என் உயிரே!! என் உறவே!!! - 33

அத்தியாயம் 33:

கவியின் வரவுக்குப் பிறகு கீர்த்தி …. தன் மனதை அவளிடம் கொட்டிய பிறகு….பழைய கீர்த்தியாக அவளிடம் மாற்றங்கள் வரத் தொடங்கி இருந்தன…….பாலா..முதல் அருந்ததி….சிந்து வரை உணர்ந்திருந்தனர்….

கவியின் வழக்கமான பேச்சு…..குறும்பான விசயங்கள் கீர்த்தியை தனிமையில் இருந்து முற்றிலுமாக வெளிக் கொணர்ந்து கொண்டிருந்தது…

அதிலும் சிந்துவும்… கவியும்…. சேர்ந்தால்….. பாலா - கீர்த்தியின் நிலை கேட்க வேண்டாம்…. பாலா கூட தப்பித்து விடுவான் … கீர்த்திதான் மாட்டுவாள்…. கவி மட்டும் இருந்தால் கூட அவள் வாயை அடைத்து விடுவாள்… சிந்து அருகில் இருந்தால்…. அது கூட முடியாது…… முகம் சிவக்க சிவக்க இருவரும் திணறடிப்பர்…

சிந்துவை….சின்னப் பெண்…. என்று திட்டிக் கூட பார்த்தாகி விட்டது..அடங்க வில்லை அவளும்….

-----------------------

காலையில் அலுவலகத்தினுள்… நுழைந்த கீர்த்தியிடம்…. வழக்கம் போல் வம்பு வளர்க்க வந்தாள்…கவி….

“என்னடி உன் ஆளக் காணோம்… தனியா வர்ற “ எனும்போதே காரை பார்க் செய்து வந்த பாலா உள்ளே நுழைய

“அதானே மனுசன் விட்டுவிடுவாரா உன்ன“ எனும் போதே…..கீர்த்தி முறைக்க…..

“ஹலோ மேடம்….இந்த ரொமான்ஸ் லுக்க எல்லாம்… அதோ வர்றாரே நம்ம பாஸ்… அவர்கிட்ட காட்டு…. எவ்வளவுநாளும் அவர் தாங்குவாரு….” என பாலாவைப் பார்த்தபடி சொல்ல….

பாலாவும் அவர்களை பார்த்து…பார்க்காதது போல் கடந்து போனான்……

”கீர்த்தி காலையிலேயே மாட்டிட்டா போல கவிகிட்ட……. அவ என்ன சொன்னாலும் என்ன வேற வந்து தாளிப்பா….என் பொண்டாட்டி…” என்று மனதினுள் நினைத்தவனாய்…தனது அறைக்குள் நுழைந்தான்……….

”ஹேய் போடி காலையிலேயே வந்துட்டா…. வேலையப் பாரு “ என்று முறைத்தவளிடம்….

“ஓ…. அம்மணி கம்பெனி ஓனர் இல்ல…தெரியாம பேசிட்டேனே….” என்று இழுத்த கவியை.

“ஏண்டி படுத்தற… நீ வேலையப் பாரு….. பார்க்காட்டி போ…. எனக்கு என்ன வந்தது“ என்று கூறிய கீர்த்தி தன் கம்ப்யூட்டரில் பார்வையை பதிக்க….

கவியும் தன் வேலைகளில் கவனத்தை திருப்பினாள்….

கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழிந்து…கீர்த்திக்கு போன் செய்தான் பாலா…. அவள் MD யாக…

கீர்த்தி மற்றும் கேசவன் அவனது அறையில் இருந்தனர்…

கீர்த்தியிடம் பாலா….

“நீங்க …டீம் லீட்ல இருந்து பண்ணிய ப்ரோஜெக்ட்…..கம்ப்ளீட் டெலிவ்ரி நெக்ஸ்ட் மன்ந்தோட முடியுது…. சோ.. இனி ரிசோர்ஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிடலாமா….. ஏனென்றால்… அப் கம்மிங் ப்ரஜெக்ட்டுக்கு ரிசோர்ஸ் அலோகேசன் பண்ணனும்” என்று கேட்க…..

கேசவனிடம் திரும்பிய பாலா அவனிடம்…

“இது பெரிய ப்ராஜெக்ட் கேசவ்…. டைம் அண்ட் ரிசோர்ஸ் கோட் பண்ணிக் கொடுத்துட்டேன்…. நீங்க கீர்த்தியோட டீம்ல இருந்து இந்த ப்ராஜெக்டுக்கு தேவையான் ரீசோர்ஸ செலெக்ட் பண்ணிட்டு……அதன் பிறகு ரெக்ரூட்மெண்ட் டீம் க்கு மெயில் அனுப்புங்க” என்றவன்….

”கீர்த்தி நீங்களும் செக் பண்ணிட்டு…. ரிலீஸ் பண்ணப் போறவங்கள எனக்கும் கேசவனுக்கும் மெயில் பண்ணுங்க” என்றபடி…. தன் வேலையில் கவனம் செலுத்த…..

கேசவன் கீர்த்தியைப் பார்த்து ஏதோ சொல்லச் சொல்ல

கீர்த்தியும் ….

”பாலா….” என்றாள்

”என்ன… “ பார்வையால் கேட்டபடி அவளிடம் திரும்பினான்….

”இந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்து நெக்ஸ்ட் மந்தோட 1 இயர் ஆகப் போகுது… சோ டீம் மெம்பெர்ஸ்….. ப்ராஜெக்ட் சக்ஸசுக்கு டீம் பார்ட்டி கேட்கிறார்கள்…” என்று கூற….

அதே நேரம் கேசவனும்

”ஆமாம் சார்…… என்னோட டீம் மெம்பெர்ஸும்” எனக் கூற

”ஓ என்று சொன்னபடி… சில வினாடிகள் யோசித்துவிட்டு… ஒகே…. என்றவன்… தன் குறிப்பில் அந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்த நாளை நோட் செய்தவன்…. இந்த வருடம் அதே நாளில் ட்ரீட்டையும் முடிவு செய்தான்….”

அவன் அந்த அலுவலகத்தின் MD யாக மட்டுமே அப்போது இருந்ததால் அந்த நாள் தனது மனைவியின் பிறந்த நாள் என்பதை மறந்து விட்டான் போல் பாலா….

கீர்த்திக்கு அது தனது பிறந்த நாள்…தன் பெற்றோரின் திருமண நாள் என்பதால் திகைத்தாள்…. ஆனால் கேசவன் இருந்த்தால் வேறு எதுவும் சொல்லாமல் வெளியே வந்தாள்….. தேதியை மாற்றவும் இயலாமல் அனைவருக்கும் மெயில் வேறு அனுப்பப் பட்டுவிட்டது….கீர்த்தியும் அத்துடன் அந்த விசயத்தை விட்டு விட்டாள்…

அன்றுதான் ஞாபகம் இல்லாமல் போனது பாலாவுக்கு…..அது கூடத் தவறில்லை… ஆனால் அவளது பிறந்த நாள் அன்றும் அவன் மறந்ததுதான் அவன் நேரம்….. வேறென்ன சொல்ல……..

----------------------

முக்கியமான நாள் அன்று பாலாவிற்கு….. அந்த பெரிய ப்ராஜெக்ட் ப்ரோபோசல் இன்று எழுத்து மூலம் கன்ஃபார்ம் ஆகும் நாள்… ஒரு ராசியான் கோட் வைத்திருப்பான் இந்த மாதிரியான தினங்களில் அணிய…. இது ஆதியின் பழக்கம்…. அவனோடு பழகி பாலாவிற்கும் தொற்றிக் கொண்டு விட்டது….

குளித்து விட்டு வெற்று மார்புடன் வெறும் துண்டுடன் குளியலறையில் இருந்து வந்தவன்….. அந்த கோட்டைத் தேட….. காணவில்லை… பொறுமையாக மறுபடியும் தேட…