என் உயிரே !!! என் உறவே ??? - 48

அத்தியாயம்:48

பாலா தன்னிலை மறந்தெல்லாம் அவளை அணைக்கவில்லை…. தன் மனைவிக்கு அவன் மீது உள்ள உரிமையை அவளுக்கு உணர்த்த தன் எல்லை மீறினான் அவளிடம்……. தொட்ட நிமிடமே மூர்க்கம் மறைந்ததுதான் உண்மை…

கீர்த்தியோ………… வன்மையான கரங்களால் தன்னிடம் எல்லைகளை மீறி அவன் உரிமையை நிலை நாட்ட முயன்ற கணவனிடம்….. முரண்டு பிடிக்க வில்லை……. இரும்பாய் நின்றிருந்தாள்…

எப்போதும் தன் கரம் பட்டாலே நெகிழ்வதை உணர்பவன்…. இன்று மரக்கட்டை போல் வீம்பாக நின்று கொண்டிருந்த அவளை உணர்ந்தாலும்…… அணைத்தபடியே…. .தன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்ய அவள் முகத்தை நோக்கி குனிய…..

கண்களில் உணர்ச்சியின்றி அவனைப் பார்த்தாள்…… அவனும் அதில் கலந்தான்….

முத்தமிடப் போனவனிடம்

“மூன்று” என்றாள் அவன் கண்களைப் பார்த்தபடி………. “என்னடி மூணு…..” கேட்கும் போதே அவன் குரல் கொஞ்சியது

”நீங்க எனக்கு கொடுத்த முத்ததோட கணக்கு…….. ” என்றாள்.. ……

மோகம் சரசமாட…. அவள் இதழ்கள் பேசியதால்…. மாற்றி அவள் கன்னங்களில் தன் முத்தததை அழுத்தமாய் பதிக்க……. அதன் விளைவு கீர்த்தனாவுக்