என் உயிரே !!! என் உறவே ??? - 46

அத்தியாயம்46:

மருத்துவ மனையில்….

வினோத்…… நல்ல உறக்கத்தில் இருக்க… கீர்த்திகா அப்போதுதான் உறங்கியிருந்தாள்……..

கிட்டத்தட்ட 12.30 மணி அளவில் வினோத் கண் விழித்தான்…….விழித்தவன் அறையைச் சுற்றி நோட்டமிட…. கீர்த்திகா…. அருகில் இருந்த மேசையில் தலை வைத்துப் படுத்திருக்க……….அவளையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தான்……….

“இந்த சின்ன வயதில் இவளுக்கு எவ்வளவு பெரிய வேதனை…. என்று நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து… அது தவறென்று புரிந்து பார்வையை மாற்றினான்……..மாற்றியவனின் கண்களில்….. சுவர்கடிகாரம் கண்ணில் பட….. அதிர்ந்தான்……………. மணி 12.30…….. அவனுக்கு கீர்த்தியின் பிறந்த நாள் அனிச்சை செயலாய் ஒவ்வொரு வருடமும் ஞாபகம் வந்து விடும்…. என்பதால்…. ஆச்சரியம் இல்லைதான்… மனதினுள்ளே

“ஓ காட்” என்று தனக்குள் பேசிக் கொண்டே மொபைலைத் தேட…. அது அருகில் இல்லை…….

கீர்த்தனாவுக்கு எப்போதும்… 12 மணி அளவில் அவன் வாழ்த்தை சொல்லி இருக்க வேண்டும் இல்லை…. சொல்ல முடிய வில்லை என்றால்…. முந்தின நாளாவது சொல்ல முடியாத காரணத்தை சொல்ல வேண்டும்…. இல்லை என்றால் வேப்பில்லை இல்லாத குறைதான்…. சாமியாட்டம் ஆடுவாள்… கோபம் அவள் மேல் இருந்தாலும் வாழ்த்தைச் சொல்ல வேண்டும்…” என்று நினைத்தவன் கையில் மொபைல் சிக்கவே இல்லை….. எழவும் முடியவில்லை…. கையில் ட்ரிப்ஸ் வேறு ஏறிக் கொண்டிருந்தது…

அன்று அவள் ராகவன் – மைதிலி மகளாய் இருந்தாள்….. இன்றோ அவள் திருமணம் செய்தவள்……. இன்னொருவனின் மனைவி ….. இந்த நேரத்தில் போன் செய்யலாமா என்றெல்லாம் அவனுக்கு உறைக்க வில்லை….

அவனின் அசைவில் கீர்த்திகாவிற்கும் உறக்கம் கலைய…..

“என்ன வினோத்….” என்று கேட்க

“போன் வேணும் கீர்த்திகா….” என்றவுடன்…. தனதருகில் இருந்த அவனின் போனை எடுத்துக் கொடுக்க….

கீர்த்திக்கு இன்னைக்கு பிறந்த நாள்…. லேட்டாகி விட்டது …. அவ அப்பா…அம்மாவும் இல்லை இப்போ……. ஏங்கிப் போய்டுவா……. என்ற படி அவளது நம்பரை அழுத்தியவனின் போனை அருகில் வந்து கட் செய்தாள் கீர்த்திகா…

அவளின் இந்த செய்கையில் கோபமானான்தான் வினோத்…. இருந்தாலும் அவளிடம் கோபப்படுவது முறையில்லை என்பதை உணர்ந்து… அமைதியாகவே….

“என்னங்க போனைக் கட் பண்றீங்க…. என்ற படி மீண்டும் கால் செய்ய..

போனைப் பறித்த படி….

“என்ன வினோத் தெரிஞ்சுதான் பண்றீங்களா… இல்லை தெரியாமத்தான் பண்றீங்களா…. இந்த நேரத்தில கீர்த்திக்கு போன் பண்ணலாமா” என்றவளிடம்…

“ஏன்….. பண்ணினால் என்ன……..” என்று கேட்க

“போன வருடம் வரை…. நீங்க பண்ணியிருந்தால் தப்பில்லை…. ஆனா…. இப்போ அவளுக்கு திருமணம் ஆகி விட்டது…… இப்போ பண்றது தப்பில்லையா..” என்று கேட்க

“ச்சேய்… ” என்று தன்னைத் தானே திட்டியவனின் மனதில் இன்னொன்றும் உலா வந்தது…. ஆமா… இவன் ஒரு மூலையில… அவ ஒரு மூலையிலனு தூங்கிட்டு இருப்பாங்க… இதுல நான் போன் பண்றது வேற தப்பா போயிருமா….. என்றும் நொந்தவன்…..

“இல்ல கீர்த்தி… போனைக் குடு… எனக்கு போன் பண்ணனும்…. அவங்களுக்கு இது டிஸ்டர்ப்லாம் இல்லை…. எல்லாம் உனக்கு தெரிந்ததுதானே என்று கேட்டபடி கை நீட்டியவனிடம்… தயக்கமாகவே சொன்னாள் கீர்த்தி…..

“வினோத்…….. என்னதான் இருந்தாலும்… அவங்களுக்குரிய ப்ரைவசியான இந்த நேரத்தில பண்றது தப்பு” என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றாள் …….

வினோத் பொங்கி விட்டான்…

“என்னங்க பிரைவசியான நேரம்… அப்படிப் பார்த்தா… உங்களுக்கு எனக்கும் என்ன பல வருடப் பழக்கமா.. என்ன… ரெண்டு இல்ல மூணு தடவை பார்த்திருப்போம்….. இப்போ இந்த டைம்ல நீங்க கூடத்தான் என் பக்கத்தில இருக்கீங்க…. அது தப்பு இல்லையா… நான் கீர்த்திக்கிட்ட பழகுறதுல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை…. காலையில என்ன்ன்னா… பாலா அவளுக்கு தேவையானத வாங்கிக் கொடுக்க மாட்டாரானு கேட்டீங்க… இப்போ என்னடாவென்றால்………..இப்படி சொல்றீங்க… “ என்று எரிச்சலாய் பேசியவன்……..

“ஆமா நீங்க எதுக்கு இங்க தங்கறேனு ஒத்துக்கிட்டீங்க…. அந்த பாலா வேற.. கீர்த்தனாவ விட்டுட்டு போகாம உங்கள விட்டுட்டு போயிருக்கான் மடையன்…. சரி கீர்த்திக்கு பிறந்த நாள்…அவனோட போகட்டும்னு விட்டேன்……” என்ற போதே அவன் மனதில் கீர்த்திகாவுக்கு உரிய இடம் தெளிவாய் புரிய… கண் கலங்கி விடும் போல் தோன்ற… வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்… அப்படி இருந்தும், கண்ணில் இருந்து நீர் வெளியேறி விட…. வேகமாக முகம் கழுவி வரச் சென்றாள்…

வினோத்துக்கு கீர்த்திக்கு போன் செய்யும் மூடே போய் விட்டது… கீர்த்திகாவிடம் வேறு கோபமாய்ப் பேசியது வருத்தம் தர போனை எரிச்சலுடன் கீழே வைத்தான் வினோத்

முகம் கழுவி திரும்பி வந்தவளைப் பார்த்து பேசப் பிடிக்காமல் கண்களை மூடப் போக… அவள் நெற்றியின் வெறுமை பளிரென இவன் மனதில் மின்னல் அடிக்க… மீண்டும் கண்களைத் திறந்து அவளைப் பார்க்க… கீர்த்திகா எதுவும் சொல்லாமல் பழையபடி அவள் இருந்த இடத்திலேயே அமர்ந்தாள்….

அவளின் அந்தத் தோற்றம் … மனதைத் தாக்க….. முகம் கழுவும் போது விழுந்திருக்கும்…. சொன்னால் வேறு வைத்துக் கொள்வாள் என்று தோன்ற….

“கீர்த்தி…” என்று அழைத்தான்

”நர்சைக் கூப்பிடனுமா வினோத்” என்று கேட்டபடி அவனருகில் சென்றாள் அவள்….

“இல்லை… உன் நெத்