என் உயிரே!! என் உறவே!!!-40

அத்தியாயம் 40

ஆதி … பாலா சொன்ன வார்த்தைக்காக.. எதுவும் பேசாமல் முகத்தை உர்ரென்று வைத்தபடி பின்னே வர… பாலாவோ அவனுக்கு இன்னும் கோபம் போக வில்லை என்பதை உணர்த்துவது போல பைக்கை விரட்டினான்…..

அவன் கோபத்தை இன்னும் அதிகரிப்பது போல்… இடையிலேயே….

ஒரு பூ விற்கும் பாட்டி…. அவர்கள் செல்லும் வழி அடைக்கப் பட்டுவிட்டது என்று கூறி, அவர்களை வேறு பாதையில் செல்லச் சொல்ல…… எரிச்சலுடனே பாதையை மாற்றி பயணம் செய்தனர்….

பாலா….. சீக்கிரமாகச் செல்ல…. சாலையை விட்டு….. தெருக்களின் சாலையில் தன் வண்டியைவிட… அங்கும் போக முடியாமல் … போக்குவரத்து நெரிசலில் மாட்ட….. வேறு வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தான்… அப்போது

”ஏய் ஏய் கீர்த்தி…கீர்த்தி ப்ரேக்க புடி…. இடிச்சுறப் போற……” என்ற அலறலில் இருவரும் திரும்ப…. ஓட்டி வந்த பெண்ணோ… விட்டால் இவர்களின் கால் மேல் வண்டியை ஏற்றி விடுவாளோ என்ற பீதியில் இருவரும் ஊண்றியிருந்த காலைத் தூக்க…..

அவளுக்கு பின்னால் வந்த வாலிபனோ…..அவள் கையைப் பிடித்து அட்ஜெஸ்ட் செய்ய …இருவரின் மேல் மோதமால்….சற்று முன்னே சென்று நிறுத்தினாள்…..

“சாரி பாஸ்…. இப்போதான் கத்துக்கறா…” என்று சொல்ல…

அவனின் உடனடி மன்னிப்பில்…பாலாவும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்..

ஆனால் …. இவ பேரும் கீர்த்தியா….. கீர்த்தினு பேர் உள்ளவள்களே நமக்கு ஆப்பு வைக்கத்தான் வருவாளுங்க போல….. அவ அப்பாகிட்ட ஆப்பு வச்சான்னா… இவ நம்ம காலுக்கே ஆப்பு வச்சுருப்பா போல….. நல்ல வேளை அவ அண்ணன் ப்ரேக் புடிச்சான் என்ற மட்டில் நினைத்தான்

ஆதியோ சும்மா இருக்காமல்

“பாப்பாவை கூப்பிட்டு ஒரு கிரௌண்டுக்கு போய் சொல்லிக் குடுக்கறத விட்டுட்டு….. இப்படியா பாஸ் பண்ணுவீங்க” என்று வாய்விட

இப்போது திரும்பி அவள் ஆதியைப் பார்த்து முறைக்க… அது ஹெல்மெட்டின் வழியே தெரிந்த கண்களிலேயெ அப்பட்டமாக அது தெரிய… ஆதி வாயை மூடிக் கொண்டான்….

ஆதி சொன்ன பாப்பா என்ற வார்த்தையில் கோபமாக ஆனவள்… பின்னால் இருந்தவனின் மேல் பாய ஆரம்பித்தாள்…

நான் சொன்னேன்ல…. மெயின் ரோட்லயே போகலாம்னு…. நீதாண்டா கேக்கல… இப்போ பாரு… “

“ஏய் குறத்தி…… நீ ஒழுங்கா ப்ரேக் பிடிக்காம வந்துட்டு தெருவ கோணல்னு சொல்லாத…. யூனிபார்மல இருந்துட்டு உனக்கு மெயின் ரோட்ல வேற போகணுமா..போலிஸ் புடிச்சான்னா தெரியும்..”. எனும் போதே…….

பாலாவும்…ஆதியும் தங்களை கவனிப்பதை உணர்ந்த கீர்த்தி.. அதிலும் ஆதியின் சுவாரஸ்யமான பார்வையில் இன்னும் கோபமான கீர்த்தி

“டேய் என்று பல்லைக் கடித்தவள்…. முன்னால் மாட்டியிருந்த தன் ஸ்கூல் பேகை திறந்து அதிலிருந்து ஸ்கேலை எடுத்து அவனை 2 அடி அடித்தவள்

”ஏண்டா இப்படி என் பேர கொல்லுற…. போறவன் வர்றவன் எல்லாம் என்ன ஒரு மாதிரியா பார்க்கிறான்….” என

”சரி நான் சொல்லல…. நாளையில இருந்து நீ இப்படி என்னை ஸ்கூட்டி பழக கூப்பிட்டு வர மாட்டேனு சொல்லு….. நானும் குறத்தினு சொல்ல மாட்டேன் என்று சொல்ல..

”யாரு நீ….. நீயாவது அப்டியே சொல்லாம இருந்துட்டாலும்” என அவள் பேச…..

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்லும் திசையில் வழி கிடைக்க இருவரும் அதில் நுழைந்து பறந்து விட்டனர்…

கீர்த்தியும்…. பாலாவும் ஹெல்மெட் போட்டிருந்த படியால் இருவருக்கும் தெரியவில்லை… வினோத்தும் ஹெல்மெட் போட்டிருந்தான் என்பதால் அவனும் அடையாளம் தெரியவில்லை….

“பாருடா பாலா… இத்துனூண்டா இருந்துட்டு என்னமா கோபம் வருது அந்த பொண்ணுக்கு.. பாப்பான்னு சொன்னா மொறைக்குதுடா….”

இப்போது பாலா

“பின்ன 11த் படிக்கற பொண்ணை பார்த்து பாப்பானு சொன்ன.. முறைக்க மாட்டாங்க” என்று சொல்ல…. அதற்கு ஆதி

“அடப்பாவி….. என் கண்ணுக்கு பாப்பாவ தெரிஞ்சவ உன் கண்ணுக்கு மட்டும் எப்படி பொண்ணா… அதுவும் 11த் படிக்கிற பொண்ணா தெரிஞ்சா” என ஆச்சரியப்பட

இப்போது ஹெல்மெட்டைக் கலட்டிய பாலா… தலையில் அடித்த படி…

“டேய் எரும…. அவ ஸ்கூல் பேக் ஓபன் பண்ணுனால அப்போ அவ புக் வெளிய தெரிஞ்சது அதில பார்த்தேன்… உன்னை எல்லாம் வச்சுட்டு நானும் குப்ப கொட்டுறேன்…” என்று கூறி முறைக்க…

அசடு வழிந்தான் ஆதி….. அதுவரை ஆக்ரோஷமாக இருந்த பாலா…. சில்மிஷமாக

”டேய் மச்சான் அவ பேரு என்ன தெரியுமா” என்று ஆதியை சீண்ட

“தெரியும்…தெரியும்… நீதான் அத சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டியே” என்று சலிக்க

“அது இல்லடா… மச்சி…. அதைவிட சூப்பர் பேர்…. குறத்தி…. இன்னைக்கு இருக்குடா,,, கீர்த்தி… குறத்தி வாட் ரைமிங்…. என்னமா யோசிச்சு இருக்கான் அவன்….. “

“டேய் பாலா…. இது நல்லா இல்ல…. நீ மட்டும் என் ஆள அப்டி கூப்பிட்ட … கொலையே பண்ணிடுவேன் உன்னை” என்று ஆதி எகிற..

பாலா சுத்தமாக கோபம் எல்லாம் போய் ஜாலியாய் பேச ஆரம்பிக்க… ஆதி எதிர்மாறாய் ஆனான்…

‘அந்த குறத்திக்கு சப்போர்ட் பண்ண இன்னும் யார் வருவாங்கன்னு பார்ப்போம்…. ஆனாலும் குறத்திக்கு நம்ம