top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே!!! என் உறவே!!! 24

அத்தியாயம் 24:

மைதிலி சமையலறையில் காலை உணவுக்காக தயார் செய்து கொண்டிருந்தாள்…. அன்று ஏனோ ராகவன் ஜாகிங் செல்லவில்லை…. தாமதமாகவே எழுந்தார்.. எழுந்தவர் தன்னை ப்ரெஷ் செய்துவிட்டு மனைவியை தேடிச் சென்றார்…..மைதிலி தலைக் குளித்திருந்த படியால்.. கூந்தலின் இறுதியில் சிறிதாக முடிச்சு மட்டும் போட்டிருந்தாள்உள்ளே போகாமல் வெளியே நின்று அவளை ரசித்துப் பார்த்தபடி நின்றிருந்தார் ராகவன்அவரின் பார்வை தீண்டலை மற்றும் ஆள் அரவத்தை உணர்ந்த மைதிலி…. நிமிர்ந்து புன்னைக்க…. அது ராகவனுக்கு மேலும் உற்சாகம் கொடுக்கமையலுடன் மனைவியின் அருகில் சென்றார்

மைதிலி ஒரு எச்சரிக்கை உணர்வுடன்…. அவர் அருகில் வந்தவுடன் தள்ளி நின்று

என்னங்க இது.. காலையிலயே வம்பு பண்றீங்க…”

அவரோ விலகிய அவளை அணைத்த படி

என் பொண்டாட்டிநான் வம்பு பண்ணாமல் யார் பண்றது…. சொல்லுஎன்று கொஞ்சியவர்….

இன்னைக்கு என் மைதிலி ரொம்ப அழகா இருக்கா…..அதுதான் என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்கிறேன்….

…. மைதிலிஅவரிடமிருந்து முயன்று விலகி நின்று தலையில் அடித்தபடி

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சு…பேரனோ பேத்தியோ கொஞ்சுகிற வயசு வந்தாகி விட்டதுஇன்னும் என்ன ரொமான்ஸ்…. கீர்த்தி வீட்டில் இருந்த வரை அடங்கி இருந்தீர்கள்….. அவளுக்கு திருமணம் ஆனதும் மறுபடியும் ஆரம்பித்து விட்டீர்களா…..” என்று செல்ல சலிப்பு சலித்தாள் மனைவி….

எனக்கு பொண்ணு ,பேரன் பேத்தி , யாரு வந்தாலும்…. என் செல்ல மைதிக்குதான் முதலிடம்உன்னிடம் கொஞ்சியது போகத்தான்..மற்றவர்களுக்குஎன்று கணவன் ராகம் இழுக்க ….

இது சரி வராது போல இருக்கே.. என்று மைதிலிக்கு தோன்றும் போதே…. மைதிலிக்கு போன் வந்த்துஅவளை போனை எடுக்க விடாமல்….தானே எடுத்தார்போனில் அவரது மகள்தான்

அவரின் குரலைக் கேட்டதும்

குட் மார்னிங் ப்பா…. என்ன இன்னைக்கு ஜாகிங்க்கு மட்டம் போட்டாச்சாஎன ஆரம்பிக்க

அவள் பேசும் போதே போனை ஸ்பீக்கர் மோடில் போட்டார்….

இல்லடா…அப்பா ஜாகிங் போகலாம் என்றுதான் இருந்தேன்உங்க அம்மாதான் போக விட வில்லை…” இரட்டை அர்த்தத்தில் பேச

மகளோ அதைப் புரிந்து கொள்ளாமல்மைதிலியிடம்

ஏம்மா அப்பாவை போக விடவில்லை….ஏன் ராகவன் டெய்லி ஜாகிங் போய் ஃபிட்டா இருக்கரதால உங்களுக்கு என்ன பிரச்சனை….” என்று வம்பிழுக்க

கேட்டு கொண்டிருந்த சத்தமாக ராகவன் சிரித்து வைக்க..மைதிலி பல்லைக் கடிக்க

கீர்த்தியோ ஒன்றும் புரியாமல்…”ஏம்பா சிரிக்கிறீங்க…” என்றாள் அப்பாவியாய்

இப்போது பாலாவும் அறைக்குள் வந்திருந்தான்….. அவன் வந்ததை அறியாமல் கூட பேசிக் கொண்டிருந்தாள் கீர்த்தி

இல்லடாஉங்க அம்மா போகவிடலைனாநீ சொன்ன மாதிரி இல்லைஎன்று மைதிலியை கண்ணடித்தபடி உல்லாசமாக பேசினார் ராகவன்

இப்போது கீர்த்திக்கும் புரிய

ராகவ்…….. ஜாகிங் போகாமல் காலையிலேயே மைதி கூட ரொமான்ஸா….நடத்துங்க நடத்துங்கநான் அப்புறம் பேசுகிறேன் என்று திரும்பியவள் பாலாவைப் பார்த்து திகைத்துவிழித்தாள்

இவன் எப்போது வந்தான்என்றபடி அவனைப் பார்த்து அசடு வழிந்தாள்

பாலாவோ எதுவும் கேட்கவில்லை அவளிடம்அவனும்ராகவ் மைதிலி பழகும் விதம் பார்த்திருக்கிறான்அவர்களை நினைத்தபடி….

”“நம்ம மாமனார் காதல் மன்னன் தான்….அப்பா….என்ன காதல்….என்ன கொஞ்சல்…என்ன புரிதல்…. மனைவியிடம்….“ மனதில் வியந்தான்வெளியில் சொல்ல வில்லை…..சொன்னால் அவ்வளவுதான்…. மகள் இங்கிருந்தே சுற்றிப் போட கிளம்பி விடுவாள்…. என்று அவனுக்கு தெரியாதா?….

சற்று நேரம் மைதிலியிடம் வம்பிழுத்து விட்டு…. அலுவலகம் செல்லத் தயாரானார் ராகவன்…..அவர் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே…….

மதனிடம் இருந்து போன் வந்தது…. அவர் சொன்ன செய்தியில் ராகவன் கிட்டத்தட்ட மகிழ்ச்சியில் உறைந்தார்…..

மதனிடம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்தவர்….. நேராக பூஜை அறைக்குச் சென்றார்சாஷ்டாங்கமாக கடவுளின் முன் விழுந்து நன்றி சொன்னவர்…. மைதிலியிடம் சென்றார்….

மைதி ….. நமது பணம் நம் கைக்கே வரப் போகிறது…. இப்போதுதான் மதன் போன் செய்தார்…. அவரிடம் தான் அந்த கடன் தொகை வரும் வரை ….ஃபாளோ பண்ணச் சொல்லி இருந்தேன்இன்றுதான அந்த நபர் கால் செய்து அதைக் கட்ட வருகிறேன் என்று சொல்லீருக்கிறார்.. நான் இப்போதெ போய் அவர் கணக்குகளை பார்த்து முடித்து வைக்க வேண்டும்…மேலும் மாப்பிள்ளையிடம் இன்றே அந்தத் தொகையை ஒப்படைக்க வேண்டும்என்ற சொன்ன கணவரை நம்ப முடியாமல் பார்த்தாள்

இருவரும் சந்தோசத்தில் திழைத்தனர்…….கீர்த்தியிடம் இப்போதே சொல்ல வேண்ணுமென்று தவித்தனர்…….இந்த மூன்று மாத காலமாக அவர்கள் வாழ்வில் பிரச்சனையாக இருந்த பணம்…. கிடைத்து விட்டது….என்பதை நம்பவே முடியவில்லைஇருந்தாலும் உண்மையே அது…. பணம் கிடைத்தது மட்டும் சந்தோசம் என்றால்..…அதை இந்த நிமிடமே பாலாவிடம் கொடுத்து..அதன் மூலம் தங்கள் வீட்டு இளவரசியின் திருமண வாழ்க்கையை பரிபூரணமாக்க துடித்தனர்….

உடனே இருவரும் கீர்த்திக்கு கால் பண்ண முடிவு செய்து அவளை அழைக்கப் போக..’மைதிலி ஏதோ நினைத்து சட்டென்று கட் செய்தவள்ராகவனிடம்

ஏங்க நாம் கீர்த்தியிடம் போனில் சொல்ல வேண்டாம்…. அது மட்டும் இல்லாமல் முதலில் பாலாவிடம் நேரில் போய் சொல்லி அவரிடம் சொன்ன பிறகு கீர்த்தியிடம் சொல்வோம்…. நீங்க முதலில் அலுவலகம் சென்று அதற்கான வேலையை உடனே பாருங்கள்…. அதன் பிறகு நாம் பாலாவை பார்த்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு செல்வோம்….. இந்த விபரம் சம்பந்தி இருவருக்கும் தெரியாது அல்லவா…அதனால்தான் பாலாவை அலுவலகத்தில் பார்ப்போம் என்கிறேன்…. என்றாள்

மைதிலியின் வார்த்தைகளில் உடன்பட்டார் ராகவன்….அதன் பிறகு கீர்த்திக்கு கால் செய்து அவளை பார்க்க இருவரும் வருவதாகச் சொல்லி…அவளை விடுமுறை எடுக்கும்படி சொன்னார்கள்…..

கீர்த்தி விபரம் கேட்ட போதுஎங்க பொண்ண பார்க்க வரக் கூடாதா…. என்று அலம்பல் செய்துவிட்டு போனை வைத்தனர்…. ராகவன்மைதிலி கால்கள் தரையில் இல்லை….மகளின் வாழ்வில் முள்ளாய் இருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரப் போகிறது என்று,,,,,,

கிளம்பும் போது ராகவன் மைதிலியிடம்எவ்ளோ பெரிய விசயம் சொல்லி இருக்கிறேன்எனக்கு ஏதும் கிடையாதாஎன்று ஏக்கமுடன் கேட்க….

உங்களைதிருத்தவே முடியாதுகிளம்புகிற வழியைப் பாருங்கள் என்று முதுகைப் பிடித்துத் தள்ளாத குறையாக தள்ள….

மைதி நல்ல யோசித்துக் கொள்….பிறகு கணவன் கேட்டானே கொடுக்காமல் போய் விட்டோமே என்று இன்று முழுவதும் நீதான் ஃபீல் பண்ணப் போகிறாய்…என்று கெத்தாக சொல்ல

அதெல்லாம் ஃபீல் பண்ண மாட்டோம்…என்றபடி வாசலைக் காட்டினாள்….

இதன் பிறகு ராகவன் அந்த வீட்டிற்குள் உயிருடன் வரப் போவதில்லை என்று உணராமலே மனைவியிடம் இருந்து விடை பெற்றார்….

-------------------------------

கீர்த்திராகவனுக்கு மீண்டும் கால் செய்தாள்

என்னப்பாகாலையில் இருந்தே ஒரே உற்சாகம்.... என்னைப் பார்க்க வருகிறேன் என்று இப்போ அலுவலகத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள்…. என விசயத்தை அவரிடமிருந்து கறக்கப் பார்க்க

நான் இங்கிருந்து நேராக வந்துவிடுவேன் கீர்த்திஅம்மா வீட்டிலிருந்தபடி வருவாள்என்று முடித்தவர்… ”கீர்த்திடா.. அப்பா வருகிறேன்,,, அப்பாவிற்கு என்ன ஸ்பெஷல்….” என்று கேட்க

நான் என்ன பண்ணப் போறேன்…. மஞ்சு அக்கா தன் ப்ரிப்பேர் பண்ணப் போறாங்கநீங்க வேண்டும் என்றால் லிஸ்ட் கொடுங்கள்….நான் பண்ணச் சொல்கிறேன்….என்றவள்

என்ன விசயம் என்று கேட்டால்.. சும்மா எதை எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்….என்று சலித்தபடி….. இனி….அவரிடம் பேசும் வாய்ப்பு என்றுமே இருக்கப் போவதில்லை என்று தெரியாமல்…உணர முடியாமல் …… போனை வைத்தாள்….

------------------------------

மைதிலி அருந்ததியிடமும் வருவதாகச் சொல்லி இருந்ததால்…. அன்றைய மதிய விருந்து தடபுடலாக நடைபெற்றது…. அதைக் கவனித்த கீர்த்திஅருந்ததியிடம் தனிமையில்

தேங்ஸ் அத்தை….. என் மேல் கோபம் இருந்தாலும்….என் அப்பா அம்மாவிடம் காட்டாமல் இருக்கிறீர்கள்….இன்று அவர்கள் வருவதாய்ச் சொன்னதும் சந்தோசமாக விருந்தெல்லாம்ஏற்பாடு செய்கிரீர்கள்இதற்கெல்லாம் கைமாறு நான் என்ன செய்யப் போகிறேனோ என்று குரல் கம்ம பேசினாள்….

நீ என்ன செய்தால் நான் சந்தோசப்படுவேன் என்று உனக்குத் தெரியாதா…. “ என்று அருந்ததி கொக்கி போட….

கீர்த்தியோ இவ்வளவு நேரம் இருந்த நெகிழ்வு போய் விறைப்பானாள்….

அவளின் மாறுதலை உணர்ந்த அருந்ததி…. பெருமூச்சை இழுத்து விட்டவள் …. பிறகு

சரி சரி.. கீர்த்திஉடனே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாதே…. நீ இந்த வீட்டு மருமகளாக இல்லாவிட்டாலும்அட்லீஸ்ட் எனக்கு மகள் இல்லையென்ற குறையையாவது தீர்த்து வை…..என்று கூற

ஐயோ அத்தை இப்போ சொன்னது முன்னதை விட ரொம்ப கஷ்டம்என்று விழி விரித்து கூற

அதில் என்ன கஷ்டம் கீர்த்தி

எங்க அப்பாவது பரவாயில்லை….ஆனா எங்க அம்மா ரொம்ப பொஸெசிவ்….. அவங்க பொசிசன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாங்கஎன்று சிரித்தாள்

அருந்ததியோ

மைதிலி சொல்றாங்களோ இல்லையோ நீ உன் அம்மாவைத் தவிர யாருக்கும் அந்த உரிமையைத் தர மாட்டாய் அப்படித்தானே

அருந்ததி சொன்ன வார்த்தையின் உண்மையில்கீர்த்தியோ இதற்கு என்ன பதில் சொல்வது என்று விழித்து…. நாக்கை கடித்தாள்

உனக்கு உங்க அப்பாதான் மிகவும் பிடிக்கும் என்று நினைத்தேன்என்று கேட்க

வெட்கப்பட்டுக் கொண்டே

உண்மையிலயே எனக்கு எங்க அம்மாதான் மிகவும் பிடிக்கும்…. எனக்கு பிடித்த என் அம்மாவைஅப்பாவிற்கு என்னை விட பிடிக்கும் என்பதால்…. அம்மாவை அவர் நேசிக்கும் விதத்திலும்அப்பா ஃபேவரைட் ஆகி விட்டேன்அம்மா ரொம்ப அதிர்ஷ்டசாலி அத்தை…. எங்க அப்பா எனக்காக கூட அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டார்…. என தாய் தந்தை பற்றிய பேச்சில் தனை மறந்துஅவள் பிரச்சனை எல்லாம் மறந்துஉற்சாகமாக பேச ஆரம்பித்தாள்…. அதன் பிறகு அவர்கள் திருமணம்…. விஸ்வம் குடும்பத்தின் நட்பு…. வினோத் என கீர்த்தி வாய் மூடாமல் பேசிக் கொண்டிருந்தாள்….

அருந்த்தியோ

காதலில் உருகும் தாய் தந்தையருக்கு மகளாய் பிறந்து…. அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமை காணும் இவளுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லையா? என்ன கொடுமை இதுநாளை இவள் தனிமையில வாடுவதை பார்க்கப் போகும் அவர்களுக்கு எத்தனை பெரிய கொடுமை…. அது இவளுக்கு புரிய வில்லையா?”

என்றெல்லாம் யோசனை செய்தவள்…அதைக் கேட்டும் விட்டாள்

தெரியும் அத்தைஆனால் விதி ஒன்று இருக்கிறதே…. போதும் போதும் என்கிற அளவுக்கு நீங்கள் காதலித்து விட்டிர்கள்…வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்…. அதனால் உங்கள் மகளுக்கு இது போன்ற வாழ்க்கை எதுவும் கிடையாதுகிடைக்காது என்று கடவுள் நான் அவர்கள் வயிற்றில் உருவாகும் போதே எழுதி அனுப்பி விட்டார் போல….” என்றாள் பாலாவின் நினைவில்…. விரக்தியாக ஆனால் தெளிவாக….

அருந்த்திக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை…. யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்…. நடந்த எதையும் மாற்ற முடியாது….ஆனால்….இவர்கள் இருவரும் மனம் மாறினால் இப்போது உள்ள நிலைமை தலைகீழாக மாறி விடும்ஆனால் யாரால் இவர்கள் மனதை மாற்ற முடியும்? கீர்த்தி-பாலா இருவருக்குள்ளும் மனதில் மாற்றம் மட்டும் வந்தால் போதும்…. ஒரு நல்ல எதிர்காலம் இருவருக்கும்…. இதையெல்லாம் மனதினுள் மட்டுமே நினைக்க முடிந்தது,… செயல்படுத்த என்ன செய்வது என்று புரியவில்லை….

ஆனால்…. எந்த விதி என்று கீர்த்தி சொன்னாளோ அந்த விதி …. அதற்கான வேலைகளில் இறங்கியது….

--------------------------------------------

Global net அலுவலகத்தில்

பாலா தனது அலுவலகத்தில் ராகவன்மைதிலியை எதிர் பார்க்கவில்லை…. அவர்கள் இருவரும் வீட்டிற்கு வருவதாக சொன்னதால்தான் கீர்த்தியே இன்று அலுவலக வரவில்லைபிறகு இங்கு ஏன் வந்திருக்கிறார்கள்…. என்னவாக இருக்கும் என்று சுழன்ற தன் மனதை அடக்கியபடிஅவர்களை வரவேற்றான் பாலா

ராகவன் அனைத்து விதமான ஃபார்மாலிட்டிஸை எல்லாம் முடித்தவுடன் நேராக மைதிலியை பாலா அலுவலகத்திற்கே வரச் சொல்ல…. மைதிலி ஆட்டோவில் வந்து விட்டாள்…..

ராகவனும் தனது காரில்தான் கிளம்பப் போனார்…. ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சனை பண்ண…. அதனோடு போராடாமல் உடனே ஆட்டோ ஒன்றை பிடித்து கிளம்பி விட்டார்

இருவரும் மகள் அலுவலகத்தினை வெளியில் நின்று பார்த்ததுதான்…. அவள் அந்த அலுவலகத்தின் முதலாளியான பாலாவை மணந்த பிறகு கூட அலுவலகம் வந்தது இல்லை…… இப்போது கூட பாலாவிடம் தனியே பேச இதுதான் வசதி என்பதாலும்…அவன் பணம் கொடுத்த விவகாரம் அவனின் பெற்றோருக்கு தெரியாது என்பதாலே இங்கு வந்தனர்….

பாலாவின் பார்வையில் இருந்த குழப்பத்தினை இருவரும் உணர்ந்தனர்

அவனை மேலும் குழப்பாமல்…. தாங்கள் வந்த விசயத்தை இருவரும் விளக்க…. அதிர்ந்தான் பாலாஎதற்காக அதிர்ந்தான் என்று புரியவில்லைஅவர்கள் நடத்திய நாடகம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று நினைக்கவில்லை போல….

கீர்த்தியிடம் சொல்லி விட்டீர்களாமாமா…”

மாமா என்று சொல்லவே தடுமாறினான்…. பாலாமுடியப்போகும் உறவல்லவா….

இல்லை பாலா…..உங்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டுமாம்உங்க மாமியாரின் உத்தரவு…. “ என்று புன்னகைக்க….

மைதிலியை பார்த்து அவஸ்தையாய் புன்னகை செய்தவன்….இன்னும் சற்று நேரத்திற்கு பிறகுதான் இவர்களின் மனதிலிருந்து தான் கீழே இறங்கப் போவது புரியாமல் இல்லை அவனுக்கு….கண்டிப்பாக கீர்த்தியிடம் இவர்கள் சொல்லும் போது அவள் இந்த ஒப்பந்த வாழ்க்கையை….அதை மட்டும் அல்ல…இந்த அலுவலகத்தை விட்டே போய் விடுவாள்….. தன் முகத்தில் இனி விழிக்க கூட மாட்டாள் என்றே தோன்றியது….

இந்தப் பண விவகாரம் தன் மகளின் வாழ்க்கையை பணயமாக்கியுள்ளது என்று தெரிந்தால் இவர்கள் இருவரும் என்ன ஆவார்களோ என்று தோன்றியது….. இன்று அவர்கள் முகத்தில் உள்ள சந்தோசம்அவன் பணம் தரும் போதோ…. இல்லை தனக்கும்,கீர்த்திக்கும் திருமணம் நடந்த போதோ இல்லை ….. அந்த அளவிற்கு அவர்கள் முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த்து

இதையெல்லாம் நினைத்தபடியே அவர்கள் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸில் பார்வையை ஓட விட்டான்…. படித்தவன் அதிர்ந்தான்

வந்த தொகை முழுவதும் அவன் பெயருக்கு மாற்றப் பட்டிருந்த்து….

நிமிர்ந்தவன்…. சற்று கோபமாக

என்ன மாமா இது? என் பெயரில் இருக்கிறது…… தயவு செய்து இதை மாற்றி கீர்த்தி பெயரில் போடுங்கள்…… எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது…. நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பது தெரிகிறது…”

இதைச் சொல்லும் போது பாலாவின் மனசாட்சி அவனை கேள்வி கேட்டது

டேய் பாலா…. உன்னை அவர்கள் மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்நீதான் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…..”

தன்னைச் சுட்ட மனச்சாட்சியை தள்ளியவன்

கீர்த்தி பெயரில் மாற்றி விடுங்கள்…. இல்லையென்றால் நான் இதை ஒருபோதும் வாங்க மாட்டேன்என்று கடினமான குரலில் கூற

அவனின் குரலில் மாறுதலை உணர்ந்த இருவரும்

அவனிடம்….

இதையெல்லாம் விட தாங்கள் அருமை பெருமை மிக்க ….. தங்கள் மகள் கீர்த்தியையே அவனிடம் ஒப்படைத்திருக்க அவளுக்கு முன் இந்த பணமெல்லாம் ஒரு தூசி…. கீர்த்தி பெயரில் இருந்தால் என்ன? அவன் பெயரில் இருந்தால் என்ன என்று கேட்க….

இப்போது பாலாவும் …. என் பெயரில் இருந்தால் என்னகீர்த்தி பெயரில் இருந்தால் என்ன…..அதனால் அவள் பெயரிலே இருக்கட்டும் என்று அவர்கள் சொன்ன வார்த்தையையும் பிடித்திக் கொண்டு தன் பிடிவாதத்திலே நிற்க

ராகவன் வேறு வழியின்றி…. மதனிடம் போன் செய்து….. பாலாவின் முடிவைச் சொல்லி…. டாக்குமென்ட்ஸையெல்லாம் கீர்த்தியின் பெயரில் மாற்றச் சொன்னார்

அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு…. அலுவலகத்தை விட்டு வெளியேறி வந்தனர்….

கொண்டுவந்த டாக்குமெண்ட்ஸ் இனி தேவை இல்லை என்பதால் பாலாவின் அறையிலேயே விட அவன் அதைக் கிழித்தும் போட்டும் விட்டான்…..

பணத்தை மறுத்த பாலாவின் கோபத்தில் தன் மகளின் எதிர்காலம் அவர்கள் இருவருக்கும் ஒளிமயமாகவே தோன்றியதுஇருவருக்கும்பாலாவை பெருமையாக நினைத்தபடி…. இப்படிப்பட்டவன் தன் மகளுக்கு கணவனாகக் கிடைக்க அவள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம்…சிலாகித்தபடி….. அங்கிருந்த ஆட்டோவில் ஏறினர்….

இருவரின் மனதிலும் ஒரு நிம்மதி…. கடந்த 3 மாத காலமாக தங்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைஅதன் பின மகள் வாழ்க்கை பற்றிய பயம் எல்லாம் சுத்தமாக மாறிஇன்று ஒரு பரிபூரண திருப்தியை உணர்ந்தனர்

---------------

கிழித்துப் போட்டிருந்த காகிதக் குப்பைகளையே வெறித்துப் பார்த்த படி இருந்தான் பாலா….

அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை….

கீர்த்தியுடன்…தான் நடத்திய நாடகம் முடிவிற்கு வந்ததாலா.. இல்லை எல்லோருக்கும் அது தெரியப் போவது என்பதாலா…அவளை பெற்றவர்கள் இந்த ஏமாற்றத்தை தாங்குவார்களா…. இல்லை ஜெகனாதனின் கோபத்தை எப்படி ஏற்பதா….என்னவோ அவன் மனதை அழுத்திக் கனமாக்கியது…..

நினைவுகளின் தாக்கத்தில் அதன் போராட்டத்தை தாழ முடியாமல் அலுவலகம் என்பதையும் மறந்து கண் மூடி இருக்கையில்…. பின்னால் கை வைத்து சாய்ந்தான் பாலா

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தானோ …. தன் மொபைலின் அழைப்பு ஒலியில் அதை எடுத்துப் பார்த்தான் பாலா

கீர்த்தியிடம் இருந்துதான்…. பதட்டம் நிறைந்த மனதோடு எடுத்தான் பாலா

அட்டெண்ட் செய்தவுடனே….

ஹலோமிஸ்டர்.பாலாநான் கீர்த்திஇல்லை…இல்லைகீர்த்தனா ராகவன் பேசுகிறேன்…. நான் ஏன் இப்படி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும்….. நாம் நடத்திய நாடகம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று நான் நினைத்து கூடப் பார்க்க வில்லை…. நமது ஒப்பந்தப்படி நான் உங்களிடம் கடனாகக் கட்டிய பணத்தைக் கொடுத்து விட்டேன்உங்கள் அப்பாவிற்கும் நல்ல படியாக அறுவைச் சிகிச்சை முடிந்து விட்ட்து…. நாம் இனி அவரவர் பாதையில் போகும் நேரம் வந்து விட்டது…. நான் கிளம்புகிறேன்எனது ராஜினாமாவாவை நான் மெயிலில் அனுப்புகிறென்…தென்உங்கள் பெயரில் விரைவில் உங்கள் பணம் வர அப்பாவிடம் சொல்லி விட்டேன்….. நான் என் வாழ்க்கையில் பாலா என்ற ஒருவரைச் சந்தித்ததை இந்த நிமிடத்தில் இருந்து மறக்க முயற்சிக்கிறேன்உங்கள் மது விரைவில் உஙளுடன் சேர மனமாற வேண்டிக் கொள்கிறேன்ஏனென்றால்…. இன்னும் ஏதெனும் ஒரு அப்பாவிப் பெண் மாட்டிக் கொண்டால்…. அதற்காகவாது மதுவுடன் நீங்கள் சேர வேண்டும்….Goodbye….என்றபடி அவனின் பதிலை எதிர்பாராமல் போனை வைத்தாள்

கீர்த்தியின் பேச்சில் தன்னை மறந்து நின்றான்

அவனது மொபைல் அழைத்ததுஆனால் அதை உணரும் நிலையில இல்லை…. மீண்டும் அடிக்கஅப்போதுதான் உணர்ந்தான்… . கீர்த்தி பேசுவதாக தான் மனக் குழப்பத்தில் உழன்றிருக்கிறோம் என்று….. இத்தனை நேரம் கீர்த்தி பேசியது போல் பிரமையா…. உண்மையாக நடந்த்து போல் இருந்ததேஎன்று நினைத்தவன்

தன் பிரமையிலிருந்து வெளி வந்தான்…. வந்தவன்நிதானத்திற்கு வந்து…. போனில் யாரென்று பார்த்தான்….

அது மைதிலியின் எண்ணிலிருந்து வந்திருந்த்து

தற்போது கீர்த்தி பேசியதாக தான் நினைத்துக் கொண்டிருந்த்து போல் இப்போது இதுவும் பிரமையோ என்று தோன்றியது பாலாவிற்கு…. அந்த எண்ணம் உண்மையாக இருந்திருந்தால் அதாவது பிரமையாக இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்…ஆனால் உண்மையிலேயே மைதிலிதான் அழைத்திருந்தாள்……

உடனே பாலா…. தானே மைதிலிக்கு கால் செய்தான்….

அது மறுமுனை பிஸி என்று கூறஅவளின் எண்ணை தொடர்பு கொள்ளாமல் ராகவனுக்கு தொடர்பு கொண்டான்

ஆனால்ராகவனின் மொபைலோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் சொல்ல

இப்போது மைதிலியிடமிருந்தே கால் வந்த்து….

உடனே அட்டெண்ட் செய்தவன்….. அத்தை என அழைக்கும் முன்னரே மைதிலியின் படபடப்பான குரல் அவனை அடைந்தது….

945 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page