அதிகம் வராமல் பார்த்துக் கொண்டாள் மனைவி…

அதன் பிறகு இருவரும் உறங்குகிறோம் என்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டாலும்……..பாலா………. மதுவை நாளை எப்படி எதிர் நோக்கப் போகிறோம் என்று யோசனையில் இருக்க…………. கீர்த்தனவோ…….. கணவன் உறங்கவில்லை……. உறங்க மாட்டான் என்று அவளுக்கு தெரியும்…………. மது பழையபடி வந்தால்தான் பாலா முழுவதும் சந்தோசம் அடைவான்……. மதுவுக்கு தான் என்ன செய்தால் அவளுக்கு நிம்மதி தரும்……… என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்……….

1,700 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page