என் உயிரே!! என் உறவே!!! 29

அத்தியாயம் 29

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் கழிவது போல் போனது கீர்த்திக்கு…..

பாலாவை நினைத்தாலே … அவன் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று அவளால் அனுமானிக்க வேறு முடியவில்லை…. காரில் அன்று அப்படி நடந்தான்…வீட்டில் அவள் படுக்கையில் படுத்தான்… அதன் பிறகு அவன் வீட்டில் அந்த அளவு மோசமாக நடக்க வில்லை… அதே நேரத்தில் சீண்டாமலும் இருக்க வில்லை … அலுவலகத்தில் MD என்ற விதத்தில் இருந்து அவன் கீழிறங்கி நடக்கவில்லை…. கீர்த்திக்கு அவனை புரிந்து கொள்வதே பெரும் போராட்டமாக இருந்த்து… இப்போதெல்லாம் அதுவே தன் பெற்றோரின் நினைவைத் தாண்டி அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருந்தது…

அது மட்டும் இல்லாமல்…. முன்னர்…. கீர்த்தி பாலாவை தன் கண்களால் அவன் அறியாத வண்ணம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள்….. அவன் அதை உணராததால்… அவன் பார்ப்போனோ என்ற சிக்கல் இல்லாமல் அவனை கண்களால் சிறை பிடித்து தன் மனதினுள் பூட்டி வைப்பாள்…. அது ஒரு சுகத்தைக் கொடுத்தது… இப்போது அது கூட முடியவில்லை அவளால்…. எங்கு அவள் மேல் உள்ள பார்வையை அவன் எடுத்தால்தானே… அவனின் ஊடுருவும் பார்வையைத் தாண்டி இவள் எங்கு பார்க்க…..

சிந்து… அவளிடம் மட்டும்தான் கீர்த்தி கீர்த்தியாக இருந்தாள்… அவளுக்கு…பாடம் சொல்லிக் கொடுக்க… அவளுடன் கொஞ்சம் அரட்டை அடிக்க…. அவள் பள்ளியில் நடக்கும் போட்டியில் எல்லாம் அவளை கலந்து கொள்ளச் சொல்லி… தானே அதற்கு தயார் செய்தும் கொடுத்தாள்….. இவ்வாறாக அவளது நாட்கள் நகர……… அடுத்த வியாழன் மாலையும் வந்த்து….

போன வாரம் இருந்த்து போல் பெரிய படபடப்பெல்லாம் இல்லை…. அது மட்டும் இல்லாமல்….. பாலா வேறு மீட்டிங் இருப்பதால் அன்று இரவு வீட்டிற்கு லேட்டாக வர முடியும் ….. அவனுக்காக காத்திருக்க வேண்டாம்…. என்று அவளிடம் சொல்லி… …. சாப்பிட்டுத் தூங்கச் சொன்னவன்… மறக்காமல்.. ஸ்பேர் சாவியையும் வாங்கிக் கொண்டான்….

அதனாலோ என்னவோ கீர்த்தியும் அவனைப் பற்றி கவலை இல்லாமல்…. வீடு வந்தவள்…. சாப்பிட்டு அவனுக்கு அவளது அறையில் உள்ள கட்டிலை சுத்தம் செய்து விட்டு….. பிறகு தன் பெற்றோர் அறையில் உறங்கினாள்….

கடந்த வாரம் அவள் ஹாலில் படுத்திருந்ததிற்கு அவன் ஒன்றும் சொல்லாததால்….

இன்றும் அதே போல் படுத்தவள் உறங்க ஆரம்பித்தாள்….

ஆனால் அவன் அன்றே கோபத்தோடுதான் வந்தான்…. அவள் படுத்திருந்த நிலைமையை பார்த்தவன் தன் கோபத்தை மறந்தான் என்பதை அவள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்…. தெரிந்திருந்தால் அவளது அறையிலேயே படுத்திருந்திருப்பாளோ ??????

நள்ளிரவு 12 தாண்டி இருந்த வேளையில்…. பாலா வீட்டிற்கு வந்தான்…. அவனுக்கும் நல்ல தூக்கம் தான் … எப்போதடா படுக்கையில் விழுவோம் என்று நினைத்தபடிதான் உள்ளே வந்தான்…. அவன் மனதில் கீர்த்தியை சீண்டிப் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லைதான்…

இதெல்லாம்..அவன் அறையில் கீர்த்தி இல்லாததை பார்க்கும் வரைதான்….. ஹாலிலும் இல்லை…. தங்கள் அறையிலும் இல்லை… என்றால்…. என்று யோசித்தவன் அவள் அவள் பெற்றோரின் அறையில் படுத்திருப்பதை உணர்ந்து… அவளை பார்க்க சென்றான்…. அவன் வந்தது கூட தெரியாமல் அவள் நல்ல உறக்கத்தில் இருக்க ….

”இருக்குடி உனக்கு” என்றபடி…… தன்னை ரீஃப்ரெஷ் செய்து வந்தவனின் கண்கள் தூக்கத்திற்கு விடை கொடுத்திருந்தன….

மெதுவாக அவளது அருகில் வந்தவன்… அவளை கண்களால் அளவெடுக்க ஆரம்பித்தான்…. அதுவும் அந்த மங்கலான வெளிச்சத்தில் …. அவள் படுத்திருந்த விதம் வேறு அவனை இம்சிக்க ஆரம்பித்தது….. அவளும் ஏனோ தானொ வென்றெல்லாம் படுக்க வில்லை….. போர்வையை அவளின் கழுத்து வரை போர்த்தி இருந்தாள்தான்… இருந்தாலும் அவள் மேனியின் மேடு பள்ளங்கள் வரி வடிவமாக தெரிய அதற்கே … பாலா தடுமாறினான் …. அவன் இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் அவனை மீறி எழும்ப ஆரம்பித்தன…. இளம் காளையினை கட்டி வைத்து பின் திடிரென கட்டவிழ்த்தது போல அவனுக்கும் அவனின் இளமை உணர்ச்சிகள் கட்டவிழ அவனுக்கு மூச்சடைத்தது…. இருந்தாலும்… இது அவனின் உணர்ச்சிகளுக்கான் வடிகால் தேடும் நேரம் அல்ல என்பதை உணர்ந்து…. தன்னை அடக்க ஆரம்பித்தான்…..முழு முயற்சியுடன் தன்னை அடக்கி அதில் வெற்றியும் கண்டவன்…. அதன் பிறகே கீர்த்தியை எழுப்பினான்…..

வழக்கம் போல் உடனே எழுந்தாள் தான்..ஆனால் அவனைப் பார்த்தவள்…..அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ… என்ன நினைத்தாளோ…. அவளது கை அவளையும் அறியாமல்….அவளது உடையை எல்லா பக்கமும் சரி பார்த்து இழுத்து விட…. பாலாவிற்கு….. கோபமும்….சிரிப்பும் சரிசமமாக வந்த்து

”என்கிட்ட இருந்து எத்தனை நாளைக்கு இதையெல்லாம் மறைத்து வைப்பாய் என்று பார்க்கிறேன்…” என்று கணவனாய் கூசாமல் எண்ணியவன் அதை வெளியில் சொல்லாமல்

“கீர்த்தி வா..அங்க வந்து படு” என்று அழைத்தான்… நல்ல பிள்ளையாய்….

அதற்க்கெல்லாம் அடங்குவாளா….கீர்த்தி…..

“இல்ல பாலா… நா இங்கேயே படுத்துக் கொள்கிறேன்……. நீங்க அங்க படுத்துக்கோங்க என்று அவனுக்கு பிடிக்காத பதிலைச் சொன்னாள்…

”அங்கேதான் மற்றவர்களுக்காக ஒரே அறையில் படுக்க வேண்டிய கட்டாயம்…. இங்கு யாருக்கு நாம் பயந்து நடக்க வேண்டும்…..அதனால்….. ”

என்ற போதே… அவளது கை அவனது பிடியில் இருந்தது…

அவளின் அருகே நெருங்கி நின்று அடிக்குரலில்….

“வாடி…அது தெரியாமத்தான் உன்னை கூப்டறேனா…விளக்க வந்துட்டா….” என்று அவளின் கண்களைப் பார்த்து சொல்ல…. குரலில் இருந்த அவனின் உரிமையும்… அவனின் கோபமும்…. அவனின் நெருக்கமும்…… முதன் முதல