top of page

என் உயிரே !!! என் உறவே ??? - 55

அத்தியாயம் 55:

சித்தம் கலங்கி இருந்த பாலா…….. மெதுவாய் நகர்ந்தான்………தன்னவளைத் தேடி……. ரத்தக் கரையை தொட்டுப் பார்த்தவன்……அதன் ஈரம் ……. இப்போதுதான் நடந்திருக்கிறது என்ற உண்மையைச் சொல்ல…….கீழே விழுந்து அழ ஆரம்பித்தான்…. ஆண்மகன் என்ற அடையாளம் எல்லாம் அவனை விட்டு எப்போதோ போய் இருந்தது…… மனைவியைக் காப்பாற்ற முடியாதவன்……. ஆண்மகனாய் இருந்து என்ன பிரயோஜனம்…. கைகளில் ஒட்டிய ரத்தக் கறையைப் பார்த்தபடியே இருந்தான்……….. ரத்தக் கறையை தொடர ஆரம்பிக்க………….அது அவனை ஒரு அறையின் வாயிலில் நிறுத்த…………. மனம் அழுதது…….தன்னவளை எந்த நிலையில் பார்க்கப் போகிறோமோ என்று………கதவைத் திறக்கவே கைகள் நடுங்கியது அவனுக்கு…………கீர்த்தி……….என் கீது என்னை விட்டுட்டு போய்விட்டாளா…………நம்பவே மனம் மறுத்தது………… நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பை எல்லாம் அவன் மனம் யோசித்தது………….. ஆனால் அவன் பார்த்த எதுவுமே அவனுக்கு அவளின் நல்ல நிலையைச் சொல்ல வில்லை………….ஆனாலும் மனைவியின் உயிர்………. தன்னைவிட்டு அத்தனை சீக்கிரம் போகாது என்றே நினைத்தான்……… நினைக்கும் போதே……….தன்னைப் பார்பதற்காக இழுத்து வைத்துக் கொண்டு இருந்தால்…..தன்னைப் பார்த்தவுடன் போய் விடுவாளோ என்று அஞ்சினான்…………… தயங்கினான்… அந்த அறைக் கதவைத் திறக்கவே……………

எல்லாம் முடிந்து விட்டது……இனி எதையும் மாற்ற அவன் என்ன கடவுளா……… தன்னை நொந்தபடி……. மொத்தமாய் அவன் வாழ்க்கை முடிந்து விட்டது………. இனி என்ன……….. யாருக்காக கீர்த்தனாவை துன்பத்தில் சுழழ விட்டோமோ அவள் கூட கிடைத்து விட்டாள்…….. தன்னவள் கூட அதை மறந்து மன்னித்து விட்டாள்…. ஆனால் மேலே இருக்கும் ஒருவன் தன்னை மன்னிக்கவில்லையா….. தனக்கு…..தன்னவளை பிரித்து……… நினைக்கும் போதே தன்னை நினைத்து சிரித்தான்………… இதைத்தான் தண்டனையாக அளித்து விட்டானா…… அவன் மனம் துக்கத்தையும் கடந்து அடுத்த நிலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தது…………. கண்ணில் கண்ணீர் நின்றது,……………… இந்த நிலைக்கு வந்த போதே தன் கீர்த்தியைப் பார்க்க வேண்டும்… அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே அவனுள் இருந்தது…….. உடனே கையும் கதவின் தாழ்ப்பாளைத் திறக்க………

அங்கு…………..

ஒரு நடுத்தர வயதுப் பெண்…………… தலையில் அடிபட்ட கோலத்தில் கிடக்க………… அருகில் தன்னவள்………. கீழே கிடந்தாள்…….. மனம் பதறி அவளை ஓடிப் போய் தன் மடியில் தாங்கியவன்….. அவன் இருந்த நிலையில் அவளை ஆராயவெல்லாம் இல்லை……………… அவளை தன் நெஞ்சோடு அணைத்து….. கட்டிக் கொண்டு……. கதற ஆரம்பித்தான் பாலா…………

கணவனின் கதறல் எல்லாம் அவன் கண்மணியின் காதில் விழ வில்லை………

அதே நேரம்….

அவளின் இதயம் அவள் துணைவனுக்காக….. அவனுக்காக மட்டுமே துடித்துக் கொண்டிருப்பது தெரியாமல்…. தெரியும் நிலையிலும் இல்லாமல்…… அவளால்…. அவன் மனைவியால்…… அவள் காதலினால்… அவன் கீர்த்தனாவினால்… முற்றிலும் கிறுக்கனாய் மாறியிருந்த பாலா அதை உணராமல் கதறிக்கொண்டிருந்தான்…….

தன் துடிப்போடு தன்னவளின் துடிப்பும் இணைந்து ஒருங்கே கேட்பதை சில நிமிடங்கள் கழித்துதான் உணர்ந்தான் பாலா………..

உணர்ந்த நொடியிலேயே மனமெங்கும் சந்தோச அலை……….. மின்சாரம் போல உடலெங்கும் விரவ…….. அதே வேகத்தில் அவளைப் பிரித்தவன்…….. அவளை முழுவதும் ஆராய்ச்சி செய்ய……… அவளுக்கு சிறு கீறல் கூட இல்லை………. வேக வேகமாய் மூக்கின் மேல் கை வைத்துப் பார்க்க……… அது சீராக எந்த தடுமாற்றமும் இல்லாமல் வந்து கொண்டிருந்தது……………….. அவளுக்கு ஒன்றுமில்லை……. என்று உணர்ந்த அந்த நொடி…… முதன் முதலில் அவளோடு அவன் கலந்த நொடியை விட………… இன்பத்தை அளித்தது அவனுக்கு……………. வேக வேகமாய் அந்த வீட்டில் தண்ணிர் இருக்கிறதா என்று தேடியவன் ஹாலுக்கு வர ………… அப்போதுதான் மதுவும் அங்கு இருக்கிறாள் என்று மீண்டும் ஞாபகம் வர …………. இருந்தும்… தன் மனைவியின் மயக்கத்தை முதலில் போக்குவோம் என்று நினைக்கும் போதே………….. அவள் மேல் எவ்வளவு காதல் இருந்ததோ……… அவ்வளவு கோபமும் வந்திருந்தது அவனுக்கு,…………………… இருந்தும் அவள் சூழ்னிலை என்னவோ என்று யோசித்தபடி தண்ணீரோடு வந்தவன்………….. கண்ணில் அவளின் கைப்பையில் இருந்து சிதறிய….. பொருட்கள் மேல் கவனம் பதிய………….அதில் இருந்த மிளகாய்ப் பொடி…………… கத்தி…….. சற்று தொலைவில் கிடந்த ஸ்ப்ரே………. என்று ஸ்தம்பித்தான். அருகில் இன்னொரு கவர் கூட கிடந்த்து……….அது என்னவோ என்று விட்டு விட்டான்……………..

ஆக……… அவன் மனைவி தெரியாமல் மாட்டவில்லை…… தானாகவே மாட்டிக் கொண்டாள் என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக் கனி போல் விளங்க…………..

சற்று முன் காதலில் அவளுக்காகத் துடித்த இதயம்………..இப்போது அதே அளவு கரை காணாத கோபத்தில் எகிறியது……….. அவன் உள்ளம் துடித்தது…… தன்னை நினைக்கவே இல்லை…. அவளுக்காக நான் இங்கே பைத்தியாக்காரனை விட………… மோசமான நிலையில் இருக்க… என்னை மறந்து………அவள் காப்பாற்றியது மது என்று கூட நினைக்கத் தோணவில்லை அவனுக்கு………..

மனைவி தன்னை நினைக்க வில்லை…… தன் நிலையை யோசிக்க வில்லை என்று சினம்தான் அவனைச் சூழ……….

அதே கோபத்தில் சென்று… அவளை பிடித்து தன்னருகே கொண்டு வந்து தண்ணீரைத் தெளிக்க……. அவனை இத்தனை நிமிடங்களாய் அவனைப் பாடாய் படுத்தி……. கொல்லாமல் கொன்று கொண்டிருந்தவள்……. மரண வேதனையை விட அதிகமான வேதனையை அவனுக்கு அறிமுகம் செய்த அவனது மனையாள் கண் விழித்துப் பார்க்க….. முதலில் அசௌரியாமாகத் திறந்த விழி……. தன் மனையாளனைக் கண்டவுடன்……… உயிர் மீண்டு விட்டோம் என்பதை விட…. தன்னவனை மீண்டும் பார்த்து விட்டோம் என்ற ஒரே நினைவில்………… சந்தோசத்தில் விரிந்து மலர………… அவனைப் பார்த்த சந்தோசம் உடலெங்கும் விரவி வாய் வார்த்தையில்………’பாலா’ என்று விகசித்து வார்த்தைகள் வர எழுந்து நின்றாள் ……………

“அந்த பொண்ணு…..ஊட்டியில பார்த்த……..” என்ற தட்டுத் தடுமாறி அவள் சொற்களைச் சேர்க்க…

அதே நிமிடத்திலே…….கணவனின் கை அவள் கன்னத்தில் மாறி மாறி விழுந்தது……… அதிர்ச்சியில் கீர்த்தனா உறைந்து நின்றாள்…………

அவளைத் தள்ளிவிட்டவன்……..

“என்னையும் நம்ப மாட்ட…………… என் காதலயும் நம்ப மாட்ட….. நீ என்னைக் காதலிக்கவே இல்லடி….. இவன் நம்ம இல்லேனா கூட இன்னொருத்தி பின்னால போய்டுவான்ற உன் எண்ணம் மாறவே இல்லைல….. போடி……. ஒண்ணு தெரிஞ்சுக்கோ…….. என் உயிர் என்கிட்ட இல்லடி………….. அது” என்றவன் கண் கலங்கியபடி அவளின் இதயத்தை தொட்டுக் காட்டி…………..

“இங்கே எப்பவோ கூடு மாறிருச்சு……. இங்க நின்னுடுச்சுனா………. உன் புருசனும் போய்டுவான்” என்றபடி அவளை விட்டு அகன்றவன் மதுவைத் தேடிச் சென்றான்……. தளர்ந்த நடையோடு…………

கீர்த்தனாவுக்கு தான் இன்னும் உயிரோடு இருக்கிறோமா என்று அதிர்ச்சி வேறு….. கணவன் அறைந்த அறை வேறு……….. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தை தந்த வலிகள் வேறு….. அப்படியே கன்னத்தை பிடித்தபடி நின்றவள்……..

பக்கத்தில் உயிரற்றுக் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்து இன்னும் அதிர்ந்தாள்….

இவள் எப்படி இறந்தாள் என்று தெரியவில்லையே……….. என்று அவள் நடந்ததை மீண்டும் ஓட்ட………

பிரதாப் ……..அவனருகில் அவளைக் கொல்லும் வெறியோடு வர……………. கீர்த்தனா………… இனி அவ்வளவுதான் என்று நினைத்து முடித்திருந்தாள்…….வயிற்றில் கை வைத்தபடி………..ஆனால்……….. அவளைக் காப்பாற்ற அவள் கணவன் தான் வர வேண்டுமா என்ன……..அவன் தன் உயிரைத் தங்கள் குலம் தழைக்கும் குழந்தையாகதான் அவளோடு அனுப்பி இருந்தானே……... அது அவளைக் காப்பாற்றியது……. காலையிலிருந்து குமட்டியபடி இருந்தவளுக்கு……… வெளிவராத வாந்தி……… பயத்திலும்…….. அவளின் மசக்கையான நிலையும்…. ஒரு சேர….. பிரதாப்பின் மேலேயே அத்தனையையும் எடுத்து விட…………. அவன் அருவெருப்பில் பின்வாங்கினான்……………… ஆனால் கீர்த்தனாவோ அதோடு மயங்க……………. சுமதியின் மேலேயே விழுந்தாள்……….

இதுதான் அவளுக்கு ஞாபகம் இருந்தது………..

ஆனால்……… அவளுக்கு தெரியாத ஒன்றும் நடந்திருந்தது…………. அது……… தன் மேல் விழுந்த கீர்த்தனாவைத் தாங்கிய சுமதி………… செவிலியருக்கான பட்டயப் படிப்பு படித்திருந்தாள்…… அதனால்தான் மதுவைக் கவனிக்கும் பொறுப்பை பிரதாப் அவளிடம் விட்டிருந்தான்………. பணத்துக்காகத்தான் அவள் வேலை பார்த்தாள்……. நாளாக… நாளாக அவளுக்கே மதுவின் நிலை………. பரிதாபமாகத் தோன்ற………….. பிரதாப்பிடமிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாள்…….. மதுவோடு சேர்ந்து…………… ஆனால்…….. அவள் மகள் திருமணமாகி……… கணவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்…. சுமதியின் மன நிலை உணர்ந்தவன்……… அதை வைத்துதான் அவளை மிரட்டிக் கொண்டிருந்தான்…….. தான் எதாவது செய்யப் போய்…………அது தன் மகள் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்று அடங்கி விட்டாள் சுமதி…………….. ஆனால் இன்று தன் மேல் மயங்கி விழுந்த கீர்த்தனாவின்……………… கையைப் பிடித்துப் பார்க்க………. அது அவளோடு இன்னொரு உயிரும் உள்ளதைச் சொல்ல………… மதுவின் மேல் வராத…….. கீர்த்தனாவின் மேல வராத பரிவு…… அவள் குழந்தை மேல் வர……… கீர்த்தனாவுக்காக கெஞ்ச ஆரம்பித்தாள் சுமதி…. பிரதாப்பிடம்………

“தம்பி………….. இந்த பொண்ணு புள்ளத் தாச்சியா இருக்குப்பா……….. இந்த நிலைமைல………. இது பெரிய பாவம்” என்று கெஞ்ச…………..”

மது அதிர்ந்தாள்……… இந்தப் பெண்ணுக்கு இது தெரியுமா………… தெரியாதா………….. தெரிந்திருந்தால் கண்டிப்பாக…..இங்கு வந்திருக்க மாட்டாள்….என்றே தோன்றியது………. கடவுளே இந்த பெண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாது” ………. என்று மனம் கீர்த்தனாவுக்காக வேண்ட ஆரம்பிக்க………….

ப்ரதாப் அதற்கெல்லாம் மசியவில்லை………

“மயக்கத்தில் இருந்த கீர்த்தனாவினைக் கொல்லும் வெறியில் வந்தவன்…………….. அவளை அடிக்கப் போக……… சுமதி இடையில் பாய்ந்தாள்……”

இத்தனை நாள்…….. மது என்னும் இளம் பெண்ணிற்கு தான் செய்த மாபெரும் தவறுக்கெல்லாம் பரிகாரம் தேடும் விதத்தில்……….. தண்டனையாக…. கீர்த்தனாவைக் காப்பாற்றி………… தன்னை மாய்த்துக் கொள்ள……..

ப்ரதாப் அதிர்ந்தான்………….. சுமதியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை………….. சுத்தமாய்….. அப்போதைக்கு கொலை வெறி அடங்க…….. அதன் பின் தான் மயக்கத்தில் இருந்த கீர்த்தனாவிடம் பேச ஆரம்பித்தான்……….. அது கீர்த்தனாவுக்கும் தெரிய வில்லை………..

--------------------

கணவனின் கோபம்……………… மண்டையில் உறைக்க…….. அது ஏன் என்றும் விளங்க………. அவனைத் தேடி வந்தாள்……….. தள்ளாடியபடி………….. தனக்கு அவன் மேல் காதல் இல்லையா……… நான் அவனை நம்ப வில்லையா………. என்ற போது அவளின் மனசாட்சி……. நீ அவன் மேல் அளவு கடந்த காதல் தான் வைத்திருக்கிறாய்………ஆனால் அவனை நம்பினாயா என்று கேட்க……….. மனம் அடி வாங்கியது………….

ஆனால் அவள் மனம்…………..அவளறியாமல் என்றோ அவனை முழுமையாக நம்பத் தொடங்கி விட்டதுதான் உண்மை………. இன்று…….. அவன் பேசிய வார்த்தைகளில் ….

“இல்லை,,,இல்லை,,, உன்னை நான் முழுசா நம்புகிறேன் …. நீ எனக்காக மட்டும்தான் வாழ்கிறாய்…. எனக்கு அது தெரியும்……..” என்று கத்த வேண்டும் போல் இருந்தது……….

கணவனிடம்… தன் மேல் அவன் எவ்வளவு கோபப் பட்டாலும் சமாதானம் செய்யும் வேகத்தில் வந்தவள்…………… வந்த வேகத்திலேயே நின்றாள்……….தான் காப்பாற்ற வந்த பெண்ணைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான்……… கணவன் இவளை நிமிர்ந்து கூடப் பார்க்க வில்லை………

”மது…..மது என்னை பாருடா…….” அவளை தட்டி எழுப்பினாலும்…. தண்ணீர் தெளித்தாலும் அவள் எழ வில்லை………..

கீர்த்தனாவுக்கு ஓரளவு புரிய………….

கணவனின் நிலை அறிந்து…….. அவனருகில் போக…………..

இப்போது மது மெதுவாக விழித்துப் பார்த்தாள்…………

அருகில் இருந்த கீர்த்தனாவைப் பார்த்து சினேகமாய் புன்னைகைத்தாள்…………

பாலாவிடம் வாய் திறந்து பேச வில்லை அவள்….……… ஆனால் கண்கள் பேசின……….. பாலா கண்களில் கண்ணீர் வர………. தன் கையால் அதைத் துடைக்க………. வழக்கம் போல் அவளது அன்பில் கரைந்தவன்……….. அவளை அணைத்தபடி அழ ஆரம்பித்தான்……….. மனைவி அருகில் இருந்தும்…..அவளின் பரிதாப நிலையில்……..

கீர்த்தியும் அவனோடு அழ ஆரம்பித்தாள்……. கணவனின் துன்பம் தாங்காமல்…………

”என்னை இங்க இருந்து கூட்டிட்டு போடா……… எனக்கு என் அப்பா… அம்மாவை பார்க்கனும் போல இருக்கு…….” என்று தடுமாறின வார்த்தைகள்……….

“கண்டிப்பா… மது… நாம போகலாம்………… யாருடா உன்னை இப்டி பண்ணியது…………அதச் சொல்லு……….முதலில்.” என்ற போது…

கீர்த்தனா ஓரளவு ஊகித்திருக்க……

வாய் தானாகவே சொல்லியது

“ப்ரதாப்” என்று சொல்ல…………

பாலா அதிர்ந்து கீர்த்தனாவைப் பார்க்க……..

மதுவோ………..

“ஆமாடா………அந்த சைக்கோதாண்டா……. என்னை ………… இப்டி ஆக்கிட்டாண்டா………” என்று தன் முயற்சி எல்லாம் திரட்டி கதறிய போதே அவள் மீண்டும் மயக்கத்திற்கு போக ஆரம்பிக்க…..

பாலா மதுவின் கன்னத்தை தட்டினான் அவளை நினைவுக்கு கொண்டு வர….

”ஏய் ஏய் மது………. இங்க பாரு……. என்னைப் பாரும்மா………….ஏன் இப்டி மயங்குற….. ”

விழித்தாள்…. பின் உதடுகள் மட்டும் இகழ்ச்சியாய் வளைந்தன மது…..

அருகில் கிடந்த மருந்துப் பாட்டிலை காட்ட……..

’மது…….” என்று அலறினான் பாலா…

”உன் மதுவுக்கு இப்போ இதுதாண்டா எல்லாம்…………….” என்று கசப்பாய் சொல்ல…………..

பாலாவின் கதறல் மட்டும்தான் அறை எங்கும் எதிரொலித்தது…………

அப்போது ரகுவும் அங்கு வந்து சேர்ந்தான்………

அங்கு நிலவிய சூழ்னிலையில் எல்லாம் விளங்க……….அங்கு நடந்தவற்றை கீர்த்தியும் சொல்ல…. அவன் அதை வாங்கி…… உடனே காவல் துறைக்கு போன் செய்ய ………….. காவல் துறை பிரதாப்பின் வீட்டைச் சுற்றி வளைக்க………… அடுத்த இருபது நிமிடத்தில்… அவன் கைது செய்யப் பட்டான்…….. அவனே எதிர் பாராத வகையில் மாட்டிக் கொண்டான்………. சென்னைக்கு மதுவை கூட்டி வந்து தவறு செய்து விட்டோமே என்று ஆத்திரம் கொண்டான்…

பாலாவுக்கு ஆத்திரம் அடங்க வில்லை…. தன் வாழ்க்கையையே திசை மாற்றியவனை…..அவன் முன் வந்திருந்தால் கொலையே பண்ணி இருப்பான்… போல……. வெறி பிடித்தவன் போல் இருந்தான்…… கீர்த்தனாவுக்கு பாலா அருகில் போகவே பயமாய் இருந்தது……….. ஒன்று.. அவன் கோபம்… இன்னொன்று………… மது என்ன நினைப்பாளோ என்று……………. பாலாவை விட்டு தள்ளியே இருந்தாள்……..

ரகுதான் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்……

“இனி என்ன பண்ணப் போறடா அவன………. அவன் ஒருமுறை குற்றம் செய்து தண்டனை அனுபவித்தவன்……… இப்போ…. இனி கண்டிப்பா..வெளிய வர முடியாதுடா…….. எல்லாம் சேர்ந்து அவனுக்கு பெரிய தண்டனைதான் கிடைக்கும்” என்று சொல்ல….

”போங்கடா நீங்களும் உங்க சட்டமும்……….ஜெயில்ல பாதி… வெளில பாதினே …அவன் தன் வேலையை எல்லாம் முடிச்சுட்டாண்டா…………இனியும் அதைத்தான் செய்வான்……… அவன்லாம் உயிரோட இருக்கக் கூடாது……… என் கையாலேயே …….. மதுவை பாருடா…. எப்படி இருந்தவ தெரியுமா………. அவள பார்த்தாலே…….. அவ கூட பேசினாலே போதுண்டா……. உற்சாகம் நம்மளையும் வந்து ஒட்டிகிரும்……. இப்போ அவ நிலைமையப் பாருடா….. என்னடா பாவம் செய்தா………. என்னைக் காதலித்ததா…….. இல்ல கீர்த்தியோட தோழியா இருந்ததா……. அவளுக்கு ஏண்டா இந்த நிலைமை….. புலம்பிக் கொண்டிருந்தான் ரகுவிடம்…………

மது அவனருகில் தோளில் சாய்ந்தபடி இருக்க……

ரகு கேட்டான்…..பாலா…..மது பேர்……கீர்த்தனா… கீர்த்திகா என எல்லாருடைய பெயரும்… பேப்பரில்… மீடியாவில வருமே டா…. இப்போ என்ன பண்ண…. என்று கேட்க

மது சொன்னாள்… இம்முறை அவள் தடுமாற வில்லை…. பாலாவின் தோள் சேர்ந்ததே அவளுக்கு பலம் தர…. பாலாவிடம் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து

ஏற்கனவேதான் கீர்த்திகாவின் மானம் கப்பல் ஏறி இருந்ததே…ஆதி இறந்த போது

”அவனுக்கு தண்டனை கிடைக்கணும் பாலா….. பேர் வெளில போனால் கூட பரவாயில்லை பாலா… அவன் அனுபவிக்கனும் பாலா…… இல்ல கீர்த்திக்கு வாழ்நாள் முழுக்க அவன் தொல்லைதாண்டா…… அவள இவன் விட மாட்டாண்டா…இனி…” என்று ஆவேசமும்…ஆத்திரமும்…அடங்காமல் பேசினாள்….

சற்று தள்ளி

கீர்த்தனா அருகில் இருந்த காவலாளியிடம் எல்லா விபரமும் சொல்லிக் கொண்டிருந்தாள்……. மதுவை ஊட்டியில் பார்த்ததில் இருந்தது முதல்……தற்போது நடந்தது வரை…… அவளுக்கும் சொல்ல முடிய வில்லைதான்…… திக்கித் திணறி சொல்லிக் கொண்டிருந்தாள்….. மயக்கம் இப்போ வருமா இல்லை பிறகு வருமா என்று தள்ளாடிக் கொண்டிருந்தாள்……….. பசி வேறு கண்ணைக் கட்டியது……..…….

அவள் தடுமாறுவதைப் பார்த்தபடிதான் இருந்தான் பாலா….. காவலாளியிடம் பயப்படுகிறாள் போல் என்று ….. அவள் சொல்லிக் கொண்டிருக்கு போதே மதுவை சற்று சாய்த்து அமர வைத்தவன் கீர்த்தனா அருகில் வந்து நின்றான்…….. அவள் சொல்லிக் கொண்டிருந்த விபரங்களை எல்லாம் அவனும் கேட்க ஆரம்பித்தான்………

அவளை முறைத்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான்……. அன்று தன்னிடம் பேசிய பெண் தன் மனைவிதான் என்று தெரிந்தது….. ரகு சொன்ன அந்த US ரிட்டர்ன் வினோத் என்பதும் புரிந்தது அவனுக்கு……………… அவள் மயங்கிய வரைச் சொல்ல ….. அதற்கு மேல் காவலாளிக்கு மதுவின் வாக்குமூலமும் தேவைப்பட…………

பாலா…………..

“அவ இப்போ சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்………. இந்த மேடம் கிட்ட வாங்கிற வரைக்கும் வாங்குங்க……….. மதுகிட்ட…. அவ கொஞ்சம் நார்மலான பின்னால் வாங்கிக்கலாம்…….”

என்று மேடம் என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்ட……. அவன் சொன்ன மேடம் என்று அழுத்திய வார்த்தையில் அழுகையே வந்து விடும் போல் இருக்க……. கணவனைப் பார்க்க… அவனோ அவளை விட்டு மறுபடியும் மதுவின் அருகில் அமர்ந்து அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்…….. அவளுக்கு இப்போது தன்னால் கொடுக்க முடிந்தது இதுதான்… இது மட்டும்தான் என்பது போல

கீர்த்தனா…….தனது ஹேண்ட் பேகை எடுத்தவள்…. சிதறிக் கிடந்த எல்லாவற்றையும் சேர்க்க ஆரம்பித்தாள்……

அப்போது கீர்த்தானவின் பையில் இருந்த ஒரு பொருளான………..அவளது கர்ப்பத்தை உறுதி செய்த அட்டை……… அவன் காலின் அருகில் இருக்க…….அது கீர்த்தியினுடையது என்பதை உணர்ந்த பாலா…… குனிந்து எடுத்து……….. அதை அவளின் அருகில் வீசினான் கடுப்போடு………… உள்ளிருந்த கோபம் எல்லாம் அடக்கிய வேதனையோடு……….

“பாவி……. என்னை விட்டுட்டு போகத் துணிஞ்சுட்டு…….. இப்போ அமைதியா வேசம் போடறியா…. அவள் மட்டும் அந்த இரும்புக் கம்பியால் அடி வாங்கி இருந்தால்……. நினைக்கவே……. அவனுக்கு உயிரின் ஆழம் வரை……… தூக்கிப் போட்டது………. கொஞ்சம் கையை அழுத்திப் பிடித்தாலே துடித்துப் போவாள்…………. அவன் மனைவி………. அப்படிப் பட்டவளுக்கு…….. ஏதாவது நேர்ந்திருந்தால் துடித்துக் கொண்டிருந்தான் உள்ளே………”

அவன் எறிந்ததை உணர்ந்ததை கீர்த்தி……..அவன் எறிந்தது என்னவென்று பார்க்க……… அதைப் பார்த்தவளின் கண்ணில் நீர் கரிக்க ஆரம்பித்தது………….. கணவனின் கோபம் உணர்ந்த போதிலும்…. கண்ணிரை அடக்க முடிய வில்லை…. தன்னை தன் வயிற்றில் உள்ள கருதான் காப்பாற்றி இருக்கிறது….. இல்லாவிட்டால்…. நினைக்கவே பயமாய் இருந்தது…. அந்த நிமிடங்களை… பாலாவின் கோபத்தை மானசீகமாக ஏற்றுக் கொண்டாள்…

இதற்கிடையே…………. மது கிடைத்த விபரம்….. அவளின் தற்போதைய நிலை எல்லாம்……………அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த்து.. மதுவின் தந்தை உட்பட

வினோத்…….கீர்த்திகா அருந்த்தி…ஜெகநாதனும் மதுவுக்காக மருத்துவமனையில் காத்திருந்தனர்………..

கீர்த்திகா……….. வினோத்திடம் மாலை மாலையாக கண்ணீர் விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள்…………எல்லாம் தன்னால் தான் என்று…….

கவி மற்றும் சிந்து வீட்டிலேயே இருந்தனர்……. இருவரும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டனர்……….. சிந்துவுக்கு மதுவைப் பற்றி எல்லாம் தெரியவில்லை…… ஆனால் தன் கீர்த்தி அக்கா… சாவின் விளிம்பினை தொட்டு வந்திருக்கிறாள் என்று மனம் பதறினாள்…. எல்லாம் தன்னால்தான்….. வர மாட்டேன் என்று சொன்ன கீர்த்தி தன்னால் தான் ….. தன் பிடிவாத்தினால்தான் வந்து இப்படி ஒரு பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டாள் என்று அழுது கொண்டிருந்தாள்……

கவிதான் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடி இருந்தாள்…

கவிக்கு கீர்த்தனா மேல் பயங்கர கோபம்…… கொஞ்சம் கூட அறிவில்லைதான் அவளுக்கு…. ஏன் இவளுக்கு புத்தி இப்டிலாம் போகுது….. பெரிய துப்பறியும் புலினு நினைப்பு அவளுக்கு….. வரட்டும் இருக்கு…….” . என்று மனதுக்குள் தோழியை வைதவள்….தோழி எந்த சேதாரமும் இல்லாமல் வந்ததில் பெரும் மன நிம்மதியிலும் இருந்தாள்

----------

மதுவின் நிலை கொஞ்சம் மோசமாவதைப் போல் இருக்க……. உடனடியாக அவளை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்த பாலா………… மேற்கொண்டு என்ன விசாரணை என்றாலும்…….மருத்துவமனையில் தொடரலாம் என்று………. மதுவை……….. கையில் ஏந்தியவன்……… ரகுவிடம் திரும்பி……….

“அவகிட்ட சொல்லி………மதுவுக்கு போடப்படும் போதை மருந்து எல்லாவற்றையும் எடுத்து வரச் சொல்லு………. டாக்டர்ஸ் கிட்ட காட்ட அதெல்லாம் வேண்டும்…. அவங்களுக்கும் அது உதவியா இருக்கும்” என்று கீர்த்தனா அருகில் இருந்தும் அவளிடம் பேசாமல்……. ரகுவிடம் சொல்ல……….

கீர்த்தனா மேலே மது இருந்த அறைக்கு ஓடினாள்………… எல்லாவற்றையும் எடுக்க………. எடுத்தபடி கீழே இறங்கியவள்………. ஏனோ சுமதியைப் பார்க்க வேண்டும் போல் தோன்ற……………அவளையும் பார்த்து விட்டு கிளம்பினாள்………

இதற்கிடையே…………… கணவன் அங்கு இல்லாததை உணர்ந்தவள்…………… தன்னை விட்டு விட்டு போய் விட்டானோ என்று ரகுவை நோக்க

“கீர்த்தனா…………..அவன்கிட்ட சொல்லிட்டு அவன் துணையோட பண்ணி இருந்திருக்கலாம்……… யோசிச்சு பாருங்க…….. அவனோட நிலைமையை……….. ஏற்கனவே வேதனையில் இருந்தவன்……. உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா……. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…………… பாலா காரில் இருந்து ஒலி எழுப்ப………………..

“நான் செய்தது மிகப் பெரிய தவறுதான்……… ஏதோ ஒரு வேகத்தில “ என்று இவள் பேசி முடிக்கும் முன் பாலா மீண்டும் ஹார்ன் அடிக்க………

“சரி வருகிறேன் ரகு…………” என்றபடி வெளியேறினாள்…………

காரின் அருகில் போகும் போதே பின்னால் உட்காருவதா…………கணவனின் அருகில் உட்காருவதா……….ஒற்றையா…..இரட்டையா போட்டுக் கொண்டு வந்தாள்………

பின்னால் மது படுக்க வைக்கபட்டிருந்தாள்……………

“பக்கத்துல உட்கார்ந்தோம்………… முறைத்தே கொன்னுடுவான்………..” என்று பின்னால் போக……….

முன் கதவைப் படாரென திறந்தான் பாலா…………முன்பக்கம் ஏறுமாறு உணர்த்தும் விதமாய்………..

கணவனை நிமிர்ந்து பார்க்க…..அவனோ சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான்………… கண்ணில் கோபம் மட்டும் மாற வில்லை…. பேசாமல் உள்ளே அமர்ந்தவளுக்கு…… உட்கார்ந்த உடனேயே மயக்கமும் வரத் தொடங்க………….காரில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரால் முகம் அலம்பி……………குடிக்க….. சிறிதளவு சரி ஆகி இருக்க………….சீட்டில் சாய்ந்தாள் கீர்த்தனா……….

பத்து நிமிடம் ஆகி இருந்திருக்கும்…………மது…………… பாலாவை அழைக்க ஆரம்பித்தாள்………… அவனுக்கு கேட்க வில்லை………..ஆனால் கீர்த்தனாவுக்கு புரிந்து பாலாவை அழைக்க……

”பாலா” என்று சொன்னதுதான் தாமதம்….

“என்ன” எரிந்து விழுந்தான் பாலா அவளிடம்

“இல்ல……….ம…மது கூப்பிடறாங்க” என்று அவன் கோபத்தில் பயந்து தயங்கிச் சொல்ல……… அவன் உடனே மாறினான்……..

கண்ணில் இருந்த கோபம் மாறி கனிவு வந்திருந்தது….……..

அதையும் கவனித்தாள் தான் கீர்த்தனா… ஆனால்…… மனம் அதிரவில்லை….கணவனை சந்தேகிக்க வில்லை….. யார் வந்தால் என்ன நடக்குமோ…தன் நிலை என்ன ஆகுமோ என்று நினைக்கும் போதெல்லாம் பதறும்….. பரிதவிக்கும் மனம் இன்று…. அந்த மதுவே வந்த போது…. பதற வில்லை….. தடுமாற வில்லை……..பரிதவிக்க வில்லை……… அவளுக்காக பரிதாபம் தான் வந்தது…… அதுமட்டும் இல்லை…. பாலா… மதுவின் காதலனாய் அவளுக்கு தெரியவில்லை……. தன் கணவனாய் மட்டுமே தோன்றினான்……. அதாவது கீர்த்தனா தன் கணவனை முழுவதும் தன்னவனாகவே பார்த்தாள்……. அவன் கோபம் முதற்கொண்டு……… ஆனால் அது எப்போது இருந்து மனதில் வந்தது என்றுதான் தெரியவில்லை…… மதுவின் அருகாமையில் மனம் அவளை அவளுக்கு உணர்த்தியது……..

கணவனின் காதலை……. இன்றல்ல…. நேற்றல்ல……. மது அருகில் இருந்ததால் என்றில்லை……. என்றோ முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்பதை அவள் உணர்ந்தாள்……. இல்லையென்றால் அவள் மனம்…. கணவன் காதலியின் அருகில் இருக்கும் போது பரிதவிக்க அல்லவா ஆரம்பித்திருக்கும்…..

பாலாவின் குரலில் தன்னை மீட்டாள்

மதுவிடம் பேசிக் கொண்டிருந்தான் பாலா……

“என்ன மது……… இன்னும் கொஞ்ச நேரம்தான்…. போயிரலாம்…….” என்று சொல்ல……..

“இல்லடா………காரை நிறுத்துடா……… எனக்கு உன் பக்கத்துல வரணும்……… எனக்கு நடுக்கமா இருக்கு……….. உன் கைய பிடிச்சுட்டே வரணும் போல் இருக்கு………. ” என்று சொல்ல……….

கீர்த்தனா கணவனை ’என்ன செய்ய’ என்று அவஸ்தையோடு நோக்க…………… அவனும் காரை நிறுத்தி இருந்தான்….. ஆனால் அவளைப் பார்க்காமலே………..

காரை நிறுத்தியதோடு இல்லாமல்……….அவனும் கீழே இறங்கி இருந்தான்……..

கீர்த்தனா……… அவனின் மனம் புரிந்தவளாய்???????????

அவளும் இறங்க ஆரம்பித்தாள்….. தான் பின்னால் போக……. மது முன்னால் வர………….முடிவு செய்தவளாய்…….

அதற்கும் முன் அவள் மனம் அடித்துக் கொண்டதுதான்……. இருந்தும்… பின் அவளாகவே……….. கேவலம் இந்த சீட்டின் உரிமைதான் எனக்குப் பெரிதா……... என்னவனின் மனதிலே இருக்கும் இடமே எனக்கு போதும் என்று மனம் தெளிந்து காரின் கதவில் கை வைக்க…….

அவள் கண்ணாளனோ………….. அவளுக்கான மனதின் இடத்தை மட்டுமல்ல………. அவனருகே அமரும் அந்த சீட்டின் உரிமையைக் கூட…………. வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லாத கஞ்சனாக என்றோ மாறி இருந்தான்……………

“எங்க இறங்குற………… நீ டிரைவ் பண்ணு…. நான் பின்னால போறேன்” என்று அவளிடம் குனிந்து பல்லைக் கடித்தபடி மெதுவாய்ச் சொன்னான்………… மதுவுக்கு கேட்காமல்

“இல்ல …. எனக்கு மயக்கம் வருகிற மாதிரி இருக்கு………. என்னால ட்ரைவ் பண்ண முடியமானு தெரியல……… நீங்களே ஓட்டுங்க” என்று தயங்கிச் சொல்ல

“நீ ஓட்டு…………. எதுலயாவது மோதி 3 பேரும் செத்தா கூட பரவாயில்லை…………..” என்றபடி அவளின் பதிலைக் கூட எதிர்பாராமல் பின்னால் அமர்ந்தான் பாலா………

அவன் வார்த்தை……….அவன் மனம்…………. அந்த நிமிடம் அவளுக்கு முற்றிலும் விளங்க தன் கணவனுக்கு தன் மேல் இருக்கும் காதல்,……………….. அவன் மேல் தனக்கு இருக்கும் காதலை விட பெரியதாகத் தோன்ற………… பொறமை கூட வந்து விட்டது தன் மீது அவனுக்கு இருக்கும் அவன் காதல் மீதே………..

“காரில் அவன் அருகில் உட்காரும் உரிமையைக் கூட மறுக்கிறான் என்றால்……… நினைக்கும் போதே மனம் ஆகாயத்தில் பறந்தது…………..

மதுவின் நிலை மனதில் வர……………. அடங்கியவளாய்…………….. மனதை அடக்கியவளாய் காரைக் கிளப்பினாள் கீர்த்தனா…………

…………………..

எப்படி ஓட்டி வந்தாள் என்று தெரிய வில்லை……………… ஆனால் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து விட்டாள்……….

கீர்த்தனா காரை விட்டு இறங்க வில்லை………… அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டாள்……….

பாலா அவளைக் கவனிக்கவே இல்லை…… தன்னோடு சாய்ந்திருந்த மதுவை ….. இறங்கி தூக்கியவன்……….. மருத்துவமனைக்குள் நுழைய…………. அவன் வருவதைச் சொல்லி இருந்த காரணத்தால்………. வினோத்தும் கீர்த்திகாவும்…………. வாயிலிலேயே காத்திருந்தனர்…………..

பாலாவின் கைகளில் இருந்த மதுவைப் பார்த்து………………. உள்ளம் பதற…….

”ம……து……………..” என்று கதற ஆரம்பித்து விட்டாள் கீர்த்திகா…………….

தன் தோழியின் தோற்றத்தை கண்களால் நிரப்பிய மது………. அது கொடுத்த பரவசத்தை…. சந்தோசத்தை…. கண்களாலே அலை பரப்பினாள்…………………….

“கீர்த்தி……………. “ என்று மட்டும் வாய் சொல்ல………மதுவுக்கு பேச்சு அடைத்தது…….. மேலும் வினோத்தை பார்த்து…………… கண்களாலே நன்றி சொல்ல…….. அதற்கு மேல் பாலா நிற்க வில்லை………..

வினோத் மதுவைப் பார்த்த பிறகு…………….. கீர்த்தனாவைத் தேட……… அவள் காணவில்லை…. பாலாவைத் திரும்பிப் பார்த்தால்……… அவன் அங்கேயே இல்லை………….கீர்த்திகாவும் அவனோடே சென்று விட்டிருந்தாள்.

கீர்த்தனாவும்………….. பாலாவுடம் வருகிறாள் என்றுதானே சொன்னான்……… என்று கார்களை நிறுத்துமிடத்திற்கு செல்ல…………….. அங்கு ஸ்டீயரிங்கில் தலை சாய்த்தபடி படுத்திருந்தாள் கீர்த்தனா…..

வினோத்………

“கீர்த்தி…கீர்த்தி” என்று அழைக்க பதிலே இல்லை………….

”கீர்த்திடா……..” என்று சத்தமாக அழைக்க

நிமிர்ந்து பார்த்தாள்………… வினோத்தை பார்த்தவுடனே ஏனோ அழுகை அழுகை யாக வர

“வினோத்” என்றபடி இறங்கியவள் அவன் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்

”ஏண்டா…….. இப்டி பண்ணினாய்…………. மனசெல்லாம் பதறுது……… உனக்கு ஏண்டா இந்த தேவையில்லாத வேலை…… உனக்கு ஏதாவது ஆகியிருந்தா…. நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்… எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல ” என்றவனிடம்

வேறு எதுவும் பேசாமல்

“எனக்கு பசிக்குதுடா…………. மயக்கமா வருதுடா…………… சாப்பாடு வாங்கிக் கொடுடா….. அதுக்கபுறம்….. எதுவா இருந்தாலும் பேசு….. இல்ல கேளு” என்று பரிதாபமாய் அவனிடம் சொன்ன போதே அவள் பாதி மயக்கத்திற்கு போக ஆரம்பித்தாள்

வினோத்துக்கு பாலா மேல் கோபம் கோபமாக வந்தது………..

மது ஆபத்தில் இருக்கிறாள் தான்…………… அதற்காக…………… இவளை இப்படியா விடுவது…………. இங்கு வந்த பின்னராவது….. என்னிடமாவது கீர்த்தனாவை பார்க்கச் சொல்லி இருக்கலாமே என்று மனமெங்கும் எரிய ஆரம்பித்தது………………….

மதுவுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப் பட………….. கீர்த்திகாவும்…….. அருந்ததியும்……… அருகில் இருக்க………….

மதுவையே பார்த்தபடி அமர்ந்திருந்தவன்……. சிறிது நேரம் கழித்து வெளியேறினான்….

மருத்துவரிடம் … அவளைப் பற்றி விசாரிக்கச் சென்றான்……

அவர்களும்…. ஒன்றும் ஆபத்தில்லை…….. போதை மருந்து பழக்கத்தில் இருந்து அவளை மாற்றினால்…. மட்டும் போதும்……. கொஞ்சம் மன ரீதியாகவும் ஆறுதல் மற்றும் சப்போர்ட் தேவை ….. என்று அவனுக்கு மன நிம்மதியை அளிக்கும் பதிலைச் சொல்ல……. பெருத்த மன ஆறுதலுடன் வெளியேறினான

வரும்போதே பிரதாப்பை பற்றி ரகுவிடம் விசாரிக்கவும் மறக்க வில்லை…………….

எல்லாம் ஓரளவு சரியான பின்னர்…….. மீண்டும் கீர்த்தனா ஞாபகம் வர …….. கூடவே கோபமும் வர…… அவளைத் தேடிச் சென்றான்………

அங்கோ

வினோத் எதிரே அமர்ந்திருக்க…… கீர்த்தனா ஏதோ பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்….

ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கவில்லை……

கீர்த்திகாவிடம்….அருந்ததியிடமும் மதுவின் நிலை பற்றி கேட்டு அறிந்த வினோத்……. கீர்த்தனா மதுவைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தனர்…… தவிர…. கீர்த்தனாவும் இப்போது நார்மல் ஆகி இருந்தாள்………. அருந்ததியும் கீர்த்தனாவை பார்த்து விட்டு….. அவளின் நிலை தெரிந்த பின்னர்தான் சமாதானமானாள்

அவர்கள் இருவரின் அருகில் சென்ற பாலா…

“வினோத்…. ஜான்சி ராணிக்கு……. இன்னும் நாலு இட்லி….. பூரி… இன்னும் என்னென்ன வகை இங்கு இருக்கோ அதை எல்லாம் வாங்கிக் கொடுத்து கொட்டிக்கச் சொல்லு….. ஏன்னா…. மேடம் இன்னும் என்னென்ன சாகசம் செய்யனுமோ…… யாரைக் காப்ப்பதனுமோ….. தெம்பு வேண்டாம்…. தென்…. சாப்பிட்டு விட்டு….. இப்போ அடுத்து எங்க போகப் போறாங்களாம்……” என்ற கணவன் கோபத்திலும் அவளைப் பற்றி நக்கலாகப் பேச அவளுக்கு புரை ஏறியது

வினோத்துக்கு பாலாவின் கோபம் புரிய…. இப்போது….. அவனுக்கு கீர்த்தனாவைப் பார்த்தபடி மெல்லிய புன்னகை வர……….

“என்னடா சிரிப்பு……. ஆனா ஒண்ணு…. இனி எங்க போறதா இருந்தாலும்……… அங்க போய் மாட்டிக்கிட்டு SMS பண்ணி என் உயிரை எடுக்கிறதை விட…. போறதுக்கு முன்னாடி எனக்கு SMS அனுப்பி விட்டு போகச் சொல்லு…….. நான் முன்னாடி போய் இருந்து தொலைவேன்ல………. ஏன்னா….. எனக்கு…….. அவள நினைச்சுட்டு ட்ரெஸ்ஸக் கிழிச்சுட்டு……. கீது… கீர்த்தினு…. சொல்லிக் கொண்டு பைத்தியகாரனாலாம் அலையலாம் ஆசை இல்ல…. அவளோட வாழனும்னுதான் ஆசை….. அதுனால எதுவா இருந்தாலும் முன்னாடியே சொல்லச் சொல்லு…. எனக்கும் போக வசதியா இருக்கும் என்று சொல்ல

வினோத்துக்கு அவன் கோபம் நியாயமாய்ப் பட…. இப்போது அமைதியாய் இருந்தான்….

ஆனால் கீர்த்தனாவோ…..வினோத்திடம்…

“போற இடம் தெரிஞ்சா சொல்லாம போவாங்களா….. பெருசா….பேச வந்துட்டாரு…….. நீயும் கேட்டுட்டு இருக்க” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல…….

வினோத்துக்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை……… ஆனாலும் அவன் அடக்க முயல…… அது பாலாவுக்கு புரிய……

“ஏய்….. என்ன சொல்றா…… என்னைப் பற்றி……… எதுக்கு சிரிப்பை அடக்குற அவ பேசுவா…. ஏன் ஆடக் கூட செய்வா….. ஏன்னா…… என்னைத்தான் அவ கைப்பிடிக்குள்ள வச்சுருக்காள்ள……………..இன்னும் பேசுவா… இதற்கு மேலயும் பேசுவா…….” என்றவனுக்கு… அவளின் மேல் பைத்தியமாய் இருக்கும் தன் நிலை பிடிக்காமல்………

“நான் வீட்டுக்கு போறேன்…. அவ வந்தா கூட்டிட்டு போவேன்….. இல்லை நீயே கூட்டிட்டு வா…..” என்ற படி நகர…..

“பாலா…நானும் வருகிறேன்….” எனச் சொல்ல……. பாலா அவளுக்காக நின்றான்…..

“ஆனா…… இன்னும் ஒரே ஒரு தோசை மட்டும் சாப்பிட்டு வந்துடறேன்…ப்ளீஸ்….” என்க சத்தியமாய்… பாலாவுக்கு கோபத்தை எப்படி அடக்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை….

“வினோத்…… நீயே கூட்டிட்டு வா…. உன் செல்ல குறத்திய……… இங்க நின்னேன்…. என்னாலேயே கன்ட்ரோல் பண்ண முடியாம…. அடிச்சுற போறேன்….. என்று கிளம்பி விட்டான்……

வினோத்துக்கே அவன் கோபம் கொஞ்சம் அச்சம் தர

“ஏன் கீர்த்தனா……. அவன இந்தப் பாடு படுத்தற……. நான் சாப்பாடை பார்சலா கூட வாங்கித் தருகிறேன்…நீ முதலில் இடத்தை காலி பண்ணு……..” என்று பாலாவின் கோபத்தில் பயந்து சொல்ல….

“ப்ச்ச்…… சும்மா இரு…… தோசை ஆர்டர் பண்ணு….. அவர் இருப்பாரு…….. நான் வர்றேன்னு சொல்லியும் விட்டுட்டு போய்டுவாரா என்ன……” என்றபடி சாப்பிட ஆரம்பிக்க……

”தைரியம் தான் உனக்கு” என்ற படி தோசை வாங்கி வர……..

அதைச் சாப்பிட்ட படியே…….

“எனக்கு பசி அடங்கிருச்சு வினோத்….. ஆனா இப்போ சாப்பிடற தோசை எதுக்கு தெரியுமா…….. கார்ல வச்சு……… என் புருசன்… சில பல…. மண்டகப் படி….. அட்வைஸ்….. ந்னு….. என் காதில் ரத்தம் வழியற மாதிரி லெக்சர் கொடுப்பாரு……….. அதுக்குதான் எக்ஸ்ட்ரா எனர்ஜி…… என்ற போதே

வினோத்தை ஹாஸ்பிட்டலிலே இருக்கும்படி சொல்ல வந்தவன்……

அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்…

வினோத்தும் கவனிக்க வில்லை…….. கீர்த்தியும் கவனிக்க வில்லை…. வினோத் அவள் பேசுவதை சிரிப்புடன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்ததால்…. பக்கவாட்டில் சற்று தள்ளி நின்ற பாலாவைக் கவனிக்க வில்லை…

“உனக்கு தெரியுமா வினோத்…. ஆஃபிஸ்ல…. .இவரு செமினார் செஸன் வச்சார்னு வச்சுக்கோ….. அழுதுட்டேதான் போவேன்….. ஆனாலும் வெளில.. …நல்ல புள்ளைனு பேர் இருக்கா நமக்கு……. அப்டியே இவர் சொல்றதை கவனிக்கிற மாதிரி சீன் போட்ருவேன்…. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா…. நான் அழுதுட்டே போன…..கவி மட்டும் சந்தோசமா வருவா” என்று நிறுத்த

அப்போதுதான் வினோத் பாலாவைக் கவனிக்க…..

“கீர்த்தி…… கவி பற்றி இப்போ எதுக்கு” என்று அவளை அடக்க முயல…….

”உனக்குதான் …. கவி பாலாவை சைட் அடிப்பான்னு தெரியும்ல…... அதுதான் மேடம் ஹேப்பியா வருவா……. வந்து நோட்ஸ்லாம் எடுக்க மாட்ட………….. அவ பாலாவைப் பார்க்க…. நான் கவியப் பார்க்க… செமினார் செமையாத்தான் போகும்….. இப்போதும் நான் கவியத்தான் பார்ப்பேன்…… கண்ணை என் ஆளு மேல வச்சேனு சொல்லி…..அவள மிரட்டியே பார்க்கவே விட மாட்டேன்ல……… ஆக மொத்தம்…. இவர் எடுத்த செமினாரையே கவனித்ததே இல்லை…. இன்னைக்கு மொத்தமா மாட்டிகிட்டேன் என்று போலியாக வருத்தப்பட்டவள்….திடிரென

“ஆனா வினோத்… இப்போதான் மைதிலியோட ஃபீலிங்ஸ்லாம் புரியுது……. ராகவ் ஜாகிங் போனாலே ஏன் டென்சன் ஆவாங்கன்னு…… எனக்குனு வரும்போதுதாண்டா தெரியுது….” என்று சந்தோசமாக இருக்கும் போது மட்டுமே தன் தாய் தந்தையை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கத்தில் பேச ஆரம்பித்தாள்…..

நீண்ட நாள் கழித்து………… தாய்..தந்தை நினைவுகளில் முடங்காமல்…………….. அவர்களைப் பற்றி மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாள்….

மனம் முழுவதும் சந்தோசம் மட்டுமே இருக்க…….. பட பட பட்டாசாய் குறும்புத்தனமே நிறைந்த தன் உண்மை உருவுக்கு முற்றிலுமாய் மாறி இருந்தாள் கீர்த்தனா….

அதற்கு மேல் பாலாவும் அவளைப் பேச விட வில்லை…… அவர்களின் முன்னே வந்து நின்றான்…..’

கீர்த்தனாவுக்கு அவனைப் பார்த்ததில் பேச்சே நின்று விட்டது…..கவியைப் பற்றி கேட்டிருப்பானோ என்று…

‘வினோத்.. எப்டிடா… இவ என்ன பேசுனாலும் ரசிச்சு ரசிச்சு கேட்பீங்களா…. நீ…. உங்க வீட்ல…… இவ வீட்லனு…. நல்லா வளர்த்து விட்டு…. என் தலையில கட்டி விட்ருக்கீங்க….” எனக் கத்த ஆரம்பித்தவனிடம்

வினோத்துக்கும் கோபம் வந்து விட்டது…..

“யாருடா கட்டி விட்டது……. நீயேதான் தலையக் குடுத்துட்ட” என்று கீர்த்தனாவுக்கு சப்போர்ட் செய்ய… நினைத்துப் போக…. அதுவே தப்பான வார்த்தையாக வர…

கீர்த்தனா முறைத்தாள்……… பாலாவை விட்டு விட்டாள்… வினோத்தை பிடித்துக் கொண்டாள்…

”என்னடா…. அவர் தலையில கட்டி விட்டுடீங்கன்னு சொல்கிறார்… நீ… என்னடா வென்றால்…. தலைய அவரே குடுத்துட்டாருன்னு சொல்ற…’ உன்னை என்று அவனை அடிக்கப் போக…

பாலா…. வினோத்தை அடிப்பதற்கு முன் அவளை இழுத்துக் கொண்டு ………….அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனாய்… வினோத்திடம்…. அவனை அங்கேயே தங்குமாறு சொல்ல

“அய்யோ விடுங்க பாலா…. கையக் கூட கழுவல…..” என்று சொல்ல…. அவனும் விட……. கை கழுவச் சென்றாள்……

பாலா வினோத் அருகில் தான் நின்று கொண்டிருந்தான்……

வந்தவள்… வினோத்திடம்….

‘உனக்கும் ஹாஸ்பிட்டலுக்கும்…. செம்ம ராசி போல….. ஹாஸ்பிட்டல்தான் உன்னோட ரொமான்ஸ் ஸ்பாட்டாடா” என்று வம்பும் இழுத்தவளிடம்..

வினோத் கண்களால் முறைக்க…

பாலா தன் தலையிலடித்தபடி அவளைக் கூட்டிச் சென்றான்…

ஆக மொத்தம்……. பட்டாம்பூச்சியாய் இருந்தவள்…. தனது சிறகுகளை எல்லாம் ஒடுக்கி…………. கூட்டுப் புழுவாய் தன்னை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்து………கொஞ்சம் கொஞ்சமாய் மாறி………..வெளியே வந்தவள்……..இன்று மீண்டும் சிறகுகளை எல்லாம் விரித்து பறக்கவும் ஆரம்பித்து இருந்தாள்………. முன்னால் கூட சாதாரண சிறகுதான்…… ஆனால் அது இப்போது கணவனின் காதலில் முளைத்த புதிய காதல் சிறகுகள் அல்லவா………………. வேகமும்……… துள்ளளும்……….. குறும்பும் அதிகமாய்த்தான் இருந்தது……………..

என்ன ……………… பாலாவின் நிலைதான் பாவம்………….. அவளின் குறும்புத் தனத்தில் இனி என்ன செய்யப் போகிறானோ…………. ஆனாலும் தலைவியை அடக்கும் வழி தெரியாத தலைவனும் உண்டா என்ன…………. இந்தத் தலைவனும் சமாளிப்பான்………… என்று நம்புவோம்

1,697 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page