என் உயிரே!! என் உறவே!!!-41

அத்தியாயம் 41

நாட்கள் வேகமாகச் சென்றன… கீர்த்தி-ஆதி காதல் ஆழமாக ஆரம்பிக்க.. பாலாவோ மதுவை கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்க வில்லை… இருந்தாலும் மது ‘கஜினி முகமது’ போல்தான் தொடர்ந்தாள்… பலன் தான் பூச்சியமாக இருந்த்து…

கீர்த்தியும் ,மதுவும் இரண்டாம் வருடத்தில் கால் பதித்திருந்தனர்…

ஆதி… தன் தந்தையின் சென்னையில் கன்ஸ்ட்ரக்சன் தொழிலின் பிரிவில் தலைமை ஏற்க… பாலாவோ … தன் தந்தையின் தொழிலில் அல்லாமல்.. அவனுக்கு மென்பொருள் துறையில் இருந்த ஆர்வத்தால்… அதில் அனுபவம் பெற.. தன் தந்தையின் நண்பரின் அலுவலகத்தில் சேர்ந்தான்…அதுவும் மிகக் குறந்த சம்பளத்தில்… அவன் தந்தைக்கு இதில் இஷ்டம் இல்லைதான்..இருந்தாலும் மகனின் போக்கிலேயே விட்டு விட்டார்… அது மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனத்தில் தனக்கு கிடைத்த வேலையையும் விட்டு விட்டு தந்தையின் நண்பரின்