என் உயிரே!! என் உறவே!!! 31

அத்தியாயம் 31

அதன் பிறகு வந்த நாட்களில் பாலா கீர்த்தியிடம் தள்ளியே இருந்தான்….. அவன் தொட்டால் அவளும் தன் கைகளில் நெகிழ்வதை உணரத்தான் செய்தான்… ஆனாலும் அவனுக்கு அவளின் மனப்பூர்வமான சம்மத்தோடு அவளை அவனவள் ஆக்க வேண்டும் என்ற காரணத்தினால் தள்ளி நின்றான்…. அதுமட்டுமில்லாமல் தானும் அவளின் அருகாமையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறோம் என்பதையும் உணர்ந்தவன்… தன்னை மீறி எதுவும் நடந்து விடக்கூடாது என்றும் நினைத்தான்.

கீர்த்தனாவும் அவனது விலகலை உணர்ந்து இருந்தாள் தான்…… காரணம் தெரியாமலா இருக்கிறாள் அவள்…. அன்று அவனின் உணர்ச்சிகளை அறியாதவளா அவள்…

அன்று கீர்த்திகாவின் தங்கை திருமணம் என்பதால்…. குடும்பத்துடன் கிளம்பினர்….

கீர்த்தனா சேலையில் பாந்தமாக இருந்தாள்… பாலாவையும்…. கீர்த்தனாவையும் ஒரு சேரப் பார்த்த அருந்த்தி… ஜெகனாதனுக்கு கண்கள் நிறைந்து போனதுதான் உண்மை…

கீர்த்தனா சேலையில் இருந்ததை பார்த்த பாலாவுக்கு…… மனம் எகிறிக் குதித்துக் கொண்டிருந்ததுதான் … ஆனால்….. அருகில் நெருங்க வில்லையே அவன்…… சூடு கண்ட பூனை அல்லவா… தள்ளி நின்றே ரசித்துக் கொண்டிருந்தான்…. அதே நேரத்தில் அவனின் ஏக்கத்தை அவளுக்கு உணர்த்தாமலும் இல்லை…

அவனின் நிலையை தெளிவாக உணர்ந்திருந்த கீர்த்திக்கு… அவனைப் பார்க்க பாவமாக தோன்றினாலும்… அதற்காக அவளை மாற்ற முடியாத நிலையில் இருந்தாள் இருந்ததே உண்மை…

திருமணத்திற்கு வந்தவர்கள்…….மணமக்களை ஆசிர்வதித்து விட்டு …. கீழே உட்கார்ந்திருந்தனர்…. பாலாவை பார்த்தவுடன் அவனிடம் மது அப்பாவும் திருமணத்திற்கு வந்திருப்பதை சொல்ல வந்தாள் கீர்த்திகா…. கல்யாண மண்டபத்தில் எந்த அலங்காரமும் இல்லாமல் சாதரணமாக நின்ற.. கீர்த்திகாவை பார்த்தவுடன் பாலாவிற்கு… ஆதியின் நினைவில் கண்கள் கலங்கி விட்டன…. அவனின் வருத்தம் புரிந்த கீர்த்திகா தன்னைச் சமாளித்தபடி…. பாலாவிடமும் கீர்த்தனாவிடமும் பேச ஆரம்பிக்க….

அப்போது கீர்த்தனாவின் செல்லுக்கு வினோத் கால் பண்ண… கீர்த்திகாவின் மனம்…. அது வினோத் என்றவுடன் அந்த தொலைபேசி அழைப்பில் சென்றது….. கீர்த்தனா … அதை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள்

”அன்னைக்கு வந்தாங்கள்ள …. கீர்த்திகா…. அவங்க ஸிஸ்டர் மேரேஜ்க்கு டா… இரு எனக்கு இங்க சத்ததில் கேட்கவில்லை” என்றபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தாள்…

கீர்த்தனாவை… அவள் போன திசையை இரண்டு கண்கள்….. ….வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன… அது வேறு யாருமல்ல மதுவின் தந்தை தான்

கீர்த்திகா வினோத் போன் என்றவுடன் பாலாவிடம் அவள் சொல்ல வந்த விசயத்தை மறந்து…. ஏதோ பேருக்கு அங்கு நின்று கீர்த்தனா போன திசையை பார்த்தபடி சிறிது நேரம் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு… பிறகு அங்கிருந்து போனாள்….

சுற்றுப்புறத்தை கண்களால் சுற்றியபடி வினோத்திடம் பேசியபடி இருந்த கீர்த்தனாவின் கண்கள்…… சட்டென்று நின்றன… ஒரு நடுத்தர வயதுடையவர் தன்னையே பார்த்தபடி இருந்த காரணத்தால்…… ஆனாலும் யாரோ என்றபடி மறுபடியும் பேச ஆரம்பித்தவள்… மீண்டும் அவரின் வெறித்த பார்வையில் பயம் சூழ … வினோத்திடம் சொல்லி விட்டு போனை அணைத்தவள்…. பாலாவின் அருகில் போய் அமர்ந்து விட்டாள்…. அவன் அருகில் அமர்ந்த பின்னர்… மறுபடியும் அவரைப் பார்க்க… அவரோ இன்னும் கீர்த்தனாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்க.. மெதுவாய் பாலாவை சுரண்டினாள்…

அவளின் செயலில் பாலாவும் அவளை என்ன என்று நோக்க

“பாலா உடனே பாக்காதீங்க… அங்க ஒருத்தர் என்னையவே பார்த்துட்டு இருக்கார்… யார்னு தெரியல….” என்று அவனிடம் சொன்னாள்.

பாலா சிறிது நிமிடம் கழித்து அவள் சொன்ன திசையில் சாதாரணமாக பார்ப்பது போல் பார்க்க…. அது மதுவின் தந்தை…..

“மாமா… என்று சத்தமாகவே வாய் தானாக சொல்ல….கீர்த்தனாவோ.. மாமாவா என்றபடி அவரைப் பார்த்தாள்….

பாலா சட்டென்று எழுந்தான்…. எழுந்தவன் கீர்த்தனாவையும் கையை பிடித்து கூடக் கூட்டிப் போனான்…

”மாமானா யார் பாலா” சந்தேகம் தெளியாமல் கேட்க….

“என்னோட தாய் மாமா…. மது அப்பா… “ இப்போதைக்கு இது போதும் என்பது போல அத்துடன் நிறுத்த

கீர்த்தனாவோ…

“என்னது மது அப்பா….இவனுக்கு தாய் மாமாவா?” என்று யோசித்தவள்

“அத்தை அங்க இருக்காங்க.. அவங்க பேச மாட்டாங்களா” என அடுத்த கேள்வி கேட்க…..

அதற்கு பதில் சொல்லும் முன் செல்வராஜன்… அதாவது மதுவின் தந்தை முன் நின்றனர்…

”மாமா…. நல்லா இருக்கீங்களா“ என்று கேட்ட பாலாவிடம் பதில் சொல்லாமல்…. வெறித்த பார்வை பார்த்த படி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்…

“மாமா… இது என்னோட மனைவி கீர்த்தனா…… இவளையும் உங்க பொண்ணா நினைத்து… எங்க ரெண்டு பேரயும் ஆசிர்வாதம் பண்ணுங்க…. ” என்று கீர்த்தனாவோடு அவர் காலில் விழுந்தான் பாலா…

கீர்த்தனாவிற்கு ஒன்றும் புரியாமல் பாலா சொன்னபடியெல்லாம்…. செய்து கொண்டிருந்தாள்….

இதை எல்லாம் அருந்ததியும் ஜெகனாதனும் பார்த்துக் கொண்டிருந்தனர்தான்…. ஆனால் அருகில் வரவில்லை….

செல்வராசனும் காலில் விழுந்த அவர்களை ஆசிர்வதிக்காமல் இருந்தால் அது அவரின் வயதுக்கு தகுந்த செயல் இல்லை என்பதால் அவர்களை காக்க வைக்காமால்... செறுமியபடி

“நல்லா இருங்க ” என்றவர் பாலாவைப் பார்த்து….