என் உயிரே !!! என் உறவே ??? - 53

அத்தியாயம் 53:

கீர்த்தனா ப்ரதாப்பையே பார்த்தபடி நின்றிருந்தாள்.... அந்த பொட்ட்டிக் ஷாப்பில் இருந்து வெளியெறியவனை சினேகமாய் பார்த்தபடியே போனை அழுத்த தொடங்கினாள்........அவன் கீர்த்தனாவை எல்லாம் கவனிக்கவே இல்லை…… கீர்த்திதான் பார்த்துக் கொண்டிருந்தாள்……..ஆனால்..... அவன் முகம் திடிரென எதையோ பார்த்து மாற......கீர்த்தியும் அவன் பார்வை போன திசையை நோக்க..... அங்கு ஒரு காதல் ஜோடி நின்று கொண்டிருந்தது....... அவள் தோள் மேல் கை போட்டிருந்தபடி அந்தக் கடையில் நின்று பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தனர்…. இவள் நல்லவன் நினைத்துக் கொண்டிருந்தவன் என்ன செய்தான் என்றால்... ஜோடியாய்…சந்தோசமாய் நின்ற அவர்களைப் பார்த்தவனுக்கு …என்ன ஆனதோ தெரியவில்லை......... அவர்களின் இடது புறமாக இருந்த அந்த கடையின் பலகையின் வைத்திருந்த பொருட்களை எல்லாம் தட்டி விட...அது அந்தப் பெண்ணின் காதலனோ..கணவனோ அவன் மேல் விழ....சட்டென்று நகர்ந்தான் அந்தப் பெண்ணை விட்டு.......பார்த்தால் தெரியாமல் தள்ளி விட்டது போல் தோன்ற…. கீர்த்தனாவுக்கு மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் அது அவன் வேண்டும்னெறே செய்த செயல் என்று புரிய.......

சற்று முன் அவனைப் பற்றி மனம் நினைத்த நினைவுகளை எல்லாம் வாபஸ் வாங்கியவளாய் விழிகள் அதிர்ச்சியில் நிலைத்திருந்தன.......... அவனிடம் ஏதோ தவறு உள்ளது என்பதை உறுதி செய்தவளுக்கு வேறு என்ன செய்வது என்றே தோன்ற வில்லை...... அவளாக போய் அவனிடம்... அன்று உன் கூட இருந்த பெண் யார் என்றா கேட்க முடியும்.... என்ன செய்வது... என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த பெண்ணின் காயங்கள் நிறைந்த...கண்ணீர் கறை படிந்த முகமுமே மனதில் நிற்க... ஒருவேளை கடவுள் அவளுக்கு கொடுத்த அடுத்த வாய்ப்போ....ஒரு மகளாய்.. அன்று தாயின் பேச்சைக் கேட்கப் போய்....அவர்களை இழந்த நிலை மனதில் வருத்தம் தர....... இன்று தாயாய் அவள் மாறி இருந்த நிலையில்.... இப்போதைய சூழ்னிலையில்.. இது தேவையா என்று யோசிக்க....அவள் மனமோ....கீர்த்தி மறுபடியும் தவறு செய்யாதே....ஒரு முறை நீ செய்த காரணத்தால் உன் தாய் தந்தையை இழந்தாய்... மறுமுறை கிடைத்த வாய்ப்பை விடாதே..... உனக்கு ஒன்றும் ஆகாது… உன் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது… மனம் அடித்துச