அத்தியாயம்39:
ஆதியை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்… அந்த நேரத்திற்குறிய விரிவுரையாளர் உள்ளே நுழைய… தங்கள் கிண்டல்களுக்கு…. கேலிப் பேச்சுகளுக்கு தற்காலிகமாக விடை கொடுத்தபடி…. வகுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்…
ஆனால்…. கவனித்துக் கொண்டிருந்த போதே…. பாலாவின் மூளையில் ….. திடிரென்று காலை நடந்த சம்பவம் ஓட …மின்னல் வெட்டியது… மனதில்…
வேகமாக திரும்பி… மெதுவாய் ஆதியிடம் காதைக் கடித்தான்…
“டேய் ஆதி… அந்தப் பொண்ணுக்கும் உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் போல… ஏனென்றால் திட்டியது நான்…. என்னைப் பார்த்து முறைக்காம…. உன்ன முறைத்து விட்டுப் போனாள்… என்ன அர்த்தம் இதற்கு,,, அதிலிருந்தே தெரிய வில்லை… ஒருவேளை அவளுக்கும் உன்னைப் பிடிக்குமோ” என்று தனக்குத் தோன்றிய மாபெரும் சந்தேகத்தை ஆதியிடம் கேட்க
அவனோ அதற்கு பதிலாக
“ஆமா நீ ருத்ர தாண்டவம் ஆடிட்டு இருந்த … அவ உன்ன பார்த்து முறைச்சுட்டுதான் மறு வேல பார்ப்பா… நான் அவள பார்த்துட்டு பம்மி நின்னேன்… அதனால உனக்கு பதிலா என்ன முறச்சிட்டு போறா… போடா நீயும் உன் சந்தேகமும் “ என்றவனிடம்..’
“டேய் லூசு… அதெல்லாம் தெரியுதுடா… ஆனா உன்ன பார்த்து உரிமையா………….” என்னும் போதே..
“பாலா அங்க என்ன பேச்சு….. பாடம் கவனிக்க இஷ்டம் இல்லைனா வெளில போகலாம்” என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் கடுப்புடன் கூற…
அவனுக்கும் கவனிக்க இஷ்டம் இல்லைதான்.. அது அவனுக்கு பிடிக்காத பாடம், ஆள விட்டால் போதும் என்று சந்தோசமாக வெளியேறியவன்…
போகும் முன்… “ உன் ஆளால.. எனக்கு ஒரு நல்லது நடந்துடுச்சுடா மச்சி… பாய்” என்ற ஆதியை மறக்காமல் வெறுப்பேற்றி விட்டும் வெளியேறினான்……
வெளியேறியவன் அது கடைசி வகுப்பு என்பதால்… தன் வண்டி நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகாமையில் ஆதிக்காக காத்திருக்க…. கீர்த்திகாவும்…. அந்த நேரத்தில் கிளம்பியிருந்தாள்…. வகுப்பில் இருக்கப் பிடிக்காமல்..
வண்டி எடுக்க வந்தவள் தொலைவிலேயே பாலா அமர்ந்திருப்பதை பார்க்க… வேற வினையே வேண்டாம் என்று….. மதுவோடு நாளை வந்தே எடுத்துக் கொள்ளளாம் என்று அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பாமல் ஓட்டமும் நடையுமாய் வெளியேறினாள்…
பாலாவும் அவளைக் கவனித்து விட்டான்…. அவள் தன்னைப் பார்த்து பேயைப் பார்ப்பது போல் ஓட பாலாவிற்கு சிரிப்பு வந்ததுதான் மிச்சம்… ரொம்பத் திட்டிட்டோமோ…. பாவம் புள்ள பயந்து ஓடுது… என்று எண்ணியவன்…..
“ஆதி இவள எப்படி சம்மதிக்க வைப்பான்…. நமக்கு மட்டும் எவ மேலயும் காதல் வந்துறக் கூடாது…. கஷ்டம்டா சாமி…” என்றும் வேறு நினைத்து வைத்தான்… அடுத்த அரை மணி நேரத்தில் ஆதி வந்து சேர…
பாலா ….சற்று முன் நடந்ததைக் கூறிவிட்டு…
“ஏண்டா… என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா என பைக் கண்ணாடியில் முகத்தை பார்த்தபடியே தலையைக் கோதியபடி கேட்க
“ரொம்ப முக்கியம்,,, வா போகலாம்… காலையில நீ மிரட்டுனதுல அரளாம என்ன பண்ணுவா…. என்றவன்… அடுத்து தன் காதல் தொடங்கிய நாள் முதலாய்… கீர்த்தியிடம் தன் மனதை பறி கொடுத்த விதம்.. என்று தன் காதல் மற்றும் கீர்த்தி புராணம் பாட ஆரம்பித்தவன் வாய் மூடவில்லை…. அதுநாள் வரை யாரிடமும் தன் மனம் திறக்காத ஆதி… கேட்க பாலா கிடைக்க… திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே வந்தான்… பாலாவும் அவன் நிலை உணர்ந்து …. அவன் உணர்வுகள் ஓரளவு புரிந்து கேட்க… அவன் தங்கியிருந்த அறைக்கு போகாமல் போகாமல்… பாலா வீட்டுக்குச் சென்றவன் அங்கேயே தங்கியும் விட்டான்… கீர்த்தியைப் பற்றி.. அவன் காதலை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் அவனுக்கு இருக்க தோதாய் பாலா மாட்டினான்….
பாலாவின் காதில் ரத்தம் வராத குறைதான் என்று சொல்ல வேண்டும்…. ஆதி சந்தோசத்தில் பாலாவைக் பேசியே கொல்ல… கீர்த்தியின் நிலையோ அதற்கு எதிர்மாறாய் இருந்தது…
-------------------------
அழுத முகமும்…. சிவந்த விழிகளுமாய்…. மது-கீர்த்தி இருவருமாய் தங்கியிருந்த அந்த வீட்டினுள் நுழைந்த கீர்த்தி.. ஹாலில் சோபாவில் சாய்ந்தபடி வாக்மேனில் கண்மூடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மதுவைப் பார்க்க…. இன்னும் அதிகமாக அழுகை வரும் போல் இருந்தது
“மதூ..” என்று கேவியபடி உள்ளே நுழைந்தாள்
கேட்டுக்கொண்டிருந்த பாடலையும் தாண்டி விழுந்த கீர்த்தியின் குரலும் … அதில் இருந்த வித்தியாசமும் மதுவை கீர்த்தியின் புறம் திரும்ப வைத்தது..
திரும்பி தோழியைப் பார்த்தவளுக்கு…. அவளின் தோற்றம் பகிரென்று தூக்கிப் போட…. வேகமாக அவளை நோக்கி வந்தாள்..
மதுவை ஒடோடி வந்து கட்டிபிடித்து தேம ஆரம்பித்தாள் கீர்த்தி…
என்னவென்று புரியவில்லை மதுவுக்கு….அவளை ஆதரவாக பிடித்தபடி சோபாவில் அமர்த்தி…
அவளை உடனே என்ன ஏது என்று விசாரிக்காமல்… அவளை சில நிமிடம் அழ விட்டவள்…. பின் அவளை நிமிர்த்தி
“என்ன ஆச்சு கீர்த்தி…. எதுக்கு இந்த அழுகை…. உன்ன எத்தன தடவ சொல்றது… எதுக்கெடுத்தாலும் இப்டி அழாதேனு…. தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணனும்னு சொல்லி இருக்கேன்ல… எப்போ நான் உன் கூட இல்லாம தனியா போறியோ அப்போதெல்லாம்….. நீ இப்டித்தான் அழுதுட்டு வர…. போன மாசம்…. நான் ஊருக்கு போயிருந்தப்போ ஒரு பிரச்சனை.. இப்போ என்ன… சரி என்னனு சொல்லுங்க என் செல்லம்ல“ என்று உரிமையுடனும்.. செல்ல கோபத்துடனும் கேட்க
“நான் வேணும்னு ஒண்ணு அழல…. எனக்கு டைமே கிடைக்கலைனு….காலையிலயும்….” என்று தலையும் இல்லாமலும்.. வாலும் இல்லாமலும் அழுத முகமாய் பேச ஆரம்பித்தவளை நிறுத்திய மது
“இரு..இரு… .முதல்ல போய்… இந்த அழுமூஞ்சி முகத்தை கழுவிட்டு வா… வசந்தி ஆன்ட்டி… இப்போதான் காபி போட்டு கொடுத்துட்டு போனாங்க… நான் உனக்கு அத எடுத்துட்டு வருகிறேன்… நீங்க காபி குடிச்சுட்டு தெம்பா…. அக்காக்கு என்ன நடந்துச்சுனு சொல்வீங்களாம்.. சரியா…” என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட..
“இல்ல மது…” என்று ஆரம்பித்தவளை….
இழுத்துக்கொண்டு போய் குளியலறையினுள் தள்ளியவள்… அவளுக்கு காபி எடுத்து வர கிச்சனுக்குள் நுழைந்தாள்…
ஃப்ளாஸ்கில் இருந்த காபியை…ஊற்றிக் கொண்டே..
“எதுக்கு இப்படி அழுதுருக்கா… ஆதியால இருக்குமோ… என்று நினைக்க…. சேசே… அவன் இவள பார்க்கும் போதே காதல் ஆறா ஓடுது… அவன் எப்போ லவ் சொல்லுவானுதான் நம்ம ஆளும் ஏங்கிட்டு இருக்கா… அவனால பிரச்சனை வர சான்ஸ் இல்ல.. வேற என்னவா இருக்கும்…. என்று யோசித்தபடி காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்…
அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு 6 வயதில் இருந்து தொடங்கிய நட்பு… தன்னைப் போல அல்லாமல்…. சிறுவயதில் கீர்த்தி தன் தாய் தந்தை கையை பிடித்துக் கொண்டு பள்ளிக்கு வரும் அழகை பொறாமையோடு பார்ப்பாள் மது…. தனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை…. என்பதால்.. ஆனால் கீர்த்தியின் தாய்… கீர்த்திக்கு அடுத்த பிள்ளையின் பிரசவத்தில் பிரச்சனை ஏற்பட்டு இறக்க… கீர்த்தியைப் பார்த்து பாவமாய் ஆனாள் மது… அதன் பிறகு எப்போதும் அடம்பிடித்து பள்ளிக்கு வந்த கீர்த்தியிடம் மது தோழமைக் கரங்களை நீட்டி நட்பை ஆரம்பித்தாள்.. கீர்த்தியின் தாய் இறந்த சில மாதங்களிலேயே அவளின் தந்தை அவளைக் கவனிக்க முடியாமல் மறுமணம் செய்ய… கீர்த்தி மனம் நொந்தாள்,,, தந்தையை வெறுக்க ஆரம்பித்தாள்… சித்தியாய் வந்தவரும் கொடுமையெல்லாம் செய்ய வில்லை என்றாலும்… அவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்த கீர்த்தி.. மெது மெதுவாய் மதுவின் நட்பென்னும் சிறகினுள் அடங்கினாள்… மதுவும் அவள் நிலை உணர்ந்து …அவளை அரவணைக்க… நாட்கள் செல்லச் செல்ல மதுவின் பாசம்.. அவள் கண்டிப்பு… அவள் நட்பு… என மது கீர்த்திக்கு அவளின் அன்னையாகவே மாறிப் போனாள்,,,, கீர்த்தியின் தந்தையும் அதைப் புரிந்தவராய்… மதுவுடனே அவளை விட்டு விட்டார்… அவர்க்கு கீர்த்தியிடம் எதுவும் சொல்லி நடக்க வேண்டுமென்றால் கூட மதுவிடம்தான் வருவார்… அவரின் உணர்வுகளைப் புரிந்து… மதுவும் கீர்த்திக்கு புரிய வைத்து அதைச் செய்ய வைப்பாள்…. கீர்த்தியும் மதுவுக்காக மட்டுமே செய்வாள்…
பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த நட்பு… கல்லூரி வரைத் தொடர்கிறது….
முகம் கழுவி வந்த கீர்த்தி… மது கொடுத்த காபியை ஒரே மடக்கில் குடித்தவள்… சொல்ல ஆரம்பித்தாள்
”அந்த பாலா இல்ல” என்று ஆரம்பித்தாள்…
பாலா ஸ்டுடண்ட் கோ ஆர்டினேசன் தலைமைப் பொறுப்பில் இருந்ததால்… மாணவர்கள் மத்தியில் அனைவருக்கும் பிரபலம்…. மதுவும் பார்த்திருக்கிறாள்…. அது மட்டும் இல்லாமல் அவன் ஆதியின் நண்பன் என்பதாலும் அடிக்கடி கண்ணில் படுவான்…. ஆனால் பேசியதில்லை… அவனைத் தெரியும் அவ்வளவே..
சொல்லி முடித்த கீர்த்தி..
“அவன் திட்டினதெல்லாம் வருத்தம் இல்ல மது…. கூட ஆதியும் இருந்தான்…. பாலாவ எதிர்த்து ஒண்ணும் பேசல… அதுதான் எனக்கு அழுகைய கன்ட்ரோல் பண்ண முடியல… என்று கண்ணைக் கசக்க
கீர்த்தியின் அழுகையை மட்டும் மதுவால் தாங்க முடியாது … மனது தாளவில்லை..மதுவுக்கு… இருந்தாலும்
“கீர்த்தி… நீ செய்ததும் தப்பு தானே…. அவங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் நீ ஏன் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணினாய்…” என்று நியாயமாக பேச…. அது பாலாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாய்ப் போக….
பெரும்பாலும்..மது நியாயம் உணர்ந்தே பேசுவாள்…. அந்த இயல்பில்தான் அவள் பேசினாள்…. உடனே கீர்த்தி முகத்தை தூக்கி வைத்து கொள்ள….. மது இப்போது… பேச்சை மாற்றினாள்
“ஆனா என் செல்லத்த திட்டலாமா… அது தப்பாச்சே… என்ன பண்ணலாம்…. அந்த பாலாவை…. அவன விடு.. உன் ஆதிய என்ன பண்ணலாம்… நாளைக்கு இருக்கு அவனுங்க ரெண்டு பேருக்கும்,,,,, நீ பிராக்டிஸ் பண்ற டைம்ல வரட்டும்… இருக்கு கச்சேரி…. மது இருக்கும் போதே உன்ன திட்டிட்டானா…. நான் யார்னு அவனுக்கு புரிய வைக்கிறேன்..” என்று தோழியை ஆறுதல் படுத்த… அவளின் வார்த்தைகளில் சமாதானமான கீர்த்தி… பின் முகத்தை அழுந்த கைகளால் துடைத்து….
“இப்போ ஒக்கே வா” குழந்தையைப் போல் மதுவிடம் கேட்க….
“இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு… good girl” என்று அவள் தலையை செல்லமாக தட்டிக் கொடுத்த.. மதுவிடம்….
”நீ அந்த முசுட்டுப் பாலாவ எவ்வளவு வேண்டுமானலும் திட்டிக்கோ… உன் திட்டுக்கெல்லாம் அந்த சிடுமூஞ்சி தாங்குவான்…… பாவம் ஆதி… அதுனால கொஞ்சமா திட்டு….” என்று காதலியாய் மாறி பேச….
மது அவள் காதலில் வியந்துதான் போனாள்…. கிட்டத்தட்ட அவள் தாய் இறந்த பிறகு அவள் முழுவதுமாய் நேசித்த ஒரு விசயம் என்றால் அது.. ஆதியின் காதல் தான்…
கீர்த்தி அழகு என்றால்… மது கம்பீரமாக இருப்பாள்… ஒரு நிமிர்வு அவளிடம் எப்போதும் இருக்கும்…. அதனால் அவளைப் பிடித்திருந்தால் கூட அவளிடம் நெருங்கப் பயப்படுவர் யாரும். அதையும் மீறி சொல்லியவர்களுக்கு கூட அவளின் முறைப்பே காத தூரம் ஓட வைக்கும்…. அதனால் மதுவுக்கு இந்தப் பிரச்சனை இல்லை அவ்வளவாக…
ஆனால் அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்து கீர்த்தியிடம் காதல் சொன்னவர்கள் எத்தனையோ பேர்.. அவள் அழகு அப்படி… இப்படி இருந்த சூழ்னிலையில் … இதுவரை யாரிடமும் காதலை உணராத கீர்த்தி… அதை ஆதியிடம் இருந்து எதிர்பார்க்க ஆரம்பித்து இருக்க… அவனோ சொல்லாமல் பார்வையால் மட்டும் காதல் செய்து கொண்டிருந்தான்…
கீர்த்தி அவன் மேல் இப்படி காதல் கொண்டிருக்க…. அவனோ இவள் திட்டு வாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானா?…. என்று பற்றிக் கொண்டு வர… பாலாவை விட ஆதியின் மேல் கோபம் வந்தது… நாளை அந்த பாலாவை கவனிப்போம்… ஆதி எப்படியும் கீர்த்தியிடம் காதல் சொல்ல வருவான்… அன்று இருக்கு அவனுக்கு…. என்று மனதில் திட்டம் தீட்டினாள்…
கீர்த்தியோ அது எதுவும் உணராமல்…
தன் வருத்தத்தை மறந்தவளாய்…
“மது உன் அப்பா வந்தாங்களா…. என்று கேட்க
“ஹ்ம்ம்.. வந்தாரு வழக்கம் போல பணம் கொடுத்தாரு… சாப்பிட்டாரு கொஞ்ச நேரம் என் படிப்பை பற்றி பேசினாரு… அப்புறம் கிளம்பிட்டாரு… அவ்வளவுதான்” என்று தோளைக் குலுக்கியபடி உள்ளே போன தோழியை பார்த்தபடி…
மது தந்தையின் விட்டேற்றியான பாசத்தை … அவர் தங்கை பண்ணியதிற்கு… மகளின் மேலும்... மனைவி மேலும் பாசம் வைக்க பயப்படும் தந்தையாக அவர் இருப்பதை நினைத்து வருந்தினாள் கீர்த்திகா
---------------------
பாலா காலையில் எழுந்த போது… ஆதி அன்றைய தின பலனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்க… அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் குளியலறைக்குச் செல்ல எத்தனித்தான்…. எங்கு பேசினால் அவன் காதல் புராணம் மிச்சம் மீதி எதுவும் இருந்து தன் காதில் ஓதி விடுவானோ என்று நழுவப் பார்க்க
“டேய் பாலா”
அழைத்து நிறுத்தினான் ஆதி…
“போச்சுடா..செத்தேண்டா இன்னைக்கு “ என்று பாலா நினைக்க
“உன் ராசி என்னடா” என்று மட்டும் கேட்க…
அவனிடம் தன் ராசியை மட்டும் சொன்னவன்… வேகமாக குளியலைறைக்குள் நுழைந்தான்…
ஆதி… ராசி..சகுனம்…நல்ல நேரம்… எல்லாம் பார்ப்பவன்… அன்றும் அவன் ராசிக்கான பலனைக் கேட்டுக் கொண்டிருந்தவன் பாலாவும் உடன் இருந்ததால் அவனிடம் அவனது ராசியைக் கேட்டு அதன் பலனையும் அறிந்து கொண்டான்….
குளியலறையில் இருந்து வெளியே வந்த பாலா
“என்னடா… உன் ராசிக்கு.. என் ராசிக்கு எல்லாம்… என்ன சொன்னாங்க” என்று நக்கலாகக் கேட்டபடி தலையைத் துவட்ட
”ஆமா நீதான் … நேத்தே எல்லாத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாயே… இன்னும் என்ன…. ஆனாலும்… ’எனக்கு எதிர்பாராத சந்தோசமாம்.. நீண்ட நாள் காரியம் பலிக்குமாம்.’ இவனுங்க வேற…. உள்ளதும் போச்சுனு நானே இருக்கேன்” என்று அங்கலாயித்தவனை பார்த்து வாய் விட்டு சிரித்த பாலா..அவன் முறைப்பது தெரிந்து..
“விடுடா மாப்பிள்ளை… நான் தங்கச்சிட்ட பேசி… உன்னோட சேர்த்து வைக்கிறேன்…. என்று சொல்ல
“உண்மையாவாடா …” என நம்பி அப்பாவியாய்க் கேட்க
“சத்தியமாடா மச்சி… உன் மனசு உடைந்து போனா..உன் நண்பன் மனசு தாங்குமா” என தன் நெஞ்சில் கை வைத்து போலியாக பேச
அவன் கிண்டலில் முறைத்த ஆதி..ஞாபகம் வந்தவனாய்…
“டேய் உன் ராசிக்கு என்ன சொன்னாங்க தெரியுமா…என்று கண் சிமிட்டியபடி…. கொக்கி போட..
“பெருசா என்ன சொல்லப் போறாங்க…. நேயர்களே பச்சைக் கலர் பேண்ட்… சிவப்புக் கலர் சட்டை… போடுங்க…. வடக்கே போகாதீங்க… கிழக்கே பார்க்காதீங்க…. தெற்கே பைக்ல போகாதீங்க….. கிழக்கே கார்ல போகாதீங்கனு.. சொல்லி இருப்பானுங்க… வந்துட்டான் இவனும் அதச் சொல்ல….போடா” என்று இழுக்க
“உன் ராசிக்கு …. இன்னைக்கு ’நீ உன் மனசுக்கு நெருக்கமான நபர சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமாம்…’ அனேகமா உன் ஆளப் பார்க்கப் போற போலடா…“ என்று பாலாவை கண்களை சிமிட்டி ஓட்ட
“நீ தான் கண்ணு மண்ணு தெரியாம தல குப்புற விழுந்துட்ட…. சாரி சாரி.. கண்ணு தெரியாம இல்ல… பொண்ணு சூப்பரா இருக்காள்ள… சோ கண்ணத் திறந்துதான் விழுந்திருக்க… ஆனால்.. என்னையும் கண்டதையும் பேசி மாட்டி விட்றாதாடா…. அறியாப் பையன்… புரியா வயசு… அதுவும் ஒரே பையன் எங்க வீட்டுக்கு…“ என்று பயந்தவனாய் பேச அவன் முதுகில் ஒரு அடி போட்டவன்
“நீ… அறியா பையன்… அடப் பாவி… இது உனக்கே அடுக்காது” என்று சிரித்தபடி பேச… இருவரும் ஜாலியாய் பேசியபடிதான் கீழீறங்கினர்… ஆனால்
கீழே இறங்கும் போதே ஜெகனாதன் பாலாவுக்காக காத்துக் கொண்டிருந்தார்…
அவர் அமர்ந்திருந்த விதமே பாலாவுக்கு… தன்னிடம் பேசத்தான் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய… அவரின் அருகில் போய் சாதாரணமாக அமர்ந்தான் பாலா… என்னவென்று கேட்ட படி
ஆனால் அவரோ கோபத்தில் இருந்தார்… அது அவனது ஹெச்.ஓ.டி அவருக்கு கால் செய்திருந்த காரணத்தால்…
“என்னடா பாலா…. ஃபைனல் இயர் படிக்கிறோம்… .சீனியர்ன்ற கெத்துல ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கிட்ட வம்பு பண்ணினாயா… உன் ஹெச்.ஓ.டி போன் போட்டு சொல்றார்… கீர்த்தியாமே… நல்ல பொண்ணாம்… ஏண்டா இந்த வேல உனக்கு…. உன்னக் காலேஜ்க்கு படிக்க அனுப்புனா… கொம்பு சீவிட்டு திரியறீங்களோ…. எதுக்கு அனுப்பினோமோ அத மட்டும் செய்யுங்க” என்று மகனின் நடவடிக்கையில்... அதுவும் கல்லூரியில் இருந்து வந்த புகாரில் மிகவும் வருந்திய அவர்…. தந்தையாக கோபத்துடன் கண்டிக்க
முந்தின நாளோடு மறந்து போயிருந்த…. கீர்த்தியின் மீதான கோபம்.. திரும்பி வந்து அவனிடம் உட்கார… உச்சக் கட்ட நிலையை எட்டி…. வெடிக்க ஆரம்பித்து இருந்தது….
“அய்யோடா என்றிருந்தது ஆதிக்கு…. கீர்த்தியை என்ன சொல்லப் போகிறானோ என்ற கவலையில் மனம் ஆழ்ந்தது…
பாலாவுக்கு கோபம் வந்தால் வார்த்தைகளில் நிதானம் இருக்காது என்பது அவனோடு பழகிய விதத்தில் தெரியும் அவனுக்கு… கெட்ட வார்த்தைகள் எல்லாம் இருக்காது… ஆனால் அடுத்தவர் மனதை குத்திக் கிழிக்கும்…. அவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும்….” அதை நினைக்கும் போதே கீர்த்தியை நினைத்து கலக்கம் ஆனான்…
”கீர்த்தி உனக்கு இது தேவையா… ஒழுங்கா உன் டைம்லயே பிராக்டிஸ் பண்ணி இருந்துருக்கலாம்ல” என்று மனதினுள்ளாக அவளிடம் பேசியவன்…. பாலாவை எப்படி சமாதானப் படுத்துவது என்று யோசனையில் மூழ்கினான்…
பாலாவைத் திட்டிய ஜெகநாதன்… கோபமும் வருத்தமும் தன் மகன் மேல் கொஞ்சமும் குறையாமல்…. வெறுப்பான முகத்தோடு வெளியேற…
பாலாவும்… அதே வேகத்தில் வெளியேறி… கொலைவெறி கோபத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்ய…. உதைத்த வேகமே அவன் கோபத்தின் அளவைச் சொல்ல… ஆக்ஸிலேட்டரை உரும விட்டபடி ஆதிக்காக காத்திருந்தான்….
ஆதி அவனிடம்…. அவனை சகஜமாக்கும் விதத்தில்…
“டேய்… கீர்த்தி சொல்லி“ என்று ஆரம்பித்தவனை…” அனல் தெரித்தது வார்த்தைகளில்
“நிறுத்துரியா… அந்த பேரக் கேட்டாலே பத்திக்கிட்டு வருது…. ஊரெல்லாம் அவளுக்கு சப்போர்ட்னா… என் வீட்டுல கூடவா…. என் அப்பாகிட்டயே திட்டு வாங்க வச்சுட்டாள்ள… இருக்கு அவளுக்கு… ஏய் கீர்த்தி….. இருக்குடி உனக்கு….. வந்துட்டே இருக்கேன்…” என்று பல்லைக் கடிக்க…
தான் அவளை விரும்புகிறோம் என்று கூறியும் இவன் இப்படி பேசுகிறானே… என்று கோபம் வர….
”பாலா… என் முன்னாடியே என் கீர்த்திய… இப்டி பேசுற…” என்று மனம் நொந்து கேட்க…. அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி… புருவத்தை நெறித்தவன்
“லவ்தான பண்ற… இன்னும் அவகிட்ட அத சொல்லக் கூட இல்லைல… என்னவோ இப்பவே அவ உன் பொண்டாட்டி மாதிரி பேசுற…. துள்ளுற….. அடங்குறியா… அவளாம் ஒரு ஆளுன்னு…. இவரு கீர்த்தியாம்… உருகுறான்… பார்த்துட்டே இரு.. ஒருநாள் இல்ல ஒருநாள் அல்வா குடுக்கத்தான் போறா அவ….” என்று ஆதியிடம் அவன் காதலை புரிந்து கொள்ளாமல் இழிவாகப் பேசியபடி தொடர்ந்தான்
“இன்னொரு தடவ அவ பேரு மட்டும் என் காதுல மட்டும் விழுந்துச்சு…. கொல வெறி ஆகிடுவேன்…. நேத்துல இருந்து அவளால கண்டவண்டலாம் பேச்சு வாங்கினது பத்தாதுன்னு… இன்னைக்குமா…..” என்று பிரதாப் பேசியது வேறு சேர….
“அவள நான் திட்டுறதுல இந்த நாள அவ என்னைக்கும் மறக்கக் கூடாது…” என்ற போது குரோதம் நிரம்பி இருந்தன அவன் விழிகளில்….
அவன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்… திகைத்தபடி நின்ற ஆதியைப் பார்த்தவன்…
“நீ இப்போ வர்றீயா…இல்லையா” என்று உறும
இவனைத் தனியே விட்டால் கீர்த்திக்கு தான் ஆபத்து…என்று நினைத்து வேறு வழியின்றி ஏறினான்…
எறியவனை பார்த்து…
“வாய மூடிட்டு வரணும்… அவளுக்கு சப்போர்ட் பண்றேனு… இல்ல என் கோபத்தை குறைக்க வேண்டுமென்று எதுனாலும் பேசினேன்னு வச்சுக்க…. இறக்கி விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்… நண்பன்னுல்லாம் பார்க்க மாட்டேன்…” என்ற படி வண்டியைக் கிளப்பினான்..
ஆதி மனதினுள்ளே இவன் சமாதானம் ஆகிற மாதிரி ஏதாவது அதிசியம் நடக்காதா என்று மனதில் வேண்டியபடியே வந்தான்
”இன்னைக்கும் யார் யார் அவளுக்கு சப்போர்ட்டா வர்றாங்கன்னு பார்க்கிறேன்… செத்தாங்கடா அவங்களும்” என்று மனதின் ஆவேசம் குறையாதவனாய் கல்லுரிக்கு விரைந்தான் பாலா…
அதே நேரத்தில்… கல்லூரியில்… அவன் வரும் போதே வழியிலேயே சந்தித்து…. பாலாவிடம் …. நேற்று அவன் கீர்த்தியிடம் நடந்த விதம் பற்றி பேச மதுவும் காத்திருந்தாள்… பாலாவின் வருகைக்காக………………….
Bình luận