
என் உயிரே!! என் உறவே!!! 28
அத்தியாயம் 28
ஹாலில் அருந்ததி இருந்ததை உணர்ந்தாலும்… நிற்கக் கூட முடியாமல் கீர்த்தனா மாடி ஏறினாள்,,,,
”என்னாயிற்று இவளுக்கு” என்று நினைக்கும் போதே கீர்த்தனா வந்ததிற்கு முற்றிலும் எதிராக பாலா உல்லாசத்துடன்… உற்சாகத்துடனும் வந்தான்…
இருவரின் நிலையும் அவள் கண்களுக்கு தப்பவில்லை…. ஏதோ நடந்திருக்கிறது..என்று மட்டும் தீர்மானத்திற்கு வந்தாள் அர்ந்த்தீ……..
கீர்த்தனாவிற்கு…… ஒன்றும் புரியவில்லை…. பாலா நடந்து கொண்ட முறையில் எவ்வளவு படபடப்பை உணர்ந்தாளோ அவ்வளவு கோபமும் கொண்டாள்….
”மனைவியாம்… கணவனாம்… இவன் மட்டும் நினைத்தால் போதுமா…..இவனுக்கு என்னைப் பார்த்து பரிதாபம் வந்தால்…. அய்யோ பாவம் பொண்ணு அனாதையா நிற்குதுனு பாவம் பார்க்க மட்டும் வேண்டியதுதானே…..”
இதை நினைக்கும் போது அழுகை வேறு வந்து தொலைத்தது அவளுக்கு…
“அத விட்டுட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கிறாரா துரை… அதிலும் அவரது அமரத்துவ காதலைக் கூட கை விட்டு விட்டு” …என்றெல்லாம் யோசித்தவள்….
”மேலே வரட்டும் …. என்னை என்னவென்று நினைத்தான் அவன்…. இவன் வா என்றால் வருவதற்கும் …. போ என்றால் போவதற்கும் கேட்க ஆளிள்ளாதவளா…”
ஆனால் அந்த நிலையில்தான் அவள் இருக்கிறாள்….என்பதே உண்மை என்பது புரிய இப்படி தன்னை தவிக்க விட்டு அவசர அவசரமாகப் போன பெற்றோரை நினைத்து தாங்க முடியாமல்… தன் மேலேயே கழிவிரக்கம் வர…. கண்களில் கண்ணீர் அருவி போல் வழிந்தது…..
பாலா ஒரு அரைமணி நேரம் கழித்துதான் மேலேயே வந்தான்…. வந்தவன் கீர்த்தி சோபாவில்… கண்களில் கண்கள் வழிய உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்திருந்தவளை பார்த்து… கொஞ்சம் அதிகப்படியாக நடந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றி அவனை சஞ்சலத்திற்கு தள்ள…
மெதுவாய் அவளிடம் வந்து…. கீர்த்தி என்று அழைக்க
அவளோ… அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்… அதில் கோபமில்லை… கலக்க மில்லை…. எல்லாம் பேசிவிட்டு…. செய்து விட்டு… இப்போது என்ன என்றபடி பார்த்தாள்…
” கீழ வா… சாப்பிடப் போகலாம்…” என்று அழைக்க…. அடக்கி வைத்திருந்த கோபம் கரை உடைத்து வார்த்தையாய் வெளி வர ஆரம்பித்தது
“எனக்கு சாப்பாடு வேண்டாம்… இதற்கு கூட.... அதாவது சாப்பிடுவதற்கு கூட நீங்க என்ன சொல்றீங்களோ அதைத்தான் செய்ய வேண்டுமா?
என்றபடி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தாள்…
ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தவன் அருந்ததிக்கு போன் செய்து…
“அம்மா… நாங்க வெளியில் சாப்பிட்டு வந்து விட்டோம்… சாப்பாடு வேண்டாம்… நீங்க சாப்பிடுங்கள் “ என்று சொல்லி விட்டு போனை வைத்தான்…
சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி.அவன் போனை வைத்தவுடன்…
“என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்….. இப்போ எதற்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னீர்கள்… எனக்கு பசிக்கிறது நான் கீழ போகிறேன்….என்று அவன் சொல்லி விட்டான் என்பதற்காகவே பிடிவாதம் பிடித்து கிளம்ப எத்தனிக்க…
அவளின் சிறுபிள்ளைத்தனம் உணர்ந்தாலும்…. பாலா இயல்பிலேயே பொறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன்…. ஏதோ இப்போதுதான் கொஞ்சம் அந்த வார்த்தையை எல்லாம் தன் வாழ்வில் கடைபிடிக்கிறான்…ஆனால் அதற்கு தன் மனைவியே வேட்டு வைத்து விடுவாள் போல் இருந்தது….
“கீர்த்தி என்ன இது….இப்போதானே சாப்பாடு வேண்டாம் என்றாய்…அதனால் தான் அம்மாவிடம் அப்படி சொன்னேன்…இப்போ இப்படி பேசினால் என்ன அர்த்தம்? .. அம்மாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம்… ஏற்கனவே பாவம் அவர்கள் … நாம் செய்து வைத்திருக்கிற வேலையில் நொந்து போயிருப்பவர்கள்… என்பதால்… என்று பல்லைக் கடித்து அதட்ட….
அதற்கெல்லாம் அசராமல்…
“ஓ நான் மட்டும் தான் இப்போ ஒண்ணு…அப்போ ஒண்ணு என்று பேசக் கூடியவள்…சார் எப்படி” என்று கோபமும் நக்கலும் சரிவிகித்தில் கலந்து அவனிடம் கேட்க…
“கீர்த்தி …..என்றபடி அவள் அருகில் அமர்ந்து
“இப்பொ என்ன பிரச்சனை உனக்கு…. சொல்லு ….. நான் என்ன பண்ணினால் என் மேல் உனக்கு கோபம் போகும்…. நான் அதைச் செய்கிறேன்…” என்று.. அவளை சமாதானமாக்கும் முயற்சியில் கெஞ்சல் பாதி கொஞ்சல் பாதியாக கேட்டான் பாலா…
தீர்க்கமாக அவனைப் பார்த்து…. அவனுக்கு அவனை புரிய வைக்கும் விதமாய்!!!
”என் மேல பரிதாபப்பட வேண்டாம்… ப்ளீஸ்..பாலா…. புரிஞ்சுக்கோங்க…. காதலுக்கும்…பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியாதா எனக்கு….. நீங்க மதுவை…” எனும் போதே அவள் தடுமாறினாள்….
அதற்கு மேல் சொல்லப் பிடிக்காமல்….. நிறுத்தினாள்….. ஏற்கனவே அழுத படி இருந்ததால்… இன்னும் அழுகை வர வார்த்தைகளும் குழறின….
அவளின் நிலைமையை உணர்ந்தவன்…
“எனக்கும் காதலுக்கும்…பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியும்….. ஒண்ணோட அம்மா…அப்பா..இறந்த்தால் மட்டும் நான் உன்னைக் காதலிக்கவில்லை” என்று
தான் சொல்ல வந்ததை கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் நிறுத்தி நிதானமாக சொல்ல ஆரம்பிக்க இடையிலேயே
“நீங்க என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்…பாலா…. நான் சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டீர்களா…. என்று கொதினிலைக்குப் போனாள் கீர்த்தி…
பாலா அவளுக்கு பதிலாய்