அத்தியாயம் 52:
கீர்த்திகா அடுத்த இரண்டு நாட்களில் …………. தனது ஊருக்கு கிளம்பினாள்…….. அவளை பயணம் அனுப்ப வந்த வினோத் பண்ணிய அலம்பலைப் பார்த்த கவியும்…..கீர்த்தியும் அவனை ஓட்டுவதையே பொழுது போக்காக மாற்றி விட்டிருந்தனர் இப்போது…….
அது மட்டுமில்லாமல்……… கீர்த்தியிடம் ஏதும் விசாரிக்காமாலே
பாலா-கீர்த்தனாவின் நடவடிக்கைகளிலே…... அவர்கள் இருவரும் பழகும் விதம் பார்த்தே……. கவி மற்றும் வினோத்துக்கு அனைத்தும் புரிய………. அவர்களும் தங்களுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டனர்………..
இப்படி இங்கு ஒவ்வொருவரும் சந்தோசத்தில் இருக்க……..
கீர்த்திகாவை ஓரளவு தன் பார்வை வட்டத்தில் வைத்திருந்த பிரதாப்புக்கு…அவள் தோற்ற மாற்றம்……… அவனுக்குள் இருந்த அவள் மீதான வெறியை மீண்டும் கிளப்ப……. அவளை மீண்டும் தொடர ஆரம்பித்து இருக்க…. அத்துடன் அவளை வினோத்தோடு சேர்ந்து சில இடங்களில் பார்க்க……….. வெறிப்பிடித்தவனாய் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க தொடங்கியிருந்தான்……
---------------------
நாட்கள் வேகமாகச் செல்ல…………… கீர்த்திகா-வினோத் நிச்சய நாளும் நெருங்கியது………… கீர்த்தனா,சிந்து என இளைய பட்டாளங்களும்………..பெரியவர்கள் என அனைவரும் ஒரு வாரத்திற்கு முன் கிளம்ப……… வினோத்தும்….பாலாவும் குறித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கிளம்புவதாக இருந்தனர்……. இருவரும் அவரவர் வேலை நிமித்தமாக…….கவி திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி ………….இந்த விழாவிற்கு வர வில்லை…
கீர்த்தனா மற்றும் பாலா வருவதால்….. கீர்த்திகா….அவளது அறையில் இருக்கும் அவளும்…..மதுவும் சேர்ந்து இருக்கும் புகைப் படத்தைக் கூட கழற்றி விட்டிருந்தாள்….
முந்தின நாள்……. அனைவரும் அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாக……. சிந்து மட்டும் வீட்டிற்கு தூரமாக இருக்க…………. கீர்த்தனாவும் அவளுடனே தங்க…….. மற்ற அனைவரும் கிளம்பினர்……..
அப்போதுதான் கீர்த்தனாவுக்கும் தனக்கு ஏன் இன்னும் வர வில்லை என்ற ஞாபகம் வர….. உள்ளம் படபடத்தது……. நாள் கணக்கை எண்ணிப் பார்க்க கிட்டத்தட்ட 10 நாட்கள் தள்ளியிருந்தது……….. அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது……… தனக்கும் பாலாவுக்குமான உறவின் அத்தாட்சியாய்…… அவளோடு கலந்த அவன் உயிர் அவளுக்குள் ஒரு ஜீவனாய் உருவாகிக் கொண்டிருப்பதை அவள் உணர………….. உணர்ந்த நொடியே இரண்டு எண்ணம் தோன்றியது……. ஒன்று தாய்மடி… அது கிடைக்காது……… மற்றொன்று ….அப்போதே பாலாவைப் பார்க்க வேண்டும் ………. அவனோடு பேச வேண்டும் போல் இருக்க……. அவனுக்கு உடனே போன் செய்யப் போனாள் கீர்த்தனா…………
போனை எடுத்தவளுக்கு இன்னும் 3 நாட்கள் கழித்து வரும் திருமண நாள் நினைவுக்கு வர…… தங்கள் திருமண நாளுக்கு இந்தச் செய்தியையே அவனுக்கு பரிசாக்க் கொடுக்க வேண்டும் என்ற முடிவில்……. சொல்ல வந்த விசயத்தை சொல்லாமல்..ஏதேதோ பேசியபடி வைத்தாள் போனை………
மனமெங்கும் உற்சாகமாய் வலைய வந்தாள் கீர்த்தனா…….அது அவளுக்கு முகத்திலும் பரவ………..புதிய தேஜசைக் கொடுத்தது…………. அன்று இரவே பாலாவும்…வினோத்தும் அங்கு வந்து சேர்ந்தனர்……..
இருவரும் வந்து வீட்டினுள் நுழையும் போது… கீர்த்தனா…. வெளி வராண்டாவில் உட்கார்ந்து கீர்த்திகாவின் கையில் மருதாணி போட்டுக் கொண்டிருக்க………. சிந்து…… உள்ளே டிவியில் ஐக்கியமாகி இருந்தாள்…………
பாலாவைப் பார்த்த உடனே கீர்த்தனாவின் மனம்……..தன் நிலையை உடனே சொல்லத் துடிக்க
துடித்த மனதை அடக்கியபடி………. அவனைப் பார்க்க………
மனைவியின் கண்கள் அவனிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்த பாலா…… என்ன என்பது போல் புருவம் உயர்த்த…….. ஒன்றுமில்லை என்று அப்போது சமாளித்தாள் கீர்த்தி…………
வினோத்தைப் பார்த்த கீர்த்திகாவுக்கு……….. நாணம் மேலிட…….. அவனைப் பார்க்காமல் தவிர்க்க…..
வினோத் அவள் பார்வை வரம் கிடைத்தால் தான் உள்ளே போவேன் என்று அங்கேயே அமர…….. பாலா மட்டும் வீட்டிற்குள் நுழைந்தான்…
கீர்த்தனா…. போட்டுக் கொண்டிருந்த மருதாணியை பாதியில் விட்டு விட்டு போக முடியாமல் அதைத் தொடர ஆரம்பித்தாள்……. பாலா உள்ளே சென்ற பின்னாலும் அவனோடு போகாமல்
கீர்த்தனா மட்டுமே இருந்ததால்…….கீர்த்திகாவிடம் வினோத் தன் சில்மிசத்தை காட்ட ஆரம்பித்தான்…
”கீர்த்தி” என்று அவன் அழைக்க
இரண்டு கீர்த்தியும் திரும்பிப் பார்க்க…………..
விழித்தான் வினோத்…… பின் சுதாரித்துக் கொண்டு……….
”கீர்த்தி செல்லம்………… நீ மருதாணி போடுறதுல மட்டும் கவனமா இரு……” இப்போதைக்கு வேற எங்கேயும் கவனம் வைக்காதே….” என்று கூற………
”அவனிடம் உனக்கு என்னடா இங்க வேலை……உள்ள போ…….” என்றபடி
கணவனைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்………. வினோத் பேச்சின் அர்த்தம் எல்லாம் அவளுக்கு உறைக்கவில்லை… கீர்த்திகாவிற்கு வேக வேகமாக மருதாணி வரைய ஆரம்பித்தாள்…..
வினொத்திடம் எந்த வித்தியாசமும் தோன்றாமல் போக…. கீர்த்தனா தன் வேலையில் மீண்டும் கவனமாக ஆரம்பித்தாள்
வினோத் கீர்த்திகாவின் அருகில் நெருங்கி அமர்ந்து……..அவளது இடையில் பின்னால் இருந்து மெதுவாய் அணைக்க…..கீர்த்திகா…. நெளிய ஆரம்பித்தாள்…..
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. கீர்த்தி…… ஆட்டாதீங்க” என்றபடி….. நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கீர்த்தனா தன் வேலையிலே கருத்தாக இருந்தாள்…. கணவனைக் காணும் அவசரத்தில்…….
இரண்டு முறை தன்னைக் கட்டுபடுத்திய கீர்த்திகா… மூன்றாம் முறை…. வினோத்….. என்று கத்தியே விட்டாள்……..’
வினோதுக்கோ……..
“மானத்த வாங்கிட்டாளே குறத்தி முன்னால்” என்று அசடு வழிய….
கீர்த்தனாவுக்கும் வினோத்தின் திருவிளையாடல் புரிய…….
வினோத்தை முறைத்தாள்………..
வினோத் கொஞ்சம் தைரியம் வந்தவனாய்…..
”என்ன முறைக்கிற….. உன் ஆளு வந்துட்டான்ல……….அவனப் போய் என்ன ஏதுன்னு பார்ப்பியா… மருதாணி வைக்கிறாளாம்… போ போ இடத்தை காலி பண்ணு…… சின்ன பசங்களுக்கெல்லாம் இங்க வேலை இல்ல… சிந்துவோட போய்ச் சமத்தா உட்கார்ந்து டிவி பாரு… இல்ல பாலாவைப் போய்ப் பார்… இப்போ என் ஆளை விடு” என்று மிரட்டுவதைப் போல் கூற
“கீர்த்தி நான் அப்புறம் வர்றேன்… இல்ல….. இவன உங்க முன்னாலேயே நாலு அடி போட்டாலும் போட்ருவேன்…… அப்புறம் பாலாகிட்ட திட்டு வாங்கனும்….. எல்லாரும் இருக்கும் போது இவன அடிக்கக் கூடாதாம்… சப்போர்ட் வேற இவனுக்கு…… டேய் நான் உனக்கு சின்ன புள்ளையா…… உன்னைப் போய் நம்பி உட்கார்ந்திருந்தேன் பாரு… என்னைச் சொல்லனும்….. நடத்து….நடத்து…… ரொம்ப நாள் கழிச்சு கீர்த்திகாவா பார்க்கிறாய் என்பதால் விட்டுட்டு போறேன்” என்றபோது வினோத்
“ஆமா…… நீ சின்ன பாப்பாதான்……. பாலா என்னை அடிக்கக் கூடாதுன்னு எதுக்குச் சொல்லியிருப்பான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்…… எனக்கு சப்போர்டாலாம் இல்ல,… அத விடு…. நான் கீர்த்தி பக்கத்துல உட்கார்ந்த போதே….. நீ எழுந்து போயிருக்க வேண்டும்…. உள்ள உக்காந்துருக்காளே சிந்து அவ கூட அத பண்ணியிருப்பா………. போ போ நீ இன்னும் வளரணும்” என்று கூற……..கீர்த்திகா இருவரையும் பார்த்து சிரிக்க
“ச்சேய்,,,,, அவன் உட்கார்ந்த உடனே நான் இடத்தை காலி பண்ணியிருக்கனும்… ராஸ்கல்……. என் முன்னாடியே…………” என்றபடி பாலா சொன்னதை எல்லாம் காற்றில் விட்டவளாய்……. அவனை இரண்டு அடி வைத்து விட்டு அவர்களுக்கு தனிமை தந்தபடி………….பாலாவை நோக்கிப் போனாள்……………….
பாலா குளியலறையில் இருக்க…. திரும்பி வந்தவள்
சிந்துவோடு படம் பார்ப்பதில் ஐக்கியமானாள்………….
பாலா வெளியே வரும்போது….. கீர்த்தனா………. சிந்துவோடு ஏதோ பேசிக் கொண்டிருக்க………அவளையே பார்த்த படியே அவன் வந்தான்…. அவள் முகத்தில் ஏதோ புதுப் பொலிவு வந்தது போல் தோன்றியது அவனுக்கு……..
அவன் அவளை நோக்கி வரும்போதே கீர்த்திகாவின் சித்தி………அவனை சாப்பிட வருமாறு அழைக்க…. வேறு வழி இல்லாமல் அவர் பின்னால் போய் விட்டான்……….
கீர்த்திகாவின் தங்கை…. அவள் கணவன் என்று எங்கும் இளமைக் கூட்டமாக வழிய………. அன்று இரவு அனைவருக்கும் உறங்க இரவாகப் போக………. ஒரு வழியாக….. இரவு 2 மணிக்கு மேல்தான் அனைவரும் உறங்கினர்………..
ஆண்கள் அனைவரும் மாடியில் உறங்க……. பெண்கள் அனைவரும்………… கீழே உறங்கினர்………….
ஆக மொத்தம் பாலாவால்…. கீர்த்தனாவை நெருங்கவே முடியவில்லை……….. பொறுக்க முடியாமல்……….. கீர்த்தனாவிற்கு மெஸேஜ் அனுப்பி அவளை மொட்டை மாடிக்கு வரச் சொல்ல………..கீர்த்தனாவும் கிளம்ப……இருவரும் யாருக்கும் தெரியாமல் மேலே போக……… அங்கு…………..அவர்களுக்கு முன்னே…..
வினோத்-கீர்த்திகா இருவரும் பேசிக் கொண்டிருக்க………….. தலையிலடித்துக் கொண்டாள் கீர்த்தனா………….
“அடப்பாவி…………. இப்படி தூள் கிளப்புறானே…….. ” என்று பெரு மூச்சு விட்டவளாய்
“சரி வாங்க…. 2 மாசம் போன்லயே பேசி தவிச்சுப் போயிருப்பான் போல…….அவங்க என்ஜாய் பண்ணட்டும்….என்றவள்…
வினோத் வந்த போது கீர்த்திகாவிடம் அவன் நடந்துகொண்ட முறையைச் சொல்லி……..
“என்ன சின்னப் புள்ளைனு சொல்றான் பாலா………..” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்து குமுற ஆரம்பித்தாள்…
“சரி விடுடி தெரியாம சொல்லிட்டான்…………..நீ நான் வந்தப்பவே உள்ள வந்திருக்கணும்… என்னைப் பார்த்தவுடனே உள்ள வராம இருந்தேல்ல உனக்கு நல்லா வேணும்……. ஆனா நீ சின்னப் புள்ளைனு சொல்லிட்டானே …………..எனக்கு மட்டும்தானே தெரியும் நீ” என்று மாடிப்படிகளிலே வைத்து அவளை தன்னோடு சேர்க்க….
அவன் வாயைக் கைகளால் மூடியவள்………..
”கேடி…………….. உன்னை” என்றபடி……………
“போடா…………நான் போறேன்……..உனக்காக மேல ஏறி வந்தேன் பாரு…என்ன சொல்லனும்” என்று வெட்கத்தில் சிட்டாய் பறந்து விட்டாள் கீர்த்தனா………..
அவள் வெட்கத்தில் ஓடிப் பறந்ததைப் பார்த்தவனின் மனமும் சிறகை விரித்து பறக்க ஆரம்பிக்க………. அவளின் வெட்கத்திற்கான நினைவுகளை சுகித்தவனாய்க் கீழே இறங்கினான்
-------------------------------------------
அடுத்த நாள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல்………. வினோத் கீர்த்திகா இருவரின் திருமணமும் உறுதி செய்யப்பட்டது……….. வினோத்-கீர்த்திகா இருவரும் மோதிரம் மாற்றி தங்களது நிச்சய அடையாளத்தையும் வெளிப்படுத்தினர்……………
சிந்து….கீர்த்தனா என்று அவர்கள் இருவரையும் ஓட்டியே நாளைக் கழிக்க
எல்லாம் முடிந்து அனைவரும் அன்று மாலையே கிளம்ப……..வினோத்….கீர்த்திகா இருவர் முகமும் வாடி விட்டது………. ‘
கீர்த்திகாவிடம் சொல்லி விட்டு வர அவள் அறைக்கு போன கீர்த்தனாவுக்கு………..அவள் கலங்கிய கண்களே அவள் நிலைமையைச் சொல்ல……….கணவன் மேல் கோபம் கோபமாக வந்தது….
யோசித்தவள்……….வினோத்துக்கு போன் போட்டு மேலே வரச் சொன்னாள்………
அறையின் வெளியே நின்றிருந்த கீர்த்தனாவிடம்
“என்ன கீர்த்தி எதுக்கு வரச் சொன்ன………கீழ கிளம்பிட்டு இருக்காங்க…..வா…. தேடப் போறாங்க….” என்றவனிடம்
“டேய் லூசு. கீர்த்தி அழறாங்க போலடா……… எதுனாலும் பேசி சமாதானம் பண்ணிட்டு வா… நா இங்கேயே வெயிட் பண்றேன்”
”10 நிமிசம்தாண்டா…அதுக்குள்ள வந்துறனும்…………” என்றவளின் வார்த்தைகளைக் கேட்க அவன் அங்கு இல்லை……
உள்ளே நுழைந்தவன்…………….
அறைக்கதவை மூட……. கீர்த்திகா…….யாரென்று திரும்பிப் பார்க்க…. வினோத் என்ற வுடன்
ஓடோடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்……..
”கீர்த்தி என்ன இது………. எதுக்கு இந்த அழுகை………… ”
“தெரியல வினோ……. என்னையவும் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க வினோ………………. எனக்கு தனியா இருக்கவே பிடிக்கல………… ஏதேதோ ஞாபகங்கள்….. உங்களோட அருகாமையிலதான்……. எனக்கு நிம்மதியா இருக்கு வினோ……” என்று கலங்க
“நான் என்னடா… பண்றது… இந்த பாலாதான் இப்படி பண்ணி வச்சுட்டானே……… அன்னைக்கு அவன் சொன்னதுக்கு ஒகேனுதான சொன்ன….. இப்போ என்ன”
பேசிக் கொண்டிருக்கும் போதே கீர்த்தி அவனுக்கு மிஸ்டு கால் செய்து வெளியே வரச் சொல்ல……. அவனோ அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை…………..
கீர்த்தனா…….யாரும் வந்து விடப் போகிறார்களோ என்று பதட்டத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருக்க…
அதை அதிகமாக்குவது போல் யாரோ வரும் அரவம் கேட்க……. திரும்பிப் பார்க்க….. நல்ல வேளை பாலாதான் மேலே ஏறி வந்து கொண்டிருந்தான்………..
நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டாள் கீர்த்தனா……….
-------------
“சரி…சரி……அழாத………வா உன்ன நான் என் கூட கூட்டிட்டு போறேன்… ” என்றவனை……..
“எப்படி வினோ…பாலா ஓகேனு சொல்ல மாட்டாரே” என்று வருந்த
“எதுக்கு கீர்த்தி இருக்கா… அவ மூஞ்சியத் தூக்கி வச்சா……..பையன் தானா கீழ இறங்கி வந்துருவான்……. கீர்த்திக்கு கூட அவன் மேல இதில கோபம்தான்” என்ற படி பேசிக் கொண்டிருக்க
வெளியே………. படபடப்பும்……. அச்சமுமாய் நின்ற மனைவியை ………………..பாலாவுக்கு முதலும் ஒன்றும் புரியவில்லை.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ இங்க……….அங்க கீழ வா” என்று கைகளை பிடித்தபடி அவளைக் கீழே கூட்டிச் செல்ல முயல…..
“பாலா…..” என்றபோது அவளுக்கு வார்த்தையே வர வில்லை…….
“என்னடி” என்று புரியாமல் கேட்டான்……..அவள் பாலா என்று சொன்ன அழகில்
“கீர்த்தி…வினோத்……ரூம்ல………திக்கித் திணறி வார்த்தைகள் வெளி வந்தன………..
பாலாவுக்கு புரிய
”அவங்கள உள்ள விட்டுட்டு நீ என்ன காவலா…… அப்டியே அறஞ்சேனு வச்சுக்க………. கீர்த்திகா வீட்ல யாராவதுனா கூட பரவாயில்ல….. வேற யாராவது பார்த்தாங்கன்னா என்ன ஆகும்……….. இது கிராமம் வேற….. அவன வெளில கூப்பிடு……..” என்று கத்த ஆரம்பிக்க
வினோத்துக்கு கால் பண்ண ஆரம்பிக்க……. அவனே கீர்த்திகாவோடு வெளியே வர………. கீர்த்திகாவைப் பார்த்த பாலாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது……
அழுதழுது சிவந்திருந்தது அவள் முகம்,
“ஏன் பாலா இப்படி பண்றீங்க………… கீர்த்திய ஏன் இப்டி அழ விடுறீங்க………..அவளையும் நாம கூட்டிட்டு போகலாம் பாலா……….. ப்ளீஸ்…….நம்ம வீட்லயே அவ இருக்கட்டும்……….வெளில கூட அவ போக வேண்டாம்…… வினோத் நம்ம வீட்லயே வந்து பார்த்துக்குவான்” என்று கீர்த்தி கெஞ்ச………….
கீர்த்திகாவின் முகம் பார்த்தே கொஞ்சம் இளகியவன்….. மனைவியின் கெஞ்சலும் சேர்ந்து கொள்ள…. வேறு வழி இன்றி… கீர்த்திகாவையும் அவர்களோடு கூட்டிப் போக சம்மதித்து………. கீர்த்தியின் தந்தையிடமும் அனுமதி வாங்கினான் பாலா……………….
கீர்த்திகா முகத்தில் சந்தோசம் வர அது அனைவரிடமும் தொற்ற………. அனைவருக்கும் சென்னை நோக்கிய பயணம்
இரயிலில்…. பாலா அருகில் அமர்ந்திருந்த கீர்த்தனாவைப் பார்த்து ……….இப்போ மேடமுக்கு ஓகேவா……… என்று கேட்க’
அவனையே பார்த்தபடி…………அவங்க அழுதாங்க பாலா………. பார்க்கவே கஷ்டமா போய்விட்டது……. ஒரு பொண்ணு மனசு பொண்ணுக்கு மட்டும் தான் தெரியும்….. என்றவள்… உற்சாகமாக
“கீர்த்திகா இப்போ ஹேப்பியா ஆகிட்டாங்க………… சோ எனக்கும் ஓகே” என்று கூற……
“அப்போ எனக்கும் கணக்குபடி வட்டியும் முதலும் கரெக்டா வந்து சேருமா…… ஏன்னா….. ஒரு வார பாக்கி இருக்கு “ என்று தாபமாய்ப் பேச………மலங்க மலங்க விழித்தாள் கீர்த்தனா
இன்னும் இரண்டு நாட்கள் வரை அவனிடம் எப்படி சஸ்பென்ஸ் வைத்து சொல்வது என்று………….40 நாட்கள் மட்டுமே ஆனா கருவுக்கு அவர்கள் கூடலினால் ஏதாவது ஆகி விட்டால்………கணவனிடம் சொன்னால் புரிந்து கொள்வான்…….சொல்லாமல் இருந்தால் அவளை அவன் விட மாட்டான்……….. என்று தோன்ற ஏதாவது சொல்லி சமாளிப்போம்………இல்லை என்றால் ……. சஸ்பென்சும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம்…….. எனக்கு என் குழந்தை முக்கியம்……. என்றபடி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்………
நாளை நடக்கப் போவதை அறியாமல்………………
----------------------------
4 மணி அளவில் சென்னை வந்து இறங்கியவர்கள்…………. அந்த நாள் அவரவர் வழக்கமான பணிகளை ஆரம்பிக்கும் முன் கிடைத்த சிறிது நேரத்தில் உறங்க முயன்றனர்… அவரவர் இல்லங்களில்…….
கீர்த்தனாவுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை……………. 6 மணி எப்போதடா ஆகும் என்றிருந்தது…………..
கர்ப்பத்தை உறுதி செய்யும் அட்டையை………. யாருக்கும் தெரியாமல் வாங்கி வைத்திருந்தாள்…………… அதில் சோதனை செய்து உறுதி செய்யக் காத்திருந்தவளுக்கு……….. உறக்கம் எங்கு வருவது……………. அவள் உறங்காமல் புரண்டு கொண்டிருப்பது…… அவளை அணைத்தபடி படுத்திருந்தவனுக்கு…….. தொந்திரவாய் இருக்க………….எரிச்சலுடன்
“கீது………..என்ன பண்ணிட்டு இருக்க……………..தூக்கம் வரலயா………” என்று கேட்க
அவளோ வரவில்லை என்று தலையை ஆட்ட
”ஒரு வாரம் மாமாவ பிரிந்து ஏக்கமா………..சரி பண்ணிடலாமா……..” என்று வழக்கமான வேலையைக் காட்ட ஆரம்பிக்கப் போக
“பாலா……” என்று பல்லைக் கடித்தவளின் கோபம் புரிய…………பேசாமல் படுத்தான்……………. இரவில் தன் உரிமையை நிலை நாட்டுவோம் என்று……….
எப்படியோ 6 மணி வரை நேரத்தை ஓட்டியவள்…………….. பரிசோதனை செய்ய………….அது அவளை ஏமாற்ற வில்லை…………. சிறிது நேரம் சந்தோசத்தில்…. கீர்த்தனா அந்த அட்டை காட்டிய நிறமாற்றத்தை பார்த்தபடியே இருந்தாள்……………….. அதன் பின் அதனை…….ஒரு கவரில் வைத்து பத்திரப்படுத்தி தன் கைப்பையில் வைத்தாள்……….மருத்துவரிடம் போகும்போது காட்டலாம் என்று……….
அவளும் அன்று அலுவலகம் செல்ல முடிவு செய்திருந்ததால்………அப்போதே கிளம்ப ஆரம்பித்து விட்டாள்…….
ஆனால்………….
கிட்ட்த்தட்ட 7.30 மணிபோல் சிந்துவின் குரல் கீழே கேட்க……இறங்கி வந்தாள்………
அவளோ………அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தாள்………………
அருந்ததி தான்……….. சிந்து…. கீர்த்தி கீழ வரட்டும் பேசுவோம்…. என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க…….மஞ்சு அவளைத் திட்டியபடி இருந்தாள்……….. கீர்த்திகாவும் அருகில் இருந்தாள்…
”என்ன விசயம் மஞ்சு அக்கா………ஏன் அவள திட்டிட்டு இருக்கீங்க.”என்று சிந்துவின் அருகில் அமர……..
சிந்து அழுது கொண்டே
“அக்கா…………இன்னைக்கு………….. எங்க ஸ்கூல்ல ஆனுவல் டே ஃப்ங்சன்………… நான் மறந்தே போய்ட்டேன்….. நான் டான்ஸ்ல கலந்துருக்கேன்…… இப்போதான் மிஸ் போன் பண்ணினாங்க………… நான் எதுவுமே இன்னும் அரேன்ஞ் பண்ணல என்று……. நீங்க சொல்லித்தானே நான் ஜாயின் பண்ணினேன்…………. திங்க்ஸ் எதுவுமே வாங்கல……நாம பாண்டி பஜார் போகலாம்னு நீங்க போனவாரம் சொன்னீங்கள்ள……… மறந்துட்டீங்க என்று கீர்த்தி மேல் வேறு குற்றப் பத்திரிக்கை வாசித்தபடி அழ…
மஞ்சுவோ
“உனக்கு ஞாபகம் இல்ல……… அடுத்தவங்க மேல எல்லாம் என்ன புகார்… உனக்கு ரொம்ப இடம் கொடுத்துருக்காங்க இல்ல… நீ இதுவும் பேசுவ… இன்னமும் பேசுவ” என்று அவளை திட்டிக் கொண்டே இருக்க……..
அருந்ததி தான்…
“சிந்து… இப்போ என்ன………… மதியம் 3 மணிக்கு மேலதான ஃப்ங்சன்…….. உன் அக்காவை இப்போ கூட்டிட்டு போ…..என்ற போது
கவி அக்காவும் வரணுமே………..அவங்களுக்குதான் கடை அட்ரஸ் எல்லாம் தெரியும் என்று மீண்டும் அழ……….
கீர்த்தி….
“கவிக்கு போன் பண்றேன் அவ உன்னைக் கூட்டிட்டு போவா…….. ஏற்கனவே நான் ஒரு வாரம் லீவ்………. உங்க அண்ணாகிட்ட லீவ் கேட்டேன்……….. என்னை ஆபிஸ விட்டே துரத்திருவாரு……….. இந்த ஒரு வாரத்துக்கே அழுதுட்டே கொடுத்தாரு……………… “ என்று சொல்ல…….
சிந்து அவளும் வர வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க……….
அருந்ததி
“சரி கீர்த்தி போய்ட்டு வா………. ஒரு நாள்ல உன் புருசன் கோட்டைய இழந்துற மாட்டான் என்று சிந்துவுக்கு சப்போர்ட் செய்ய……. கீர்த்தியும் தலை ஆட்ட சிந்து அப்போதுதான் சகஜமானாள்……….
கீர்த்தி அங்குதான் தலை ஆட்டினாள்…….. பாலா என்ன சொல்வானோ என்றிருந்தது…… பெரும்பாலும்…. அவன் எதற்காகவும் அலுவலக வேலைகளை விட்டுக் கொடுக்க மாட்டான்………… நேற்றே சொல்லி இருந்தான்……….. இவளுக்காக சில வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது என்று………. என்ன ஆடுவானோ என்று தோன்றியது………
நினைத்தவாறே ஆடத்தான் செய்தான்……
“ஏற்கனவே ஒரு வாரம் லீவ்………. இன்னைக்குமா……. என்ன நினச்சுட்டு இருக்க நீ…… இல்ல பேசாம வீட்லயே இருன்னாலும் கேட்காம வர்ற…….. அப்போ அங்கேயும் ஒழுங்கா பார்க்கணும் இல்ல……… “ என்று அலுவலக MD யாக மாறி குதிக்க’
“இல்ல பாலா சிந்துனாலதான்……” .என்று இழுக்க
“என்ன சிந்து……… அவங்க அம்மா கூட போய் வாங்க மாட்டாளா……. லீவ்லாம் கிடையாது…….ஒழுங்க ஆபிஸ் வந்து சேரு.” என்றபடி எரிச்சலில்… வழக்கமான அவனின் சிறு சுயநலம் வெளிப்பட… குளியலறைக்கு சென்று விட்டான்…..
அவன் வெளியே வரும்போது……….உள்ளே போன போது எப்படி இருந்தாளோ அதே நிலையில்… ஆனால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க…………
”கீது……. இப்டிலாம் நீ சின் போட்டாலாம்……… நான் லீவ் கொடுத்துற மாட்டேன்…….” என்ற போதே…………
கீர்த்தி கோபமாய் அவனருகில் வந்து………… அவனை சுவரோரமாய் தள்ளப் போக…….
“ஏய் என்னடி பண்ற…………. “ என்று பின்னால் போனான்……….
“ஏதோ புருசனாச்சே…….. கம்பெனிக்கும் MD ஆச்சேனு ஒரு மரியாதைக்கு கேட்டா……….. ரொம்ப சீன் போடுறீங்க………….இப்போ….லீவ் தரப் போறீங்களா இல்லையா” என்று மிரட்ட
அவளது மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதவன் போல்….. கிடைத்த மனைவியின் அருகாமையை ரசித்த படி
“போடி……. முடியாது……… என்ன பண்ணுவ.. “ என் ஆரம்பித்த போதே தன் இதழ்களால் அவன் இதழ்களை சிறை செய்தவள்……………. அவனை விடுவித்த போது
“லீவ்……..கிராண்ட்ட்” என்றுதான் முடித்தான் அவள் கணவனாய்………….
மெதுவாய்………… இப்போது…….
“கவியும் வரமாட்டா……” என்று ஆரம்பிக்க
“முதல்ல உன்னை ஆபிஸ்லருந்து வெளிய அனுப்பணும்…….ரெண்டு பேரும் சேர்ந்து…” என்று மீண்டும் ஆரம்பிக்க
“ப்ளீஸ்………..” என்று இவள் கெஞ்ச……
“ஒகே ஒகே…… ஆனா அதுக்கும் லஞ்சம் வேணுமே…………” என்று அவன் கேட்க
அவனைத் தள்ளி விட்டவள்…..
”அவளுக்கு நாதன் லீவ் அப்ரூவ் பண்ணிட்டாரு…………. எனக்குதான் உங்ககிட்ட கேட்க வேண்டும்……… ” என்று சொல்ல
“என்னமோ பண்ணுங்க” என்று சலித்தபடி வெளியேறினான் பாலா……… தன் மனைவி தேடிப் போய் ஆபத்தை விலைக்கு வாங்கப் போகும் நிலை உணராமல்……….
காலை 10 மணிக்கு மேல்……..கீர்த்திகாவையும் தங்களுடன் கூட்டிச் செல்ல ஆசைதான்…. ஆனால் கணவன் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டான் என்று தெரிந்ததால் விட்டு விட்டாள்….. சிந்துவும்..கீர்த்தியும் ஒரு காரில் கிளம்ப…….
அவளை தனியே கார் ஓட்டிச் செல்ல அவன் அனுமதிக்க மாட்டான் என்ற காரணத்தால்… பாலா அப்போதும் தடுத்தான்………..
ஆனால்……..கீர்த்திக்கோ……ஆட்டொவில் போக மனம் வர வில்லை………… சாலையின் மேடு பள்ளங்களை நினைத்து………. ஏதாவது ஆகி விடுமோ என்று
எப்படியோ பிடிவாதம் பிடித்து கிளம்ப………..பாலாவுக்கு அன்று அவள் நடந்து கொள்வது எல்லாம் சற்று எரிச்சலைத் தந்ததுதான் உண்மை……..
----------------------
கடை வீதியில் கவியும் வந்து விட்டிருந்தாள்…….
நேரம் இல்லாத காரணத்தால்………ஆளுக்கு ஒரு பொருளாய் வாங்க முடிவு செய்து பிரிந்து சென்று வாங்கிக் கொண்டிருத்தனர்……..
கீர்த்தி சாலை ஓரமாய் இருந்த கடையில் தனக்கு தேவையானதை பார்த்துக் கொண்டிருக்க
திடிரென்று ஒரு கரம் இழுத்து அவளைத் தன் புறம் இழுக்க…. அவள் நகர மரக் கிளை மேலிருந்து கீழே சரியாக அவள் நின்ற இடத்தில் விழவும் சரியாக இருந்தது……
சிறிய கிளைதான்…. இருந்தாலும்……..நல்ல வேளை என்று மனதிற்குள் நிம்மதி அடைந்தவள்…………தன்னைக் காப்பாற்றியவனுக்கு நன்றி சொல்லப் போனவள்
அப்படியே அதிர்ந்து விட்டாள்…………… சொல்ல வந்த நன்றி கூட அவள் தொண்டையை விட்டு வெளியே வர வில்லை……… அவன்…… அவள் ஊட்டியில் அந்த பெண்ணுடன் பார்த்தவன்………………
அவள் மிரட்சியுடன் இருப்பதைப் பார்த்தவன்…….
அவளை அவனுக்கு அடையாளம் தெரிய வில்லை போல………..
“பார்த்து” என்றபடி அவளைக் கடந்து செல்ல……… சற்று நேரம் அப்படியே நின்றவளுக்கு………. மனதில் வெகுநாளாய் உறுத்திய ஒன்று மாறியது போல் இருந்தது……….. அது……….
“தன்னைக் காப்பாற்றுகிறான்…. என்றால் இவன் நல்லவனாய் இருக்க வேண்டும்…… இவன் நல்லவன் என்றால்……….. அந்தப் பெண்தான் மோசம்” என்று சந்தோசமாக அவன் போவதையே பார்த்தபடி நடந்து சென்றவள்………
மனதினுள்ளே தன் குழந்தையுடன் பேசிக் கொண்டாள்…….
“ஏய் செல்லக் குட்டி….. உங்க பாட்டி கரெக்டாத்தான் சொல்லி இருக்காங்கடா…….. அம்மாவுக்கு………..ரொம்ப நாளா……உறுத்திட்டு இருந்த விசயம்……..இன்னைக்கு மறஞ்சுருச்சுடா………. எல்லாம் நீ எனக்கு கிடைத்த நேரம் டா………” என்று தனக்குள் பேசியபடி வந்தவள்……..சந்தோச மிகுதியில்… தன்னை மறந்தவளாய் தனக்கு முன்னால் வந்தவரின் மேல் தெரியாமல் மோத…………….
”ச்சேய் இன்னைக்கு ரொம்ப கவனக் குறைவா இருக்கிறோம்” என்றபடி நிமிர்ந்து பார்க்க
அது………..அவளின் அப்பாவோடு பணி புரிந்த மதன் ………… சந்தோசமாக விழி விரித்து.……..
“அங்கிள்” என்று சொல்லியவள்
”நல்லா இருக்கியாமா கீர்த்தி………பாலா எப்படி இருக்கார் என்று விசாரித்தார் அவர்……..
“நல்லா இருக்கோம் அங்கிள்” என்றபோதே அவளுக்கு எதிர்பக்கம் ஊட்டியில் பார்த்த அந்த இளைஞன்……. பெண்களுக்கான………… பிரத்யோகமான கடையினுள் நுழைவதையும் பார்த்தாள்…..
பின்……..மதனுடன் பேச ஆரம்பித்தாள்……. சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள்………
“ஏன் அங்கிள்………….. VRS வாங்கிட்டீங்க….. ” என்று கேட்க
“இல்லமா………அப்பாவுக்கு வந்த நிலைமைய பார்த்தே கொஞ்சம் பயந்துட்டேன்….. அதோட ராகவன் சார் பிராப்ளமும் சால்வ் ஆகிற வரை இருக்கலாம் என்று இருந்தேன்…………. உன் பேர்ல எல்லாத்தையும் மாற்றி…. பாலாகிட்ட பணத்தை ஒப்படைச்சதோட நானும் வேலைய ரிசைன் பண்ணிட்டு இப்போ நிம்மதியா என் பையனோட செட்டில் ஆகி விட்டேன் என்று கூற……
அன்றைய அடுத்தடுத்த மகிழ்ச்சியில் சந்தோசப் படக் கூட முடியாமல் திணறினாள் கீர்த்தி……. அவள் அப்பாவின் பணம் கிடைத்த மகிழ்ச்சி… இன்னொன்று…….. கணவனுக்கு தெரிந்தும்…… சொல்லாமல் விட்டிருக்கிறான் ……அது ஏனென்பது அவள் உணராமல் இல்லை………
கணவனின் அன்பில் கண் கலங்கி விட்டது அவளுக்கு
“கேடி……….எங்க பணம் கிடைத்ததை சொன்னால் ……..அவனை விட்டு போய் விடுவேன் என்று மறைத்து விட்டான்………..ஆனால் இப்போ வரைக்கும் ஏன் சொல்லலை……எப்போ கிடைத்தது…. .சரி கேட்டுக்கலாம்……..அவன் எது செய்தாலும் என் நலன் கருதிதான் செய்வான் என்று முடிவு செய்தவளுக்கு……..அவனை அப்போதே பார்க்க வேண்டும்” என்று தோன்ற
சிந்து வருத்தப்படுவாள் என்றெல்லாம் நினைக்க வில்லை………..
மதனிடம் அவள் அதற்கு மேல் அந்த விசயத்தை பேசாமல்…….. முடித்தவள்……..எப்போதடா அவர் போவார் என்று இருந்தவள்…….. அவள் போனவுடன்………… கணவனுக்கு வேக வேகமாக ஒரு மெஸேஜ் செய்தாள்
“I Love U da kedi” என்று……………
அதை அனுப்பியவள்……….
கவியிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று அவளுக்கு போன் செய்யப் போக……… அப்போது சற்று முன் நல்லவன் என்று நம்பியவன் செய்த காரியத்தில்………… உடலெங்கும் நடுக்கம் சூழ………. போனைக் காதிலிருந்து எடுத்தாள்……….. அவனைப் பார்த்தபடியே இருந்தாள்……. அவனின் முகம் மாறிய விதம்……….. அவன் சற்று முன் பார்த்தபோது இருந்த அமைதியான முகமும்…. இதுவும் ஒன்றா என்று தோன்றியது……………. அந்தப் பெண்ணுடன் பார்த்த போது இப்படித்தான் இருந்ததோ என்று தோன்ற…………..அப்படியே நின்றாள்……
அவன் ப்ரதாப் என்று கீர்த்திக்கு அப்போது தெரியவில்லை…….. தெரிந்திருந்தால்…………… பாலாவின் துணையை நாடியிருப்பாள்…
தெரியாத்தால் அசட்டுத் தைரியத்தில்…………அவள் செய்த காரியத்தை என்னவென்று சொல்வது………
கீர்த்திகாவிற்காக பிரதாப் விரித்த வலையில்…… பாலாவின் காதலி தெரியாமல் மாட்டினாள் என்றால்…… கீர்த்திகாவிற்காக அவன் மீண்டும் வலையை விரிக்க ஆரம்பிக்கும் முன்னே……. தானாகாவே அதில் போய் விழுந்தாள் பாலாவின் மனைவி…………….
பாலாவோ மனைவிக்கு நேரப் போகும் எதையும் உணராமல்….. அதிலும் கர்ப்பமாக அவள் இருக்கிற சூழ்னிலையில் அவளாகவே தனக்கு ஏற்படுத்திக் கொண்ட ஆபத்தை உணராமல்…
மனைவி அனுப்பிய மெஸேஜை….. மீண்டும்…… மீண்டும் படித்தபடி இருந்தான்…..
என் பொண்டாட்டி…… அவ்வளவு ஈசியா இந்த வார்த்தைய சொல்ல மாட்டாளே…….. திடிர்னு என்ன …… என்ற யோசனையில் மனம்…… மனைவியை நினைத்தபடி குதூகலத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது…….
Comments