அத்தியாயம் 50:
சிந்து கிட்டத்தட்ட 6 மணி அளவில் வர…. சிந்துவும் அருகில் இருந்த கோவிலுக்கு கிளம்பினர்………….
கீர்த்தனா கோவிலுக்கு கிளம்பி வரும் போதே…………… அருந்த்தியும்.. ஜெகநாதனும் ஹாலில் அமர்ந்திருக்க…. அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கவும் மறக்க வில்லை… அவள்…… புடவையுடனும்.. மல்லிகைப் பூவைத் தலையில் சூடி…. மிதமான அலங்கராத்துடனும் இருந்த கீர்த்தனாவைப் பார்த்து…. அருந்ததிக்கு ஏதோ விளங்கியது போல் இருக்க……… மனம் பூரிப்போடு ஆசிர்வாதம் செய்ய ….ஜெகநாதன் வழக்கம் போல் என்ன நடக்கிறது என்று தெரியாமலே ஆசிர்வாதம் செய்தார்….
-------------------
கீர்த்தனா கோவிலுக்கு கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் பாலாவும் வீட்டினுள் நுழைய,…………. அருந்ததி அவள் கோவிலுக்கு போயிருப்பதாகச் சொல்ல………….. பாலா அவர்களின் அறைக்குள் போகாமல்…………கீழே திரும்பி வந்தவன்…………..
அருந்ததியிடம்
“அம்மா…நான்.. கீர்த்திய கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு அப்படியே போகிறேன்… என்றவன்………பாதி தூரம் சென்று ஏதோ நினைவு வந்தவனாய்………… திரும்பி வந்து ….தாய் தந்தை இருவர்டமும் ஆசிர்வாதம் வாங்க……….
“என்னடா…. ரெண்டு பேரும் இப்படி தனித் தனியா வாங்குறீங்க….” என்று ஜெகநாதன் மனம் சஞ்சலப்பட்டு சொல்ல……..
இன்னொரு நாள் சேர்ந்து வாங்கிக்கிறோம் அப்பா… இப்போ டைம் இல்லப்பா…….. என்று கூறியபடி…………போன மகனை பார்த்த அருந்ததிக்கு இப்போது அனைத்தும் விளங்க
அவன் போன உடனேயே பூஜை அறையினுள் நுழைந்தாள்…. அவர் மகன் மற்றும் மருமகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய ஆண்டவனுக்கு நன்றி சொல்ல………
-------------------
கோவில் வாசலில் காரை நிறுத்தியவன்……..மனைவியை தேடி உள்ளே செல்ல,,,,,,, அவன் தேவதையும் அவனுக்கு காட்சி தந்தாள்………..
சிந்து வழக்கம் போல் பேசிக் கொண்டிருக்க….. அவளுக்கு பதில் சொல்லவோ…. இல்லை… அவள் சொல்வதைக் கேட்கவோ இயலாமல்…….. கீர்த்தனா-பாலா இருவரின் பார்வையுமே இன்று வேறு மொழி பேசிக் கொண்டிருந்தது…….. சிந்துவை இடையில் வைத்துக் கொண்டே
அதன் பிறகு சிந்துவை வீட்டின் வாசல் இறக்கி விட்டு விட்டு…. கார் சென்றது கீர்த்தியின் வீட்டுக்கு….
“எங்க பாலா போறீங்க….”
“வேற எங்க நம்ம வசந்த மாளிகைக்கு தான்” என்றவனின் பதிலில் திகைப்புற்ற கீர்த்தி……..
“நம்ம ரூம்ல..… வேண்டாமா……நான் வேற அங்க.. பூ“ என்று திணற….
“அங்க இனி தினம் கச்சேரிதான….. போனாப் போகுது விடு” என்று கண் சிமிட்டியவனின் கண்களில் ………… காதலோடு …………….தாபமும் வழிந்தோடியது…………..
அப்பார்மெண்டிற்குள் நுழைந்தவர்கள் காரை நிறுத்தி லிஃப்டினுள் நுழைந்தனர்…….
‘
தன் மனைவியின் அழகில் தன் நிதானத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்த பாலா யாருமில்லாத அந்த லிஃப்டினுள் அவள் அருகே நெருங்க முயல……….
“அய்யோ பாலா……….யாராவது வந்துறப் போறாங்க” என்று விலக
அப்போதுதான் ஞாபகம் வந்து பாலா கேட்டான் பாலா
“ஒருநாள் லிஃப்ட்ல என்னோட மாட்டினது நீதான கீர்த்தி” என்று அது கூட
சந்தேகமாய்த் தான் கேட்டான்………
”ஹ்ம்ம்ம்ம்” என்று சொன்னவளிடம் இன்னும் நெருக்கமாகப் போனவன்……..
”இன்னைக்கு அது மாதிரி நிக்காதாடி…………15 மினிட்ஸ என் வாழ்க்கைல அநியாயமா இழந்துட்டேனே………” என்று அவள் காதில் ஏக்கமாய் ரகசியம் பேசியவனை விசித்திரமாகப் பார்த்த மனைவியிடம்………..
“என்ன” என்று பாலா கேட்க
10 மாசம் நம்ம ரூம்ல வேஸ்ட் பண்ணியிருக்கோம்………….அது உங்களுக்கு தெரியல…… என்னமோ அந்த லிஃப்ட்ல வந்த 15 நிமிசம் மட்டும்தான் வேஸ்ட் பண்ணின மாதிரி….. ஃபீல் பண்றீங்க” என்ற போது சிறிது ஏமாற்றமும்,வருத்தமும் இருந்தது அவள் குரலில்….
”சரிடி ரொம்ப அலுத்துக்காத……………. என்னால பாதி…. உன்னால பாதி.. வேஸ்ட்” என்று பேசியபடியே வீட்டினுள் நுழைந்தனர்……….
கீர்த்தி……….. நான் குளிச்சுட்டு வந்துடறேன் என்றபடி பாலா குளியலறையினுள் நுழைய……… கீர்த்தனா ………….. தங்கள் அறையை சுத்தம் செய்யலாம் என்று எண்ணி கதவைத் திறக்க…….. அது பூட்டப் பட்டிருந்தது……. வழக்கமாக அது பூட்டப் பட்டிருக்காதே என்று நினைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் கீர்த்தி.. அவர்கள் இருவருக்கும் பால் காய்ச்ச’
பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் போதே கணவனின் வருகையை…… அவனின் வாசனை மூலம் உணர்ந்தவளுக்கு………அப்போதே ஒரு பரவசம் தோன்றி……….. உடலெங்கும் பரவி அவளைச் சிலிர்க்க வைக்க …… அவனை திரும்பிப் பார்கவே முடியாதவளாய்……… பால் காய்ச்சுவதிலேயே……… குறியாக இருந்தாள்……….
அவளின் நிலை உணர்ந்த பாலா……….. சிரித்தபடி அவளை பின்னால் வந்து அணைக்க…. கீர்த்தனாவுக்கு அவன் அணைத்த போது அவன் உடையில் ஏதோ வித்தியாசம் தோன்ற திரும்பிப் பார்க்க
அவள் உணர்ந்ததைப் போலவே… அவனும் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க விழி விரியப் பார்த்தாள் மனைவி……….
தன்னைப் பார்த்தபடியே நின்றிருந்த மனைவியை பார்த்தபடியே அடுப்பை அணைத்தவன்…. அவளையும் அணைத்து அவள் இடையைப் பற்றி தூக்க
”பா…லா..பா…ல்” என்று வார்த்தைகள் குழறின கீர்த்தனாவுக்கு
“பாலா…….இல்ல பாலாவா…. உனக்கு எது வேணும் இப்போ” என்று மோகமாய் வார்த்தைகளை விட ………. அவளையுமறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன….
“எனக்கு என் பாலாதான் வேண்டும்” என்று அவள் திணறிய அழகில் அவன் சொக்கித்தான் போனான்………….
போகும் வழியிலேயே அவளைத் தூக்கியிருந்தபடியே ராகவன் – மைதிலியி புகைப்படம் முன் வேண்ட
“பாலா இறக்கி விடுங்க” என்ற போது
என் மாமனாரே ரொமான்ஸ் மன்னன்தாண்டி……..அவருக்கு முன்னால நான்லாம் ஜுஜூபி” என்றவனைப் பார்த்து முறைத்தாள் கீர்த்தி
“உங்க அப்பாவைச் சொன்னா உனக்கு வந்துருமே” என்றபடி
“அத்தை மாமா…… உங்க பொண்ணு.. கீர்த்தனா ராகவன்…….கீர்த்தனா பாலாவா இன்னைல இருந்து மாறப்போறா………. அதுக்கு நீங்க எங்க இருந்தாலும் ஆசிர்வாதம் பண்ண வேண்டும்………” என்று மனப்பூர்வமாகவும் …கொஞ்சம் குறும்புடனும் கூற
பரிசாக மனைவியின் கையில் இரண்டும் அடியும் இலவசமாக்க் கிடைத்தது….
பூட்டிய அவளது அறைக்கதவை தன் சட்டைப் பாக்கெட்டில் உள்ள சாவியை எடுத்து திறக்கச் சொல்ல
திறந்த அவளால் நம்பவே முடியவில்லை……
நாயகி அவனது படுக்கையை மலர்களைத் தூவி மஞ்சமாய் அலங்கரித்து இருக்க……. அவள் நாயகனோ இங்கு மலர்களாலே மஞ்சத்தை அமைத்திருந்தான்……..
அவன் போனைக்கூட எடுக்காமல் எந்த வேலையில் பிஸியாய் இருந்தான் என்று உணர்ந்து
“பாலா” என்று நெகிழ்ந்த போது
அவளைத் தூக்கியிருந்த படியே பேசினான் பாலா,,,,,,,,,,,,,,
“என் பொண்டாட்டிக்கு……….அவ புருசன்……..தாலிகட்டும் போது அவள பார்க்கலைனு ஏக்கமாம்……… முதலிரவுல அவள கண்ணியமா பார்த்தேனு வருத்தமாம்…….. அவ படுக்கைல படுக்காம தள்ளி போனேன்னு கோபமாம்… முதன் முதல்ல அவளத் தொட்டப்போ அவ அழகுல மயங்கலயாம்…. என்ற போது அவள் கண்கள் பனித்திருந்தன
இப்போ…….
அவ புருசன் …. அவன் அழகுல மயங்கிக் கிடக்கிறான்……. அவளோட படுக்கைலதான் அவங்களோட முதல் சங்கமம் நடக்கனும்னு காத்துட்டு இருக்கான்……. இப்போ அவள மோசமாக காமப் பார்வை பார்த்துட்டு இருக்கான்” என்றபடி
பாலா……………..கீர்த்தனாவை மோகப் பார்வை பார்க்க……….அந்தப் பார்வையிலேயே உணர்ச்சிகள் அவளைத் தாக்க….. தவித்துப் போனாள் பெண்ணவள்…….
”ஆனா…… அவளோட ஒரே ஒரு ஏக்கத்தை மட்டும் என்னால் போக்க முடியது,,,,,,, ” என்ற போது கீர்த்தனா…….
”அந்த ஏக்கமெல்லாம் இப்போ இந்த நிமிசத்துல போய்டுச்சு பாலா…… நீங்க எனக்கு தாலி கட்டும் போது பார்க்காம இருந்திருக்கலாம்… ஆனா வாழ்நால் முழுக்க உங்க பார்வை என்னைத் தழுவுற வரம் கிடைச்சுருச்சு பாலா” எனும் போதே அவன் காயம் அவளுக்கு ஞாபகம் வர…. அவள் இறங்க எத்தனிக்க…….
“வாவ் சூப்பர்டி kB” என்று கூறியபடி
பாலாவும் தன் கைகளில் இருந்து அவளை விட்டான்
அவளை கீழே இறக்கிவிடும் போதே தன் உணர்வுகளை அவளுக்குள் இடமாற்றம் செய்திருந்தான் பாலா…………….
”அது என்ன KB”
“கீர்த்தனா பாலா” என்று முழுப் பெயரையும் அவன் சொல்லிய விதமே அவளை கிறங்கடிக்க…………..அவனை இறுக்க அணைக்க அணைத்தாள்………………
அதைப் புரிந்தவன்………… அவளின் காதுமடல்களில் கவிதை படைத்தபடி….
“கீர்த்தனா பாலா வா ஆக உனக்கு ஒகே வா” என்ற கிசுகிசுப்பாய்க் கூற கோபப் பார்வை பார்த்தவளிடம்……………..
“இல்லடி உனக்கு உங்க அப்பான்னா உயிர் ஆச்சே…………கீர்த்தனா ராகவன்,,, கீர்த்தனா ராகவ்ன்னு சொல்லி சொல்லி மாய்வியே அதுதான் கேட்டேன்……. ” என்று வம்பிழுக்க
“டேய் கேடி…………… இப்ப எனக்கு ஓகே இல்லேனா விட்ருவியா என்ன“ என்று இவள் கொஞ்ச
அவள் சொன்னதில் இருந்த கேடியை எடுத்துக் கொண்டு
கீது… KD னா நீ என்ன அர்த்தம் பண்ற… என்று அவன் கிறங்க
கேடினா என்ன அர்த்தமோ அந்த அர்த்ததில்தான்..இதுல என்ன புதுசா இருக்கு
”ஆனால் நான் அதுக்கு ஒரு அர்த்தம் வச்சுருக்கேன்…. K ஃபார் கீர்த்தி D ஃபார் தாசன் என்று சொல்ல கீர்த்திக்கு அவன் காலையில் சொன்ன MD Vs KD புரிய அவனை ஆறுதலாய் அணைத்தபடி
“10 மாசம் வேஸ்ட் பண்ணிட்டு இன்னும் பேசிட்டு…இன்னும்”
என்று சொன்னவளின் இதழ்களை வேகத்தோடு அவனோடு சரணடைய வைத்தவன்………….அதற்கு மேலும் விடுவானா பாலா……… அதன் பின்
அவளோடு சேர்ந்து அந்த மலர் மஞ்சத்தில் சரிந்தவன்… தாம்பத்தியக் கடலில் இல்லறம் என்னும் முத்தை எடுக்க மனைவியோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கினான் பாலா………….. ஆரம்பத்தில் அந்தக் கடலில் சுகமாக பயணிக்க ஆரம்பித்த கீர்த்தனா………….. அதன் ஆழம் நோக்கிப் பயணிக்கையில்……………. கொஞ்சம் தடுமாற………. அதன் ஆழம் பார்த்து தயங்கிய அவளை…………….தான் இருக்கிறேன் என்று ………..கணவன் தன்னோடு இழுக்க……… முதலில் பிடிவாதம் பிடித்தவள்……… பின் …. தன் கணவன் இருக்கும் நம்பிக்கையில்….. அவனை மட்டுமே நம்பி………. வேறு எதையும் யோசிக்காமல்………….. அவனோடு சேர்ந்து மூழ்க….… பயணம் மீண்டும் சுகமானது. ஒரு வழியாய்…………. நிரம்ப இஷ்டமும்……..கொஞ்சம் கஷ்டமுமாய்…………… இல்லறம் என்னும் முத்தை கணவன் எடுக்கத் துணை புரிந்து கரை ஏறினாள்………… கரை ஏற வைத்தான் கணவன்…….
முத்தெடுத்து வெளியேறிய போது………. அவள் ‘கீர்த்தனா பாலா’ வாக மாறியிருக்க…………………. அவனோ கீர்த்தனாவின் பாலாவாக மாறி இருந்தான்………….
Comments