என் உயிரே !!! என் உறவே ??? - 45

அத்தியாயம்45:

வினோத் அருகில் சென்று அமர்ந்தவன்….

வினோத்…. உனக்கு என் மேல இருக்கிற கோபம் நியாயமானதுதான்…..சத்தியமா அது தப்புனு சொல்ல மாட்டேன் …. உண்மைய சொல்லப் போனா…. நீ கீர்த்திக்கு இந்த அளவு சப்போர்ட்டா இருக்கிறது.. உரிமை எடுத்துக்கறது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்குதான்… ஆனா அது என் எல்லை கிட்ட வரும் போதுதான் எனக்கு கோபம் வருது… உனக்கு ஒண்ணு தெரியுமா …. நீ இன்னைக்கு கேட்டேல… கீர்த்திய என்னோட அனுப்பிருனு…. நீ.... மனதில் வேறு எண்ணம் இல்லாம அவ மேல் இருக்கிற பாசத்துல மட்டும் சொன்ன… அதையே என்னால தாங்க முடியல…. ஆனா நான் இத விட கேவலம.. கீர்த்திய.” .எனும்போது வாசலைப் பார்த்தான்… அவள் வேறு வந்து கேட்டு விட்டால்.. இருக்கிற நிலைமையில கீர்த்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை..…இவன் இப்போது பேசப்போவதை கேட்டு… இதற்கு மேலும் மோசம் ஆகக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தான்… தொடர்ந்தவன்

“என்னால் வீணாக வாழ்க்கையைத் தொலைத்த அவளுக்கு நல்லது பண்ண வேண்டுமென்று நினைத்து… உன்கிட்ட பேசி… எங்களோட திருமணம் நடந்த விதத்தை பற்றி சொல்லி…. அவளை உன்னோடு …” என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் தடுமாறினான் பாலா… தன் கேவலமான புத்தியை நினைத்து வருந்தியவன்… அது தந்த வலியில்… சிறிது நேரம் வேறு புறம் வெறித்துப் பார்க்க

வினோத்துக்கும் இப்போது அவனைப் பார்க்க பாவமாய்த்தான் இருந்த்து…. ஒருபுறம் மது….மறுபுறம் கீர்த்தி… கொஞ்சம் சிக்கலான நிலைதான்…. இருந்தும் கீர்த்திக்காக மனதை மாற்றி கொண்டிருக்கிறான்.. என்று சந்தோசம் தான்….. ஆனாலும் மது என்பவள் இல்லாத நிலையில் சந்தேகம் இல்லை… அவள் வந்து விட்டால்… கீர்த்தியின் நிலை…. அதுமட்டுமில்லாமல்… அவனுக்கு தற்போது வந்திருக்கும் கீர்த்தியின் மீதான அவன் காதலில் முழு நம்பிக்கையும் வைக்க முடியவில்லை….

அவன் பார்வையை உணர்ந்த பாலா….

விரக்தியாய் புன்னகைத்தான்… உன் அத்தை மகளுக்கு இருக்கிற டவுட் தானே உனக்கு…. ஒரே குட்டைல ஊறிய மட்டைதான ரெண்டு பேரும்… அவ புத்திதானே உனக்கும் இருக்கும்…. என்று பாலா சிறிது நக்கலாய்ச் சொல்ல.

“ஏய்…” விரலை உயர்த்திய வினோத்திடம் அந்த அளவு கோபம் இல்லை என்பதுதான் உண்மை… ஏற்கனவே பட்டுட்டு இருக்கான்… நாமும் படுத்த வேண்டாம் என்று நினைத்து விட்டான் போல….

“என்ன என் அத்தை மக… நக்கலா உனக்கு… ஒழுங்கா உன் பொண்டாட்டினு சொல்லு” என்றவனின் வார்த்தைகளில்… பாலா நெகிழ்ந்தான்….

”தேங்க்ஸ் வினோத்… இப்போவது ஓரளவு புரிஞ்சுக்கிட்டியே….” என்றபோது..

“பாலா ..விடு நடந்தது நடந்து போச்சு… இனி எதையும் நம்மால் மாத்த முடியாது…. ஆனால்…. கீர்த்திக்கு யாரும் இல்லைனு மட்டும் தப்புக் கணக்கு போட்டுராத…. நான் சாகிற வரை அவளுக்கு ஆதரவா இருப்பேன்…. அத மட்டும் மனசுல வச்சுக்கோ…. அவளுக்கு உன்னோட வாழ பிடிக்கலைனு சொல்லி என்கிட்ட வந்தா… நான் அவ சொல்றபடித்தான் கேட்பேன்… அவளுக்கு பிடிக்காத எதற்காகவும் வற்புறுத்த மாட்டேன்…” என்று கறாராகப் பேச….

அவள உன்கிட்ட வர்ற வரை நான் விட்டுட்டு இருப்பேனு நினைப்புதாண்டா உனக்கு…. என்று மனதிற்குள் நினைத்தவன்….

“வினோத்… அவ என்னை தன் உயிருக்கும் மேலா நேசிக்கிறாள்… ஆனா வெளிப்படுத்த மாட்டேன் என்கிறாள்… நீ இன்று சொல்லித்தான் அவ அன்னைக்கு என்ன சொல்லி அழுதானு அவளுக்கு தெரிய வந்தது….. அதுவரை… நான் தான் அவள்..மேல பரிதாப்ப் பட்டு விரும்பறேனு நினைத்துக் கொண்டு இருந்தாள்… இதைச் சொல்லும் போதே இன்றைய இரவை நினைக்கவே அவனுக்கு கண் முன் பூதாகாரமாக தோன்றியது …. என்ன ஆட்டம் ஆடப் போகிறாளோ என்று….

வினோத் ஆச்சரியமாக

“என்னது அவளுக்கே தெரியாதா…. நான் சொல்லித்தான் தெரியுமா… “ என்று கேட்க….

“ஹ்ம்ம்ம்,.. அது மட்டும் இல்ல… இன்னொரு பெரிய விசயமும் இன்னும் அவளுக்கு தெரியாது… அவளுக்கு என்ன யார்க்குமே தெரியாது உன்கிட்ட மட்டும் தான் இத இப்போ சொல்கிறேன்…. என்றவன்… ராகவனும் மைதிலியும் அவனிடம் பணத்தை திருப்பித் தந்த விபரத்தை சொல்ல.. வினோத் சந்தோசமாக அதிர்ந்தான்…

“உண்மையா பாலா… என்று தளு தளுத்தவன்…

“அத்தைக்கும்-மாமாக்கும் பொண்ணுனா அவ்வளவு இஷ்ட்டம்… கீர்த்தி முகத்தில் ஒரு சுணக்கம் வரக்கூடாது…. அதை மாற்றி சந்தோசமாக்கினால்தான் ரெண்டு பேருக்கும் திருப்தி..”என்று சிலாகிக்க

“அப்போ எனக்கு மட்டும் என்ன வினோத்… இன்னைக்கு நீ அவள அடிச்ச அடில எனக்கு உயிரே போய்டுச்சு தெரியுமா” என்றவனை நம்ப முடியாமல் பார்க்க

”என்னடா இவனுக்கு இப்பொ வந்த கீர்த்தி மேல இத்தனை காதலா … அப்டினுதானே நினைக்கிற……. மதுவோட காதல் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம்தான்… அதை மறுக்க முடியாதுதான்…. ஆனா அவ என்னைய லவ் பண்ணினால் என்றால்…. அதற்கு அத்தனை தகுதியும் எனக்கு இருந்தது…. என்ன கொஞ்சம் கோபக்காரனா இருந்தேன்… அதைத் தவிர என் மேல் எந்தக் குறையுமில்லை…. ஆனால்…. கீர்த்திக்கு என் மேல் வந்த காதல்… அது எந்தத் தகுதியுமில்லாத ஒருவன் மேல் வந்த ஒன்று… அவளின் வாழ்க்கையை பணயமாக்கினேன்… அவளை என் மனைவி ஆக்கிய அந்த நிமிடத்தில் கூட மதுவின் நினைவில் தான் இருந்தேன்…….. பெண்ணாய் அவளுக்குண்டான உணர்வுகளை…. உணர்ச்சிகளற்ற எனது நடவடிக்கைகளில் கூறு போட்டேன்… நான் இன்னொருத்தியின் உரிமை என்பதை என் ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டிருக்க… என்னை…. நான் கட்டிய தாலியை…… அதற்கு மட்டுமே மதிப்பளித்து…. என் முதல் காதலை உணர்ந்து…. வெறுமையான என் நினைவுகளோடு மட்டும் வாழ முடிவெடுத்து….. அவள் காதலை எனக்கு உணர வைக்காமலே…. என்னைவிட்டுப் போக தீர்மானித்திருந்த அவள் காதல் எனக்கு பெரிதுதான்…. நேற்று வரை அவள் காதல் எனக்கு தெரியாது என்ற நினைவில் என்னை மனதோடு பூட்டி வைத்து…. தன் மண வாழ்க்கையோடு மன்றாடிக் கொண்டிருக்கும் என் மனைவியோட காதல் எனக்கு….. மதுவோட காதலை விட உயர்ந்ததுதான்… இதை யார் கேட்டாலும் சொல்வேன்… என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசியவனை …. அவனின் உணர்வுகள் புரிந்து வினோத் அவன் கைகளை ஆதரவாகப் பிடித்தான்…

அவனின் ஆதரவு தந்த நம்பிக்கையில் இன்னும் மனம் திறந்தான் பாலா….

“ப்ளீஸ்..,, பண விசயத்த மட்டும் அவளுக்கு சொல்லிடாத… என்னால முடியாத நிலையில.. அத வச்சுதான் அவள என்கிட்ட இருந்து பிரிய முடியாம பண்ணனும்….” என்ற போதே வினோத் கேள்வியான பார்வையில்… மனம் முழுதும் பாரத்துடன்

“கீர்த்திகிட்ட சொல்லாம மறச்சுட்டேனு கோபமா வருதா… எனக்கு வேறு வழி இல்லை…. என்னால முடியல வினோத்… ஒரு பொண்ணுக்கு நம்மள பிடிக்க வில்லை என்று சொன்னால்