என் உயிரே !!! என் உறவே ??? - 51

அத்தியாயம் 51:

கிட்டத்தட்ட ஒருவாரம் முடிந்த நிலையில் பாலாவின் வீட்டில்…………….. வினோத்தின் பெற்றோரும்…. கீர்த்திகாவின் பெற்றோரும் குழுமியிருந்தனர்………. வினோத்-கீர்த்திகா திருமணத்தை முடிவு செய்ய…. பாலா வீட்டினர் இருவருக்கும் மத்தியமாய் இருந்ததால் அவர்கள் வீட்டிலேயே …. கலந்தாலோசிக்க முடிவு செய்தனர் இரு வீட்டினரும்….

கீர்த்தனாவும்… சிந்துவும்….. கிச்சனில் மஞ்சுவுடன் இருக்க மற்ற அனைவரும் ஹாலில் இருந்தனர்…. கீர்த்திக்குதான் இதில் மிகவும் சந்தோசம்…. கால்கள் தரையில் இல்லை…. அந்த வீட்டு மருமகளாய்.. அங்கும் இங்கும் ஓடி… வந்தவர்களை கவனித்துக் கொண்டு…… அவளைக் கையில் பிடிக்க முடிய வில்லை….

ஹாலில் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபடியேதான்…… கீர்த்தனா தன் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்….

பாலாவோடு அவள் வாழத் தொடங்கி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது…….. ஒவ்வொரு நாளும் அவன் அவளிடம் புதிய கோலம்தான் போடுகிறான்….. ஒவ்வொரு விசயத்தையும் அவளுக்காகப் பார்த்து பார்த்து செய்கிறான்……. உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒவ்வொன்றிலும் நிரூபித்துதான் காட்டுகிறான்………. ஆனாலும்………… அவனது காதலில் இவளால் முற்றிலும் திளைக்க முடியவில்லை…………… ஏனோ முழுவதும் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியவில்லை….. காலம் இதையும் மாற்றும் என்ற நம்பிக்கையில்…….. இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டாள்…… பழகியும் கொண்டாள்…… அதை சந்தோசமாகவும் ஏற்றுக் கொண்டு……… கணவனைத் தன்னால் முடிந்த அளவு சந்தோசமாகவும் வைத்துக் கொண்டாள்……”

தன் நினைவில் இருந்தவள்…. மீண்டும் அவர்கள் பேசுவதில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்

ஆளாளுக்கு பேசி கடைசியாக முடிவுக்கு வந்த போது வினோத்தின் தலையில் தான் இடியை இறக்கினர்…….. அதாவது திருமணம் இன்னும் 4 மாதம் கழித்து எனவும்…. 1 ½ மாதம் கழித்து…. கீர்த்திகாவின் கிராமத்தில் நிச்சயம் எனவும் முடிவு செய்ய…. வினோத்துக்கு மழை விட்டும் தூவனம் முடியாத கதையாக போய் விட்டது… இப்போ ஏன் இத்தனை நாள் தள்ளி போடுகிறார்கள் என்று வருத்தமும் கோபமும் வர எதிரே உட்கார்ந்திருந்த கீர்த்திகாவை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…

இருவரின் சாதகப் படி 4 மாதம் கழித்துதான் செய்ய வேண்டும் … அப்போதுதான் எல்லாம் நன்றாக அமையும் என்று சொல்லப்பட்டதால்… மீண்டும் கீர்த்திகா வாழ்க்கையில்… எந்த வித ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்றே எல்லோருக்கும் தோன்ற… அனைவரும் அதற்கு உடன்பட்டனர்… பாலா உட்பட…..

நிச்சயம் மட்டும் இரண்டாம் மாத இறுதியில் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ….. அதற்காக இரண்டு நாட்களை முடிவு செய்தனர்……….

அனைவரும் இரண்டாவது முகுர்த்தநாளை முடிவு செய்து ஒகே செய்யப் போக……… கீர்த்தனா மட்டும்…. அதற்கு மறுப்பு தெரிவித்து… முதல் முகூர்த்த நாளையே நிச்சயத்திற்கு பார்க்கலாமே என்று சொல்ல…….

வினோத்…

“என் கீர்த்தி செல்லத்துக்கு என்னைக்குமே என் மேல பாசம் அதிகம்தான்…. அப்படியே கல்யாணத் தேதியையும் கொஞ்சம் முன்னால் வைக்கச் சொல்லுடா” என்று கொஞ்ச

அங்க ஒருத்தி அவன் முன்னால அவனையே பார்த்துட்டு இருக்காள்ள… அவள கொஞ்ச வேண்டியதுதானே……… இன்னும் என்ன இவளையே …..செல்லம்..னொல்லம கொஞ்சிட்டு இருக்கான்….. கீர்த்திகா வீட்ல இருந்து வேற அவ அப்பா இருக்காரு……… லூசு மாறி பேசிட்டு இருக்கானே என்று தலையிலடிக்காத குறையாக இருக்க

கீர்த்தியோ வினோத்துக்கு ஒரு பெரிய பல்பைக் கொடுத்தாள்…

”வினோத் சாரிடா… என்னைத் திட்டாத….ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்டா…. இன்னும் என் மேல நம்பிக்கை வச்சுருக்கியே… “ என்று கீர்த்தி சிரிக்க……

வினோத் முழித்த படி….

“அப்போ எதுக்கு இப்போ மாத்த சொன்ன….” என்று முறைத்தான்….

“அது..அது..” என்று தயங்க…

பாலாதான்

“என்ன கீர்த்தி… இங்க எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கோம்… நீ என்ன விளையாடுறியா….. அவன் கூட” என்று அதட்ட

“இல்ல பாலா…. நீங்க எல்லோரும் குறிச்ச நாள்… நம்ம திருமண நாளுக்கு முந்தைய தினம்…… அதுதான் அப்படி சொன்னேன்…… அதற்கும் முன் முகூர்த்தம் 3 நாளைக்கு முன் வருகிறது…… கீர்த்திகா கிராமத்திற்க்கு போய் திரும்புவதற்கு அதுதான் வசதியாக இருக்கும்” என்று சொல்ல

பாலா……. அசடு வழிய……….. கீர்த்தியிடம் பார்வையாலே மன்னிப்பு கேட்டவனாய் இருக்க…. கீர்த்தனா……..பதிலாய் அவனுக்கு பார்வையாலே நெருப்பை உமிழ……. வினோத்தோ

”அதுதானே…சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன…” என்று அப்போது இருந்த கடுப்பிலும் அவளைக் கிண்டலடிக்க…

மோகனா - விஸ்வம்…. கீர்த்திக்கு சப்போர்ட்டுக்கு வந்து விட்டனர்..

“எப்போ பாரு அவ கூட வம்பிழுத்துட்டே இரு…. என் மருமக சொல்லிட்டா நோ அப்பீல்..” என்று கீர்த்தனா சொன்ன தேதியையே முடிவு செய்தனர்..

அவர்களிடம் சிரித்துக் கொண்டிருந்த கீர்த்தனாவுக்கு……. திடிரென்று…. அங்கு ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருடன் இருப்பதை பார்த்த வுடன்…..கீர்த்திகாவிற்கு கூட அது சித்திதான்… இருந்தும்…. அவளையுமறியாமல்………… தன் தாய்-தந்தை நினைவில் கண் கலங்க ஆரம்பிக்க…. சட்டென்று எழுந்து விட்டாள்……….. அவர்கள் அனைவருக்கும் சிற்றூண்டி எடுத்து வரும் சாக்கில்……

அவள் முகம் மாறியதை யார் கவனித்தார்களோ… இல்லையோ… அவள் கணவன் கண்ணுக்கு அது தப்பவில்லை……..

அனைவரும் பேசிக் கொண்டிருக்க…. அவன் மட்டும் நழுவினான்….

கிச்சனுக்குள் அவன் நுழைந்த உடனே மஞ்சு சிந்துவை.... கூட்டிக் கொண்டு வெளியே வந்து விட்டாள்…

பாலா வந்ததை உணர்ந்த கீர்த்தி… ஈரமாய் இருந்த தன் கண்களை துடைத்