அத்தியாயம் 27:
தன் காரை விட்டு இறங்கவில்லை பாலா… தன்னைப் பற்றி… இனி தன் வாழ்க்கையை பற்றி முக்கியமான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தான்….ஒரு புறம் கீர்த்தி… மறுபுறம் மது..மதுபாலா……அவளை நினைக்கும் போதே அவன் காதல் மனம் அவளை மறக்க முடியாமல்…அவளின் நினைவுகளை அவனுக்கு மேலும் மேலும் நினைவூட்டியது…..
கீர்த்தியின் மனதில் தான் இருக்கிறோம் என்ற நினைவே அவனை நாராய் கிழித்த்து…. எப்படி…எந்த ஒரு நிமிட்த்திலும் அவளிடம் நிதானம் இழந்து பழக வில்லை….. கண்ணாடிப் பொருளை கையாள்வது போலத்தானே அவளுடன் தன் உறவை கையாண்டான்…எங்கு தவறு நடந்த்து…அவனால் தீர்மானிக்க முடியவில்லை…. கீர்த்தியும் மிகவும் கவனமாகத்தான் நடந்திருக்கிறாள்…. அவளது காதல் அவனுக்குத் தெரியாமலே என்று நினைக்கும் போதே அவனது மனசாட்சி…. ” உன் கண்ணில் படவில்லை என்று சொல்லாதே….. நீ உணர வில்லை என்று சொல்… ”
அவள் தன்னைக் கணவனாய்த்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்…. என்பது புரிந்த்து… அதன் மரியாதையை அவள் இன்று அனைவரின் முன்னிலையில் தன் உணர்வை மறந்த நிலையில் நிரூபித்து விட்டாள்… அவள் உணர்வுகளில் கலந்தவன் அவன் ஒருவன்தான் என்பதை…… அதை நினைக்கும் போதே அதன் தகுதி தனக்கிருக்கிறதா என்று கூட நினைத்தான்…. அவள் கழுத்தில் தாலி கட்டும் போது கூட அவன் மதுவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்…..ஏன் அவள் தன் மேல் விழுந்து கதறும் வரை அவள் தன் மனைவி… தான் அவள் கணவன் என்ற நினைவு இல்லை…. ஆனால் அவளோ யாராலும் சமாதானப் படுத்த முடியாத இழப்பை என் ஒரு வார்த்தையில்…ஒரு பார்வையில் இறக்கி வைத்து விட்டாள் என்றால் எந்த அளவு தன்னை நேசிக்கிறாள் என்று புரிந்த்து….. தான் அவளின் கணவன் என்று நினைக்கும் அவள்... வாழ்நாள் முழுவதும் தன் நினைவுகளுடன் மட்டும் வாழத் தயாராகி வீட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது…. மெல்ல மெல்ல அவன் மனதில் கீர்த்தியின் நினைவுகளை அசை போட்டான்…..
அவளின் நேர்முகத் தேர்வில்தான் அவளைப் முதன் முதலில் பார்த்த்து (அப்படித்தான் அவன் அப்போது நினைத்திருந்தான்) கீர்த்தனா என்ற பெயரில் பெரிதாக அவன் பாதிக்கப் படவில்லை அப்போது….. கீர்த்தி என்று கார்த்திக் அழைத்த போதுதான்…அவளது பெயரின் சுருக்கத்தில் கீர்த்திகாவை நினைவு கூர்ந்தான்… அதற்கு முன் திறமையான பெண் என்ற அளவில்தான் தெரியும்…. அவளின் பதவி உயர்வுக்கு பின் அவளிடம் நேரடியாக பழக் சந்தர்ப்பம் கிடைத்த்து… அதன் பிறகு அவள் பெற்றோரின் மேல் அவளுக்க்கு இருந்த பாசம் தெரிந்த்து..
அவளுடன் திருமணம் ஆன பின் அவளின் பிடிவாதம்…தன்மானம்……கோபத்தினை உண்ந்தான்.. சிந்துவுடன் அவள் பழகும் வித்த்தில் அவளின் கனிவு கொண்ட மனத்தை உணர்ந்தான்…
இதில் எங்கேயும் அவளின் காதலை அவன் உணர வில்லை…. அவள் உணரும்படி நடக்கவில்லை…. இதோ இன்று அதையும் உணரச் செய்து விட்டாள் தன் மனைவி….
தன் மனைவி என்று அவன் மனம் எப்போது உணர ஆரம்பித்த்தோ…அந்த நிமிடம் தன் இனி தன் வாழ்க்கை கீர்த்தி…. கீர்த்தியுடன் மட்டும் தான் என்பதை தீர்மானித்தான் பாலா….
இனி தன் வாழ்க்கையில் மதுவிற்கு இடம் இல்லை என்பதினை உணர்ந்தான்…. யாருக்காக கீர்த்தியை நிர்பந்திதானோ ….அவளின் நினைவுகளை அடி மனதில் புதைக்க வேண்டிய நிர்பந்த்திதிற்கு உள்ளானான் பாலா…. பாலா உயிருடன் உள்ள வரை மதுவை …அவள் காதலை மறக்கு முடியாது..அதை மறுக்கவும் முடியாது முதல் காதல்…. அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன…ஆனால் அந்த உண்மையான காதலினாலே கீர்த்தியின் காதல் அவனுக்கு கிடைத்த்து என்பதுதான் உண்மை…முடிவு செய்தான்… தன் முதல் காதலினால் கிடைத்த தன் மனைவியின் காதலை வளர்க்க முடிவு செய்தான்… இது அவன் இறுதி வரை வர அவன் மனது வைத்தால் மட்டுமே முடியும்…. ஆக தான் மதுவின் மேல்கொண்ட காதல் தான்…தானும் கீர்த்தியும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு அடிப்படை… மது..அவள் காதல் எவ்வளவு உண்மையோ….அந்த அளவிற்கு கீர்த்தி தன் வாழ்வில் வர மதுவும்.. அவள் காதலும் காரணம் என்பது உண்மை….
தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தான் பாலா…எப்போதும் அவன் தெளிவாக சிந்தனை கொண்டவன் தான்… கீர்த்தி விசயத்தில் கூட எந்த இடத்திலும் அவள் தடுமாற வில்லை…..சரியாக தான் போய்க் கொண்டிருந்தான்….
இனி… … நீண்ட பெருமூச்சை இழுத்தவன்…மதுவை மறக்க முயற்சிக்காமல்….கீர்த்தியை நினைக்க ஆரம்பித்தான்…கீர்த்தியின் மேல் இருந்த தன் கண்ணோட்ட்த்தை மாற்ற முயற்சி செய்தான்… தன் மனைவி என்ற அவளின் உறவை, அவளின் உரிமையை அவளிடத்தில் உணர ஆரம்பித்தவன்… தான் அவளின் கணவன் என்ற உரிமையை….. தன் உறவை அவளிட்த்தில் நிலை நாட்டவும் முடிவு செய்தான்…
பாலா….என்பவன் இனி கீர்த்தியின் கணவன்……அதை மட்டும் மனதில் நிறுத்தினான்…எது வந்தாலும்..மதுவே வந்தாலும்… அவன் கீர்த்திக்காக மட்டுமே….இதை கீர்த்தி ஏற்காவிட்டாலு,ம்…அவள் வாழ்வு இனி பாலாவுடன் தான்…. அவனுக்கு தெரியும் கீர்த்தி ஒன்றும் இவன் கூப்பிட்ட வுடன் ஓடோடி வந்து வாழப் போவதில்லை… இன்று அவள் மனம் புரிந்த போதிலும்…அவள் தன் உணர்வுடன்… மனப் பூர்வமாக அவளை ஏற்றுக் கொள்ளும் வரை போராடத்தான் வேண்டும்…. அதில் கண்டிப்பாக வெற்றி அடைவேன்….என்று தனக்குள்ளாக உறுதி செய்து….அதன் முதல் படியாக….அவளுக்கு தனக்கும் உள்ள முடிச்சான அவள் தந்தையின் கடன் தொகை திரும்பக் கிடைத்தை மறைத்தான்…. அது அவளுக்கு தெரியும் வரை தன்னை விட்டு எங்கும் போகாமல் இருக்க அந்தப் பணம் தான் அவனுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு…..
பலவாறாக முடிவு செய்தவன்… கீர்த்தி வீட்டிற்கு செல்லாமல் தன் வீட்டிற்கு வந்தான் ……தான் எடுத்த முடிவின் உறுதியை அறிய அவனுக்கு தனிமை +தேவைப்பட்டது….
----------------------------------
கீர்த்தி எழுந்த போது பாலாவைத் தவிர அனைவரும் இருந்தனர்…..அவள் கண்கள் பாலாவைத் தேடியதை அனைவரும் உணர்ந்தனர்….. அருந்த்திக்கு தன் மகன் வேறு வேகமாகச் சென்றானே என்றிருந்த்து…ஆனால் கட்டாயம்…. கீர்த்தியின் அழுகையில் அவன் மனம் யோசிக்க ஆரம்பிக்கும் என நினைத்தாள்,,,,
கீர்த்திக்கு பாலாவிடம் என்ன பேசினோம்….புலம்பினோம் என்றெல்லாம் நினைவில் இல்லை….ஆனால் அவனின் மேல் விழுந்துதான் அழுதோம் என்றளவில் தான் ஞாபகம் இருந்த்து…. அவன் என்ன நினைத்திருப்பானோ என்று மருக ஆரம்பித்தாள்…
ஆனால் மறுநாள் பாலா வந்த போது அவளுடன் எப்போதும் போல் பேச….பழக…ஓரளவு தெளிந்தாள்….அவன் தப்பாக நினைக்க வில்லை என்று தவறாக அனுமானித்தாள்…. பாலா தன் மனைவியை அவள் அறியாமல் கவனித்து….அவளின் மேல் தன் காதலை வளர்த்துக் கொண்டிருப்பதை…. அவன் மனைவி உணர வில்லை
-------------------------------
வினோத்…. அன்று கிளம்பும் நாள்…. மூன்று நாட்களே அவர்கள் இருக்கும் படி வந்தனர்…. அது மட்டும் இல்லாமல்….இன்னும் 3 மாதங்களிம் இங்கேயே செட்டில் ஆகப் போவதால் அதற்கான வேலைகளை வேறு முடிக்க வேண்டும்..அதனால் மூவரும் கிளம்ப வேண்டிய நிலை…. மோகனா கூட அங்கு அவர்களுடன் போக வேண்டிய நிலை… வினொத் கீர்த்தியுடன் எப்போதும் பேசுவது போல் எல்லாம் பேச முடிய வில்லை…இன்னும் கீர்த்தி தெளிவில்லாமல் தான் இருந்தாள்… அதனால் அவளுக்கு அறிவுறைகள் அதுவும் குறைவாகவேதான் கூறினான்…. இது மட்டும் பழைய கீர்த்தியாக இருந்தால்….அவளை வம்பிழுக்கவே அவனுக்கு நேரம் இருந்திருக்காது….. மோகனாவும்…விஸ்வமும்….ராகவன்..மைதிலி நினைவில் இருந்து வெளிவராமல் போரடிக் கொண்டிருந்தனர்….மோகனா அருந்த்தியிடம் கீர்த்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படிக் கூறி விட்டுக் கிளம்பினர்…மோகனா மட்டும் அருந்த்தியிடம் ஒரு மாதம் முடியும் வரை வீட்டில் யாராவது இருந்து விளக்கேற்றும் படி கேட்டுக் கொண்டாள்….வினோத் பாலவிடம் கீர்த்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்ல..பாலா சற்று எரிச்சலானதுதான் உண்மை….
“என் பொண்டாட்டிய நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா…. பெரிதாய் சீன் போடுகிறான்…. அவள்தான் உன்னை விட நான்தான் …முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாளே என்று மனதினுள்ளே வினோத்தின் மேல் புகைந்தான்…. காதல் வந்த போதே பொறமையும் வந்து விட்ட்தோ என்று அவனுக்கே தோன்றியது….. வினோத்..கீர்த்தி சாதாரணமாகப் பேசிப் பார்க்க வில்லை பாலா… இதற்கே தன்னை விட அவள் மேல் உரிமை எடுத்து பேசுவது போல் தோன்றி வினோத்தின் மேல் எரிச்சல் பட்டான் பாலா…
--------------------------------
சிந்து அவள் அம்மாவுடன் கீர்த்தியின் வீட்டிலேயே தங்கினர்…. கீர்த்தியின் தனிமையை சிந்து மட்டுமே போக்கினாள்…. அவளுக்கு கீர்த்தி வீட்டிலிருந்து பள்ளி இருப்பது தொலைவுதான் என்றாலும் ஒரு மாததிற்கு மட்டும் என்பதால் பெரிதாய்த் தெரியவில்லை…. பாலாவும் கீர்த்தியுடனே தங்கினான்…. எப்போதும் போலவே பழகி வந்தான்
--------------------
ராகவன் – மைதிலி இறந்து அன்றுடன் ஒரு மாதம் ஆகிருந்தது. அன்று அவர்களுக்கு ஐயர் வந்து பூசை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து…. எல்லாம் முடித்து அனைவரும் பாலாவின் வீட்டிற்கு வந்தனர்…. ராகவன் – மைதிலி இருந்த மைலாப்பூர் வீட்டை காலை மாலை சுத்தம் செய்ய ஒரு வேலை ஆளையும் நியமித்து விட்டுதான் கிளம்பினான்…. கீர்த்திக்குதான் மனதே வர வில்லை அங்கிருந்து வர…. எப்படி இருந்த வீடு….இப்படி விளக்கேற்ற கூட ஆளில்லாமல் போய் விட்ட்தே என்று உள்ளுக்குள் குமுறினாள்…. அவள் மனதில் அவர்களின் நினைவே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த்து…… கீழே இறங்கி காரினுள் ஏறப் போனவள்….. வழக்கம் போல் அவர்கள் பால்கனியை பார்த்தாள்,,,,, எப்போதும் அங்கு நிற்கும் மைதிலி இன்று இல்லை…. அப்படியே நின்றாள்… அவளையே அவளுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த பாலாவிற்கு அவனது பார்வையில் இருந்து இது தப்ப வில்லை…
“கீர்த்தி” என்று அதட்டலாக கூப்பிட
அவனின் அதட்டலில் வேகமாக காரினுள் அமர்ந்தாள் கீர்த்தி……
காரை ஓட்டிக் கொண்டே ………….கீர்த்தியையும் ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே வந்தான் பாலா
-----------------------
அவன் வழக்கம் போல் கட்டிலில் உறங்க… கீர்த்தி கீழே படுக்கும் முறையும் தொடர்ந்த்து….. திங்கட் கிழமை முதல் அலுவலகம் செல்ல முடிவெடுத்திருந்தாள் கீர்த்தி..அதைஅருந்த்தியிடமும் பாலாவிடமும் சொல்லி விட்டாள்.. அவளுக்கும் வீட்டில் இருந்து போர் அடித்த்து….அது மட்டும் இல்லாமல்… தனியாக இருக்கும் போது தாய் –தந்தையை நினைத்து பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்த்த்து…தன் கவனத்தை வேறு எதிலாவது புகுத்த வேண்டும் என்பதற்காகவே அலுவலகம் செல்ல முடிவு செய்தாள்… சிந்துவும் மாலையில் மட்டுமே அவளுடன் இருக்க முடிந்த்து….. விஸ்வம்-மோகனா….. அடிக்கடி கால் செய்தனர்…வினோத் ஒரு நாளில் மூன்று முறை போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தான்…..விஸ்வனாதன் - அருந்த்தி.. அவளை தன் மகள் போல் போல் பார்க்க….
முதல் நாள் அலுவலகம் சென்று வந்தாள்.. அனைவரும் துக்கம் விசார்ப்பது என்ற முறையில் இன்னும் அவ்ளை துக்கப் படுத்தவே செய்தனர்….. ஆனால். அது தவிர்க்க முடியாது என்பதால். முடிந்த அளவு சமாளித்தவள்… 3 மணிக்கு மேல் பாலாவிடம் சொல்லி விட்டு கிளம்ப்ப் போக….பாலாவே அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டான்….
அதற்கடுத்த நாள்,,,,கீர்த்தனாவிற்கு இயல்பாகவே சென்றது... மாலையில் பாலா வந்துஅழைக்கும் போதே கிளம்பினாள்….
காரில் ஏறிய கீர்த்தனாவை ஒருமுறை நன்றாகப் பார்த்த பாலா… அன்றே அவளிடம் தன் மனதை தன் மனதைத் திறக்க முடிவு செய்தான்….
அந்த எண்ணத்தின் முடிவால்… கோவிலில் காரை நிறுத்தி இருந்தான்…. தன் மனதினைத் திறக்க கோவிலைத் தவிர வேறு இடம் பொருத்தமாக இருக்காது என்பதே அவன் எண்ணமாக இருந்த்து…
”கீர்த்தானா
“ஏன் வீட்டிற்கு போகாமல் இங்கி நிறுத்தி இருக்கிறான்…என்ற சிந்தனையுடன் இறங்கினாள் கீர்த்தி…. ஆனால் ஒன்றும் கேட்காமல் அவன் பின்னே சென்றாள்.
அவளிடம் பேசிவதற்கு முன் கடவுளை மனதார வேண்டினான் பாலா.... எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும்…கீர்த்தனா தன் மனதை புரிந்து கொள்ள வேண்டும்… மது நல்ல படியாக திரும்பக் கிடைக்க வேண்டும்…கிர்த்தனாவுடனான தனது வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் வேண்டியவன்….
பிரகாரத்தைச் சுற்றி விட்டு கீர்த்தியுடன் ஒரு ஓரமான இட்த்தில் அமர்ந்தான்…..
அவனின் எண்ண ஓட்டமெல்லாம் அறிய இயலாதவளாய்…..ஏதோ பெயருக்கு சாமியை கும்பிட்டவள் அவனது அருகில் உட்கார்ந்தாள்….
பாலா கீர்த்தியை பார்த்தான்…. இந்த ஒரு மாத காலமாய் கீர்த்தி மீது அவன் கொண்ட காதலை… இன்னும் அவள் பார்க்க கண்ணில் கொண்டு வரவில்லை…. கவனமாக மறைக்கப் பழகியிருந்தான்,,,, இப்போதும் அப்படியே பார்த்தான்…. அவனது பார்வையில் கீர்த்தி…ஒரு மில்லி மீட்டர் புன்னகை மட்டும் புரிந்தாள்…..
அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்பதும் புரிய….
“என்ன பாலா”….என்று கேட்டாள்….
‘உன்னிடம் பேச வேண்டும்… அதற்குதான் இங்கு கூட்டி வந்தேன்….” எனத் தயங்க
கீர்த்தியோ
“என்ன அறிவுரையா…ஹையோ பாலா…போதும் போதும் என்கிற அளவுக்கு கேட்டாயிற்று…அத்தை..மாமா…. வினோத்….விஸ்வம் மாமா..மோகனா அத்தை..அது மட்டும் இல்லாமல்… இந்த வாலு சிந்து..அவ கூட எனக்கு சொல்லிட்டா… நீங்க ஒருத்தர்தான் லிஸ்ட்ல இல்லை…. நீங்களும் இன்னைக்கா…” என்று தன் பேச்சில் தான் ஓரளவு தேறி விட்ட்தை உணர்த்த
பாலாவும் தெளிவானான்…
“ப்ச்ச்.. என்றவன்…. நான் சொல்லப் போவதை நான் முடிக்கும் வரையில் கேட்க வேண்டும்….இடையில் பேசக் கூடாது…இந்த இட்த்தை விட்டும் நகரக் கூடாது… இது என் மேல் சத்தியம் என்று பீடிகையுடன் பேச ஆரம்பித்தான்…
/;என்ன சார் ரொம்ப பீடிகை போடறார்….சரி பார்ர்க்கலாம் என்னதான் சொல்ல வருகிறான் என்று நினைத்தவள்….
“என்ன பாலா சத்தியம் என்று பெரிய வார்த்தை யெல்லாம் பேசுகிரீர்கள்… நீங்க என் காதுல் ரத்தம் வருகிற அளவிற்கு அட்வைஸ் பண்ணினால் கூட இந்த இட்த்தை விட்டு நகரவோ…பேசவோ மாட்டேன் போதுமா” என்றபடி அவன் சொல்வதை கேட்க தயாரானாள் கீர்த்தி…..
ஆனால் பாலாவோ அதற்கெல்லாம் அசராமால் தன் கையை அவள் புறம் சத்தியத்திற்காக நீட்ட முறைத்தாள் கீர்த்தி….
“ப்ளீஸ் எனக்காக” என்று பாலா கெஞ்ச
நீட்டிய அவனது கையில் தனது கையை வைத்தாள் …கீர்த்தி….
அவள் எடுப்பதற்கு முன் தன் இன்னொரு கையை அவளின் கரம் மேல் வைத்து அழுத்தமாக பற்ற … திகைத்தி அவனைப் பார்த்தாள் கீர்த்தி….
அந்தப் பார்வையில் …சத்தியமாக கீர்த்தியால் ஒரு வினாடிக்கும் மேல் அவனை பார்க்க முடியவில்லை… சட்டென்று பார்வையை தாழ்த்தியவள்..தன் கரத்தை விடுவிக்க போராட…பாலாவும் அவளைப் பார்த்தபடியே விட்டான்….
”என்னாயிற்று இவனுக்கு…இது என்ன பார்வை…. நம்மால் அவனை திருப்பி பார்க்க கூட முடியவில்லை…. இப்படி எல்லாம் ஊடுறுவும் பார்வை பார்க்க மாட்டனே…. அவளால் நம்ப முடியவில்லை நமக்குதான் தப்பாகத் தோன்றிகிறதோ என்று நினைத்தவள்…சரி இப்போது பார்ப்போம் என்று மறுபடியும் அவனைப் பார்க்க முடிவு செய்தவள் அவனின் x-ray பார்வையில் …..சட்டென்று திரும்பி வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தாள்…
அவன் பார்வை…அவளுக்குள்…மின்சாரம் பாய்ந்த்து போல் இருக்க … உடலில் நடுக்கமே வந்து விட்டது…
“ம்க்கும். என்ற செறுமலில்…./” அவனைப் பார்த்தவள்…. பார்த்த நானோ செகண்டில் தலை கவிழ்ந்தாள்…
”என்னையே பார்க்கவும் வேண்டும் என்றும் சத்தியம் கேட்டிருக்க வேண்டும்….” என்று மனதிற்குள் நினைத்தபடி…
“கீர்த்தி” என்றான் இதுவரை இல்லாத குரலில்
அவனின் குரல் மாற்றமே அவளை என்னவோ செய்த்து….
”கீர்த்தி…. நான் ….என்று ஆரம்பித்தவன்…. நாம்..என்று மாற்றியவன்….” ஒன்றும் சொல்ல இயலாமல் தடுமாற
அவனின் தடுமாற்றத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…கீர்த்தி…
அவளின் நேரான் பார்வையில் பாலாவும் தெளிந்தான்…
“கீர்த்தி …. நான் சொல்வது உனக்கு பிடிக்காமல் கூட இருக்கலா,…ஆனால் சொல்லித் தான் ஆக வேண்டும்…. I Love U….. என்றான் பட்டென்று
கீர்த்தி அதிர்ந்து அவனைப் பார்த்து ஏதோ பேசப் போக’’
“ஹேய் ஏதும் பேசிராத,,,,உன் புருசன் மேல சத்தியம் பண்ணியிருக்கிறாய்..அவன் அவன் வைஃப் கீர்த்தனா கூட …..கீர்த்தனா என்ற இடத்தில் அழுத்தம் கொடுத்தவன் நீண்ட நாள் வாழனும் …. பார்த்தும்மா எல்லாம் உன் கைலதான் இருக்கு .. ”என் அவசரமாக பேச
கீர்த்தி வாயடைத்துப் போனாள்….
அதன் பிறகு அவன் தன் மனதைத் திறந்து பேசினான்.. அவளின் கண்ணீர்ல் தன் காதல் பிறந்த்தை…..எல்லாம் கூறி முடித்து விட்டு அவளைப் பார்த்தான்…அவளும் அவன் பேசி முடிக்கும் வரை பேசவில்லை…
ஏதும் பேசாமல் எழுந்து காரை நோக்கிச் சென்றாள்…
காரில் ஏறி அமர்ந்தவள் வெறித்த பார்வையில் ரோட்டைப் பார்த்தபடி வந்தாள்…
என்னடா.. ரியாக்சனே காணவில்லையே…. சம்மதம் சொல்லமாட்டாள் என்று தெரியும்..கோபம்….எரிச்சல்…. இல்லை…சூடாக ரெண்டு வார்த்தைகள்… குழம்பி விட்டான் பாலா…..
அவளின் மேல் தன் பார்வையை வைத்த படி காரை ஓட்டினான் பாலா….
வீடும் வந்து விட… கீர்த்தனா வேகமாக இறங்கப் போனாள்..ஆனால் கார்க் கதவை லாக் செய்துவிட்டான் பாலா…. அவள் கார்க் கதவை திறக்க முயற்சி செய்த்தை பார்த்தவன்….
“ கீர்த்தி…. நான் பேசி முடிக்கும் வரைதான் பேசாமல் இருக்கச் சொன்னேன்…. உன் பாலாவுக்கு ஒண்றும் ஆகாது…. தைரியாமாக இனி பேசலாம்…” என
கீர்த்தியின் ரத்த ஓட்டம் எகிறி முகத்திற்கு வந்த்து…. கோபத்தில் அவள் முகம் சிவக்க….. அதனையும் ரசனையுடன் பார்த்தான் பாலா…. எந்த வித ஓளிவு மறைவும் இன்றி….
நீ என்னிடம் பேசாத வரைக்கும் இந்தக் காரில்தான்…… எனக்கு ஒன்றுமில்லை… உன் முகத்தைப் பார்த்தே ஓட்டி விடுவேன்,,, இல்லையென்றால்… என்றவன் அவளை மேல்ருந்து கீழ் வரை ரசனையுடன் பார்த்து வைக்க…
இப்போது கீர்த்தி…. ”அவனது பார்வையில் அடி வயிற்றில் ஏதோ சுழற்ற..தன்னைக் கட்டுப் படுத்தியவள்…
“பாலா… என்னாச்சு உங்களுக்கு…என் அப்பா அம்மா இறந்த்தில். உங்களுக்கு ஏதாவது ஆகி விட்டதா….காதல்….புருசன் என்றெல்லாம் உளறுகிறீர்கள்….என்று பதட்டத்தை மறைத்து பேசினாள் கீர்த்தி…
பாலா கடுப்பாகி விட்டான்
“என்னது உளறுகிறேனா….”
“ஆமாம்…..பின் வேறு எப்படி சொல்வது” என்று எதிர் கேள்வி கேட்டாள்
“நீ என்னவென்றாலும் வைத்துக் கொள்….பதில் மட்டும் சொல்” என் பாலா தன் வழியிலேயே நிற்க…
“உளரலுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது….”
”பிறகு வேறு எதற்கு பதில் சொல்வாய்…சொல்” இப்போது அவன் பார்வை அவள் இதழில் நிலைக்க
கீர்த்தனாவிற்கு அவனது பார்வை போன இடத்தைப் பார்த்து இதயம் வேக வேகமாக அடிக்கத் தொடங்கியது…
காரை விட்டு வெளியே போக வேண்டும் போல் இருந்த்து…அவளின் அவஸ்தையை ரசித்தபடி
அவளின் அருகே நெருங்கினான் பாலா… அவனி இந்த செய்கையை எதிர்பார்க்காத கீர்த்தி
“பாலா என்ன இது…. டோண்ட் பிஹெவ் லைக் திஸ்….. திஸ் இஸ் நாட் ஃபேர் ஃபார் யூ” என பின்னால் போக கதவோடு ஒன்றினாள்…
“அப்படியா….சரி …. வேற எப்படி மா பிஹேவ் பண்ண வேண்டும்… சொல்லித் தருகிறாயா” என்ற நக்கலாகச் சொன்னவனின் இதழ்கள் அவளின் இதழ் அருகே சென்றன…
கைகள் இரண்டும் பாலாவால் சிறை பிடிக்கப்பட .. அவளால் நகரக் கூட முடிய வில்லை…
பாலா.. ப்ளீஸ் என்றவள்… அவனின் நெருக்கமான முகத்தினை பார்க்க முடியாமல்… நடக்கப் போவதை தடுக்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்…..இதழ்களை கடித்து உள்ளே இழுத்து வாயை மூடினாள்…. நடக்கப் போவதை நினைத்து இதயம் துடிப்பதை நிறுத்தி பின் வேகமாக துடிப்பது போல் தோன்றியது…வயிற்றில்…பயப் பந்து சுழன்றது….
ஆனால் பாலாவோ அவளின் முகத்தை ஒரு வித தாபத்துடன் பார்க்க ஆரம்பித்தவன் …வேறு ஏதும் செய்யாமல்…அவளின் மாறுதல்களை உணர்ந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்… எத்தனை நிமிடம் இருந்தானோ தெரிய வில்லை….
அவனைத் தடுக்க முடியாமல் இறுக கண்களை மூடியவள் சிறிது நேரம் ஆக அவள் பயந்தது போல் ஒன்றும் நடக்காமல் இருக்க கண்களை திறந்து பாலாவைப் பார்க்க…பாலாவும் அவள பார்வையை சந்தித்து தன்னிலை மீண்டவன்…
இதழ்களை கடித்து வாய் மூடி இருந்தவளைப் பார்த்து…..கை இரண்டும் இப்போதைக்கு எடுக்க முடியாது.. ஆனால் உன் உதடுகள் கடிபடுவதை என்னால் தாங்க முடியவில்லை…. கேள்வி பட்டிருப்பாய் தானே…முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்… வைரத்தை வைரத்தால் வெட்ட வேண்டும் என்று… அதே போல் உன் இதழை…என்ற சொல்லி முடித்தானோ இல்லையோ கடித்திருந்த தனது இதழ்களை அவளாகவே பட்டென்று விடுவித்தாள்….. அதன் பின்
வேறு ஒன்றும் செய்யாமல்… இப்போதைக்கு இது போதும் என்று நினைத்தவன் கதவைத் திறந்துவிட்டான்…
வெளியேறிய அவளின் கரம் பிடித்து நிறுத்தியவன்….
அவளை தன் புறம் கீழாக திருப்பி இழுத்தவன்…. அழுத்தமாக… நிதானமாக
“மிஸஸ் கீர்த்தனா பாலா…. நீ இந்த பாலாவை…. ஒரு MD யாகப் பார்த்திருப்பாய்… நல்ல மகனாக பார்த்திருப்பாய்….. ஒரு பெண்ணின் காதலனாகப் பார்த்திருப்பாய்….. மருமகனாக… சக மனிதனாய் பார்த்திருப்பாய்…”
அவள் அவனை உணர்ந்த நிலைகளை வரிசைப் படுத்திக் கூறிவிட்டு……பின்……
“ஆனால் நீ பார்க்காத….. நீ மட்டுமே பார்க்கக் கூடிய..உனக்கு மட்டுமே சொந்தமான ஒரு முகத்தை இனி என்னிடம் பார்ப்பாய்….அது உன் கணவன்,,,,….. கீர்த்தனாவின் கணவன் பாலா என்ற முகம்…… என்றபடி அவளை விட்டான்
கீர்த்தியோ ….. அவன் விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து வீட்டினுள் நுழைந்தாள்…. பட படத்த இதயத்துடன்……..
Comments