அன்பே நீ இன்றி-38

அத்தியாயம் 38:

வழக்கம் போல் தீக்ஷா அலாரம் வைத்து எழாமல் இருக்க….

எத்தனையோ முறை சொன்னாலும்… அவன் மனைவி கேட்டால்தானே…. வழக்கம் போல்.. தானே எழுந்து அதை அணைத்து விட்டு…. உடற்பயிற்சிக்கு கிளம்பத் தயாரானவன்

அப்போதுதான் கவனித்தான்… புதிதாக மற்றுமொரு புகைப்படம் அவர்களின் அறையில் மாட்டப் பட்டிருப்பதை…. சிறிய அளவில் இருந்தாலும் இருவரும் புன்னகையுடன் இருக்கும் புகைப்படம்…. இதைச் சொல்லத்தான் மேடம் நேற்று வெயிட்டிங்கா… என்றபடி அந்தப் புகைப்படத்தைப் பார்க்க… அது சற்று கோணலாக இருக்க… ஒழுங்காக மாட்டுவோம் என்று அதை கழட்டினான்

அங்கு…. ’தீக்ஷா விஜய்’ என பல கோணங்களில் எழுதப்பட்டு இருக்க… திரும்பி தன் மனைவியைப் பார்த்தவன்…. இதழில் நகையோடு….. அவளின் அருகில் அமர்ந்து….

“திட்டுவேன்னு…. சுவரில் எழுதுனதை மறைக்க… போட்டோ வா…. வெவரம்தாண்டி நீ” என்று அவள் காதைப் பிடித்து திருக…..

“அத்தான்….” என்று வலியோடு தூக்க கலக்கத்தில் எழுந்தவளின்…. கண்களில் புகைப்படம் கழட்டி பட…. நாக்கைக் கடித்தபடி…

“பார்த்துட்டீங்களா…. சுவரில் எழுதக் கூடாதுனு காலையிலேயே அட்வைஸ்லாம் பண்ணி கொன்னுடாதீங்க…. ப்ளீஸ்… தூக்கம் வருது” என்ற போதே….

“உன்னை வந்து கவனிச்சுகிறேன்” என்றபடி அங்கிருந்து கிளம்பியவனிடம்……

”போடா விருமாண்டி” என்று முணங்கியபடி மீண்டும் படுக்கப் போக…………..

தீக்ஷா விருமாண்டி என்று அழைத்தாலே விஜய்க்கு கொஞ்சம் கோபம் வரும்…. ஏனோ அந்த பேரில் அழைத்தால்… தன்னை விட்டு அவள் விலகி இருப்பது போல் படும்… அதனாலே என்னமோ அவனுக்குப் பிடிக்காது

“போடி” கையில் இருந்த துண்டை அவள் மேலேயே வீசி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்ப…. தீக்ஷாவோ அவன் வீசிய பூத்துவாலையில் தன்னவனின் வாசம் உணர்ந்தபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்….

விஜய் மீண்டும் வந்த போது…. தீக்ஷா….. குளியலறையிலிருக்க…. விஜய் அந்த புகைப்படத்தை சரியாக மாட்டி வைத்துக் கொண்டிருக்க….. அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்….

அவளின் அமைதி உணர்ந்தவன்…..

“ஏன் ஒரு மாதிரி இருக்க…. திட்டப் போறேனு…. ஆக்ட் பண்றியா…. நீ உங்க அம்மா கிட்ட போடுற வேசம்லாம் இந்த விருமாண்டி கிட்ட செல்லாது செல்லம்” என்றவனிடம்

அப்போதும் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருக்க… விஜய்க்கு அவளின் அமைதி மனதினைப் பிசைய…

“ஹேய் ஏன்.. என்ன ஆச்சு… ஃபீவரா” என்ற படி அவள் நெற்றியில் கைவைத்துப் பார்க்க…

“ப்ச்ச்… நத்திங்..” என்றபடி கீழே இறங்கி போய் விட்டாள்…………

விஜய்க்குதான் அவளின் அமைதி என்னவோ செய்தது

ஹாலிலோ அதை விட….

சுரேந்தர்…. ஒரு பக்கம் அமைதியாக சாப்பிட… எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் யுகி கூட அமைதியாக இருக்க… விஜய் தலையைப் பிய்த்துக் கொண்டான்….

சுரேந்தரின் மௌனம் கூட அவனுக்கு ஏன் என்று தெரியும்.. யுகி ஏன் இப்படி இருக்கிறான்… அதை விட அவன் வாயாடி மனைவி… நேற்றிரவு வரை வாயடித்தவள்…. அவளின் திடீர் அமைதி ஏன் என்று தெரியாமல் குழம்பினான் அவள் கணவன்

ஒரு காலத்தில் அவள் வாயைத் திறந்தாலே காத தூரம் ஓடியவனா அவன்…. தனக்குள் சிரித்துக்கொண்டான் விஜய்….

ஆனாலும்…. இப்போது அவனுக்கு இதையெல்லாம் விட வேறொரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது… அது இளமாறனிடம் பேச வேண்டும்…. என்ன பேசுவது…. எப்படி பேசுவது….. பார்ட்னர்ஷிப்பை விலக்கிக் கொள்ளலாம் என்றால் என்ன சொல்லுவான் என்று ஒரு புறம் குழம்பியபடியே தன் காரினை எடுத்தான்….

அவனது கார் ஓட்டுனர்… வேலையை விட்டுச் சென்றிருந்தான்..

அது மட்டுமில்லாமல்…. அவன் மனைவி வழி அனுப்ப கார் வரை வருவதாலும்… இரவு இவன் லேட்டாக வருவதாலும்… தானே காரின் ஓட்டுனராகவும் இருப்பது வசதியாகவே இருந்தது அவனுக்கு.. அதனால் புதியதாக எந்த ஓட்டுனரையும் அவன் தேட வில்லை….

வழக்கம் போல… அவனை வழி அனுப்ப வந்த தீக்ஷா… அவனிடம் குனிந்து…..

“இளமாறன் கிட்ட என்ன சொல்லப் போறீங்க…… சுரேந்தர் அத்தான் தான் நமக்கு முக்கியம்…” என்று முகம் முழுவதும் தேக்கிய கவலையோடு சொல்ல……

விஜய் சிரித்தபடி

“இதுதான் என் புயலோட அமைதிக்கு காரணமா…. அதை நான் பார்த்துக்கிறேன் ” என்றவன்…. சைகையால் கேட்டான்….நெற்றி வகிட்டில் குங்குமம் எங்கே என்று கேட்க…. அவன் மனைவியும்… ஒன்று, இரண்டு, மூன்று என்று சைகை மொழி சொல்ல… புரிந்தவனாய்….

”அதுக்கும் குங்குமம் இல்லாததுக்கும் என்ன சம்பந்தம்….” என்று கேட்க…

”சாமியறைக்கு போக முடியாது…… வேற குங்குமம் எடுத்து வைக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. அவன் வீட்டின் முன் இருந்த மாடத்தில் இருந்த குங்குமத்தை தன் நெற்றியில் வைத்துவிட்டு காரில் அமர்ந்தவனை… வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்….

காரில் அமர்ந்தவன்… தன்னவளை தன் அருகில் அழைக்க…. தன் கணவன் ஏதோ சொல்லத்தான் அழைக்கிறான்… என்று தீக்ஷா அவன் அருகில் சென்று குனிய… தன் நெற்றியில் இருந்த குங்குமத்தினை அவனின் தலை வகிடுக்கு மாற்றினான் விஜய்….

“ஹ்ம்ம்ம்ம்ம்……கலக்கறீங்கத்தான்………… செம்ம செண்டிமெண்ட் சீன் அத்தான்” என்றவளின் குரலில் கேலி இருந்தாலும்…. அவள் உள்ளம் அவன் செயலில் நெகிழ்ந்துதான் இருந்தது………… இருந்தும் தன் நெகிழ்வை மறைத்தவளாய்… கிண்டல் செய்து கொண்டிருந்தாள்

“வந்ததே ஓ ஓ குங்குமம்

தந்ததே ஓ ஓ ஓ சம்மதம்”

என்று அவனை சீண்டியபடி பாடலைப் பாட…

“உனக்கு இருக்கிற நக்கலுக்கு… ஆனாலும் இந்த நக்கல், குறும்பு இல்லேனா… உன் இந்தர் மனசு தவிக்குதே…” என்றவன்….

“வரவா……..” என்று சொல்லியபடி… காரைக் கிளப்ப…………. அவன் போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் தீக்ஷா…

“விஜயேந்தர்…………… தன் ஒவ்வொரு செயலிலும்… பார்வையிலும்… அவளின் இந்தராக இருப்பதை……… நினைக்க நினைக்க…… அவன் தன் கணவனாகக் கிடைக்க… அவள் வரம் தான் வாங்கி வந்திருக்கிறாள்” என்று நினைத்தாள் தீக்ஷா…

இந்த வரம் தன் வாழ்நாள் முழுவதும்… இந்த ஜென்மம் மட்டுமில்லை…. தான் பிறக்கும் ஒவ்வொரு ஜென்மமும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற வேண்டல் தான்… அவள் மனதோடு செய்து கொண்டிருக்கிறாள் தினமும்….

விஜயேந்தராவது… தன் மனைவி மீதான காதலை… தன் செயலிலும்…பார்வையிலும் வார்த்தைகளிலும் உணர்த்தி விடுவான்… தீக்ஷா பொதுவாக எல்லா உணர்வுகளையும் வெளியில் கொட்டி விடுபவள்.. ஆனால் தன் காதலை மட்டும் தன் மனதினுள்ளே வளர்த்துக் கொண்டிருந்தாள்….. தன் மீதான தன்னவனின் காதலை தனக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டிருந்தாள்…. ஆனால் வெளியிலோ காதலில் கூட குறும்புத் தனத்தைத்தான் காட்டிக் கொண்டிருந்தாள்…..

…..

தீக்ஷாவிடம்…. அவள் மனம் நோக வேண்டாம் என்று ஆறுதலாய் பேசி விட்டு வந்தாலும்…. இளமாறனுக்கு என்ன பதில் சொல்வது என்ற மண்டைக்குள் குடைச்சலாக இருக்க… குழப்ப ரேகையோடே அவர்களின் அசோசியேஷன் மீட்டிங் சென்றான் விஜய்… அங்கு தீனாவும் கார்ப் பார்க்கிங்கில் இருக்க…. விஜய்யின் காரைப் பார்த்தவன்……… அவனருகில் சென்றான்………….

’ஹாய் விஜய்…” என்று அவனை நெருங்க….. விஜய் அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி…..

இவன் எதற்கு வலிய வந்து பேசுகிறான் என்ற குழப்பத்தோடு “ஹாய்” என்று சொல்ல…

“ரொம்ப நாளைக்கப்புறம் உன்னைப் பார்க்கிறேன்….. தீடிர் திருமணம்…. வாழ்த்துக்கள் முன்னாள் நண்பா…. வைஃப் பேர் என்ன ’தீக்ஷாவாமே’…. என்றவன்…

‘உன் ராசிப்படி ’தீ’ ஒட்டாதே….’ என்று சீண்டலாகவும் சொல்லிவிட்டு கேலியாகப் பார்த்தான்

”இந்த ’தீ’னாவைத்தான் பாதியிலேயே கழட்டி விட்டுட்ட…. உன் ’தீ’க்ஷா கூடனாலும் ஒழுங்கா வாழு” என்றவனின் முகத்திலும் வேதனை ரேகைகள் ஓட….. விஜய்யின் முகமும் அதையே பிரதிபலித்தது…

இளமாறனும் அப்போது வர…. அவனைப் பார்த்த தீனா……….

“விஜய்…. இவனோடலாம் பிரண்ட்ஷிப் மெயிண்டைன் பண்ற….. பார்க்கலாம் எத்தனை நாளைக்குனு” என்று இளமாறனை அற்பமாகப் பார்க்க…

அதுவரை…. அவனின் வார்த்தைகளில் கொஞ்சம் நெகிழ்ந்திருந்த விஜய்…. தீனாவைப் பார்த்தபடியே…. அருகில் வந்த இளமாறனை அணைத்தவன்….

“உன்னை மாதிரி இல்லை இவன்…. எங்க நட்பு எந்த அளவுக்குனு உனக்கு தெரியனுமா… என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்ல பார்ட்னர்ஷிப் வைக்கிற அளவுக்கு” விஜய் சொல்ல… தீனா… விஜய்யை கோபமாகப் பார்த்தான்…. பின் சொன்னான்…

”யாரின் துணையும் இல்லாமல் தொழிலை நடத்துவேன்னு சொன்ன அன்னைக்கு…. மறந்துட்டியா…”

”ஒரு பக்கம், சுரேந்தர்… இப்போ இவனா….. ஆக மொத்தம் இப்பவும் நான் தான் உன்னை விட ஒரு படி மேலே இருக்கிறேன்…………..” என்று நிறுத்த…. விஜய் பதில் பேச முடியாமல் வேறு புறம் பார்க்க…

தீனா ஏளனமாக சிரித்தபடி… இன்னும் தொடர்ந்தான்

”உங்க வீட்டு கடைசி சிங்கத்துக்கு ஏதும் வேலை இல்லையா… என் தங்கை பின்னால சுத்திட்டு இருக்கு…………. நீங்க ரெண்டு பேரும் எனக்கு தொழில்ல பிரச்சனை பண்ணினால்… சார் என் குடும்பத்துக்குள்ளேவா…… எப்டிடா.. “

”ஏய்………….. என் தம்பி மேல மட்டும் தப்பு சொல்லாத…. “ என்றவன் ஆர்த்தியை ஏதும் சொல்லாமல் நிறுத்த

“ஆர்த்தி நெக்ஸ்ட் வீக் UK போகப் போகிறாள்… உன் தம்பி இதுக்கு மேல அவ வழில வந்தான்… அவனுக்கு அது நல்லதில்ல…” என்றவன் வேகமாய்ப் போக

விஜய்க்கு கோபத்தில் முகம் சிவந்தது….

”பார்க்கலாம்டா… ஆர்த்தி எங்க வீட்டு பொண்ணு… நீ எங்க நாடு கடத்தினாலும்…