என் உயிரே !!! என் உறவே ??? - 49

அத்தியாயம்-49

உட்கார்ந்த நிலையிலேயே உறங்கியிருந்த பாலாவின் மேல் எதுவோ விழ சட்டென்று பாலா விழித்துப் பார்த்தான்……….

அது மைதிலி-ராகவன் புகைப்படத்தில் இருந்த மாலை……… அறுந்து அவர்கள் மேலே விழுந்திருந்தது………

பாலாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை……. மூளை சிந்திக்கும் திறனைத்தான் நேற்றே இழந்து விட்டதே…….

ஆனாலும்…. அடுத்த நிமிடமே அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்தது போல் அது தோன்ற …… மனதுக்குள் தன்னை எண்ணி ஏளனமாக சிரித்தான்……..

“உங்க பொண்ணத்தான் நான் கொன்னுட்டு இருக்கேனே……. எனக்கு இந்த ஆசீர்வாதம் எதுக்கு……. நீங்க உயிரோட மட்டும் இருந்திருந்தா………… உங்க பொண்ணு நிலைமையப்