என் உயிரே!! என் உறவே!!!-44

அத்தியாயம் 44:

கீர்த்திகாவின் கழுத்தில் தாலி ஏறிய போதும் யாருக்கும் அங்கு நிம்மதி இல்லை…. பாலாவிடம் ஆதி புலம்பியபடி இருக்க… பாலாவுக்கு கூட கோபம்… இவ்வளவு அவசரமாக இந்தத் திருமணம் அவசியமா என்று

அது மதுவின் மேல் திரும்பியது…. வீட்டிற்கு கூட போக வில்லை அவன்… நேராக வந்தது மது-கீர்த்தி தங்கியிருந்த வீட்டிற்கு…

கோபத்தில்தான் நுழைந்தான் பாலா… ஆனால் தலையில் கட்டுப் போட்டபடி அமர்ந்திருந்த மதுவைப் பார்த்தவன் தவித்துப் போய் விட்டான்…

பாலாவைப் பார்த்த மது ஓடி வந்து கட்டிக் கொண்டாள்….. அன்று…….. ஒரு நொடியே நினைத்த இனி பாலாவைப் பார்ப்போமோ மாட்டோமோ என்ற தாக்கத்தில் வந்த தவிப்பில்

பாலா என்று இறுகக் கட்டியணைத்தவளை பார்த்தவன் கீர்த்திகாவும் அங்கிருப்பதை உணர்ந்து.. அவளை மெல்ல விலக்கினான்…

கீர்த்திகா மட்டும் அங்கு இல்லையென்றால்… அவளின் தயக்கமற்ற காதலில் அவனும் கொஞ்சம் முன்னேறி இருப்பான் தான்… அவளை விலக்கி நிறுத்தியவன்

”என்ன ஆச்சு மது….. நான் போன ஒரு வாரத்தில்…. ராஸ்கல் உனக்கு வேற தலையில அடி பட்ருக்கு… அவன்லாம் ஒரு ஆளுன்னு” என்றபடி கீர்த்தியை பார்த்தவன்…. அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தபடி…

“எதுக்கு மது அந்த அயோக்கிய ராஸ்கல் கொண்டு வந்த தாலிய கீர்த்தி கழுத்தில கட்டச் சொன்ன…. ஆதி கொஞ்சம் நல்ல நேரம்….கெட்ட நேரம் அதெல்லாம் பார்ப்பான்… அதுனாலதான் அவனால ஏத்துக்கமுடி