என் உயிரே!!! என் உறவே!!! 23

அத்தியாயம் 23:

நாட்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் சென்றது…. ஜெகநாதன் வீடு திரும்பியிருந்தார்…. கீர்த்தியும் அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தாள் அவர்களது அலுவலகத்தில் அவர்கள் திருமணம் பற்றி வித விதமான பேச்சுகள் எழத்தான் செய்தன…. பாலா அவளை காதலித்ததால் தான் அவளுக்கு குறைந்த நாட்களிளேயே ப்ரமோசன் கிடைத்தது ….என்றெல்லாம் கூடஆனால் கீர்த்தி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேலைக்குச் சென்றாள்இடையில் கார்த்தி கூட போன் செய்து வாழ்த்து கூறினான்….கவிக்கு கீர்த்தி சொல்ல வில்லைஅவள் போன் செய்த போதும் எடுக்க வில்லை…. மெயிலிலோ அவளுக்கு பதில் அனுப்ப வில்லை

அன்று அலுவலகம் முடிந்து கீர்த்தி மட்டும் கிளம்பியிருந்தாள்…. பெரும்பாலும் பாலாவுடன் காலையில் மட்டுமே அலுவலகம் செல்வாள் கீர்த்தி…. மாலையில் பாலா வரத் தாமதமானால் அவள் மட்டும்