என் உயிரே!! என் உறவே!!! 34

அத்தியாயம் 34

கிட்டத்தட்ட 5 வருடத்திற்கு முன்… ஊட்டியின் அழகான காலை வேளை….. கீர்த்தி கையில் கேமராவுடனும்….. கழுத்தில் மாட்டிய மொபைலுடனும் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தாள்….. ஊட்டியின் அழகான அந்த காலைப் பொழுதை தன் கேமராவில் பத்திரப்படுத்த…

வினோத் அதற்கு முந்தைய வாரம்தான் தன் தாய்.. தந்தையுடன்… அமெரிக்காவில் செட்டிலானான்… ராகவ்-மைதிலிக்கு இஷ்டம் இல்லைதான் இதில்… வினோத் பிடிவாதம் பிடித்த ஒரே காரணத்தினால் அனுமதிக்க… கீர்த்தி மட்டும் அவர்கள் போகக் கூடாது என்று ஒரே பிடிவாதம் பிடித்தாள்… அவளின் பிடிவாததில் விஸ்வம்,மோகனா கூட தயங்க… மைதிலிதான்

“அவ கிடக்குறா….அவ ஒரு ஆளுன்னு…” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்…..

அவர்கள் சென்ற பிறகு இருவரிடமும் கோபத்தில் இருந்த மகளை ஒரளவு தேற்றி…. அவளுக்கு மாறுதல் ஏற்பட… ஊட்டிக்