top of page

என் உயிரே!! என் உறவே!!! 30

அத்தியாயம் 30

அன்று விடுமுறை தினம்….. அது மட்டும் இல்லாமல் கீர்த்திகாவும் வந்திருந்தாள்….கீர்த்தி பெற்றோர் இறந்த பின்னர் … அவளைப் பார்க்க இன்றுதான் வந்திருந்தாள்….. கீர்த்திகாவின் தங்கைக்கு….. அவள் அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவள்….. இன்னும் 2 வாரத்தில் திருமணம்… இங்கேதான் மாப்பிள்ளை பார்த்திருப்பதால்… திருமண வேலைகளினால்…. இங்கே உள்ள அவர்கள் வீட்டில் அனைவரும் தங்கி இருந்தனர்….

திருமண பத்திரிக்கையை பாலாவிற்கு வைப்பதற்கு வந்திருந்தாள்…. கீர்த்தனாவைப் பார்த்தவளுக்கு…. சங்கடமாய் இருந்தது…. இருந்தாலும் கேட்டாக வேண்டுமென்பதால் துக்கம் விசாரித்தாள்…

அவளும் தாயை இழந்தவள்… தாலி கட்டிய கணவனை அநியாயமாக இழந்தவள் தானே… இழப்பின் வேதனை அவளுக்கும் தெரியும் தான்….

சிந்துவும் வீட்டில் இருந்த படியால்….ஓரளவு சூழ்நிலையினை மாற்றி கலகலப்பாக இருந்தது….

மணி 3 ஆகி இருந்த்து… வினோத் அலுவலக இடம் விசயமாக வெளியே போய் இருந்தான்….. குமார்தான் கூட்டிப் போயிருந்தான்….

கீர்த்தனா அவனை எதிர்பார்த்தபடி காத்திருந்தாள்….. 3 ஆகி விட்டது…. இன்னும் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி இருந்தானே…. இன்னும் வரவில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வினோத்தும் வந்தான்….. உள்ளே நுழைந்தவன்….. அனைவரிடமும் ஹாய் என்று சொல்லிவிட்டு ரெஃப்ரெஷ் பண்ணிவிட்டு வந்து சாப்பிட வருகிறென் என்றபடி மேலே ஏறினான்….

கீர்த்திகாவை பார்த்தான் தான்….. ”யார் இந்தப் பெண்” என்றளவில்தான் அவனது எண்ணம் இருந்தது….

சிந்துவிடம் மட்டும்….

“ஹேய் சிந்து டார்லிங்….. உங்க அப்பாவும் வந்துட்டாங்க…..என்ற தகவலைச் சொல்லியபடி மேலே ஏறினான்….

”கீர்த்தி அக்கா… நா கிளம்புகிறேன்” என்று தன் புத்தகங்களை எடுத்து வைக்கலானாள்….

மேலே ஏறிக் கொண்டிருந்த வினோத்திடம் பாலா…

”விநோத்…. என்ன ஆச்சு போன விசயம்….” எனக் கேட்க

”டபுள் ஓகே… என்னைய பார்த்தாலே தெரியல…வந்து சொல்கிறேன்…” என்றான்

“சீக்கிரம் வாடா வினோத்…. உனக்கு பிடித்த டிஷ்…. மணி 3 ஆகி விட்டது…” என்று அக்கறையோடு சொல்ல

பாலாவிற்கு மட்டும் புகைந்த்து….. வினோத்தோடு அவளுக்கு உள்ள 23 வருட உரிமை அவனுக்கு புரிந்தும் கோபத்தை வரவழைக்காமல் இல்லை…. கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டிருந்தான்…..

வினோத்திற்கோ….. அவனுக்கு இருந்த உற்சாக மனநிலையில் கீர்த்தியின் அக்கறையும் சேர….. தன்னை மறந்து…

“ஒகே குறத்தி….வன் மினிட்ல வந்துரேன்….“ என்று சொல்லிய பின் தான் உணர்ந்தான்…. தான் வாய் விட்டதை

அதை உணர்ந்து

”அய்யோ கீர்த்திடா… என் செல்லம்ல…. சாரி சாரி …. கீர்த்தி பட்டுல்ல…. தெரியாம… என்று ஆயிரம் கீர்த்தி போட்டான்” … பாலாவை வேறு ஓரக் கண்ணால் பார்த்தபடி…

பாலா கோபப் பட்டாலும் பரவாயில்லை…கீர்த்தியை சமாதானப் படுத்த வேண்டும்.. அவளது கோபம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்

கீர்த்தி என்ற கீர்த்தனா…. பத்ரகாளியாக மாற……

கீர்த்தி என்ற கீர்த்திகா….. அவஸ்தையாய் இருக்க

சிந்துவிற்கோ வினோத்தை பார்த்து சிரிப்பாய் வர

கோபம் வந்திருக்க வேண்டிய பாலாவோ வேறு ஒரு நினைவில் மிதந்தான்… அது அவனுக்கும் அவன் மனைவி கீர்த்தனாவுக்குமான உறவின் முடிச்சு இன்று நேற்றல்ல….என்றோ விழுந்த முடிச்சு என்ற உணர்வில் தன்னை மறந்து நெகிழ்ந்து இருந்தான்…..

சிந்து தான்…

“ஹையோ அண்ணா….. கொஞ்சம் நிறுத்தறீங்களா… கீர்த்தி கீர்த்தி ன்னு….இந்த அக்கா பேரும் கீர்த்திதான்….”

”என்னது இந்தப் பொண்ணு பேரும் கீர்த்தியா” அதிர்ந்தவன் ரொம்ப சொதப்பி விட்டோமோ என்றிருந்தது….

”கீர்த்தி செல்லம்.. அது இதென்று வேறு சொல்லி விட்டோமே” என்று சற்று அசடு வழிந்தவன்…

”சாரிங்க…“ என்று மெல்லிய குரலில் சொன்னவன்… இப்போதைக்கு இங்கு நிற்க வேண்டாம் என்று மேலேறினான். அதற்கு மேல் கீர்த்திகாவிடம் கவனம் செலுத்த வில்லை…

கீர்த்தனாவின் கோபம் தான் அவன் கவலை இப்போது…. முதலிலும் கூறுவான் தான்.. அப்போதும் அவள ஆர்பாட்டம் பண்ணுவாள்தான்... ராகவன் – மைதிலியின் சமாதானத்தில் தான் அடங்குவாள்…. அப்போது வராத கவலை …. இப்போது அவர்கள் இல்லாததால் வந்தது…

திரும்பி வந்தவன்…

“குட்டிமா இல்ல…..தெரியாம சொல்லிட்டேன்.. நீ வேண்ணா…என்னை எத்தனை அடி வேணடும்னாலும் அடிச்சுக்கோ” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்…

ஆனாலும் மலை இறங்காத மாரியாத்தா அவதாரத்தில் இருந்தான்…

பாலாதான் சுதாரித்து…

“கீர்த்தி…. என்ன பிடிவாதம் இது….. அவர்கிட்ட பேசு…. வினோத் பசியோட இருப்பார்…சாப்பாடப் போடு” என்றான்…

அவளோ சின்னக் குழந்தை போல் பாலாவிடம்…

“அவன் அடங்கவே மாட்டான் பாலா.. என்ன இப்டி கூப்டதடானு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்… அவனுக்கு நான் ஒன்னும் போட மாட்டேன்…. அவனே போட்டுக்கட்டும்… இல்ல பசியோடவே இருக்கட்டும்…. “

என்றபடி அவள் வீட்டிலிருந்த போது என்ன பிடிவாதம் பிடிப்பாளோ அந்த மாதிரி இருந்தாள்….. ஆனால் இங்கு அவள் மருமகள் என்ற ஸ்தானத்தில் இருக்கிறாள்… அவனோடு தன் வீட்டில் இந்த பிடிவாதம் பிடிக்கலாம்… இங்கு அவளது விருந்தாளியாய் வந்திருக்கும் வினோத்திற்கு அது தன்மானக் குறைவு என்பதை மறந்து வினோத்தோடு மல்லுக் கட்டிக் கொண்டு இருந்தாள்….

பாலாவே இதை எதிர்பார்க்க வில்லை….. கீர்த்தி மாதிரியான மெச்சூர்டான பெண்ணிடம் இந்த மாதிரியான குழந்தைத்தனத்தை எதிர்பார்க்கவில்லை…. வினோத்தை அவஸ்தயாய் பார்க்க… அவனோ இது எல்லாம் தனக்கு சாதாரணம் என்பது போல்… சாப்பிடப் போக…..

பாலா…. கீர்த்தியை பார்த்து முறைத்தபடி…

”அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுனீங்க அவ்வளவுதான்”

பாலாவோ “ஏற்கனவே உனக்கும் எனக்கும் நல்லா போய்ட்டு இருக்கு… இது வேறயா….” என்ற நினைத்த படி வினோத் அருகில் போனான்…

சிந்து எப்போதோ போய் விட்டிருந்தாள்…. கீர்த்திகாதான் நிலைமையை சமாளிக்க…

பாலாவிடம்…

”நான் பறிமாறுகிறேன் பாலா” விடுங்க என்றபடி வினொத்திற்கு பறிமாறப் போக….

அவனோ..

’பரவாயில்லங்க….. நானே போட்டுக்கறேன்…. என்று கீர்த்திகாவிடம் சொல்லியவன் .. அவனாகவே பறிமாற ஆரம்பித்தான்….

இத்தனை நடந்தும் கீர்த்தனா..அசையாமல் அங்கேயே அமர்ந்து இருந்தாள்…. இப்போது பாலா,,, மிகுந்த கோபத்துடன்….

“கீர்த்தனா…. இங்க வா… நீ உன் வீட்டில் இருக்கும் போது அவர்கிட்ட எப்படி வேண்டும் என்றாலும் நடக்கலாம்… அவருக்கு ஒன்றும் தோன்றாது… இங்கு அவர் கெஸ்ட் அவரிடம் நீ இப்படி நடந்தால் அவருக்கு என்ன மரியாதை…. அதுவும் இன்னொரு கெஸ்ட் முன்னால்.” என்று சொல்ல…

அவன் சொல்வது அப்போதுதான் புரிந்தது… தன் தவறை உணர்ந்தவள்…எழுந்தாள்…ஆனாலும் விநோத்தை முறைத்தபடியே….

”அய்யோ பாலா… நீங்க என்னை அவ கையால….இல்ல இல்ல கரண்டியால அடி வாங்காம விட மாட்டீங்க போல” என்று அலற….

அதைப் பார்த்த கீர்த்திகாவுக்கும் சிரிப்பு வர …. அது பாலாவையும் தொற்ற…. கீர்த்தனாவிற்கு இன்னும் அதிகமாக கோபம் ஏறியது…..

கீர்த்தனாவின் கோபத்தைப் பார்த்த பாலா வந்த சிரிப்பையும் வாயுள்ளே நிறுத்தி விட்டான்…

அதன் பிறகு…பாலா கீர்த்திகாவை அவள் வீட்டில் விட கிளம்ப…. வினோத் இங்கிருந்து கீர்த்தியின் கோபத்திற்கு மற்றும் அடிக்கு ஆளாக நேரிடாமல் .... அவனுடனே கிளம்பினாள்….

போகும் வழியில் பாலா கேட்டான்..

“ஏன் வினோத் அவ கோபம்தான் தெரியுதுள்ள பிறகு ஏன் அவளை….அப்படி கூப்பிடுகிறீர்கள்….” என்று கேட்க….

பாலா இன்னொன்றும் வினோத்திடம் கேட்க நினைத்திருந்தான்,… கீர்த்திகாவை இறக்கி விட்டு வரும் போது அதைக் கேட்கலாம் என்று நினைத்திருந்தான்….

“நானா….கீர்த்தி கோபத்துக்கு பயந்தேனா…. நீங்க வேற பாலா…..அவகிட்ட எத்தனயோ பட்டுருக்கேன்…. இதெல்லாம எனக்கு ஜுஜுபி… ராட்சசி வேலையெல்லாம் பார்ப்பா… அவ மேல எனக்கு கோபமும் வராது… நானும் அடங்க மாட்டேன்…. இப்போது கேட்டது போல் எல்லாம் மன்னிப்புலாம் கேட்க மாட்டேன்….. சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன்” என்றவன்

”ஆனா பாலா…. அத்தை-மாமா இல்லாம அதை எண்ணி நத்தைக் கூட்டுக்குள் ஒடுங்குவது போல் இல்லாமல் அவ நல்லா இருக்கானா…அதுக்கு நீங்கதான் காரணம்… எங்க வீட்டுப் பொண்ணு அவள எப்டி எல்லாம் வளர்த்தோம் என்று எங்களுக்கு மட்டும் தான் தெரியும்…. எங்க எல்லார்க்கும் அவதான் இளவரசி…. என்று நெகிழ்ந்து கூறினான்….

கீர்த்திகாவும் அவன் கூறியதை எல்லாம் கேட்டபடியேதான் வந்தாள்…. அவளையறியாமல் வினோத் அவள் மனக் குளத்தில் கல்லெறிந்து கொண்டிருந்தான்….. அவன் குறத்தி.. என்று அழைத்ததில் இருந்து…. கீர்த்திடா.. கீர்த்திமா…. கீர்த்தி செல்லம் என்று கீர்த்தனாவைக் கொஞ்சிய போதெல்லாம் அவள்… மனம்… அவளைத் தாண்டி அவனிடம் சென்று கொண்டிருந்தது…. 3 வருடமாக அடங்கி இருந்த அவள் மனது ஆதியிடம் சென்று… அதன் பிறகு… இந்த மாதிரி தனக்கும் கிடைக்காதா என்று ஏங்க ஆரம்பிப்பது போல் தோன்றியது….. 5 வயதில் தாயை இழந்து அவள் காட்டிய பாசத்திற்கு ஏங்கியவள் … அது வேறு யாரிடமும் கிடைக்காமல் நின்றவளுக்கு மதுவின் பாசம்தான்… பாலைவனச் சோலையாக இருந்தது.. அதே போல் ஆதியின் நினைவுகளில் தத்தளித்தவள்… வினோத் கீர்த்தனா மேல் வைத்திருந்த பாசம் மனது அவளையும் அறியாமால் அவனின் பால் அவளை ஈர்த்ததை அவளும் உணர்ந்தாள்….

கீர்த்திகாவை இறக்கி விட்டு வீடு திரும்பும் வழியில் பாலா …. வினோத்திடம்….

நீங்கதான் கீர்த்திக்கு ட்ரைவிங் சொல்லி கொடுத்ததா…என்ற சம்பந்தமில்லா கேள்வியைக் கேட்க

அவனோ….”இது இப்போது எதற்கு” என்பது போல் பார்க்க…

“இல்ல … அவதான் சொன்னா…. அதுதான் கேட்டேன்“ என்று ஏதோ வாய்க்கு வந்ததை உளர…

நான்லாம் இல்லை….. ராகவ் மாமாதான் சொல்லிக் கொடுத்தார்.. என்ற அவனது பதிலில் முதலில் ஏமாற்றம் அடைந்தான் பாலா…ஆனால் அதைத் தொடர்ந்து வினோத் கூறியது அவன் நினைத்ததை உறுதிப் படுத்த சந்தோசத்தில் மிதந்தான்… தன்னவளை … அவள் தனக்காக பிறந்தவள் என்னும் நினைவில் இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்கினான்.

இதையெல்லாம் உணராமல் வினோத் பேசிக் கொண்டிருந்தான்….

ஆனா… பாலா… உன் வைஃப் இருக்காளே…. மாமாகிட்ட ட்ரைவிங் கத்துக்கிட்டு…. என்ன வச்சு ரோட்ல ட்ரையல் பார்க்க ஆரம்பிச்சுட்டா…. அதுவும் இவளுக்காக ஒரு ஸ்கூட்டில இவள ஓட்ட வச்சு… இவள ஸ்கூல்ல விட்டதுக்கபுரம் நான் அந்த ஸ்கூட்டில ஆஃபிஸ்க்கு போன கொடுமை இருக்கே… நான் ஸ்கூட்டில வரத பார்த்து ஆஃபிஸ்ல ஒரு ஃபிகர் கூட மாட்டல தெரியுமா…. என்று போலியாக வருத்தபட்டு கண்களை துடைக்க….. பாலா அவனை நினைத்துப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்…

அவன் சிரிப்பதை பார்த்த வினோத்…

“அடப் பாவி…. உன் பொண்டாட்டி என்னை என்ன பாடெல்லாம் படுத்திருக்கானு சொன்னா உனக்கு இவ்வளவு சிரிப்பா..அவளுக்கு ஏத்த புருசன் தான்” என முறைக்க….’

அந்த பயணம் இருவருக்கும் ஒரு சுமூக உறவை ஏற்படுத்தி இருந்த்து….ஒருமையில் ஒருவரை ஒருவர் அழைக்கும் அளவுக்கு… வினோத் மீது சிறிதளவில் இருந்த பொறாமையும் பாலாவிடம் இப்போது இல்லை,,,,,,

----------------------------------------

கீர்த்திகாவால் உறங்க முடிய வில்லை……வினோத் நினைவே எழுந்தது… கீர்த்தனாவின் மேல் அவன் வைத்திருந்த பாசமா…. இல்லை… அவன் கீர்த்தி என்ற அழைத்த விதமா… …ஆதியின் மேல வைத்த தன் காதல் இவ்வளவுதானா… தனக்காக இறந்த அவனுக்கு செய்யும் துரோகம் இல்லையா. என்று பலவாறாக மனதினைக் குழப்பிக் கொண்டிருந்தாள். நேசம் இரண்டாம் முறை வருமா? என்று யோசித்தவளுக்கு மனதில் பளீரென்று ஒரு அறை விழுந்தது… தன் தாயை விட்டு …அவள் இறந்ததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்தால் தந்தையை இத்தனை காலம் ஒதுக்கி வைத்திருந்த … முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினாள்…. பாலா கூட மதுவை மறந்து கீர்த்தனாவுடன் வாழ்வதை உணர்ந்துதான் இருந்தாள்… மனம் மீண்டும் வினோத்தை சுற்றியே வந்தது….அவன் அவளை கொஞ்சம் கூட கவனிக்க வில்லை… அந்த அலட்சியம் கூட அவளை அவன் பால் ஈர்த்தது என்று சொல்லாம்… எனினும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மனம் அலைபாய ஆரம்பித்து இருந்தது கீர்த்திகாவிற்கு…

---------------------------

கீர்த்திகா…..வினோத்தின் பற்றிய எண்ணங்களில் உறங்காமல் தவிக்க….

கீர்த்தனா…..வினோத்தின் மேல் கோபத்தில் உறங்க முடியாமல்….. கொதித்துக் கொண்டிருந்தாள்….

அதைக் கவனித்த பாலா…

“கீது…. என்ன நீ… உன்கிட்ட இருந்து இந்த மாதிர் பிஹேவியர நான் எதிர் பார்க்கவே இல்லை….. நான் அறிந்த கீர்த்தி…. மெச்சூர்டான பெண்…. இந்த மாதிரியா நடப்பாய்” என்று கேட்க

“ப்ச்ச்.. எனக்கு என்னமோ அவன் அப்படி கூப்பிடறது பிடிக்காது பாலா… சொன்ன கேட்கவே மாட்டான்…. அவன கூப்பிடாதன்னு சொன்னாலும் அடங்க மாட்டேங்கிறான்… அப்பா கூட சொல்லிப் பார்த்தாரு……. அவரால் கூட முடியவில்லை……. நிறுத்துவேனா என்கிறான்…. அவனப் போய் மொத்திட்டு இல்ல நாலு அடி அடிச்சுட்டு வந்தாத்தான் எனக்கும் தூக்கமே வரும்“ என்று கவலையோடும் கோபத்தோடும் சொல்ல….

விட்டால் எங்கே இந்த நேரத்தில் அவன் அறைக்கு அவனை அடிக்கச் சென்று விடுவாளோ….. என்று எண்ணியவன் இல்லையில்லை பயந்தவன்

”உனக்கு அவன் இனிமே உன்ன குறத்தினு கூப்பிடக் கூடாது அவ்வளவுதானே….இனிமே கூப்பிட மாட்டான்….. நான் பார்த்துக்கறேன்… அதுக்காக அவன எல்லாம் அடிக்க வேண்டாம்.. பாவம் பையன் பொழச்சுப் போகட்டும் விடு…” என்று சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்க….

“எங்க அப்பா சொல்லியே அடங்கல… நீங்க சொன்னாத்தான் கேட்கப் போறானா… நீங்க சொல்றதுக்காக மட்டும் இந்த தடவ அவன விடறேன்” என்றபடி ஓரளவு சமாதானமாகி படுக்கப் போனாள்…

எப்படியும் அவள் கோபம் வெகு நேரம் இருக்காது….வினொத்தோடு நாளைக் காலையிலேயே பேசி விடுவாள்…. என்பதால் வினோத்தும் அவளை சமாதானப் படுத்த வில்லை….. இதெல்லாம் அவர்கள் இருவருக்கும் பழக்கமான நிகழ்ச்சிகள் என்பதால்….

கீர்த்தியிடம் பேசி விட்டு அறையை விட்டு வெளியே வந்தவன்…

வாழ்க்கை பயணத்தை நினைத்து வியந்தான்… இதே ’ குறத்தி ’ என்ற வார்த்தை இவன் வாயில் இருந்து வராமல்…. கீர்த்திகாவை அவ்வாறு அழைக்காமல் இருக்க ஆதி அவனோடு போராடியதை… கெஞ்சியதை நினைத்தபோது சிரிப்புதான் வந்தது…. இன்று இவனுக்கே அந்த நிலைமையா என்று நினைத்தபடி

நேராக வினோத் தங்கி இருந்த ரூமிற்கு வந்தான்….

அவனைப் பார்த்த வினோத் அவனை எதிர்பார்த்திருந்ததைப் போல…

“ஹேய் பாலா….. ராகவ் மாமா பார்த்த வேலையை நீ பார்க்க ஆரம்பிச்சுட்டியா… அவர்தான் அவர் பொண்ண சமாதானப் படுத்த… எந்த நேரமானாலும் என்னைத் தேடி வருவார்…இப்போ நீ …. Good….. “ என்று சிரிக்க

பாலா அவனைப் பார்த்து முறைத்தான்….

“நீ இப்போ எதுக்கு வந்திருக்க தெரியுமா… அவள அப்படி கூப்பிடாத அப்டினுதானே”

என்று சொல்ல…

பாலா பரிதாபமாக ஆம் என்பது போல் அசைக்க…

“அவளுக்குதான் பிடிக்கலேல…. விட மாட்டியா நீ….. அவ கோபப்பட்டு படுத்துட்டா…. உனக்கென்ன நீ சொல்லிட்டு போய்டுவ… மாட்டிடு முழிக்கிறது நாந்தான்…. நீயும் கல்யாணம் பண்ணிப் பாரு அப்பத் தெரியும்… ஒரு புருசனா….பொண்டாட்டி கோபமா படுத்தா என்னாகும் என்று……”

வினோத் பாலாவை பார்த்து கண்ணடித்தபடி…..

“ஓ… கோபத்துல உன் ஆளு கோபத்தில உன்ன வெளில தள்ளிட்டாளா, அதான் இங்க வந்து நிக்கறியா…” என்று நக்கலாக வேறு சிரித்து வைக்க

பாலா ..

“வினோத்…வேண்டாம்….சிரிக்காத… அவ அங்க என்னைப் படுத்தறா.. நீ அதுக்கும் மேல” என்று எகிற

”ஒரு ஆம்பளையோட மனசு.. ஆம்பளைக்குதான் தெரியும் பாலா…. நீ சொன்னதுக்காக இனிமே குறத்திய….சாரி…சாரி கீர்த்திய அப்படி கூப்பிடல போதுமா…..” என்று கூற பாலாவும் சமாதானம் ஆனான்…

அடுத்த இரண்டு நாளில் வினோத்தும் கிளம்பிச் சென்றான்…. பாலாவோடு கீர்த்தியின் வாழ்வைப் பார்த்து மன நிம்மதியுடன் கிளம்பினான்…. இங்கே வந்து ஒரு பெண்ணின் மனதில் சலனம் ஏற்படுத்தியது தெரியாமல்….

---------------------------

பாலாவும் கீர்த்தியும் அலுவலகம் செல்லத் தயாராகிக் கோண்டிருந்தனர்….

பாலா ஏதோ ஒரு பாடலை …அவளைப் பார்த்த படி …ஹம் செய்து கொண்டே ரெடி ஆகிக் கொண்டிருந்தான்….

கீர்த்தி இப்போதெல்லாம்…. அவளின் வழக்கத்தை மாற்றாமல் இருக்க…. பாலா எந்த வழியில் அவளை அணுகுவது என்று தெரியாமல் ….. விழித்துக் கொண்டிருந்தான்…

அன்று கீர்த்தனா… சும்மாவாது இருந்திருக்கலாம்… அவளும் அவன் பாடியதை என்ன பாடல் என்று கண்டுபிடிக்க மனதிற்குள் ஹம் செய்து பார்க்க அது சத்தமாக வெளியே வந்து விட்டது….

”என்ன பேபி…..என்ன பாட்டு என்று தெரியனுமா… “ என்க

ஒன்றும் சொல்லாமல்…. அவள் தனது வேலையில் கவனமானாள்…..

“எமகாதகி…. மாட்ட மாட்டேங்குறாளே…’ என்றிருந்தது அவனுக்கு…

ஆனாலும் இப்போது சத்தமாக பாடல் வரிகளுடன் பாட ஆரம்பித்தான்…

“நீ தானா அந்தக் குயில்…. இந்த பாலாவின் சொந்த குயில்” என்று வார்த்தைகளை வேறு மாற்றி பாட

கீர்த்தனா நன்றாக முறைத்தாள் அவனைப் பார்த்து…

“எதுக்கு பேபி இப்போ முறைக்கிற….. மாமா பாடினது பிடிக்க வில்லையா….” என்று அவளிடம் சீண்டலை ஆரம்பிக்க…..

அது காலை நேரம் என்பதால்…. கீர்த்தனாவும்…. தைரியமாக

”இங்க யாரு பேபி…… என்னைப் பார்த்தால் பேபி மாதிரி இருக்கா… ஒழுங்கா கீர்த்தினு கூப்பிடுங்க” என்று வார்த்தைகளை விட்டாள்….

அவள் எப்போது வாய் திறப்பாள் என்றுதானே அவனும் காத்திருந்தான்….. கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தா விட்டால் அவன்… பாலா இல்லையே… ஆனால் அதுவே அவனுக்கு சோதனையாக முடிந்தது….

அவள் சொல்லி முடித்தவுடன்.. அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்க்க ஆரம்பித்தான்… பாலா….

கீர்த்திக்கு அவனின் பார்வையிலேயே சரிதான்….. இன்னைக்கு கோட்டாக்கு நம்ம ஏதோ இழுத்து விட்டு விட்டொம் என்று எண்ணம் தோன்றியது…. அப்படி என்ன சொன்னோம் என்று அவள் சொன்ன வார்த்தைகளை திரும்ப வேறு சொல்லிப் பார்த்தாள்….

”கண்ணால் காண்பதும் மெய்… காதால் கேட்பதும் பொய்….தீர விசாரிப்பதே மெய் என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார் கீது..” என்று சொல்லியபடி அவன் அருகில் வந்தான்

இப்போ எதுக்கு வள்ளுவரை எல்லாம் இழுக்கிறான்” என்று மனம் ஆராய்ச்சியில் ஈடுபட… ஒன்றும் புரியாமல் விழித்தாள்

“சோ….. நீ பேபி இல்லைனு சொல்லிட்ட ….என் காதால கேட்டுடேன்…. உன்னை நல்லா பார்த்துட்டேன்…. நீ பேபி இல்லைனு என் கண்ணும் சொல்லிடுச்சு…. ஆனா பாரு வள்ளுவர் குறள் படி தீர விசாரிக்கணும் இல்லையா…. என்று சொன்னவனின் வார்த்தைகள்…அவன் சொன்ன வேகத்திலேயே புரிய…

“இது சரிப்படாது கீர்த்தி… இன்னைக்கு நீ மாட்டுன இவன்கிட்ட… இங்கேயிருந்து போ” என்று மனச்சாட்சி சொல்ல….அவனிடமிருந்து வேகமாக நகர ஆரம்பித்தவளை…அவன் கையில் இருந்த டை மூலம் மாட்டி அவனிடமே இழுத்தான் பாலா…

“இரு பேபி …. 5 மினிட்ஸ்தான்…. செக் பண்ணிட்டு சொல்றேன்…. நீ பேபி இல்ல….. குமரிதான். என்று .என்றவனின் ஒரு கை… அவளின் இடுப்பு வளைவில் அழுந்தப் பதிந்தன….. ஜீன்ஸ். மற்றும் டாப் அணிந்திருந்ததால் அவள் டாப்ஸினைத் தாண்டி அவளது வெற்றிடையில் அவனது கை தன் பயணத்தை ஆரம்பிக்க

கண்களை அவள் கண்களோடு கலந்தான்….. அவளைப் பார்த்தபடியே அவளைப் பிடித்திருந்த கைகள் அவளை அவனோடு இழுத்து நெருக்கமாக அணைக்க…..அவள் அவனை உணர.. அவள் மென்மையை அவன் உணர தன்னை மறந்தான் பாலா…..கைகள் அவள் அவள் பேபி இல்லை என்பதை உறுதி செய்ய இடையில் இருந்து மேலே பயணத்தை ஆரம்பித்து இருக்க

பாலா முற்றிலும் தன்னைத் தொலைக்க ஆரம்பித்து இருந்தான்….. அவளை விட முடியாமல் அவனோடும் போராட ஆரம்பித்தான்…

கீர்த்தனா… அவனின் இந்தச் செயலில் அதிர்ச்சி அடைந்து அவனிடமிருந்து விலக எத்தனிக்க அவனோ அவளை விலக விடாமல் மீண்டும் அவனோடு அழுத்தி அணைக்க…. இருவரின் உடலும் அதன் தேவையில் கட்டுப்பாடுகளை மீற ஆரம்பித்து இருந்தன….. கீர்த்தனா ஒரு பெண்ணுக்குரிய எச்சரிக்கையில் அவனது கைகளை தடுத்து நிறுத்த போராடிக் கொண்டிருக்க…. பாலா தன்னைக் கட்டுப்படுத்த இயலாதவனாய் அவளிடம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டப் போரடிக் கொண்டிருந்தான்…

கீர்த்தனாவும்…. அவனின் கைகளில் ….. நெகிழத் தொடங்கி இருந்தாள்… இருந்தாலும் …மூளை செய்த எச்சரிக்கையில் ……

“பாலா என்னைய விடுங்க” அது கூட உள்ளே போன குரலில் தான் சொன்னாள்…

தன் மனைவியின் மேல் தான் செய்து கொண்டிருந்த ஆராய்ச்சியில்….. அதெல்லாம் அவஎன் உயிரே!! என் உறவே!!!ன் காதில் விழவே இல்லை…… கீர்த்தனாதான் அவனின் மோன நிலையை உணர்ந்தவள்… தன்னை சுதாரித்து …..தன் பலம் கொண்ட மட்டும் முயற்சி செய்து தன்னை அவனிடமிருந்து விடுவித்தாள்…உடனே கீழே இறங்கியும் போனாள்…..

“பாலா தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போராடினான்…. அது அவனால் முடிய வில்லை….. அவன் கீர்த்தனாவின் பெண்மையில் விழுந்து மீள முடியாமல் தாபத்தில் தவிக்க ஆரம்பித்தான்…அவனால் அவன் உருவாக்கிய மோக வலையில் அவனே சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல்…திணறிக் கொண்டிருந்தான்….

கீர்த்தனாவின் நிலையோ அதற்கும் மேல்… தன்னை சுதாரித்து ஓடி வந்தாள் தான்…ஆனால் மோக நெருப்பில் அவளும் வெந்து கொண்டிருந்தாள்…

கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேல்தான் பாலா கீழே இறங்கி வந்தான்…… ஒரு முடிவோடு…. இனி அவளைச் சீண்டி தனக்கு ஒரு சோதனை ஏற்படுத்தக் கூடாதென்று…… அதன் விளைவை இன்று அனுபவித்து விட்டான்….

இருவரும் காரில் மௌனமாகவே வந்தனர்….. அந்த அமைதி இன்னும் கொல்ல….. எஃப் எம்மை ஆன் செய்தான் பாலா…அதில் ஒலித்த ….

”பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான் ”

சுடுதா…சுடுதா ”

ஆசையோடு அச்சமும் வெக்கமும்தான்

வருதா…வருதா…

என்று பாடல் வரிகளில் கீர்த்தனாவை ஓரக் கண்ணால் பார்த்த பாலா நம்ம நிலைமை எஃப் எம் வரை போய் விட்டதா…என்று நினைத்தவன் போட்ட வேகத்திலேயே ஆஃபும் செய்தான்…

அன்று முழுவதும் பாலா…. அவனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போராடியதுதான் மிச்சம்…. அவன் உள்ளம் கீர்த்தனாவிடம் தஞ்சம் அடைந்தது போல்….உடலும் அவளிடம் சேர போராடியது…....

1,416 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page