top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? -3

அத்தியாயம்: 3

கீர்த்தி தி.நகரின் பனகல் பார்க்கில் நுழைந்து தனது பர்சேசிங் முடித்து வெளியே வரும் பொழுது மணி 7.30 ஆகி இருந்தது.தான் வாங்கியிருந்த கவர்களை சரி பார்த்த படியே ஸ்கூட்டியில் வைத்து விட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.தனது வீட்டை நோக்கி பயணித்தபடியே, இதழில் சிறு நகையுடன், அன்றைய தினம் நடந்த வற்றை மனதில் ரீவைன்ட் செய்து பார்த்தாள்.

உண்மையிலேயே கவி சொல்வது மாதிரி பாலா நல்ல கேரக்டர்தான். நாமதான் கொஞ்சம் தப்பா நெனனச்சுட்டு இருக்கொம். ம்ம்…… பரவாயில்லை கவி கூட மனுசங்களை சரியாக அனுமானிக்கிறாள். நாம்தான் மக்கா இருக்கொம் இந்த விசயத்தில்

.”சரி விடு கீர்த்தி கவி கிட்ட கத்துக்கோ பெரிய கம்ப சூத்திரமா இதுஎன்று நினைத்த போதுதான் கவி வெகு விரைவில் பிரிய போகிறாள் என்பது நினைவுக்கு வந்தது. அதன் பிறகு மனதிற்குள்ளாகவே ஆறுதல் படுத்தியபடி வீட்டை அடைந்தவள்,அழைப்பு மணியை அடித்து விட்டு நகம் கடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.சற்று தாமதாமாக திறந்த மைதிலியை முறைத்தாள்.

என்ன மைதிலி ஒரு கதவைத் திறக்க இவ்ளோ நேரமாஎன்று முறைத்தவளிடம் மைதிலியும் முறைத்தபடி உள்ளே செல்ல முயன்றாள்.

ஹ‌லோ இங்க ஒருத்தி கேட்டுட்டு இருக்காளே ,அவளுக்கு பதில் சொல்லனும்னு தோணாம அப்படி என்ன அவசரம்என்று மைதிலியை பார்த்து அதிகார தோரணையில் மிரட்டியள், சட்டென்று தன்து முக பாவனையினை மாற்றி

என்ன பூஜை வேலையில் கரடி மாதிரி வந்துட்டேனா,இல்லையே கொஞ்சம் லேட்டாகத் தானே வந்தேன்.” என்றவள், அவளாகவே ஞாபகம் வந்தவளாய்

ஓ அம்மா , நாளைக்கு உங்களோட திருமண நாளை முன்னிட்டு அப்பாவும் நீங்களும் மலரும் நினைவுகளுக்கு கொஞ்சம் ஆழமாக போய்ட்டீங்களோஎன்று கண்ணடித்தாள்

உங்க அப்பா மாடியில் இருக்கார். நீ ரொம்ப கற்பனை பண்ணிக்காதஎன்றவள் மகளின் அசடு வழிந்த முகத்தை பார்க்க நி்மிர்ந்தாள்.கீர்த்தி அவ்வளவு சீக்கிரம் அசருபவளா

சரி விடுங்க .அப்போ நீங்க மட்டும் மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டீர்களா எனது அருமை மிஸஸ் ராகவ் அவர்களேஎன்று மைதிலியை விடாமல் கேலி செய்தாள் அவளது மகள்.

உன்னிடம் பேசி ஜெயிக்க முடியுமா முதலில் உள்ளே வாவந்தது லேட் இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்றபடி சமயலறைக்குள்ளே நுழைந்தாள்.

சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி கொன்டிருந்த மைதிலியை ,பூனை போல் மெதுவாக வந்து , அவளின் பின்னே சென்று ஒற்றை கையினால் மெதுவாக கண்களை மூடினாள் கீர்த்தி.

கீர்த்தி கண்களை மூடியதால் சற்று தடுமாறிய மைதிலி,

என்னடா கீர்த்தி ஒரே சந்தோசமாக இருக்க என்று கைகளை விலக்கி விட்டு திரும்பியவள், என்னடா அம்முகொஞ்சினாள் தன் மகளை

டொட்டடாங்என்றபடி தனது மற்றொரு கையில் இருந்த கவரை அவள் முகத்தின் முன்னாள் ஆட்டினாள்.

ஏய் என்ன கீர்த்தி இது என்று கவரை வாங்க கை உயர்த்தியவளிடம்,சட்டென கவரினை தன் பக்கம் இழுத்தாள் கீர்த்தி.

நோ நோ இதை நான் முதலில் அப்பாகிட்டதான் காட்டுவேன் என்றதும்

அப்போ எதுக்கு என்கிட்ட முதலில் சொன்ன நீ, உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு சொல்லிருக்க வேண்டியதுதானே,ஒழுங்கா கொடுத்துடுஎன்று கவரினை வாங்க முன்றாள் மைதிலி.அவளிடமிருந்து கவர் கையில் மாட்டாமல் லாவகமாக தப்பித்த கீர்த்தி வெளியே ஹாலினுள் ஓடினாள்.அவளைத் துரத்தியபடி வெளியே வந்தாள் மைதிலி.

அதே நேரத்தில் கதவு திறந்து இருந்ததினால் வீட்டின் உள்ளே நுழைந்து கதவினை தாழ் போட்டு திரும்பியவர் தன் மகள்,மற்றும் மனைவியின் விளையாட்டினை பார்த்து விட்டு ,

என்ன நடக்குது இங்கஎன்றவரிடம் அப்பா இதை பிடிங்கஎன்றபடி கவரினை கொடுத்தாள் கீர்த்தி.

அவளை துரத்தியபடி வந்த மைதிலி கீர்த்தியின் திடீர் நிறுத்ததினை எதிர்பாராமல் சற்று தடுமாறி விழப் போனவளை சட்டென்று தாங்கிப் பிடித்தார் ராகவ்.அவளை பிடித்தபடி

என்ன பிரச்சனை இப்போ உங்க ரெண்டு பேர்க்கும்என்று விசாரித்தவர், மைதிலியிடம் திரும்பி

மைதி ஏன் என் பொண்ண துரத்துகிறாய் என்று அதட்டினார்.

ஆஹா அப்பா உங்க கிட்டதான் யாரையாவது திட்ட ஐடியா வாங்கணும்.இன்னும் மைதி செல்லம் அப்டின்னு கூப்பிட்டு அதட்டுங்க .என்னம்மா நடிக்கிறீங்க. நீங்க அம்மாவை அத‌ட்டுற மாதிரி நடித்ததெல்லாம் போதும்.முதலில் இந்த கவரினை பாருங்கள்என்றாள்.

இப்பொழுது ஓரளவு அங்கிருந்த சூழ்நிலை புரிந்த ராகவ், நிலைமயை சமாளிக்க

கீர்த்திடா ஒரு கையில உங்க அம்மாவை பிடித்துக் கொண்டு இருக்கேன். இப்படியே எப்படி படிக்க முடியும், என்ன செய்யலாம்என்று யோசித்தவர்,

மைதி நீ படிஎன்று கவரினை தன் மனைவியிடம் கொடுத்து படிக்க சொன்னார்.

நான் ஒண்ணும் படிக்க வில்லை பா.உங்க பொண்ணு உங்க கிட்டதான் முதலில் காண்பிக்க ஆசைப் பட்டாள்.அதனால் நீங்களே படிங்கஎன்று சலித்தாள் மைதிலி.அவளது கோபத்தினை பார்த்த கீர்த்தி

மேடம் ரொம்பத்தான் பிகு பண்ணாதிங்க, அவ்விடம் சேர்த்தால் இவ்விடம்தான் சேரும் என்று எங்களுக்கும் தெரியும்.

ஒழுங்கா எங்க அப்பா சொன்னபடி படிங்க என்றபடி தந்தையை பார்த்தாள். அவளது கூற்றைக் கேட்டபடி

ஆமாம் மைதி என் பொண்ணு சொல்லிட்டானா வேறு பேச்சே கிடையாது.வம்பு பண்ணாம ஒழுங்கா படி ,என்னடா கீர்த்திஎன்றவரினை செல்லமாக முறைத்த படி அவரது தோள்களிலேயே சாய்ந்தாள்.

அவள் கொடுத்த லெட்டரில் பார்வையினை ஓட விட்டனர் இருவரும். தன் மகள் ப்ரமோசனில் மகிழ்ந்த இருவரும் சேர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்

என்னடா நீ சொல்லவே இல்லை.சர்ப்ரைசா சொல்ல வேண்டுமென்று நினைத்தாயாஎன்று ராகவ் கேட்ட பொழுது

இல்லப்பா எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்என்றவள், சற்று பெருமையாக

எனக்கு எங்க கம்பெனி சார்பா கொடுத்த பிறந்த நாள் பரிசுப்பா இது தெரியுமா.எங்க MD யே கொடுத்தார் தெரியுமாஎன்று தன் ட்ரெஸ்ஸின் காலரை தூக்கி விட்டபடி

அவளது மலர்ந்த முகத்தினை பார்த்த ராகவ் சிரித்தபட

கீர்த்திடா உன்னோட MD பெரிய பிஸ்னஸ் மேன் போல ,உனக்கு கொடுக்க வேண்டிய கிப்டைக் கூட அவரோட தொழில் தொடர்பாகவே தந்திருக்கார்

.ம்ம்ம். ரொம்ப சீக்கிரம் பெரிய லெவலில் வந்துடுவாரு என்று நக்கலடித்தார்.அவருடன் சேர்ந்து மைதிலியும்

இல்லைங்க பிறந்த நாளுக்கு வேறு எதுவும் ஆபிஸ் சார்பா வாங்கி கொடுக்க முடியாமல் , நம்ம பொண்ணோட திறமைக்கு கிடைத்த ப்ரமோசனையே கொடுக்கிற அளவுக்கு கஞ்ஜனா அந்த MD. ” என்று அவளும் தன் பங்குக்கு வாரினாள்.

அவர்கள் இருவரும் விளையாட்டாக பேசுகிறார்கள் என்று தெரிந்த போதும்,சற்று சூடாகவே

தெரிந்த மாதிரி ரெண்டு பேரும் பேசாதீங்கஅவர் ஒண்ணும் பிசினஸ் மைன்டோட இருக்கிற ஆள் கிடையாது.உண்மையிலயே என்னாலதான் ஒரு ப்ராஜெக்டே தாமதமா தொடங்கப் போறாங்க.தெரியுமா. நீங்க சொல்கிற மாதிரி இருந்ந்தால் என்னோட பிறந்த நாள் வரைக்கும் காத்திருந்திருக்க மாட்டார்.” என்று பட படவென்று பொரிந்த்தவளிடம்

அய்யோ தாயே உன் MD பற்றி தெரியாமல் பேசிட்டோம்.அவர் நல்லவர் வல்லவர் அப்புறம் தமிழில் என்னென்ன உயர்வான வார்த்தைகள் இருக்கோ அதெல்லாம் போட்டுக்கோ போதுமா .இப்போ ஆள விடும்மா பாவம் நாங்கஎன்றபடி கைகளை உயர்த்தி சரணடந்தார். அவரது செய்கைகளை பார்த்தவள், வாயினுள்ளே சிரித்தவள்,சற்று மிரட்டும் தொணியுடன்

அது அந்த பயம் இருக்கட்டும் என்றபடி சரி சரி அதெல்லாம் விடுங்க இப்போ எங்க சார் எனக்கு கொடுத்த கிப்ட்டை நான் உங்க திருமண நாளுக்கு என்னோட கிப்ட்டா தருகிறேன் என்றவளிடம் ராகவ்

பராவாயில்லை கீர்த்தி உங்க MD க்கு தப்பாமா இருக்க.” என்றார் புன்னகையுடன்

அப்பா என்று சிணுங்கியவளிடம் மைதிலி

பின்ன என்ன ,இந்த வருசம் பொண்ணு வேலைக்கு போயிருக்கா .பெருசா கிடைக்கும்னு எதிர்பார்த்தா இப்படி ஏமாத்திட்டியே கீர்த்தி, என்னங்க நம்ம பொண்ணு கவுத்துட்டாளே என்ன பண்ணலாம்சொல்லுங்க என்றவள்

அம்மாநீங்களுமா என்றவள் சட்டென்று அப்பா விநோத் கால் பண்ணினானா? எனக்கு மதியமே கால் பண்ணிட்டான் தெரியுமா. உங்களுக்கு பண்ண வில்லையா அவன் என்று கேட்டாள்.

அப்படியா எங்களுக்கு பண்ண வில்லையே அந்த படவா என்றனர் அப்பாவியாய் ஒரே குரலில்

ஓ பண்ணலயா ஏன் மனதிற்குள்ளாகவே யோசித்தபடி தன்து அறை வாயிலினை அடைந்தவள்,” அவன் அத்தை மாமான உயிரை விடுவானே .பின்ன எப்படிஎன்று யோசித்தவள் சட்டென்று நின்று, தலையில் கை வைத்த படி திரும்பி

என்ன பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் பாவமா தெரிய வில்லையா, ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டு இப்படி

எப்போ பார்த்தாலும் என்னை படுத்தறீங்க என்னால் முடியல

என்னடாநாங்க என்ன பண்ணினோம்

சரி சரி நிறுத்துங்க ,விநோத் பேசுனானா இல்லையாஎன்றவள், உதட்டை கடித்து விட்டு,

எப்போ பண்ணான் என்று தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள்

காலையிலடா என்றவர் ,அதுக்கப்புறம் தான் உனக்கு கால் பண்ணினான் என்றார். ஒகே சாப்பிடலாம் வாடா என்றபடி

மைதி பசிக்குது சாப்பிடலாமாஎன்று அழைத்தார்.

அதன் பிறகு அவர்கள் சாப்பிட்டு முடித்து ,விடாமல் சற்று நேரம் அரட்டை அடித்தவளுக்கு, தூக்கம் வருவது போல் இருந்தது.Good night பா,good night மா என்றபடி தனத‌றையினுள் வந்து கட்டிலில் விழுந்தவளை நித்திராதேவி ஆசையுடன் ஆட்கொண்டாள்.

மைலாப்பூரின் மத்தியில் கலகலப்பின் மறு அம்சமாய் இருந்த கீர்த்தியின் இல்லம் மெதுமெதுவாய் இருளைத் தழுவிக் கொண்டிருந்த அதே வேளையில்

பெசன்ட் நகரில் கடற்கரை தெரிய, கடற்காற்று தழுவிய வண்ணம் இருந்த அந்த நவீன பங்களாவில் நிசப்தம் முழு உருவமாய் குடியிருந்தது.தனது அறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.client மெயில்களை செக் பண்ணிக் கொண்டிருந்தவன், ”பாலாஎன்ற தன் தாயின் அழைப்பில் என்னங்கம்மா என்றபடி அறையின் வெளியே வந்தவன் , கீழே சாப்பிட தயாராய் இருப்பதை கண்டு

இதோ வருகிறேன்மா,ஒரு நிமிடம்என்றபடி அறையினுள் சென்று லேப்டாப்பை ஷட் செய்து விட்டு கீழே இறங்கி வந்தான்.

பாலா- கதையின் நாயகன், கீர்த்தியின் MD என்பது தெரிந்த விசயம். தெரியாதவற்றையும் இனி பார்ப்போம். பணக்கார தாய் தந்தைக்கு பிறந்த ஒரே செல்வ மகன். இயல்பிலேயே அவனுக்கு அனைத்தும் பாசம்,குணம்,பணம்,கம்பீரம்,அழகு,திறமை என எல்லாமே ஒரு படி மேலேயே இருந்தன. இருபத்து ஏழு வயதிலேயே தனக்கும் கீழ் நூற்றுக்கு மேற்பட்டோரை நிர்வகித்துக் கொண்டிருக்கிறான்.கவியின் மூலம் அவன் ஒர் ஆணழகன் என்பது தெரிந்ததே.

பாலாவின் பல குணங்கள் பாசிட்டிவாக இருந்தாலும், அவை எல்லாவற்றிர்க்கும் மேலே அவனது கோபமும்,பிடிவாதமும் அவனுக்கு பெரிய மைனசாய் இருந்தன. தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் ,அதை நிறைவேற்றியே தீருவேன் என்று அதில் வென்றும் காட்டும் பிடிவாதம்.இந்த குணம் அவனுக்கு அவனது தொழிலில் மிகப் பெரும் வெற்றியடையும் படியாக கூட இருந்தது. ஆனால் அவனது வாழ்வில்?????.பார்க்கலாம் அவனது பிடிவாதம் அவனது வாழ்க்கையிலும் வெற்றி அடைய துணை நிற்குமா என்று. கோபம் , அவனாக கட்டுப் படுத்தினால் தவிர அதை யாராலும் கட்டிற்குள் கொண்டு வர முடியாது.இந்த இரண்டு குணத்தினையும் எப்படியாவது மாற்ற அவன் தாய் அருந்ததி எவ்வளவோ முயன்றும் இன்று வரை மாற்ற முடிய வில்லை. அவனது கோபம்,பிடிவாதம் எல்லாம் ஒரு பெண்ணிடம் தான் தோற்றுப் போக வேண்டும் என்று இருக்கும் போது பாவம் அவன் தாய் என்ன செய்ய முடியும்.அதற்காக விதியும் தனது விளையாட்டை அவனது வாழ்வில் தொடங்கியிருந்தது

டைனிங் டேபிளில் பேருக்கு சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தவன்,நினைத்துப் பார்க்கையில் தான் மேற்கொண்ட அனைத்து விசயங்களிலுமே தனக்கு வெற்றிதான் கிடைத்திருக்கிறது.ஆனால் ஏன் என்று யோசிக்கும் போதே,அருந்ததி பாலாவின் தாய்

பாலா கோபத்தை எப்பவும் சாப்பாடு மேல காண்பிக்காதே.ஒழுங்காய் சாப்பிடுஎன்று கண்டிப்பான அதட்டலில் கலைந்தவன், ஓரக் கண்ணால் தந்தையைப் பார்த்தான்

பின் நிமிர்ந்து அம்மா, “அப்பா எங்கூட பேசாமல் இருப்பதை நினைத்தால் ரொம்ப கக்ஷ்டமாய் இருக்கிறதும்மா.அப்பாவை பேச சொல்லுங்க .அதை விட்டுட்டு கோபம் அது இதுனு வெறுப்பேத்தாதீங்க, நான் என்னம்மா தப்பு பண்ணிணேன்.ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கிறேன்.இந்த நிலைமையில் அப்பா வேற என்னை கக்ஷ்டப் படுத்தறாங்கம்மாஎன்று வருத்தமான தொணியில் குரலில் வலியுடன் சாப்பாட்டை கைகளினால் அளந்த படி தாயிடம் முறையிட்டான் பாலா.

இதைக் கேட்டவுடன், தன் குரலை செறுமியபடி , ஜெகன்நாதன், “அருந்ததி அவன் நல்லதை மட்டும் யோசிக்கிற நாம அவனுக்கு கக்ஷ்டம் கொடுக்கிறோமாஎன்று நக்கலையும்,வேதனையயும் பிரதிபலித்த குரலில் பேசியபடி பாலாவை நோக்கினார்.

அப்பா எனக்கு நீங்க நல்லது பண்றேன்னு என்னை கக்ஷ்டப் படுத்தாதீங்கனுதான் சொல்கிறேன்.எனக்கு இப்போ மேரேஜ் வேண்டாமென்றால் விடுங்களேன்என்றான் இறுக்கமாக

ஏதோ பேச ஆரம்பித்த ஜெகநாதனை

சரி சரி விடுங்க சாப்பிடற நேரத்தில் ஏதாவது பேசி அவன் எழுந்திடப் போகிறான்.சாப்பிட்ட பிறகு என்ன வேணாலும் பேசுங்கஎன்றபடி அவர்களின் அப்போதைய வார்த்தை போரட்டத்தினை நிறுத்தி வைத்தாள். அதன் பிறகு சாப்பிட்டு முடித்தவன் எதுவும் பேசாமல் மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான்.

பாலா உன்னோட பேச வேண்டும்என்றார் ஜெகநாதன் திரும்பியவன்

என்னோட திருமணத்தை தவிர என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் அப்பாஎன்றான் நிதானமாக

நான் உன்னை பெத்தவன்டா எனக்கு பேச உரிமை இல்லையா.எப்படிடா இப்படி மாறினாய். நான் சொல்வதை காது குடுத்து கேளுடா. நான் காதலுக்கு எதிரி கிடையாது. அருந்ததியும் நானுமே விரும்பித்தான் திருமணம் செய்தவர்கள். இப்போ கூட நான் உனக்கு மதுவை திருமணம் செய்துவைக்க மாட்டேன்னு சொல்ல வில்லை.இந்த நிமிட‌ம் மதுவை கூட்டிட்டு வந்தாலும் எனக்கு சந்தோசம் தான். ஆனால் என்று இழுத்தவர் இந்த நான்கு வருடங்களாக அவளை கண்டுபிடிக்க முடிந்ததா சொல்லு.இல்ல‌ எத்தனயோ பேர் இருக்க மதுவ போய் விரும்பியிருப்பாயா?” என்று தன் மகனின் இன்றைய நிலையினை காண சகிக்காத தந்தையாய் ஆற்றாமையுடன் பேசினார்.

அவரது எந்த வார்த்தையிலும் கவனமில்லாத பாலா, கடைசி வாக்கியத்தில் அவனது காதில் விழ, இதுதான்… , நீங்க சொல்கிற இந்த காரணம்தாம்பா புரிய வில்லை எனக்கு. நான் யாரோனு நினைத்த மது என்னோட மாமா பொண்ணு என்றால் எங்க ரெண்டு பேருக்கும் பிரிக்க முடியாத ஏதோ பந்தம் இருக்கு என்றுதானே அர்த்தம் .இல்லை என்றால் நம்ம குடும்பத்தோட தொடர்பே இல்லாத மாமா வீட்டில் இருந்து அவங்க பொண்ணு மதுவயே விரும்புவேனா, ஏம்பா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க.” என்று தன் காதலின் விதியை நிரூபிக்க ஆரம்பித்தவனை

நிறுத்து பாலாஎன்று குரலினை உயர்த்திய தன் தந்தையினால் பேச்சை தொடராமல் அவரை நோக்கினான் பாலா.

ஒரு வாரம் டைம் தருகிரேன் உனக்கு.ஏனென்றால் உனக்கு என் ஃப்ரெண்ட் வாசுவின் மகள் சௌந்தர்யாவினை உனக்கு பேசி முடிக்கப் போகிறேன்என்று நிறுத்தியவர் உனக்கு ஒரு வாரம் எதற்கு என்று யோசிக்கிறாயா என்றவர்,

அது உன்னை புது வாழ்வுக்காக தயார் படுத்திக் கொள்ளஎன்றார்.

அவரது அழுத்தமான் பேச்சில் படிகளில் இருந்து இறங்கியவன்,

இந்த ஜென்மத்தில் மது தவிர வேறு எந்த பொண்ணுக்கும் என் மனதிலும் சரி,வாழ்க்கையிலும் சரி இடம் கிடையாது “என்று உறுதியான குரலில் கூறியவன்,தென் என்ற படி

வாசு அங்கிள் கிட்ட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பை காப்பற்றிக் கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு. நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்றவன்,தனது தாயை நோக்கி அம்மா நீங்களாவது என்னை புரிந்து கொள்ளுங்கள். நான் மதுவை கண்டிப்பாக கண்டு பிடிப்பேன் .அவ ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டியிருக்கிறாள்.இல்லை என்றால் என்கிட்ட எப்பவோ வந்து சேர்ந்திருப்பாள். please மா புரிஞ்சுக்கோங்க என்றான் தளர்வான குரலில்

மகனின் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தினை உணர்ந்த அருந்ததி, கவலையுற்ற போதும், அவனது வார்த்தைகளையே கேள்வியாக்கிக் கேட்டாள்,

சரிப்பா நான் புரிந்து கொள்கிறேன்,இதற்கு பதில் சொல்லு, மது ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். சரி இருக்கிறாள் என்பதேஎன்று கூறியபோதே அவளையும் மீறி வார்த்தைகள் தடுமாறியது.ஆயிரம் தான் இருந்தாலும் அவளது அண்ணன் மகளாயிற்றே.

அவளது உட்பொருளை உணர்ந்த பாலா , கலங்கிய கண்களோடு இந்த நான்கு வருடம் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர என்னால் முடியும் என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காதவனாய் வேகமாக படிகளில் ஏற தொடங்கியிருந்தான் பாலா.

அவனையே பார்த்த அவனது பெற்றோரின் விழிகளில் அவனது எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

படுக்கயில் விழுந்த பாலாவோ மதுவின் நினைவுகளில் போராடிக் கொண்டிருந்தான். ” i am madhu …….. madhu bala” என்று அவள் அறிமுகமாகிய காட்சி தோன்றி மறைந்தது. அவளது நினைவுகளின் தாக்கம் தாளமல் புரண்டவன் “மது எங்கடி இருக்கஎன்று அவனுள்ளாக கூறியபடி புரண்டவனிடம் ஏனோ அவனருகில் வராமல் நித்திராதேவி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.

மணி 12.00 எனக் காட்டியது .”கீர்த்திம்மாஎன்ற மைதிலியின் மென்மையான குரலில் திறந்தவளின் விழிகள், ராகவ்,மைதிலியின் மேல் புன்னகயுடன் நின்றது. ராகவ் அவளது உச்சியில் முத்தமிட்டு அவரது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.பதிலுக்கு அவருக்கு முத்தமிட்டு தனது நன்றியை தெரிவித்தாள் கீர்த்தி. பின் தன் தாயின் புறம் திரும்பியவள் அவளோ ஏதும் சொல்லாமல் தன் மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் முன் இரு கைககளையும் ஆட்டியவள்

என்ன மேடம் இன்னும் தூக்கம் போகவில்லையா ? என்ன என்றபடிமைதிலியின் மூக்கை திருகினாள் .அவளது அசைப்பில் ஓன்றுமில்லை என்றபடி தலையினை மட்டும் அசைத்தாள்.

ஹா¡லில் செய்திருந்த அலங்காரத்தினை பார்த்தவள்,பிரமித்து என்னப்பா இந்த வருடம் ஸ்பெஸ‌ல் என்றபடி ,கேக் வெட்டி மூன்று பேருக்குள்ளாக கலாட்டா செய்து ஒருவாறாக் எல்லாம் முடிந்த போது மணி 1 ஆகி இருந்தது.

மைதிலியின் மடியில் தலை வைத்து படுத்திருந்த கீர்த்தி, அப்பா உங்களுக்கு இது 25 வருடம். எனக்கு 22 முடியுது. 3 வருசம் இடிக்குதே என்று வழக்கம் போல் தன் குறும்பை தொடங்கிய கீர்த்தியின் கன்னங்களை மெல்லத் திருகினாள் மைதிலி.

ஆ என்று பொய்யாக அலறியவள், அப்பா அம்மா என்னை இன்னைக்கு கூட இம்சை படுத்தறாங்க ,என்னைய காப்பாத்துங்க என்ற போது அவளது கன்னங்களில் சூடான கண்ணீர் துளி விழுந்தது.சட்டென பதறி எழுந்தவள்

அம்மா என்னங்கம்மாஎன்ற படி தாயின் முகத்தை நோக்கினாள்.

ஏய் மைதி இப்போ எதுக்கு அழுகிறாய். கீர்த்தி என்னமோ எதோனு நினைத்து பயப்படப் போகிறாள்.”. என்றவுடன் தன் கண்களை துடைத்தவள்.

ஓண்ணும் இல்லைடா இத்தனை வருடமும் எங்க திருமண நாளையும், உன் பிறந்த நாளையும் ஒண்ணா கொண்டாடிட்டு இருந்தோம்.அடுத்த வருடம் பற்றி யோசித்தேன்.” என்றபோது அவள் குரல் உடைந்திருந்தது. மைதிலியின் கைகளில் தன் கையினை வைத்து மெதுவாக அழுத்தியவள், தன் ராகவனை பார்த்தாள் கீர்த்தி அவரோ தன் சோகத்தினை இழுத்து வைத்துக் கொண்டிருப்பது காண முடியாமல், தன் தாயின் மடியில் முகம் புதைத்து விசும்ப தொடங்கினாள்.

சூழ்நிலையினை உணர்ந்து சட்டென்று முதலில் தன்னைச் சுதாரித்த மைதிலி,

டேய் கீர்த்திமா நான்தான் லூசு மாதிரி பேசுகிறேன் என்றால் அறிவு ஜீவிகள் உங்க ரெண்டு பேருக்கும் எங்க போனது புத்தி. என்னமோ US ல இருந்து இங்க வரவே முடியாதா என்ன.இதுக்கு போய் நீங்க இடி விழுந்த மாடிரி இருக்கீங்க.இவ என்னடான்னா என் சேலையை நனைச்சுட்டு இருக்கா.சரி சரி கீர்த்தி எழுந்திரு.

என் பொண்ணு எவ்ளோ சமத்து தெரியுமா.அடுத்த வருசம் மாப்பிள்ளையவே இங்க இழுத்துட்டு வந்துட மாட்டாள என்ன கீர்த்தி. இதுக்கு போய் ரெண்டு பேரும் இப்டி feel பண்றீங்கள்,” என்றவளை செல்லமாக தலையில் தட்டிய ராகவ்

கீர்த்திடா .எல்லாத்தையும் ஆரம்பித்து வைத்துவிட்டு முடிவுரையை பார்த்தாயா அப்பா இன்னைக்கு ஒருநாள் உன் கட்சிடா விடாதடா அவளைஎனூம் போதே அவளது செல்போன் சிணுங்கியது. சிரித்துக் கொண்டே கண்களில் வழிந்திருந்த நீரைத் துடைத்தபடி “ஸாரி டாட் உங்க wife அவங்க அதனால நீங்க என்ன வேண்டுமானலும் பண்ணுங்க. ஆனால் தண்டணை சிவியராக இருக்கணும். நான் என்னோட தண்டனையை கொடுத்துட்டு போகிறேன்என்றபடி மைதிலியின் கன்னங்களில் தன் இதழ்களை பதித்து விட்டு ,தனது அறையை நோக்கிச் சென்றவள்,திரும்பி ”அப்பா punishment மறந்துடாதீங்கஎன்று அறையினுள் நுழைந்தாள்.

செல்போனில் எண்ணைப் பார்த்தவள் புருவம் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்கும் போதெ மீண்டும் செல் அழைக்க ஆன் செய்தவள்

சொல்லுங்க சார் மீட்டிங் இல்லையா உங்களுக்கு இப்போ என்றாள் கோபத்துடன்

ஸாரிடா கீர்த்திஎன்றவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, தன் தாய் தந்தையிடம் கொடுத்தான்.

தேங்க்ஸ் மாமா ,தேங்க்ஸ் அத்தைஎன்றவள், சரி சரி உங்களுக்கு உங்க உடன் பிறவா தங்கை மைதிலி தானே முக்கியம்.Continue பண்ணுங்க…அங்கேயே. என்று சற்று செல்லமாக அலுக்க போன் விநோத்தின் கைகளில் மாறி இருந்தது.

விநோத் என் பிறந்த நாளுக்கு என்னடா gift ஒண்ணும் கணோம் வாயிலயே பாயாசம்.அப்டித்தானே என்றவளிடம்,

இந்த வருசம் miss ஆகிவிட்டது.அடுத்த வருடம் வட்டியும் முதலுமாய் தந்துடறேன்…போதுமா…” என்றவனின் குரலில் இருந்தது என்ன என்று யோசிக்கும் போதே அழைப்பு கட்டாகியிருந்த்தது.அவன் அழைப்பான் என்று காத்திருந்த போது கவியின் கால் வந்ததால் அதை அட்டென்ட் செய்து சிறிது நேரம் அவளுடன் அரட்டை அடித்து விட்டு படுக்கையில் சாய்ந்தவள், அடுத்த நாள் அவளது டீம் மெம்பெர்சஸ் எப்படி இருப்பாங்க, என்ன வெல்லாம் பேசலாம் என்று யோசித்த படி கண்களை மூடினாள்.

1,944 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page