என் உயிரே !!! என் உறவே ??? - 54

அத்தியாயம் 54:


திடிரென்று விழுந்த ரெட் சிக்னலில் பாலா சட்டென்று ப்ரேக் பிடிக்க………அதனால் கார் ஒர் ஆட்டத்துடன்… கீரீச் என்ற சத்த்துடன் நின்றது……. சேய்ய் என்றபடி……….பச்சை விளக்குக்காக காத்திருக்க ஆரம்பிக்க…………..

அவனது மொபைலில் அழைப்பு…………..கீர்த்தனாவாக இருக்குமோ என்று எடுத்தான்……… இப்படி அலைய விடுகிறாளே……என்று கோபமாய் எடுக்கப் போனான்………. ஆனால் போனில் ரகு……

இவன் என்ன திடீர்னு………… மதுவைப் பற்றி ஏதாவது தெரிந்து விட்டதா……….. மனம் சற்று பரபரத்த்து…………….. போனை அட்டெண்ட் செய்ய

”பாலா ஃப்ரியா இருக்கியாடா” என்று ஹலோ கூட சொல்லாமல் பேச ஆரம்பித்தான் ரகு…… மதுவைப் பற்றி விசாரிக்கும் அவன் தோழன் ரகு

”சொல்லுடா’ என்று பேச ஆரம்பித்தான்….

“என்ன பாலா…….ஒரு மாதிரி பேசுற…….” ஏதாவது பிரச்சனை என்று துப்பறியும் நிபுணனாய் அவன் கேட்க…

“இல்லைடா…. இது வேற பிரச்சனை…………..என்ன போன் பண்ணியிருக்க……….மதுவைப் பற்றி………ஏதாவது” என்று இழுத்தான்…..

“ஆமாடா……ஒரு குட் நியூஸ்” என்றபோது

பாலா சந்தோசமாக

“மது… மது இருக்கிற இடம் தெரிந்து விட்ட்தா…..இல்ல ஏதாவது நமக்கு சாதகமா விசயம்” என்று வேக வேகமாக கேட்டான்……….

“ஆமாடா………… ஊட்டில ஒரு நம்பர்ல இருந்து பேசி இருந்தாங்கன்னு சொன்னேல………. அந்த நம்பர்………. அது இப்போ திரும்ப வேண்டும் என்று ரிக்வெஸ்ட் போட்ருகாங்க….US la இருந்தானாம்…..இப்போ இங்க செட்டில் ஆகிட்டானாம் திரும்பவும்…….. அவனோட பிஸ்னஸுக்கு அவன் ஏற்கனவே வச்சிருந்த நம்பர் வேண்டும் என்று…..ஸோ நாம அத விசாரிச்சா………அந்த பொண்ணு யாருனு தெரியும்…. அத வைத்து மதுவையும் ட்ரேஸ் பண்ண்லாம டா……”

“ப்ச்ச்……. இப்போ கூட மதுவைப் பற்றி கிடைக்கவில்லை எதுவும்………. சரி பார்க்கலாம்….” என்று சொன்ன பாலாவிடம்,

”டேய் என்ன பார்க்கலாம்…….கிளம்பி வா……….அந்த அட்ரெஸில் உடனே போய் விசாரிக்கலாம்………… “ என்று அவசரப் படுத்தினான் ரகு………….

”ஹ்ம்ம்ம்… ஆனா…..கீர்த்தனா……. என் மனைவி…….. ஃப்ரெண்ட் வீட்ல இருக்கா…. அவள பிக் அப் பண்ண போய்ட்டு இருக்கேன்… .அவள வீட்ல விட்டுட்டு வருகிறேன்” என்று சொல்ல

“சரிடா……. நீ கால் பண்ணு………… இப்போ எந்த ஏரியால இருக்க…………”

”அண்ணா நகர் டா….. என்று சொன்னவன் இந்த ஏரியா தெரியுமாடா உனக்கு…. கொஞ்சம் லேண்ட் மார்க் சொல்லுடா…. சீக்கிரம் போகனும்….” கீர்த்தி அனுப்பிய முகவரியின் ஏரியாவைச் சொல்ல…………….

”தெரியுமே……. என்று லேண்ட் மார்க் எல்லாம் சொன்னான் ரகு…. ஒகேடா………… நானும் பக்கதுலதான் இருக்கேன்…………….. என்றவன்…………. துப்பறியும் மூளை அல்லவா…

”டேய்…………. அது பிரதாப் வீடு இருக்கிற பக்கத்து தெருடா………….. “ என்றான்…….

“ஆமாடா……….. அவன வேற எதுக்கு …………… இப்போ ஞாபகப் படுத்துற………….”

”சொன்னேண்டா……………………. “ என்ற படி போனை வைத்தான்

மீண்டும் கீர்த்தனாவுக்கு போன் செய்தான்………பதிலில்லை.. கீர்த்தனா மேல் உள்ள கோபம் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது அவனுக்கு

மதுவைப் பற்றி தகவல் தெரிந்தும் உடனடியாக போக முடியவில்லை …. எல்லாம் இவளால்……. போனை எடுத்தாலாவது ரகுவோடு போய் விசாரிக்கலாம்… என்றால்……….. இன்னைக்கு இருக்கு இவளுக்கு……. என்னை மட்டும் போன் எடுக்க வில்லை என்றால்……. அம்மா..அப்பா ஆக்ஸிடெண்ட்…..அது முதல் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தாலோ…. இல்லை போன் எடுக்காமல் இருந்தாலோ………..பயம் வருகிறது… அட்லீஸ்ட் ஹலோனு ஒரு வார்த்தை…. இல்லை மெஸேஜ் போடனும்னு அதிகாரம் பண்ணத் தெரியுது……… அதே மாதிரிதான் எனக்கும் இருக்கும்னு இவளுக்கு தெரியாதா……. அவ வச்சதுதான் சட்டம்…….. எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு…” என்று

கொதி நிலையில் வந்து கொண்டிருந்தான்….

----------------

கையில் வைத்திருந்த ரத்தக் கறை படிந்திருந்த அந்த கம்பியை சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்த பிரதீப்………. அதை கீழே போட்டு விட்டு……. மதுவின் அருகில் வந்தான்…………..

அழக் கூட முடியாமல் இருந்த மதுவை நிமிர்த்தினான்….

“ஏண்டி……………என்னை திரும்ப திரும்ப கொலை பண்ண வைக்கிர…. நான் என் கீர்த்தி கூட வாழனும்தானே நினைத்தேன்…………… அப்போ அவளுக்கு ஆதி கையால தாலி கட்ட வைத்து……….. அவன் கொலை பண்ண வச்ச……….இப்போ பாரு……. இன்னொரு கொலை………….. மறுபடி ஜெயிலா………. என்னை என் கீர்த்தியோட வாழவே விட மாட்டியா……………. இனி நான் எப்படி கீர்த்தியோட வாழுவேன்…………… ஆனா விட மாட்டேண்டி…… முதலில் கூட………..அவ தனியா இருந்தா……. ஆனா அவ இப்போ இன்னொருத்தனோட சுத்திட்டு இருக்கா……….. அவளுக்காக ஒருத்தன் உயிர விட்ருக்கான்……..ஆனா அவ இப்போ…………. பாவம் ஆதி…………. இவ காதல நம்பி செத்து போய்ட்டான்…….. என்று வருத்தம் வேறு பட்டான்……

கீர்த்தியைப் பற்றி அவன் சொன்னதில் சந்தோசம் தான் மதுவுக்கு ……….. ஆனால் தற்போது உள்ள சூழ்னிலையில் சந்தோசப் படக் கூட முடியவில்லை…………

“அவ மேல இருந்த காதல்ல.. இனி அவ இன்னொருவனை பார்க்க மாட்டாள்………… அது போதும்னு நினைத்து ………அவள விட்டுடேண்டி………….. என் கூட வாழலேனா கூட பரவாயில்ல……….. வேற யாரும் அவள நெருங்க முடியாதுன்னு……… ப்ச்ச்…………. ஆனா இப்போதானெ தெரியுது…… ஆதி இல்லேனா இன்னோருத்தன்,….. அவன் இல்லேனா இன்னொருத்தன்னு போற ஆளுன்னு………. இனி அவ எவன கல்யணம் பண்ணினாலும் பண்ணி இருந்தாலும்… அவள அனுபவிச்சுட்டுதாண்டி ஜெயிலுக்கு கூட போவேன்……… நான் கூட நினைத்தேன்……….. உன் ஆளு பாலா அவ கூடவே சுத்துறானே……….. நீயும் வேறு இல்லை………உன்னை கழட்டி விட்டுட்டு அவ கூட ஜாயின் அடிக்கப் போறானோனு நினைத்தேன்……… பரவாயில்லை……..உன் மேல பெரிய காதல்தான் அவனுக்கு………….. என்ன உன்னைதான்