என் உயிரே!! என் உறவே!!!-42

அத்தியாயம் 42:

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாமே அந்த இரு ஜோடிப் புறாக்களுக்குமே அவர்கள் காதலின் வசந்த காலமே…

பாலா மதுவின் காதலை ஒத்துக்கொண்ட பின்னர்…. இவர்கள் பற்றிய கவலை இல்லாமல் ஆதி-கீர்த்திகா தங்கள் காதலில் திளைத்தனர்…

பாலாவினுள் மதுவின் காதல்.. அவள் நேசம் அவன் உயிரோடும்… அவன் உள்ளத்தோடும் சீராடியது…

அவள் காதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போராடினான் என்றே சொல்ல வேண்டும். அவள் காதல் பாலாவின் ஒவ்வொரு செயலிலும் மதுவை பிரதிபலித்தது…

எதற்கெடுத்தாலும் கோபப்படும் அவன் குணம்…. கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது… எந்த ஒரு விசயத்திலும் அடுத்தவரின் நலனைப் பார்க்கும் குணமும்… அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவள் குணமும் அவனுள் வரத் தொடங்கி இருந்தன…

பாலா தன் அலுவலகத்தை அப்போதுதான் தொடங்கியிருந்த காரணத்தால்… மதுவுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திணர… மதுதான் தனக்காக அவன் சிரமப் பட வேண்டாம் என்று வாரம் ஒரு முறை வந்து பார்த்தாலே போதும் என்று சொல்ல... முடிந்த அளவு அவளைத் தினம் பார்ப்பான்…அதுவும் 10 நிமிடம்தான்…

மது அவனுக்காக…. காத்திருக்கும் நேரத்தையும்.. அருகில் உள்ள குப்பத்தில் உள்ள சிறார்களோடு உற்சாகமாகக் கழிப்பாள்… பாலா வரும் வரை…

அன்றும் அவன் தாமதமாக வர…

ஒரு கையால் தலையைக் கோதியபடி… மறு கையை அவளின் தோள் மேல் போட்டபடி அவளின் அருகில் வந்து அமர்ந்த அவனிடம்… மது….

“என்னடா…. இன்னைக்கு வருவியோ மாட்டியோனு நெனச்சேன்… வந்துட்ட..” என்று காத்திருந்த தவிப்போடு கேட்க

“கொழுப்பாடி உனக்கு… சும்மா இருந்த ஒரு நல்ல பையன காதல்ல புடிச்சு இழுத்து விட்டுட்டு… இதுவும் நீ கேட்பாய்……. இன்னமும் கேட்பாய்….” என்றவன்…

“யாரு… நீ … நல்ல பையன்…” நக்கலடிக்க

”பின்ன… தம் அடிக்க மாட்டேன்.. தண்ணி அடிக்க மாட்டேன்… மட்டன் கூட சாப்பிட மாட்டேன்…. பொண்ணுங்க விசயத்தில….உன்னத் தவிர சுத்தமாவே அலர்ஜி… அப்போ நான் நல்ல பையன் தானே…” என்று கண் சிமிட்ட

“அடப் பாவி… நீ சொன்னதில பொண்ணுங்கனு சொன்ன விசயத்தில வேணும்னா ஒத்துக்கறேன் … நல்ல பையன்னு…. ஆனா மற்றது எல்லாம் நீ டிரை பண்ணிட்டு ஒத்து வராம விட்ட விசயங்கள்…. ஒகே வா இருந்திருந்தா கண்டினியூ பண்ணியிருந்திருக்க மாட்ட.. என்கிட்டயேவா காதுல பூ சுத்தர… வேற எவனாச்சும் வருவா… அவகிட்ட சுத்து உன் கதையை எல்லாம்..”

“பாலா… நீ தப்பிச்ச… பொண்ணுங்க விசயத்திலனாலும் உன் மது உன்னை நம்புறாடா…” என்றவனை… கண்களில் பெருமை பொங்கப் பார்த்தவள்

”அது என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல சொன்னேன்… ஏதோ நானா இருக்கப் போய் நீ எவ்வளவு இன்சல்ட் பண்ணினாலும்….அதை எல்லாம் தொடச்சுட்டு… சுத்தி சுத்தி வந்து உன்னைக் கரெக்ட் பண்ணினேன்…. அது மட்டும் இல்ல… என்னைத் தவிர வேறொருத்திய உன்னை நெருங்க விடுவேனா… உன்னை சுத்தி இந்த மதுவோட காதல்… நெருப்பு வளையமா எப்போதும் இருக்கும்…. அபிமன்யூ சக்கர வியூகத்தை போல… என்னைத் தவிர வேறு யாராலும் உன்னை நெருங்க முடியாது…” என்று தன் காதலின் மீதிருந்த கரை காணா நம்பிக்கையில் பேச

பாலா அவளது காதலில் கர்வம் கொண்டான் என்பதே நிஜம்…

“சரி விடு… டாபிக் மாறுது… நம்ம ரெண்டு பேருக்கும் இடையே இன்னொருத்தினு கேக்கவே நல்லா இல்ல… எனக்கு என் மது மட்டும் போதும்…” என்று இன்னும் அருகில் அமர்ந்தவனை…. விட்டு விலகி அமர்ந்தாள் மது…

அதைப் புரிந்தவனாய்….. “அப்டியே தள்ளி தள்ளி உட்கார்ந்து… அடுத்த பென்ச் ல போய் உட்கார்ந்திடாத…. என்று கிண்டலாக கூறி அவளைத் தன் புறம் இழுக்க…

“பரவாயில்லை...” என்றபடி முணங்கிய மதுவிடம்.. கொஞ்சம் எரிச்சலாய்

”நெருப்பு வளையம்… சக்கர வியூகம் லாம்னு வாய் கிழிய பேசுற… நீயே அதை உடைத்து வர முடியாது போல…” என்றவன்.. ஞாபகம் வந்தவனாய் …அவள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான்

”இன்னைக்கு நான் வந்தா என்ன… வரலேனா என்ன… போன் வேற அடிக்கடி பண்ணிருக்க.. ஏன்… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”

“எங்க நீ வராம போய்டுவியோனு நெனச்சுதான்…கண்டிப்பா வரச் சொல்லி போன் பண்ணினேன்….… நல்ல வேளை வந்துட்ட” என்றவள் அவன் புறம் திரும்பி நேராக அமர்ந்து ….சரி எனக்கு விஷ் பண்ணு” என்று கேட்க…

எதுக்கு… என்று புரியாமல் கேட்க

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. உன்னைப் படைத்த கடவுள்… உன்னை இம்சப் படுத்துறதுக்கும் ஒரு ஒரு இம்சையைப் படைத்தார்.. அந்த இம்சையைப் படைத்த நாள்” என்று கூற… உற்சாகத்துடன்

“ஹேய் மதும்மா…உனக்கு இன்னைக்கு பிறந்த நாளா…” .என்றபடி வாழ்த்துக் கூறியவன்

“ஏன் என்கிட்ட முன்னாலேயே சொல்லல… இந்தக் கு… கீர்த்தி கூட எனக்குச் சொல்ல வில்லை… இருக்கு அவளுக்கு” என்று கீர்த்தியை திட்ட ஆரம்பிக்க

“உனக்கு அவள திட்டலேனா…. தூக்கமே வராதாடா… நான்தான் சொல்ல வேண்டாம்” என்று சொன்னேன்…”

இதைச் சொன்னவுடன் அவன் கண்களில் வந்த கோபத்தில்

”உன் காதலியோட பிறந்த நாள் தெரியல உனக்கு… இதுல உனக்குலாம் கோபம் வேறயாடா… போடா… ஆனா உன்னை என்னைக்கு லவ் பண்ன ஆரம்பித்தேனோ அன்னைக்கே எனக்குத் தெரியும்… உன்கிட்ட எல்லாம் ரொம்ப எதிர்பார்க்கக் கூடாதுன்னு…. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா… என்னோட பிறந்த நாளே தெரியல உனக்கு.. நீ எல்லாம் ஆஃபிஸ் ல இருக்கற எம்ப்ளாயியோடா பிறந்த நாளை ஞாபகம் வைத்து பிரமோசன் கொடுக்கப் போகிறாயா… கிழிச்ச…” எனச் சொல்ல

“ஹலோ… அவங்க பிறந்த நாள் எல்லாம் பயோடேட்டால இருக்கப் போகுது…. ப்ரமோசன் கொடுக்கும் பொது அவங்களோட பயோடேட்டாவ பார்த்து கொடுக்கப் போகிறேன்… அது வேற டீல்… அவங்களும் நீயும் ஒண்ணா… நாம அப்படிப் பண்ணினா… அவங்க உற்சாகமா வேலை பார்ப்பாங்க… இது ஒரு பிஸ்னஸ் தந்திரம்… அதுனால நமக்குதான் லாபம்…அதை விடு” என்றவன்

“அடப்பாவி…. சுயநலக்காரண்டா நீ…. உன்னை எல்லாம்… டேய் லூசு…. நீ நல்லதுதான் பண்ற.. அதை வெறும் பிஸ்னஸ் மைண்டோட மட்டும் பண்ணாம…. மனப்பூர்வமா பண்ணு….புரிந்ததா….” என்று சொல்ல

“சரி… சரி.. அட்வைஸ் பண்ணியே நேரத்தை ஓட்டிடுவியே… நேத்தே சொல்லி இருக்கலாம்ல மது…” என்று யோசித்தவன்…

“இப்போ கடைக்கும் போக முடியாது… என்ன பண்ணலாம்… ஆனா நான் கிஃப்ட் குடுக்கணுமே” என்று யோசித்தவனிடம்

“ஒண்ணும் வேண்டாம்… நீ ஃபீல் பண்ற மாதிரிலாம் சீன் போடாத….”

“சத்தியமா மது….” என்று அப்பாவியாய் மாறி கூறியவனிடம்

“நம்பிட்டேண்டா… முதல்ல உன் முகத்தை மாத்து…” என்று சிரிக்க

”மது…மது டார்லிங்” என்றபோதே குரலில் பிசிறடிக்க

“என்னடா… திணறுற” என்று நிமிர்ந்த அவளுக்கு அவனின் பார்வை மாற்றம் புரிய…

“அது..அது வந்து.. நான் கிஃப்டும் வாங்கிட்டு வரல.. உனக்கு கிஃப்ட்டும் குடுக்கணும்… என்ன பண்ண… அதுனால… இப்போதைக்கு என்கிட்ட இருந்து கொடுக்க முடிஞ்ச விசயம்னா.. அது என்றவன் அவள் உதட்டைப் பார்த்தபடி…

“ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்ற போதே முறைத்த அவளிடம்

“ஹேய் மதுமா… நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல… அதெல்லாம் ரொம்ம்ம்பத் தப்பு… ஜஸ்ட் கன்னத்தில மட்டும்..” இன்னும் அவள் கோபத்தில் இருக்க..

இன்னும் இறங்கி

“அதுவும் கொஞ்சம் தப்புதான்… சரி கைல மட்டும்..ப்ளீஸ்” எனச் சிறு பிள்ளையாய்க் கெஞ்ச

”நான் தானே காதலை உன்கிட்ட சொன்னேன்… அது மாதிரி நான் தான் உனக்கு முதலில் தருவேன்… அதுவரை நீ காத்திரு… சும்மாவா… 1 ½ வருசம்… என்னை அலைய விட்ட… அது கூட ஓகே…. ஆனா உனக்கு லவ் வந்த பின்னாடி கூட 3 நாள் அலைய விட்டேல்ல…அதுக்குதாண்டா இந்த பனிஷ்மெண்ட்”

”படுத்துறடி… இதுக்குலாம் நல்லா ஒரு நாள் அனுபவிப்ப என்கிட்ட… அப்ப இருக்கு உனக்கு” என்று சொல்ல

“ஓ சார்க்கு அப்டிலாம் ஒரு எண்ணம் இருக்கா…” என்று கறாரான குரலில் கேட்க

“அம்மா தாயே… உன்கிட்ட அப்படில்லாம் நடப்பேனா… ஏதோ காதலனா கொஞ்சம் பேசிட்டேன்…. இதையும் ஞாபகம் வச்சுட்டு என்னைய காயவிட்டுராத… தாங்க மாட்டான் உன் பாலா” என்று முன்னெச்சரிக்கையாய் பேசியவனைப் பார்த்து மது வெட்க்கப்பட்டு சிரித்தபடி அடிக்க

அவளின் வெட்க்கத்தை ரசித்தவனாய்

“நீயும் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம் மதுச் செல்லம்…. காதலைத்தான் நீ முதலில் சொன்ன… ஸோ ரொமான்ஸை முதல்ல நான் ஆரம்பிக்கலாம்ல… ” என்று அவனின் ஏக்கம் நிறைந்த குரலில் இழுக்க

அவனின் ஏக்கம் நிறைந்த குரலில் மதுவும் மயங்க…. பாலாவுக்கு அதுவே ஏதுவாய் …. போக

அவளின் அருகில் நெருங்கியவன்

“மது… ப்ளீஸ்… கன்னத்தில மட்டும்… ஒண்ணே ஒண்ணுடி”

“வேண்டாம்டா…“ என்று அவள் சிணுங்கிய விதமே அவளின் சம்மத்தைச் சொல்ல

அவளை இழுத்து தன் இதழை அவள் கன்னத்தில் பதிய வைக்கப் போக..

அவன் அருகாமை ஒருபுறம் தயக்கமும்.. மறுபுறம் மயக்கமும் ஏற்படுத்த…. தன்னை மறந்தவளாய் மது மாறிக் கொண்டிருக்க

இருவருக்கும் இடையில் இருந்த மதுவின் மொபைல் திடிரென அலற… சட்டென்ற