என் உயிரே!! என் உறவே!!!-37

அத்தியாயம்:37

பாலா அறையினுள் நுழைந்த வினோத்தைப் பார்த்த கீர்த்திக்கு பக்கென்று இருந்தது….. எப்போதும் உற்சாகம் தவழ்ந்த முகமாக இருக்கும் அவன் இன்று சுத்தமாய் தனது உற்சாகமெல்லாம் வடிந்து…. தளர்ந்தபடி உள்ளே நுழைந்தான்….. உள்ளே நுழைந்தவன் உட்கார்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தான்…

பார்த்தான் …அவ்வளவுதான்….அதற்கு மேல் ஒன்றும் இல்லை…..

தன்னைப் பார்த்தாலே உற்சாக வார்த்தைகளுடன் சந்திக்கும் வினோத்… இன்று அவளிடம் ஒரு சொல் கூட சொல்லாமல் அவளைத் தவிக்க விட்டான்…..

“வினோத்………………”

“நான்…சொல்றத கேளு…” என அவனின் பாராமுகத்தை தாங்க முடியாமல் தளுதளுத்த அவளிடம் கூட திரும்பாமல்.. பாலாவிடம்