என் உயிரே!!! என் உறவே!!! 25

அத்தியாயம் :25

அருந்ததியின் மொபைல் அலறியது…. கீர்த்திதான் ஹாலில் இருந்த மொபைலை எடுத்து வந்தாள்

அத்தை பாலாதான்என்றபடி அவளிடம் கொடுத்து விட்டு தன் மொபைலை எடுத்து தன் பெற்றோருக்கு மாற்றி மாற்றி போன் செய்து கொண்டிருந்தாள்…. இருவரும் எடுக்கவில்லைஒன்று ஸ்விட்ச் ஆஃப் என்று வர…. மற்றொன்று அட்டெண்ட் செய்ய ஆள் இல்லாமல் இருந்தது….

பாலா விடம் பேசிக் கொண்டிருந்த அருந்த்தியின் முகம் மாறியதுஅதையும் கீர்த்தி கவனித்தாள்….

அவளின் அருகில் வந்த கீர்த்தி…”என்ன அத்தை என்று கேட்க…. வந்த கண்ணீரை…. துக்கத்தை….. கீர்த்திக்கு முன்னால் அடக்கியபடி…..

கீர்த்தி நாம உடனே ஒரு இடத்திற்கு கிளம்ப வேண்டும்நீ ட்ரெஸ் மாத்தி வாஎன்று குரல் அடைக்க கூறினாள்

ஆனால் அத்தைஅப்பாவும் அம்மாவும் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்களேஅவர்கள் வந்து விட்டால் என்ன பண்ணுவது?…. எங்கு போகிறோம்என்று கேள்விகளை தொடுக்க

அவங்களையும் பாலா அங்க வரச் சொல்லி இருப்பான் போல….அங்குதான் இருக்கிறார்கள்….. நீ சீக்கிரம் கிளம்பு…” என்று வாய்க்கு வந்ததை உளறினாள்அருந்த்தி

எங்கே என்று கேட்க வாய் திறந்த கீர்த்தி….அருந்ததிஅங்கு இல்லாததால்யோசனையுடன் மாடி ஏறினாள்இப்போதும் தன் தன் பெற்றோருக்கு போன் செய்து பார்த்தாள்எடுக்காததால்….

பாலா பண்ணினால் எடுத்தவர்கள்நான் பண்ணினால் மட்டும் ஏன் எடுக்கவில்லை….காலையில் அப்பாஅம்மா திடிரென்று பார்க்க வருகிறேன் என்றார்கள்அதுவே எதற்கு என்று மண்டை காய்கிறதுஇப்போது என்னவென்றால்எங்கே என்று கூட சொல்லாமல் அவசரமாக கிளம்பச் சொல்கிறார்கள்….. என்ன ஒரே மர்ம்மாக இருக்கிறது….. எனக்குத் தெரியாமல் ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார்களா……இல்லை…. மது பற்றி…. நினைக்கும் போதே பதறியது மனம்…. மது கிடைத்து விட்டாளோஇருக்காதுஅம்மா..அப்பாவை எதற்கு பாலா கூப்பிட வேண்டும்…. என்றெல்லாம் தனக்குள்ளாக குழம்பியவள்

அருந்ததியுடன் கிளம்பினாள்…….

-----------------------------------------------------

மைதிலியின் குரலின் பாலாவையும் தொற்ற …. மைதிலி ….பதட்டத்துடனும்….தடுமாறியும் பேசினாள்

தாங்கள் சென்ற ஆட்டோ ப்ரேக் இல்லாத காரணத்தால்…. மற்றொரு காரின் மீது மோதி விபத்து நடந்ததைக் கூறியவள்அவர்கள் இருக்கும் இடத்தையும் கூறி…. கீர்த்தியின் தந்தை ராகவன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக கூறினாள்…. இதைச் சொல்லவே அவளால் முடியவில்லை…. பாலாவிற்கு கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை…. நெஞ்சம் பதறியது… 20 நிமிடம் முன் தன்னிடம் பேசியவர் இறந்து விட்டாரா…..தாங்க முடியவில்லைஅவனுக்கே இப்படி என்றாள்…. கீர்த்திமைதிலியின் நிலைமை….. இப்போது அதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இல்லை என்பதால் அருந்த்திக்கு போன் செய்து விபரத்தை சொல்லிவிட்டுஅவசர அவசரமாக ஸ்பாட்டிற்கு விரைந்தான்….

அதற்குள் ஆம்புலென்ஸ் எல்லாம் வந்திருந்ததுமைதிலி அங்கு ஆர்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தாள்…. மைதிலியை மட்டும் அந்த ஆம்புலென்ஸில் ஏற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தனர்….ஆனால் ராகவனை விட்டு நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்….. பாலா மைதிலியின் அருகில் செல்ல….. மைதிலியோ

பாலா….என்னை அவரை எங்கு கூட்டிச் செல்கின்றனரோ அங்கேயே கூட்டிட்டு போகச் சொல்லுங்கள்….” என்று பாலா வந்ததை உணர்ந்து பாலாவிடம் வாய் மட்டும் பேசியதுபார்வை எல்லாம் இறந்திருந்த கணவனின் மேல்தான் இருந்த்து

பாலாவால் எதுவும் பேச முடிய வில்லை…. அருகில் இருந்த போலிஸ்

அவனின் தோற்றத்தில்கொஞ்சம் பணிவுடன்….

சார்அவரை ஜி.ஹெச்க்கு போக மார்ச்சுவரி வேனில் ஏற்ற வேண்டும்…..இந்த அம்மாவிற்கும்ஆட்டோ ட்ரைவருக்கும் சிகிச்சை வேண்டும் என்பதால் ஆம்புலென்ஸில் ஏறச் சொன்னால்பிடிவாதம் செய்கிறார்கள்.. இருவரையும் ஒரே ஆம்புலென்சில் ஏற்ற முடியாதுசொன்னால் பிடிவாதம் பிடிக்கிறார்கள்என்றவன் இப்படியே இருந்தால் இருவரையும் மார்ச்சுவரி வேனில் தான் ஏற்ற வேண்டும் ….என்று ….. வாய்க்குள்ளாக முணங்கினான்

அவன் என்ன சொல்கிறான் என்று பாலாவிற்க்கும் புரிய பால அவனிடம் எகிற ஆரம்பித்தான்….

யோவ்…. என்னயா.. இஷ்டத்திற்கு பேசுகிறாய்…. நீ போட்டிருக்கிற ட்ரெஸ்ஸுக்காகப் பார்க்கிறேன்…. இல்ல…” என்று சுட்டு விரலை நீட்டி மிரட்டியவன்அவனிடம் வாக்குவாதம் செய்யும் நேரம் இது இல்லை என்பதால் அதை விட்டுவிட்டு

பிரபல தனியார் மருத்துவமனைக்கு கால் செய்து ஆம்புலென்ஸை வரச் செய்தான்

அந்தப் போலிஸ்….இறந்த ராகவனை ஜி.ஹெச் க்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று பாலா அழைத்திருந்த ஆம்புலென்சில் ஏற்ற மறுக்க….

அவனிடம்அவர் உயிரோடுதான் இருக்கிறாரா…. இல்லையா என்று அங்குள்ள மருத்துவர் சொல்ல்ட்டும்….அதன் பிறகு பார்க்கலாம்…..” என்று முறைத்து விட்டு மைதிலியையும்ராகவனையும் ஏற்றினான்

வண்டி மருத்துவமனையை நோக்கிச் சென்றது…. கீர்த்தியின் கால் மைதிலியின் மொபைலில் வந்து கொண்டே இருந்தது….. மைதிலி அதைக் கையில் தான் வைத்திருந்தாள்ஆனால் எடுக்கவே இல்லைபாலாவிடம் மட்டுமே பேசியிருந்தாள்விபரத்தை சொல்வதற்காக..

மைதிலிக்கு நன்றாக அடிபட்டிருந்ததுஆனால் ராகவனுக்கோ….பெரிய அடியெல்லாம் இல்லை….. விழுந்ததில் பின்னந்தலை அடிபடஅப்போதே உயிர் பிரிந்து விட்டிருந்ததுமைதிலி தன்னைச் சுதாரித்து வருவதற்குள்அவர் காத்திருக்காமல் போய் விட்டார்.... கணவன் தன்னை விட்டு போய் விட்டார் என்று உணர்ந்த மைதிலிக்கு அழுகை வர வில்லை…. ஏன்? …. யார் செய்த குற்றம்?…. ஏன் அவர்கள் வந்த ஆட்டோ ப்ரேக் பிடிக்க வில்லை”… தாங்கள் செய்த தவறா?….இல்லை ஆட்டோ ட்ரைவர் செய்த தவறா?….புரியவில்லை.. தன் கணவன் தன்னை விட்டு விட்டு சொல்லாமல் போய் விட்டான்என்று மட்டும் புரிந்தது…. கோபம்தான் வந்தது ராகவனின் மேல்கீர்த்தியின் கால் வந்த போதுதான் மைதிலிக்கு அழுகையே வந்ததுஆனால் அவளிடம் பேச வில்லை…. முடியவில்லை….. பாலாவிற்கு மட்டுமே போன் செய்தாள்…. கீர்த்தி…. கீர்த்தி என்று மனம் அரற்றியதுஅவளின் ஒவ்வொரு அழைப்பும் மைதிலியை நிலைகுலைய வைத்தது….

மகளை அழைத்து அவள் தந்தை அவர்களை ஏமாற்றி விட்டார் என்று சொல்லத் துடித்தாள் மைதிலி…. தங்கள் செல்ல மகள்……… இதை எப்படி தாங்குவாள் என்றிருந்ததுஅதனாலேயே அவள் கீர்த்தியிடம் பேச வில்லை

மருத்துவமனையின் நுழைவாயிலில் நின்றது வண்டிஇதற்கு மேல் ராகவன் மைதிலியுடன் வர முடியாது என்னும் நிலையை உணர்ந்த பாலா மைதிலியை…. அவள் நிலையைப் பார்க்க முடியாமல் திணறினான்…. துக்கம் தொண்டையை அடைத்தது…. மைதிலி முதலில் வெளியேற்றப் பட…. அடுத்து ராகவனை ஸ்ட்ரெக்ச்சரில் தூக்கினார்கள்மைதிலியை பாலா தாங்கிப் பிடித்திருந்தான்….ராகவனை கீழே இறக்கியவர்கள்மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல ஆயத்தம் ஆக….இதுதான்….இந்த நிமிடம்தான் தன் கணவனை கண்ணாறக் காணும் கடைசி நிமிடம் என்பதை மைதிலி உணரஅதுவரை இறுக்கமாகவே அவரைப் பார்த்தபடி வந்தவள்….. தாங்க முடியாமல் தன்னால் முடியாத நிலையிலும் அவர் மேல் விழுந்து கதறினாள்…. பாலா அவளைக் கட்டுப்படுத்தும் முயற்சி எல்லாம் தோல்வியில்தான் முடிந்ததுபாலாவிற்கு பயம் வந்து விட்ட்துமைதிலியையாவது கீர்த்திக்கு காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவளை வலுக்கட்டாயமாக ராகவனிடமிருந்து பிரித்து எடுத்தான்.

முதலில் அவரை விட்டு வர பிடிவாதம் பிடித்தவள்…. என்ன நினைத்தாளோ…..பிறகு கண்ணீரை நிறுத்தி நிதானமானாள் அதன் பிறகு கணவனை ஒருமுறை நன்றாக பார்த்தாள்பின் அவரின் அருகில் வந்தவள்….. அவர் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்…. அவர் காலையில் கேட்டது…. கொடுத்து விட்டாள் மனைவி….உணரும் நிலையில் தான் கணவன் இல்லைஅவர் முகம் இறந்தும் கூட புன்னகையை சிந்திக் கொண்டிருந்ததுஅதில் ஒரு சாந்தம் இருந்தது….

ராகவன் மைதிலியின்…. உயிரோடும்…..உடலோடும் கலந்திருந்தவர்…. இன்று அவளை விட்டு உயிரின்றி…. உடலாலும் பிரிந்தார்….

ராகவனும்…. மைதிலியும் வேறு வேறு திசையில் பிரிந்தனர்…..

-------------------------

கீர்த்தனாவிற்கு அருந்ததியின் பதட்டம் ஏன் என்று புரியவில்லை…. அவள் அவ்வப்போது கீர்த்திக்கு தெரியாமால் கண்ணீரைத் துடைப்பதும் தெரிந்தது…..அவளுக்கு எதையோ தன்னிடமிருந்து மறைக்கிறார்கள் என்று தோன்ற…. பயப் பந்து அவளை அறியாமல் வயிற்றில் சுருண்டது…. அப்பா..அம்மாவிற்கு ஏதாவது ஆகி இருக்குமோ? அதை யோசித்தவள்அருந்ததியிடம் ஏதும் கேட்காமல் மைதிலி செல்லிற்கு அழைத்தாள்… “ கடவுளே அம்மா எடுக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆயிரம் முறை வேண்டியபடி காத்திருக்க அது அவளை ஏமாற்றியது…..உடனே ராகவன் அலுவலக எண்ணிற்கு அழைத்தாள்அவர்களோ அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டதாக கூற அருந்ததியின் முகத்தைப் பார்த்தாள்தான் நினைத்த்தை கேட்க நினைத்தாலும்….. ஏதும் கேட்க வில்லை…. அவளால் கேட்க முடியவில்லை….தான் நினைத்தது போல் எதுவும் இருக்காதுஎதுவும் நடந்திருக்கக் கூடாது என்று மனதினுள் ஜெபித்தபடியே வந்து கொண்டிருந்தாள்…. அவள் ஓரளவு அனுமானித்து விட்டாள் என்பதை உணர்ந்த அருந்ததியும் ஒன்றும் சொல்ல வில்லை….சொல்லவும் முடிய வில்லை..

----------------------------------------

மருத்துவமனையின் அருகில் வந்த உடன் அருந்ததி கீர்த்தியை இறங்கச் சொல்லகீர்த்திக்கு தான் உணர்ந்தது உண்மையோ என்று தோன்ற காரை விட்டு இறங்க மறுத்தாள்….

அம்மாவும்அப்பாவும் எங்கஅவங்க எதுக்கு இங்க வந்தார்கள்….. அவர்களை வரச் சொல்லுங்கள்நான் வருகிறேன்… “ என்று சிறு குழந்தை போல் சொல்லி அவர்களைத் தேடினாள்…. அதற்கு மேல் அருந்ததியால் அழுகையை மறைக்க முடிய வில்லை…. அவள் அழ…..

நீங்க எதற்கு அழுகிறீர்கள்…. எனக்கு பயமாய் இருக்கிறதுஎனக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும்அம்மாவை போனை எடுக்கச் சொல்லுங்கள்என புலம்ப ஆரம்பித்த போதே பாலா அங்கு வந்தான்

பாலாவை பார்த்த வுடன்

பாலாஏன் அத்தை அழுகிறார்கள்அழச் சொல்லாதீர்கள்….எனக்கு பயமாய் இருக்கிறதுஅம்மாவும்அப்பாவும் இங்கேதான் இருக்கிறார்களாநான் அவர்களை பார்க்க வேண்டும்..எனக்கு ஏதேதோ மனதில் தோன்றுகிறது.. என காரில் இருந்த படியே கூற

காரின் உள்ளே சென்றான் பாலா

கீர்த்திஇது என்ன பிடிவாதம்…. நீ வந்தால்தான் உன் அம்மாவைக் காப்பாற்ற முடியும்உன்னைப் பார்க்காமல் அவர்கள்….ஆபரேசன் ரூமிற்குள் செல்ல மாட்டேன் என்கிறார்கள்... நீ என்னவென்றால்…. காரில் இருந்து இறங்க பிடிவாதம் செய்கிறாய்…. ஒரு சின்ன ஆக்சிடெண்ட்அதற்கு இந்த ஆர்பாட்டமா? என்றவனின் வார்த்தையில் முழுவதும் நம்பாமல்…. தெளியாமல்அவனைப் பார்த்தாள்

நீ வந்தால்தான் உன்னுடன் பேசினால்தான் ஆபரேசன் செய்து கொள்வேனென்று பிடிவாதமாக இருக்கிறார்கள்நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு ஆபத்து என்றவன்அவளை காரில் இருந்து வெளியே இழுத்துமைதிலி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்….

அவனோடு போகும் போதே

அம்மாக்கு என்னாச்சு பாலா…. அப்பா வந்துட்டாரா….அப்பா அம்மாவை தனியாக அனுப்பியதால் தான் இப்படி ஆகி விட்டது….சேர்ந்து வரத்தான் சொன்னேன்…. அம்மாக்கு ஒண்ணும் ஆகாதுல்ல எனக்கு பயமாய் இருக்கு பாலாஅழுகை பாதியும்…. வார்த்தை பாதியுமாய் புலம்பியபடி வந்தாள்…..

அவள் அறையில் நுழையும் போது மருத்துவர் குழு மைதிலியை சூழ்ந்திருந்ததுஅதனால் வெளியே நின்றபடி மைதிலியை பார்த்தாள்அவளால் தாங்க முடியவில்லைஅருந்ததியின் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தவள்

அய்யோ.. சின்ன ஆக்சிடெண்ட் என்று சொன்னீர்கள்பார்த்தால் அப்படி தெரியவில்லையேஎன் அப்பா கேட்டால் நான் என்ன சொல்வேன்என்னாலே தாங்க முடிய வில்லையேஅப்பா எப்படித் தாங்குவார்அவரால் அவர் மைதிலியை இந்த கோலத்தில் பார்க்க முடியுமா….” என்று இறந்து போன தன் அப்பாவை நினைத்து வேறு கதற ஆரம்பித்தாள்

பாலாவும்.. அருந்த்தியும் அவளைத் தேற்ற வழியின்றி திகைத்தனர்….

இவளிடம் ராகவனைப் பற்றி இன்னும் சொல்லவில்லைஅதற்குள்ளாகவே இப்படி கதறுகிறாளேஎன்றிருந்தது…. இருந்தாலும்…. மைதிலியை பார்த்து விட்டு வந்த பிறகுதான் ராகவனைப் பற்றி சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்….

மருத்துவர் குழு வெளியே வந்தது….. அதில் தலைமை மருத்துவர்பாலாவிடம்

அவங்க உயிரோடு இருக்கவே ஆசைப்படவில்லை….. அவங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும்…. இல்லையெனில் கஷ்டம்தான்…” என்று கீர்த்தி முன்னாலே கூறினார்

கீர்த்திகண்களில் பரிதவிப்புடன் பாலாவைப் பார்த்தாள்

பாலா கீர்த்தியிடம்

கீர்த்திஅவர் சொன்னதைக் கேட்டாய் அல்லவாஅழுவதை நிறுத்தி விட்டுஅத்தையிடம் இந்த ஆபரேசனுக்கு கோ-ஆபரேட் பண்ணச் சொல்நீ சொன்னால் மட்டும்தான் கேட்பார்கள்என்று அவளுக்கு நிதானமாகஅவள் மனதில் ஏறும் படி சொல்ல….

அவன் சொல்வதைக் கேட்டு தலையை மட்டும் ஆட்டினாள்கண்கள் ஒரு வித அலைப்புறுதலிலே இருந்தது

மைதிலியின் அருகில் கீர்த்தி நின்றிருந்தாள்.. கீர்த்திக்கு எதிரேபாலா..அருந்ததி நின்றிருந்தனர்

அம்மா…. அம்மாஏம்மா…. என்னப் பாருங்க….“ என்ற கீர்த்தியின் விசும்பலில் மைதிலி கண்களில் வலியுடன் பார்த்தாள்

கீர்த்திம்மாஎன்று வலியினால்தெளிவில்லாத வார்த்தைகள்மைதிலியிடமிருந்து வந்த்து

என்னம்மா ஆயிற்று உங்களுக்கு…. ஏன் இப்படி நமக்கு…. நீங்கள் ஏன் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்…. நீங்க இப்டி இருக்கறத பார்த்தா பயமா இருக்குமா ஆபரேசன் பண்ணினால் தான் நல்லதும்ம்மா…. நான் சொல்றேன்லகேட்பீங்கள்ள…” என்று நடுங்கிய குரலில் அழுகையோடு கெஞ்சினாள்….

மைதிலி வெற்றுப் புன்னகை புரிந்தவள்…..

நான் யாருக்காக வாழ வேண்டும் கீர்த்தி…. உங்க அப்பா நம்மை விட்டு போய் வெகு நேரம் ஆகி விட்டது…. அவரில்லாத வாழ்வு எனக்கு நரகம் தான்…… அவர் மட்டும் என்னை ஏன் ஏமாற்றித் தனியே சென்று விட்டார் கீர்த்திஎன சொல்லிய மைதிலியின் கண்களில் ஓரம் கண்ணீர் வழிந்தது….

கீர்த்தி கல்லென சமைந்தாள்….அப்பா இறந்து விட்டாரா…….என்னை விட்டுப் போய் விட்டாரா…..அவளால் நம்ப முடியவில்லை…. பாலாவை மட்டும் மீண்டும் ஒரு முறை பார்த்தாள்…. அவளின் பார்வையில் அவன் தலை குனிந்தான்….

அருந்த்தி கீர்த்தியின் வேதனை முகம் காணச் சகியாமல் மைதிலியிடம்

என்ன மைதிலி கீர்த்தியின் முகத்தைப் பார்அவளுக்காகவது நீ வாழ வேண்டும்குழந்தை தவித்துப் போய் நிற்கிறாள்அவளுக்காகவது நீ பிழைத்து வர வேண்டும்…. என்று கூற

கீர்த்தி ஒன்றும் சொல்லவில்லைதாயையே பார்த்த படி நின்றாள்…. இப்போது அவளுக்கு கண்ணீர் வர வில்லை…. மனம் வெறுமையில் சூழஅப்படியே நின்றாள்….

அவளுக்கு தெரிந்து விட்டதுஇனி தன் அம்மா அதிக நேரம் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று

மகளின் இந்தக் கோலத்தை காணச் சகியாத மைதிலிக்குஆசை ஆசையாய் பாசத்தை கொட்டி வளர்த்த மகளை இப்படி நிராதராவாய் விட்டுப் போகிறோமே என்று மனம் கனத்ததுஆனாலும் தாங்கள் இப்படி சீக்கிரமே அவளை விட்டுப் போகப் போகிறோம் என்பதால் தான் இறைவன் பாலாவை காட்டியிருக்கிறார் என்று சமாதானமானவள்கீர்த்தியை அருகில் அழைத்தாள்அவள் நின்ற இடத்திலேயே அசையாமல் நிற்க

மைதிலிவலிய வரவைத்த புன்னகையுடன்

கீர்த்திடாநீ அப்பா மேலயும் என் மேலேயும் கோபமாய் இருக்கிறாய் என்று புரிகிறது…. எங்க ரெண்டு பேரையும் மன்னித்துக் கொள்…. ஆனாலும் திருப்தியுடன் தான் போகிறோம்என்ற போதே அவளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகியது

அதற்கு மேல் அவள் பேச முடியவில்லை…..இருந்தாலும்…. திக்கித் திணறியபடிபேச ஆரம்பிக்கதாய் படும் அவஸ்தைகளை காண முடியாமல்….. விதிர் விதித்து கீர்த்தி அனிச்சையாகவே மைதிலி அருகில் சென்றாள்

மைதிலிபாலாவை பார்த்து…. திணறியபடிகீர்த்தியைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை பாலாஎங்களை விட நீங்கஎங்க கீர்த்திய

இதைச் சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் மல்கியது….மகளை விட்டுப் போகிறோமே என்றிருந்ததுபரிதவித்து நின்ற மகளை ஒருமுறை நன்றாகப் பார்த்தவளுக்கு….. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது…. ஆனாலும் மகள் மேலிருந்த பார்வையை வலுக்கட்டாயமாக பாலவிடம் திருப்பி

நன்றாக………” எனும் போதே அவள் உயிர் அவனைப் பார்த்தபடி பிரிந்த்துஅது தன் துணையை தேடிச் சென்று விட்ட்து….அருந்ததி தலையில் அடித்து அழ ஆரம்பிக்கபாலா கீர்த்தியை பார்த்தாள்அவள் மைதிலியை பார்த்தபடியே நின்றாள்…. சிறிது நேரம் பார்த்தான்.. அவள் அப்படியே நிற்க…. அவளை உலுக்கினான்விழிகள் ஒரு நிலையிலேயே இருந்தன

பாலா சட்டென்று கீர்த்தியை பிடித்து இழுத்து ராகவனைப் பார்க்க கூட்டிச் சென்றான்….அவள் அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வந்தாள்தன் உணர்வில் இல்லை….

ராகவனைப் பார்த்தும் அவள் அழ வில்லை…. இருவரையும் நினைத்து கோபம் தான் வந்தது….. என்ன அவசரம் இவர்களுக்கு…. தன்னை நினைத்துப் பார்க்காமல் போய் விட்டார்கள்இவர்களுக்காக என் வாழ்வையே தொலைத்து நிற்க நான் இவர்களையே தஞ்செமென்று நினைத்திருக்கஎன்னை விட்டுப் போய் விட்டனர்…. இதற்குத்தான்…. என் வாழ்வில் இத்தனை போராட்டமா…. என்ற படியே நினைத்தவளுக்கு ….உணர்வுகள் மறத்தன

461 views

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி-21

அத்தியாயம் 21: ரிஷி அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான்....... தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு…. படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்… தன் அறையிலிருந்து வெளியேறி

கண்மணி... என் கண்ணின் மணி-20-2

அத்தியாயம் 20-2 ரிஷி.... தினகர் மற்றும் வேலனோடு தன் அறைக்குச் செல்லும் மாடிப்படியில் அமர்ந்திருந்தான்.… வேலனும் தினகரும் கடைசிப் படிகளில் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு மேலாக… மேலே இருந்த படியில் ரிஷி அ

கண்மணி... என் கண்ணின் மணி-20-1

அத்தியாயம் 20-1 நடராஜன் அரைமயக்கத்தில்தான் இன்னும் இருந்தார்... அதன் பின் ரிஷி அவருக்கான மாத்திரைகளை கொடுத்து எப்படியோ அவரை உறங்க வைத்தவன்.... கண்மணியை மீண்டும் போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க... அது

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon