top of page

என் உயிரே!! என் உறவே!!!-36

36

அந்த அழகான காலையில் பாலாவிற்கு முன் எழுந்தாள் கீர்த்தி…. முந்தின நாள் பாலா 2 மணி அளவில்தான் வீட்டிற்கே வந்தான்….வந்திருக்கும் புது ப்ராஜெக்டிற்காக… அதன் முதற்கட்ட ஆயத்த வேலைகளில் இருந்த்ததால் இரவும் பகலும் வேலை செய்தான்..

கீர்த்திக்கு கூட சந்தேகம் வந்து விட்டது….. தன்னை அவாய்ட் செய்யத்தான் இப்படி இருக்கிறானோ என்று கேட்டே விட்டாள்……

“கீது….. நீ நம்ம ஆஃபிஸ்லதான் வேலை பார்க்கிறாய்…. உனக்கு தெரியாதா…அது எவ்ளோ பெரிய ப்ராஜெக்டுனு….. ரிசோர்ஸ் அலோகேசனே முடியல….. நீ கூட இண்டெரிவ்யூ எடுத்திட்டுதான இருக்க…. இன்னும் 20 எக்ஸ்பீரியன்ஸ் ரிசோர்ஸ் தேவை….. டென்சனா வேற இருக்கு…. ஒரு மாதத்தில் ஸ்டார்ட் பண்ண்ணும்….. உன்னை,கவியைக் கூட அதில் மாற்றலாம்னு இருக்கோம்….ரிசோர்ஸ் செட் ஆகலேன்னா….. என்று உண்மையான நிலையைச் சொன்னவன்…. நீ மட்டும் மாமாவப் பார்த்து ஒரு லுக் விட்டேனா போதும்…. ப்ராஜெக்டாவது…..வேலையாவது… என்ற தன் கணவனாகத் தன் வேலையைக் காட்ட தானாக நகன்றாள் கீர்த்தி

2 மணி அளவில் வந்தவன்… நாளை 7 மணிக்கெல்லாம் செல்ல வேண்டும்….எழுப்பி விடு என்று சொல்லித்தான் உறங்கப் போனான்….

நாள்காட்டியில் நேற்றைய தேதியைக் கிழித்தவளின்….. கண்களில் இன்றைய தேதி… நாளைய தேதியின் விசேசம் சொன்னது…அது அவளின் பிறந்த நாள் மற்றும் தன் பெற்றோரின் திருமண நாள்…. நினைவுகள் தந்த தாக்கத்தில் சுவரோடு சாய்ந்தாள். உதடுகளை அழுந்தக் கடித்தபடி தன் தாய் தந்தையின் நினைவுகளை தனக்குள்ளாக அடக்க… அதன் விளைவு .அழுகை எல்லாம் வரவில்லை…. சிறிது நேரம் அவர்களின் நினைவில் கரைந்தவள்… தன்னை ஏன் என்று அவ்வளவு அவசரமாக பார்க்க வந்தனர்… தன்னைப் பார்க்க வராமல் இருந்திருந்தால்…. என்றெல்லாம் ஓடிய தன் சிந்தனையை சுழற்றியவளுக்கு…. அசிரத்தையாய் இன்னொன்றும் ஞாபகம் வந்தது…

இதே நாளில் தான் அவளும் பாலாவும் லிஃப்ட்டுக்குள் மாட்டினோம் என்பதுதான் அது

அன்று அந்த குறுகலான அறைக்குள் தன்னைப் பார்க்காமல் கூட நின்றவனா இன்று எவ்வளவு பெரிய பரந்த இடத்திலும்… எத்தனை பேர் மத்தியிலும்…. தன்னை தன் பார்வை வட்டத்துக்குள் கொண்டு வருகிறவன்…

புன்னகையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவனின் முகத்தை பார்வையால் வருடினாள்…..

அலை அலையாக பிரிந்திருந்த அவன் கேசத்தை தன் கையால் கலைக்க ஆசைதான்….

அவனோடு ஒன்றி அவன் மார்போடு தலை வைத்து துயில ஆசைதான்…

அவன் கைகளில் எப்போதும் கட்டுண்டு கிடக்க ஆசைதான்…

அவன் செல்ல சீண்டலில் கரைய ஆசைதான்….

அவன் ஆண்மையில் தன் பெண்மை தொலைக்க ஆசைதான்…

அவன் மோகத்தில் தன் தேகம் நெகிழ ஆசைதான்…

இத்தனையும் அவள் மனது வைத்தால்…. நடக்கும்….. ஆனால் எது தடுக்கிறது….அவன் தனது உயிரான போதும்… அவன் உறவாக முடியவில்லையே ஏன்……எது தடுக்கிறது…. அவன் என் உரிமை இல்லை என்ற உணர்வா…… இல்லை அதை உணர மறுக்கும் தன் பிடிவாதமா….இந்த போரட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு….. என்றெல்லாம் பல வேறு சிந்தனைகளின் தாக்கத்தில் இருந்தவள்……அவன் படுக்கையில் லேசாகப் புரள்வது தெரிய… தன்னிலைக்கு வந்தாள்….

அவன் அருகில் சென்று…

“பாலா…. டைம் 6 ஆகுது …. கெட் அப்… ” என்று கூற….

எழுப்பியவளின்…. கைகளைப் பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்து மீண்டும் உறங்க ஆரம்பித்தான்…..

”பாலா…..என்ன விளையாட்டு…இது” என்று கைகளை இழுக்க முயற்சிக்காமலே சொல்ல…

“சும்மா இருடி……எப்போ பாரு நொய் நொய்னு…” என்றபடி கண்களை மூடிப் படுத்தவன் 5 நிமிடம் கழித்து அவனாகவே அவளை விடுவித்தான்…

அவனைப் பார்த்தபடி அப்படியே இருந்தவளை பார்த்து வந்த சிரிப்பை தன் இதழோரமாய் அடக்கியவன்

“இப்போ போகலாம் பேபி…“ என்று அவளிடம் சொல்ல அப்போதும் அவள் தன் நிலையில் இருந்து மாறவில்லை… அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவன் எழுந்து போனான்….

அவனின் உடல் வெப்பம் பரவிய தன் கைகளை..எடுத்து தன் கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்தவளை…..பாலாவும் கவனிக்கத் தவறவில்லை…..

”உனக்கு நம்ம கல்யாண நாள் வர்ற வரைதான்டி டைம்….. அதுக்கப்புறம்…. உன்கிட்டலாம்… மயிலே மயிலே இறகு போடற கதை எல்லாம் இல்ல… இறகப் பிடுங்கற கதைதான்…என்று மனதினுள் நினைத்தபடி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா… ஆனால் நாளை வரப் போகும் பிறந்த நாளை மறந்து விட்டான்…. அன்று அவள் தன் கோபச் சூறாவளியில் அவனைச் சுழன்றடித்து… அதற்கடுத்த நாளில் இருந்து தென்றலாய் சாமரம் வீசப் போவதை அவன் அறிவானோ?

---------------------

சென்னையின் பிரபல புத்தக கடையில் வினோத் புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்க….. கீர்த்திகாவும் அந்த கடையினுள் தான் இருந்தாள்…… தன் சித்தியுடன் வந்திருந்தாள்…அவள் எங்கும் தனியாகப் அனுப்பப் பட மாட்டாள்…. அதிலும் ப்ரதாப் விடுதலை ஆன பின்னர் சுத்தம்….. அப்படி யாரும் வர முடியா விட்டாலும்..ட்ரைவர் துணையுடன் தான் எங்கும் போக முடியும்….

புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவள்…… எதிர் பால்கனியில் நின்ற வினோத்தை எதிர்பாராதவிதமாகப் பார்த்தவளின் உள்ளம் துள்ள… தன்னை அறியாமல் அவள் முன் நின்றாள் கீர்த்திகா….

அவள் வந்ததைக் கூட உணராமல் அவன் போனில் பேசிக் கொண்டிருந்தான்…

வேறு யாரோடு…கீர்த்தானா தான்…

“ஏய் நா மூனு கடை ஏறி இறங்கிட்டேன் நீ சொன்ன புக் கிடைக்கல…… இதுதான் கடைசி… இங்கேயும் கிடைக்க வில்லை என்றால்…. என்னப் பண்ண “ என்று கேட்டபடி திரும்பியவன்….கீர்த்திகாவை பார்த்து விட்டான்….

-----

”சரி…சரி.. அங்கேயும் போய்ப் பார்க்கிறேன்…. உன்னோட அடம் இருக்கே… சரி…. வை…. கீர்த்திகா இங்க வந்துருக்காங்க… ”

---------

”தெரியல… இப்பதான் பார்க்கிறேன்… நான் உனக்கு கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன்….”

என்றபடி போனை வைத்தவன் கண்களில் கீர்த்திகாவின் நெற்றியில் இருந்த கருப்பு பொட்டு கண்களில் பட….. அதைக் கவனித்தவன் அதைப் பற்றி அவளிடம் உடனே கேட்க வில்லை…..

மனதினுள் மட்டும் ”நாம் சொன்னதால வச்சுருக்காளா….. நான் சொன்ன வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பா…” என்ற எண்ணம் தோன்றியது….

”ஹாய் என்ன இந்த பக்கம்… “ என அவன் வினவ….

‘புக் ஸ்டாலுக்கு எதுக்கு வருவாங்க….” என்று மனதினுள் சொல்லவள்

“புக் வாங்கத்தான்…. வீடு ஷிஃப்ட் பண்ணிட்டீங்களா….. என்று கேட்டாள்….

”ஹ்ம்ம்ம்ம்…. மாறிட்டோம்……. கீர்த்தி வீட்டுக்கு பக்கமாகவே…… பாலாதான் இவ்ளோ சீக்கிரம் அத வாங்க ஹெல்ப் பண்ணினார்…. “ என்றான்

இனி என்ன பேச….. இருவருக்குமே தெரியவில்லை…. சற்று நேரம் …அமைதியாக கழிய… கீர்த்திகாவுக்கு அந்த மௌனம் பிடிக்காமல் அதை உடைக்கும் வகையில்…. ஏதாவது பேசி ஆக வேண்டுமென்று

“நீங்களும் புக்ஸ் லாம் படிப்பீங்களா…. என்ன மாதிரியான் புக்ஸ் படிப்பீங்க ” என்று பேச்சினை வளர்க்க ஆரம்பித்தாள் கீர்த்திகா….

---------------

வினோத்தோடு பேசி வைத்த கீர்த்தனாவுக்கோ……

“கீர்த்திகாவா….. வந்திருக்காங்க…. வினோத்…. அனேகமா இன்னைக்கு நம்மகிட்ட கண்டிப்பா….. அவளப் பத்தி ஏதாவது சொல்வான் …பார்க்கலாம்… நாம நினைப்பது மாதிரிதான் போகுதான்னு.. நல்லது நடந்தா சரி…” என்று….

சந்தோசமாக பாலாவின் அறையில் நுழைந்தாள்…….. இந்த விசயத்தை சொல்ல…..

சொன்னாள்தான்… அப்படியா என்று மட்டும் கேட்டு விட்டு பாலா ஒரு யோசனையுடனே இருந்தான்…

“என்ன பாலா…. நா எவ்ளோ பெரிய விசயம் சொல்றேன்….. அப்டியான்னு கேக்கறீங்க……” சோகமான பாவனையோடு அவள் கேட்க

“வேற என்ன என்னை பண்ணச் சொல்ற” என்று சற்று எரிச்சலாகக் கேட்டான்…

அவனது விட்டேற்றியான குரலில் சட்டென்று நிமிர்ந்தாள் கீர்த்தி…..

”ஏன் பாலா…. ஆதி இருந்த இடத்தில வினோத்த நினைக்க முடியலயா” என்றவளின் கேள்வியில்

“ஆபிஸ்னு கூட பார்க்க மாட்டேன்…. நான் என்ன நினச்சு யோசிச்சுட்டு இருக்கேன் … நீ என்ன பேசற…. அவளுக்கு வினோத் மாதிரி ஒருத்தன் கிடைச்சா இந்த உலகத்தில் சந்தோசப் படுற இரண்டாவது ஆள் நான் தான்…”

“மொத ஆளு மதுவா பாலா” என்று அப்பாவி போல் வேண்டுமென்றே கேட்க……

”முகம் மாற…. தெரியுதுள்ள…… அத கேட்க வேறு வேண்டுமா…. உனக்கு வேற ஏதாவது வேணும்னா… நேரடியா கேளு…..” என்றவனின் பார்வை அவள் இதழில் நிலைக்க

முறைத்தாள்….

”இனி நீ இந்த ஆபிஸ்ல வேலைக்கு வர்றத பத்தி நான் வேறு மாதிரி முடிவு எடுக்க வேண்டும் போல….” என்றவனிடம்….

“ஏன்…… நான் என்ன பண்ணினேன்” என்று அவள் இம்முறை உண்மையாகவே தெரியாமல்தான் கேட்டாள்….

“நீ ஒண்ணும் பண்ண மாட்டேங்குற… பண்ண விட மாட்டேங்குற…. அதுதான்…..பிரச்சனை…. என்று அவளின் கணவனாக மாற முயன்றவன் இருக்கும் இடம் உணர்ந்து.. தலையைக் குலுக்கி தன்னை சரி செய்தபடி

“என் செல்லம்ல போங்க…. வேல நிறைய இருக்கு…. நீ இப்டி நின்னு பேசி என்ன திச திருப்பாத…..என்று கெஞ்சலாகச் சொன்னவனிடம் அவன் வார்த்தைகளைக் கேட்காமல்…

“நீங்கதான் டைவர்ட் பண்றீங்க….. நான் என்ன சொல்ல வந்தேன்…. நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க” எனும் போதே அவனுக்கு போன் வர….எடுத்து அட்டெண்ட் செய்தவன்…. அவளைப் போ என சைகையாலே கூற……

கோபத்தில் கீர்த்தி கையில் வைத்திருந்த பேனாவை அவன் மேல் தூக்கி எறிய அதை லாவகமாய் பிடித்தபடி தன பேச்சினைத் தொடர்ந்தவன்.. தன் கட்டை விரலை மட்டும் உயர்த்தி இடமும் வலமுமாய் அவளை கேலி பண்ணுவது போல ஆட்ட

வேறு வழி இன்றி…

”போடா பெரிய முதலாளினு சீன் போடுறியா…” என்று மனதிற்குள் மட்டும் சொல்லியபடி

வெளியேறினாள் கீர்த்தி….

பாலா என்ன நினைத்து யோசனை செய்தானோ அது வினோத்-கீர்த்திகா சந்திப்பில் தப்பாமல் நடந்தது….

---------------------------------

கீர்த்திக்காவின் கேள்வியில் வினோத்…------

நீங்க வேற … நா புக்ஸ்லாம்… அவ்வளவா படிக்க மாட்டேன்… ஒன்லி நெட்தான்….எங்க வீட்ல வளர்த்து விட்ருக்கோமே…. செல்லப் புள்ள…. அவளுக்குதான்…. இன்னைக்கு மட்டும் கொண்டு போய்க் குடுக்கல…..ஃபைட் சீன்தான்”

”ஓ..” என்று முதலில் சொன்னவள்…

“ஏன் பாலா வாங்கிக் கொடுக்க மாட்டாரா” எனக் கேட்க

”என்ன” என்பது போல் பார்க்க….அவன் விழிகள் அவள் விழிகளை உற்றுப் பார்த்தன…..

”என்கிட்ட அவ கேட்டா ….. அதுதான் தேடிப் பார்க்கிறேன்” என்று மட்டும் சொன்னான்… அதுவும் ஒரு மாதிரியான குரலில்…வேறு ஏதும் பேசமால்…

அவளுக்கோ பொறாமை… அவனுக்கோ… “ஏன்?... தான் வாங்கிக் கொடுக்கக் கூடாதா… திருமணம் முடிந்து வேறொரு வீட்டுக்கு போனால்….எல்லாம் முடிந்து விடுமா என்ன…கீர்த்தி எங்க வீட்டுப் பெண்” என்று மனதிற்குள் பொரும

அங்கு கனமான சூழ்னிலை நிலவ ஆரம்பித்தது

சற்று நேரம் இருவரும் பேசாமலே அங்கிருந்த புத்தகங்களை மட்டும் பார்வை இட்டனர்…..

வினோத் தான் வேறு வழி இல்லாமல் பேச ஆரம்பித்தான்…. தற்போதுள்ள சூழ்னிலையை மாற்ற கிண்டலுடன்

”நீங்க ஏன் ஒரு பாடி கார்ட் தனியா வச்சுக்கறக் கூடாது கீர்த்திகா….. ” என்று நக்கல் தொணியில் கேட்க

“என்ன” என்பது போல் கீர்த்திகா பார்க்க….. சிரித்தவன்

“இல்ல…. எங்க போனாலும் யாராவது ஒருத்தர் கூட வருகிறார்களே… இந்தக் காலத்தில் இப்படியா? “ என்று உண்மையாகவே கேட்டான்

சற்று அசௌரியமான பார்வை பார்த்தவள்………”இல்ல…. அது வந்து…தயங்கியவள்….“ சொல்ல முடியாமல் வேறு பக்கம் பார்த்தாள்…….

“சரி விடுங்க… சும்மா கிண்டல் பண்ணினேன்.. பாலா கிட்ட கேட்காம கீர்த்தி ஏன் என்கிட்ட கேட்டானு ஏன் கேட்டீங்க…. நான் சின்ன வயசுல ……. சின்ன வயசில் என்ன…. அவ பிறந்ததில …… இருந்தே என்னோட உறவு அவளோட இருக்கு….. அதுனால என்கிட்ட கேட்கிறா…. உங்கள கூடத்தான்…… பாலா….. கூடப் பிறக்காத தங்கை மாதிரி தாங்கறார்…. அன்னைக்கு கூட கவியும் தான் என் கூட வந்தா…. உங்கள மட்டும் பத்திரம்,,பத்திரம்னு சொல்லி விட்டுட்டு போனார்….. ஆதி மேல அவ்வளவு நட்பு “ என உளமாற கூற

கீர்த்திகாவிற்கு பாலாவின் அக்கறை பெருமை தர…..முகம் மலர்ந்தாள்….

“அது ஆதிக்காக மட்டும் …. இல்ல….. நான் மதுவோட ஃப்ரெண்ட் அதுனாலதான் …. என்று…. அவனைப் பார்த்த… அவனோடு பேசுகிற உணர்வின் தாக்கங்களில் வார்த்தைகளை விட்டாள்…

“ஓ என்றவன் அதோடு விட்டு விட்டான்…. ஆனால் கீர்த்திகா ஆரம்பித்தாள்…

இருவருக்கும் இடையே.. கீர்த்தனா- பாலா வந்தனர்…… ஆனால் பேசியது கீர்த்திகா என்பதால் மதுவின் பேச்சு தானாக விழுந்தது….

”காலேஜ் டேஸ்ல இருந்த பாலாவா இது அப்டினு தோணுது…… இப்போ எல்லாவற்றிலும் பொறுமை…… அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு….. இது எல்லாம் அப்போ சுத்தமா பாலாகிட்ட இல்ல….. அப்பா….. என்ன ஒரு கோபம் வரும் தெரியுமா…. அவங்களுக்கு…… இப்போ நினைக்கவே எனக்கு பயம் வரும்….. என்று சிலாகித்தவள்…. இந்த 5 வருடம் பாலாவுக்கும்….. எனக்கும் பல பாடங்களை கற்றுக் கொடுத்து விட்டது…..என்று கடந்த 5 வருட வேதனையில் தன்னைக் கலந்தாள்…. பேச்சினை நிறுத்தினாள்…. அங்கிருந்த புத்தகங்களை வெறுமையுடன் நோக்கினாள்…..

அவள் ஆதியின் மரணத்தைப் பற்றி பேசுகிறாள் என்று வினோத்திற்கு புரிய….. அதிலிருந்து அவளை மீட்க ……

”நீங்களும் பாலா…. கூடத்தான் படிச்சீங்களா….

“ஹ்ம்ம்…ஆனா அவங்க கூட இல்ல… பாலாவும்….. ஆதியும்… எங்களோட சீனியர்…… நானும் மதுவும்… இங்க தான் வீடெடுத்து தங்கிப் படித்தோம் வார்த்தைகள் தன்னை மறந்த நிலையில் வந்து கொண்டிருந்தன……

அவனும் கேட்டுக் கொண்டே கீர்த்தி கேட்ட புத்தகத்தின் பெயரை அவளிடமும் சொல்லி இருவரும் தேட …

”மது யாரு….. உன்னோட ஃப்ரெண்டா…. வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்க” என்று சாதாரணமாகக் கேட்க…

“இல்ல…. அதுக்கும் மேல… என்னோட இன்னொரு தாய் மாதிரி.. “ என்று உணர்ச்சிவசப்பட்டாள் கீர்த்திகா

இப்போதும்

”ஓ என்று சொன்னவன்….கூடுதலாக .. க்ரேட்… என்றும் சொல்ல…..

“பின்ன பாலா மாதிரி கோபக்கார ஆளயே தன்னோட காதல்ல கரைய வச்சவ அவ…… க்ரேட்டா தான் இருப்பா … என்ற தன் தோழியின் பெருமைகளை பறைசாற்ற ஆரம்பிக்க………

வினோத்…..தன் காதில் விழுந்த வார்த்தைகளில்……. இதுவரை… ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்த பாவனை மாறி …… கீர்த்திகாவைப் பார்க்க

அவளோ…. எதைப் பற்றியும் யோசிக்காமல் பேசியபடி

”வினோத் ….. இதோ இருக்கு…. கீர்த்தி கேட்ட புத்தகம் ..என்று அதைக் கொடுக்க ”

அதை வாங்கக் கூட மறந்து நின்றவன்…. தீவிரமான பாவத்துடன்…

“மது யாரு.ன்னு சொன்னீங்க... பாலாவோட லவ்வரா??…. “ என்று தான் கேட்டதை நிச்சயப்படுத்தும் ரீதியில் கேட்க

கீர்த்திகா… புரியாமல் அவனைப் பார்த்து…

“ஆமா…… ஏன்….. கேக்க….” எனும் போதே மதுவைப் பற்றி அவனிடம் தேவையில்லாமல்… அதுவும் மது-பாலா காதலை வேறு உளறி விட்டோமோ என்று தோன்ற

இருந்தாலும்

“கீர்த்திக்குதான் மதுவைப் பற்றி தெரியுமே…. சொன்னால் என்ன… ஒன்றும் ஆகாது” என்று

“கீர்த்திக்கும் மது…..பாலா…..விரும்பியது தெரியும்…… உங்க கிட்ட சொல்லாமல் இருந்திருக்கலாம்……“ என்றாள்….. அவன் கேட்காத தகவலாய்

அதிர்ச்சியாய் நின்றான் வினோத்…… ஆனாலும் அவனுக்கு மது என்ன ஆனாள்… ஒரு வேளை பாலாவ விட்டு விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்டளா? “ தெரிய வேண்டிய நிலையில் இருந்தான்…..

“மதுவ ஏன் பாலா.. மேரேஜ் பண்ண வில்லை…..” சாதரணமாகக் கேட்பது போல் கேட்க…..

கீர்த்திகா….சோகமானாள்….

“அவ இப்போ எங்க இருக்கானே தெரியல…… பாலா அவளுக்காக 4 வருசமா…. காத்திருந்துவிட்டு….. கடைசியில… அங்கிள்….. ஆபரேசன் என்று வரும் போது… கீர்த்திய அவருக்கு பிடிச்சது போல்…..மேரேஜ் பண்ணிக்கிட்டார்…. என்று முடிக்க வில்லை…..

வினோத் … அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான்…. அவனின் வேகமான நடையிலேயே …. பின்னால் பார்க்கும் போகும் போதே அவனின் விரைபான பாங்கு அவளுக்கு அவன் கோபத்தை சொல்ல……..

“இவன் ஏன் இப்டி போறான்….. கீர்த்தி கூட இவ்வளவு கோபப் பட்டிருக்க மாட்டா.. இவனுக்கு என்ன வந்தது… மது-பாலா காதலில் “ என்றபடி அவனையே பார்த்தபடி நின்றவள்….

பாலாவிடமும் சொல்லி வைத்து விடுவோம் என்று போனை எடுத்தி பாலாவிடம் சொல்ல…..

பழைய பாலாவாக அவன் இருந்திருந்தால்… கீர்த்திக்காவிடம் கோபத்தைக் கொட்டியிருப்பான்… இப்படி உளறியிருக்கிறாளே என்று வந்த கோபத்தினை அடக்கியவன்……”

”சரி நான் பார்த்துக் கொள்கிறேன்” … என்று மட்டும் சொல்லி போனை வைத்தான்….

அவன் சொன்ன…. விதத்திலேயே கீர்த்திகாவிற்கு அவன் கோபம் புரிய……பாலா-மது காதலை வினோத்திடம் கூறி தப்பு செய்து விட்டோமோ என்று மனம் அடித்துக் கொள்ள ஆரம்பித்த்து

--------

கீர்த்திகாவிடம் பேசி வைத்த பாலா…… உடனே கீர்த்தனாவை தனது அறைக்கு அழைத்தான்

ஏதோ அலுவல வேலை தொடர்பாக இருக்கும்…என்று நினைத்தே……கீர்த்தி வந்தாள்

“உட்கார்……..”

அவனின் முகமே அவன் கூப்பிட்டது அலுவல் வேலை இல்லை என்பதை உணர்த்த….

“என்ன பாலா….என்ன விசயம்….ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…..” என்று கேட்டவளுக்கு…

“வினோத்-கீர்த்திகா சந்திப்பு ஞாபகம் வர………. எதுவும் தப்பாக நடந்து விட்டதோ பாலா முகமே சரி இல்லையே…… என்னாச்சோ என்று அவனைப் பார்த்தபடியே இருக்க….. அவனும் அவளையே யோசனையுடனே பார்த்துக் கொண்டிருக்க

“இதுக்குதான் கூப்பிட்டீங்களா…… எனக்கு வேலை இருக்கு…… போகனும்….” என்று கடுப்படிக்க…..

அவளின் கோபத்தை கண்டு கொள்ளாதவன்

“கீர்த்தி-வினோத் பற்றி நீ என்னவெல்லாமோ சொன்ன….. அதெல்லாம் நடக்காம…அவங்க ரெண்டு பேரும் நம்ம பற்றி பேசியிருக்காங்க….. கீர்த்திகா…. மதுவப் பத்தி வினோத் கிட்ட சொல்லியிருப்பா போல…. பையன் செம கோபத்தில கிளம்பிட்டானாம்…..” என்று சொல்ல கீர்த்தி மொத்தமாய் பயம் சூழ அவனைப் பார்த்தாள்….

“அவன் என்கிட்ட கேட்டால் என்ன சொல்ல….. அய்யோ பயமா இருக்கே…..என்று குரல் நடுங்க கேட்டாள்….

“நடந்தத எல்லாம் சொல்லணும்….” என்றான் .. அது அவனுக்கும் சொல்லிக் கொள்வது போல இருந்தது

என்ன என்பது போல் நிமிர்ந்தாள் கீர்த்தி

“வேண்டாம் ….பாலா …..அவன் ரொம்ப கஷ்டப்படுவான்…. கோபத்தில உங்கள கூட என்ன செய்வான்னு தெரியல…… மதுவப் பத்திதானே தெரிஞ்சுருக்கு… சமாளிச்சுக்கலாம்…… என்று தேற்றியவாறே சொல்ல

“தப்பு பண்ணினோம் இல்ல…. ஃபேஸ் பண்ணித்தான் ஆகனும்…. அதிலும் நம் தவறினால் பாதிக்கப்பட்டவன்’ என்ற வார்த்தையில் அவனிடம் நிலைத்த அவளின் விழிகளைப் பார்த்தபடி

“அவன் அடித்தாலும் வாங்கி கொள்வேன்…. இனியும் அவனிடம் மறைக்கக் கூடாது கீர்த்தி….. இது அவனது தன்மானப் பிரச்சனை….. இன்னொரு பெண்ணைக் காதலித்த ஒருவனை…. ஏற்றுக் கொண்ட பெண் ….தன்னை ஏன் காதலிக்க வில்லை …. என்று அவனை கொல்லும்….. சொல்லிடலாம் கீர்த்தி…… ” என்றவள் கீர்த்தியின் மௌனமே சம்மதத்தை சொல்ல ………. பாலா வினோத்திற்கு போன் செய்தான்….. தன் அலுவலகம் வரச் சொல்லி……

வினோத் மனம் அதேபோல்தான் தவித்தது…. இன்னொருத்திய காதலித்தவனை எப்படி …. அதிலும் காணாமல் போன ஒருத்தியை….. இன்னும் தேடிக் கொண்டிருப்பவனை…. இதற்கு அத்தை மாமா …எப்படி ஒத்துக் கொண்டனர்….. அவனை விட எதில் நான் குறைந்தேன்….. அப்படி என்ன காதல்….. அவன் மேல்… ராகவ்-மைதிலி இறந்த வீட்டில்தான் அவன் பார்த்தானே….அவளின் காதலை….பாலாவின் மேல் பொறாமை ஆக வந்தது…… கீர்த்தி மேல் கோபம் கோபமாக வந்தது….. ஒரு பெண்ணின் காதலைக் கூட …. அதுவும் கூடவே வளர்ந்த பெண்ணின் காதலைக் கூட அடைய முடியாத…. தன் மேலேயே இப்போது கோபம் வந்து தொலைக்க…... என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காரில் அதிக வேகத்தில் உலவினான்….

பாலாவின் போன் வர….. இரண்டு முறை கட் செய்தவன்….அவனிடம் கோபப் பட்டு என்ன பிரயோசனம்….. என்று போனை….எடுத்துப் பேசியவன்… பின் அவன் அழைப்பை மறுக்க முடியாமல் …பாலா அலுவலகம் நோக்கிச் சென்றான்…..

--------------

”பாலா………. அவன்ட்ட உண்மையச் சொல்லணுமா….” என்று பத்தாவது முறையாகக் கேட்டவளிடம்

அருகே வந்து அமர்ந்தான்…

“ஏன்… இப்டி பயப்படுற….. என்ன செய்வான்,,,, என்னைத் திட்டுவானா… இல்லை அறைவானா… நாலு அடி கூட குடுப்பானா… வாங்கி கிட்டா போச்சு…. உனக்காக எல்லாம் இல்ல….: என்று சொன்னவன்…… அவளே தன் வாழ்க்கை என்று நினைப்பதை…அவளுக்கு தன்னை புரிய வைக்கும் விதமாக

”எனக்காக என் வாழ்க்கைக்காக……” என்று சொல்லி… நிறுத்த

அது எல்லாம் அவள் மனதில் பதியும் நிலையில் இல்லை…தலையில் ஏறும் நிலையிலும் இல்லை… அவள் வேறொரு நினைவில் இருந்தாள்

“அப்படி பண்ணினால் கூட பரவாயில்ல….” என்று சொல்லியவளை

“அடிப்பாவி…..” என்க

அவனின் கிண்டலை எல்லாம் அவள் கவனிக்கவில்லை..

“அவன் என்னை உங்கள விட்டு கூட்டிட்டு போய்ட்டா….. நாடகம் தான் போட்டேன்னு” என்று கண்கள் அலைபாய…. மனதில் தவிப்பாக… அவனையே பார்த்தபடி கேட்ட மனைவியை மனதில் பாரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா…

தன்னை மனதில் வைத்துக் கொண்டு அதை உணர்ந்தும் கூட வாழ்க்கையை அவனோடு வாழ முடியாமல் தவிக்கும் கீர்த்தியை பார்த்து… அவள் நிம்மதிக்காவது .. தான் அவள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது

திடிரென்று அவளே ஏதோ ஒரு வழி இருப்பதுபோல் உணர்ந்தவள்…… விழிகளில் ஒளியுடன்…உற்சாகத்துடன் துள்ளியபடி

“பாலா….ஒரு ஐடியா….. அப்பாகிட்ட நீங்க கொடுத்த பணம் அத மறந்துட்டேன் நான் ….அத அடைக்கிற வர நான் வர மாட்டேனு சொல்லலாம்ல….. “ என்று முகம் மலர அவனைப் பார்த்தாள்…

அவள் வாழ்க்கையில்…. பல திட்டங்களை தீட்டிய அவனுக்கே திட்டம் சொன்னாள் …..தான் அவனை விட்டுபோகாமல் இருக்க…

இன்னும் ஏதாவது வழிகள் இருக்குமா…என்று யோசித்தவளை … எங்கே அவனை விட்டு போய் விடுவோமோ என்று பரிதவித்த தன் மனைவியை தன் அருகே இழுத்து அமர்த்தியவன்…..’

அவளை தன்னோடு இறுக அணைத்து….. செல்லமாய்த் திட்டினான்

”ஏய்….லூசு…… அவன் உன்னக் கூப்பிட்டா நான் கூட்டிடு போடானு விட்டுடுவேனா… நீ என்ன விட்டு போறேனு சொன்னாலே….. நா உன்ன விட மாட்டேன்….” என்று அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தான்….

”நீ என் உயிர் டி… என்னை விட்டு என் உயிர் என்னைக்கு” என்ற போதே அவன்

அவன் வாயைத் தன் கைகளால் அடைத்தாள்…..

சிறிது நேரம்… ஒருவரை ஒருவர் பார்த்தபடி மோன நிலையிலயே இருக்க…..பாலா முதலில் நிதானத்திற்கு வந்து…..

“ஆனாலும்….. உன் திட்டம் இருக்கே.. மத்த எல்லா விசயத்துலயும் ஓவர் ஸ்மார்ட்டா இருக்க…என் பொண்டாட்டியா நீ தத்திதான்… “

என்று சொன்னவுடன் முறைத்த மனைவியைப் பார்த்து நகைத்தவன்

”உடனே முறைக்காத…. ஏண்டி… நீ பணத்தை காரணமா காட்டி அவன்கிட்ட சொன்னா…. அவன் தலய அடமானம் வைத்தாவது என்னிடம் கொடுத்து உன்ன கூட்டிடு போய்டுவான்…. பாசக்காரன் வேற அவன்…..ஐடியா குடுக்கறாளாம்….” என்றவனிடம் தான் சொன்னதை உணர்ந்து வெட்கப்பட்டு அவனுள் இன்னும் ஆழமாக அடங்கினாள்…..

மெல்ல… மெல்ல…. கீர்த்தனா அவனுக்குள் கலந்து கொண்டிருந்தாள்….ஆனால் என்று முழுமையாக கலக்க……

1,491 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page