top of page

என் உயிரே!! என் உறவே!!! 26

அத்தியாயம் 26

பாலா கீர்த்தியை அருந்ததியிடம் ஒப்படைத்து விட்டுமேலே ஆகும் காரியங்களைப் பார்க்கச் சென்றான்….

எல்லாம் முடிந்து அவர்கள் கீர்த்தியின் வீடு வரும் போது மணி 10 ஆகி இருந்த்து…. ஜெகனாதனுக்கு அவருக்கு தாங்கக் கூடிய வகையில் புரிய வைத்தனர்குமாரும் பாலாவும்…. சிந்து பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போதுதான் அவளுக்கு தெரிய வந்தது…..

-------------

மூன்று குருவிகள் வாழ்ந்த கூடு கலைக்கப் பட்ட கோலத்தில் கீர்த்தியின் வீடு இருந்தது

ஆம் சந்தோசத்தின் கூடாயிருந்த அந்தக் கூடுகலைக்கப்பட்டிருந்ததுகடந்த 3 மாத காலமாகவே மகள் துக்கத்திலேயே உளன்றது…. உளன்று கொண்டிருப்பது தெரியாமல்அவள் நிம்மதியுடன் இருக்கிறாள்அவளுக்கு இருந்த ஒரு பிரச்சனையும் தங்களால் முடிவுக்கு வந்து விட்டது…. இனி சந்தோசமாக இருப்பாள் என்ற எண்ணத்திலேயே அவள் பெற்றோர்அவச் சாவாயிருந்தாலும்நிம்மதியுடன் கண் மூடினர்….

ஒருவேளை…. கீர்த்தியின் உண்மை நிலை தெரிந்திருந்தால்….. மைதிலி போராடிக் கொண்டிருக்கும் உயிரை கணவனோடு தொலைக்காமல் மகளுக்காக மீட்டு எடுத்திருப்பாளோதெரியவில்லை… …பாலாவை முழுவதும் நம்பி விட்டாதாலோ என்னவோ போய்விட்டாள் அவளும்….

அந்த வீட்டில்…. அதன் உரிமையான எஜமானும்…எஜமானியும் கண்ணாடிப் பெட்டியில் இருக்க... அவர்களின் தேவதையோ இருந்தாள்பேச்சின்றி அவர்களின் மேல் நிலைத்த பார்வையில் மட்டுமாய்..

அவர்கள் மூன்று பேர் குரல்கள் மட்டுமே சங்கீத ஸ்வரங்களாய் ஒலித்த வீட்டில்…. அவர்களைத் தவிர வேறு யார் யார் குரல்களோ அபஸ்வரஸ்வமாக ஒலித்தது

துக்கத்திற்கு வந்தவர்கள்….. கீர்த்தியை பரிதாபமாக பார்த்தனர்

எப்படி வளர்த்தனர் பெண்ணை…இப்படி பாதியிலேயே விட்டுப் போய் விட்டனரே…” என்று அங்காலாய்த்தனர்

நல்ல வேளை மகளை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கிறார்கள்அந்த வகையில் புண்ணியம் செய்திருக்கிறார்கள்இல்லாவிட்டால் இந்தப் பெண் பாவம்

என்றெல்லாம் பேசினார்கள்.

எல்லாம் கீர்த்தியின் காதில் விழத்தான் செய்த்து

ஆனால் பாலாவிற்குதான் நிற்க நேரம் இல்லை….. அவன் மருத்துவமனையில் இருந்து அருந்ததியிடம் கீர்த்தியை ஒப்படைத்ததுதான்.. அதன் பிறகு அவளிடம் நெருங்க முடியவில்லை…. அதற்கு நேரமும் இல்லை

பாலா…. மருமகனாய்எல்லாக் காரியமும் செய்தான்அவர்களுக்குகுற்ற உணர்ச்சியுடன் தான்…….

--------------------------------------

இரண்டு நாட்கள் ஆகி இருந்தது….

கீர்த்தி வெறித்த பார்வையுடன் தன் தாய் தந்தை இருவரும் சேர்ந்திருக்கும் புகைபடத்தை பார்த்தபடியே இருந்தாள்…. சிந்துதான்.. அவளின் அருகினிலே இருந்தாள்……சிந்து என்ன சொன்னாலும் கேட்டு அதன் படி நடந்தாள்வேறு யாரின் குரலும் அவள் மனதில் எட்ட வில்லை

பாலாவின் நிலைமையோ அதை விட மோசம்அவள் அருகில் செல்லவே அவனுக்கு பயமாக இருந்த்து…. அவளின் கோபம் தெரிந்தவன் அவன்…. அவள் ஏற்கனேவே துக்கத்தில் இருக்கும் போது இவன் மேல் எப்படி பாய்வாள் என்றே தெரியவில்லை…. இல்லை என்ன உளறுவாள் என்றே அனுமானிக்க முடியவில்லை…..

ராகவன்மைதிலி தன்னைப் பார்க்க வந்த போது என்ன நினைத்தோம்இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது..

அது மட்டும் காரணம் இல்லை…. அவளுக்கு இவன் போய் என்ன ஆறுதல் கூறுவான்….

நான் உனக்காக இருக்கும் போது நீ ஏன் கவலைப் படுகிறாய்என்றா கூற முடியும்இதை அவனால் சொல்ல முடியாது எனும் போது அவளிடம் போய் வேறு என்ன சொல்ல முடியும்…. இந்த காரணத்திற்காகவே அவன் அவள் அருகினில் போக வில்லை

அருந்ததியின் முறைப்பில்பேச சொல்லியும் கூட அவன் போகவில்லை…. அவனுக்கு கீர்த்தியிடம் பொய்யான வார்த்தைகள் பேச விருப்பம் இல்லை….

பிள்ளையார் பிடிக்க குரங்காக போன கதைதான் அவனின் நிலை….. இனி என்ன செய்வது…. கீர்த்தியின் வருங்காலத்தை நினைத்தாலே தலை சுற்றியது அவனுக்கு….. ஆனாலும் அவள் வருங்காலத்தை தன்னோடு இணைக்கும் முடிவை மட்டும் அவனால் எடுக்க முடியவில்லை….

வினோத் வேறு வருவதாகச் சொல்ல…. பாலாவின் மனம்…… பலவற்றை நினைத்தது

தாங்கள் பொய்யான திருமண விபரங்களை எல்லாம் வினோத்திடம் சொல்லி விட வேண்டும்என்ன ஆனாலும்என்ன நடந்தாலும்…. யார் என்ன சொன்னாலும் இனியும் இந்த பொய்யான பந்தத்தை தொடர அவன் விரும்பவில்லை…. வினோத்திடம் கீர்த்தியை சேர்த்து விடுவோம்…. இதுதான் அப்போதைக்கு நல்ல முடிவாகத் தோன்றியது….. வினோத் கண்டிப்பாக கீர்த்தியை ஏற்றுக் கொள்வான்..என்று முற்றிலுமாக எண்ணினான்….

இது ஏற்கனவே அவன் நினைத்திருந்ததுதான்ஆனால் இப்போது அதை செயல்படுத்த நினைத்தான்….

அவன் மனம் கீர்த்தியை மனைவியாக நினைக்கவில்லை என்பதால்தான் அவன் இவ்வாறெல்லாம் சிந்தித்தான்…. அவனைப் பொறுத்தவரை…. இது பொய்யான திருமணம்இந்த அளவில்தான் இருந்தது….. அவள் தான் தாலி கட்டிய மனைவி என்ற நினைவு இருந்தால் அவளை இன்னொருத்தனிடம் ஒப்படைக்கும் கேவலமான முடிவை அவன் எடுத்திருப்பானா?

…………………

இப்படியே இரண்டு நாட்களும் போய் இருந்தது

அடுத்த நாள் காலை…………. விஸ்வம், மோகனா…வினோத் மூவரும் கீர்த்தியின் வீட்டில் நுழைந்தனர்…..விஸ்வம்…மோகனாவிற்கு கீர்த்தியை பார்க்க முடியவில்லை…. வாசலிலே அழத் தொடங்க…..வினோத் தான் கீர்த்தியின் அருகில் அவர்களை கூட்டி வந்தான்…. அவர்கள் நுழைந்தவுடனே அனுமானித்தனர்அவர்கள் தான் கீர்த்தி சொல்லும் வினோத் குடும்பம் என்று

மைதிலியிடம் பேசியதுதான் கீர்த்தி…வேறு யாரிடமும் பேச வில்லை

ஆனால்வினோத்..விஸ்வம் மற்றும் மோகனா வந்தவுடன் தன் பார்வையை விலக்கிமூவரையும் பார்த்து முறைத்தாள்….

நான் சொன்னேன் நீங்க US போக வேண்டாம் என்று…. கேட்டிர்களா….இப்போ பாருங்க நான் அனாதையா நிற்கிறேன்…. நீங்க இங்க இருந்திருந்தால் எல்லாம் ஒழுங்காக இருந்திருக்கும்…. அப்போ கேட்காமல் போய்விட்டு இப்போ மட்டும் ஏன் வந்தீர்கள்….என்னைப் பார்க்கவா வந்தீர்கள்…. நான் சொன்னதைக் கேட்காமல் அன்று நீங்கள் போனீர்கள்…. என் அப்பா என்னிடம் சொல்லாமலே போய் விட்டார்அம்மா என்னை விட்டு போவதற்கு கூட வருத்தப் படாமல் போய் விட்டார்கள்…. ஆக மொத்தம் எனக்காக யாரும் இல்லைஇப்போ மட்டும் ஏன் வந்தீர்கள்இங்கு உங்கள் தங்கையும் இல்லை…. உங்கள் நண்பரும் இல்லை….” என அவர்களைப் பார்த்து ஆவேசமாக கத்த ஆரம்பித்தாள்

வினோத் அதிர்ந்து விட்டான்

கீர்த்திடாஎன்னடா ஆச்சு உனக்குஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்….” என்றவன் பாலாவை அப்போதுதான் பார்த்தான்

திருமண போட்டோவில் பார்த்திருக்கிறான் அவ்வளவுதான்

பாலாவின் அருகில் வந்து….

பாலா………எப்படி நடந்தது…..என்றெல்லாம் கேட்ட படி அவனின் அருகில் அமர்ந்தான்தலையில் கைவைத்த படி

கீர்த்தி இப்போது பேசிக் கொண்டே இருந்தாள்….

நான் தப்பு பண்ணி விட்டேன்…. நான் திருமணம் செய்திருக்கக் கூடாது….. அதனால்தான்என்னை விட்டு என் அம்மா.. அப்பா போய் விட்டார்கள்புலம்பியவள்.. அழுக வில்லை… .ஒரே வார்த்தையை புலம்பிக் கொண்டே இருந்தாள்

மோகனாவிடம்…அருந்த்தி

கீர்த்தி அழவே இல்லையென்றும்அவர்களை பார்த்த பிறகுதான் பேசவே செய்கிறாள் என்று கூறமூவரும் அதிர்ந்தனர்..

மோகனாவும்..விஸ்வமும் எவ்வளவோ பேச அவள் நிறுத்தவே இல்லை…சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க

வினோத் பாலாவை வந்ததில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தான்…அவன் கீர்த்தியின் அருகில் செல்லவே இல்லை என்பதை உணர்ந்து..

என்ன மனிதன் இவன்…கீர்த்தி இவ்வளவு துக்கத்தில் இருக்கிறாள்ஒரு காதல் கணவனாக நடந்து கொள்ளாமல்.. எனக்கென என்று இருக்கிறான்என்று தோன்றியது..

வினோத் கீர்த்தியிடம் ஆறுதலாக பேசப் போக….

விரக்தியாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்….பின் எள்ளளாக

ஏண்டா வினோத் என்னிடம் இப்படி பேசுகிறாய்..என்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறதா…. நீ என்னிடம் இப்படி பேச மாட்டயே

என்று அவனிடம் எதிர் கேள்வி கேட்டவளை பார்த்து வேதனை தாளாமல் அழ ஆரம்பித்தான் வினோத்

அங்கிருந்த யாருக்கும் எதுவும் செய்யத் தோன்றாமல் …. கீர்த்தியின் நிலைமயைப் பார்த்து உறைந்திருக்க

சிந்து மட்டும்….

நடந்ததை எல்லாம்…பார்த்துக் கொண்டிருந்தவள்கீர்த்தியின் இந்த நிலை நெஞ்சை அறுத்தது

என்ன நினைத்தாளோ தெரிய வில்லையாருமே எதிர் பார்க்காத வேளையில் பாலாவின் அருகில் சென்றாள்

அண்ணா. .அக்கா அழவே மாட்டேங்கிறாங்க….இப்படியே விட்டால் டிப்ரெசன் ஆகி விடுவார்களாம்எனக்கு பயமாய் இருக்கிறதுநீங்களும் இப்படியே உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்நீங்க தான் அவங்களுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும்..வாங்க என்று அவனை இழுத்தவள்

கீர்த்தியின் அருகில் விட்டாள்

இதற்குமேல் அமைதியாக இருந்தால்,,,, சரிப்படாதுகீர்த்தி என்ன சொன்னாலும்…. என்ன செய்தாலும்…. என்று நினைத்த பாலா

கீர்த்தியின் முன் மண்டியிட்டு அமர்ந்து..

கீர்த்திஎன்று மெதுவாய் அழைக்க..

கீர்த்தியின் கண்கள்….பாலாவின் கண்களோடு கலந்தது

அவனின் பார்வையில் அவள் தன்னை மறந்தாள்….. அவனது பார்வை அவளை நெகிழச் செய்தது…. அவனின் பார்வையில் இருந்தது..பரிதாபமா…ஆறுதலா தெரிய வில்லைஆனால் அவன் பார்வை மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருந்தது…. அந்த பார்வை அவளைக் கரைய வைத்தது….

ஏற்கனவே தன்னை மறந்திருந்தாள் அவள்இப்போது ….அவளின் அடி மனதில் இருந்த அவனின் உறவும்அவன் மீதான உரிமையும் மட்டுமே அவளையும், அவள் மனதையும் ஆட்கொண்டது…. அதன் விளைவு

அவன் மட்டுமே தன் உறவென்ற நிலையில்தன் கணவனென்ற உரிமையில்அவனின் மடியில் தலை சாய்ந்தாள் கீர்த்திஅவன் மடி சாய்ந்தவள்சாய்ந்த நொடியில் வெடித்தாள்…. கதறினாள்

பாலா சத்தியமாய் இதை எதிர்பார்க்க வில்லைதன் ஒரு வார்த்தையில் இப்படிக் கரைந்து விடுவாள் என்று….கோபமாய் ஏதாவது பேசுவாள் என்றுதான் நினைத்திருந்தான்தன்னைத் திட்டியாவது துக்கத்தினைக் குறைப்பாள் என்று நினைக்க கீர்த்தியோ அவன் மடியில் விழுந்து கதறிக் கொண்டிருந்தாள்….

சிறிது நேரம் அவளை அழ விட்டவன்..மெதுவாக அவளைத் தூக்க…அவன் சட்டையைப் பிடித்தவள்….அவனை நேருக்கு நேராகப் பார்த்து….

நான் ஏண்டா ….உன் ஆபிசில் சேர்ந்தேன்….. உன்னைப் பார்த்தேன்உன்னைக் திருமணம் செய்தேன்….உன்னால்தான் என் அம்மா அப்பா போய் விட்டார்கள்…. உன்னாலதான்…..” என்று அவனை உலுக்கினாள்கன்னங்களில் கண்ணீர் வழிய….

அனைவரும் அதிர்ந்து நோக்கபாலா உட்பட

அவள் எதையும் உணராமல்இப்போது ஆவேசத்தை விட்டுவிட்டுஅவனையும் விட்டாள்….

குரல் கம்மியதுவார்த்தைகள் குழறியது…. ஏதோ தப்பு செய்து விட்டதைப் போல்…அவனிடம் வார்த்தைகளை விட்டாள்..

அவங்களை விடஅவங்க பாசத்தை விடஉன் மேல எனக்கு ஏன் காதல் வந்தது.. அவர்களை விட நீ நன்றாகப் பார்த்துக் கொள்வாய் என்று நம்பியதால்தான் என்னை விட்டு போய் விட்டார்கள்நீ ஏண்டா என் வாழ்வில் வந்தாய்…. என்று புலம்பியவள்.. மேலே பேச ஆரம்பிக்கும் முன் அருந்ததி அவளை அறைக்குள் அழைத்துச் செல்லும் படி பாலாவிடம் கூற

கீர்த்தி தன்னைக் காதலிக்கிறாளா…” என்ற நினைவில் திகைப்பின் உச்சத்தில் இருந்தான் பாலா

அதன் பிறகுநல்ல வேளை…. வெளியே எதுவும் கேட்காதவாறு அறைக்குள் வந்தான் பாலாஅதன் பின கீர்த்தி புலம்பின புலம்பல்கள் எல்லாம் கடந்த மூன்று மாதாமாய் அவள் மனதில் சுமந்த சுமைகளைத்தான்…பாலாவின் மேல் உள்ள காதல் உட்படஒரு கட்டத்தில் அழுதழுது.. பேசிப் பேசிமயங்கினாள் கீர்த்தி…..

மயங்கிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பாலா

வெளியே வினோத் உட்பட மற்றவர்கள் அருந்ததி தவிர…. பாலாவை பெருமையாக நினைத்தனர் …… கணவனிடம் மட்டுமே கீர்த்தி மனம் திறந்திருக்கிறாள்……இப்படி ஒரு கணவன் இருக்கும் போதுஅவன் மேல் உள்ள காதலே போதும்…. அவள் தன் தாய் தந்தையை சீக்கிரம் மறந்து விடுவாள் என

அருந்த்திக்கு தான் ஒன்றும் புரியவில்லைஇனி பாலா என்ன முடிவெடுக்கப் போகிறானோ என்று…..

அறையில் இருந்து வெளியே வந்த பாலா ………. தன் அம்மாவிடம்..

அம்மா அவ அழுதழுது மயங்கிட்டா….போய்ப் பாருங்கள்என்றபடி வேகமாக வெளியேறியவன்காரை எடுத்துக் கொண்டு கடற்கரை சாலையில் பயணித்தான்


1,305 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page