என் உயிரே !!! என் உறவே !!! 22

அத்தியாயம் 22

கடந்த நாட்களில் நடந்த நினைவுகளில் மூழ்கியிருந்த இருவரையும் பாலாவின் போன் கால் மீட்டது…..

அது குமாரின் கால் என்பதால் அவசரமாக எடுத்துப் பேசினான் பாலா

என்ன குமார் அப்பாக்கு ஒன்றுமில்லையேஎன்று பட படத்தவனின் முகத்தைப் பார்த்த கீர்த்திக்கும் தானாய் பதட்டம் ஒட்டிக் கொண்டு விட்ட்து…..

ஆனால்எதிர் முனையில் என்ன கூறப் பட்டதோ தெரியவில்லை.. பாலாவின் முகம் அமைதியாகியது….

குமார் நானும் வீட்டுக்குத்தான்போய்ட்டு இருக்கேன்…. நீங்க எப்போ வருவீங்க நான் வந்த பிறகு நீங்க போங்க…..நான் வந்த பிறகுதான் நீங்க போக வேண்டும் என்று அழுத்திக் கூறியபடி போனை வைத்து விட்டு கீர்த்தியிடம் திரும்பினான்

கீர்த்திகுமார் தெரியும்ல உனக்குஅவரோட பொண்ணு சிந்து …..பாட்டி வீட்ல இருந்து படிக்கிறாள்ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்அடுத்த வருடத்தில் இருந்து இங்குதான் படிக்க போகிறாள்இப்போ….

என்று நிறுத்தியவன்..

சிந்து பெரிய பெண்ணாகி விட்டாளாம்அதுதான் குமார் கால் செய்தார்…. முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது…. இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளனவாம்முடித்து விட்டு உடனே கூட்டி வந்து விடுவாராம்…. அப்பாவிற்கு குமாரின் உதவி தற்போது பெரிதும் தேவை என்பதால்…. இப்போது கூட போகத் தயங்கினார்….ஆனாலும் சிந்துவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கும் அல்லவாநான் கிளம்பச் சொல்லி விட்டேன்.. என்று சொன்னவன் சிந்துவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்

எங்க அம்மாவுக்கு சிந்து என்றால் மிகவும் இஷ்டம்…..விடுமுறையில் இங்குதான் இருப்பாள்சரியான அறுந்த வாலு…. நீ உங்க அப்பா அம்மாகிட்ட எப்டி இருப்பாயோ அதே மதிரி எங்க வீட்டில் சிந்து அட்டகாசம் பண்ணுவாள்…. எங்க வீட்டில் அவளுக்கு என்று ஒரு தனி இடம் என்று கீர்த்தியிடம் விவரித்தபடிகாரினை திருப்பினான் ….

அடுத்த இருபது நிமிடங்களில் தி.நகரின் பிரபல ஜவுளிக் கடையில் இருவரும் இருந்தனர்

கீர்த்தியிடம் திரும்பி சிந்துவுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்ஒரு பட்டுப் புடவை தென் சுடிதார் என்றவன்…. செலெக்ட் பண்ணு…. என்று அவளைப் போகச் சொன்னான்

செலெக்ட் பண்ணு என்றால்எந்த ரேஞ்சில் என்று சொல்ல வேண்டாமா என்று யோசித்து அவனைப் பார்த்து வழக்கம் போல் அக்மார்க் முறைப்பை வழங்க

பாலாவும் வழக்கம் போல் அதை சட்டை செய்யாமல்…. அவள் முறைத்த முறைப்பை வைத்தே அவள் என்ன யோசிக்கிறாள்என்பதை உணர்ந்தவன்

உனக்கு ஒரு தங்கை இருந்து நாம் கணவன் மனைவியா என்ன பண்ணியிருப்போமோ…. அந்த எண்ணத்தில் போய் எடு…. என்று பாலா சொன்னவுடன் கீர்த்தியின் கண்களில் ஒரு மின்னல்….

முதல் முறை யாருக்காகவும் இல்லாமல், தனிமையில் தன் கணவன் தங்கள் உறவினை முன்னிறுத்திக் கூறியதை உணர்ந்தாள்

அதற்கு காரணமான முகம் தெரியாத சிந்துவின் மேல் பாசம் வந்தது. பாலாவிற்கும் அவள் மேல் மிகவும் பாசம் என்பதினை உணர்ந்தவள்….

சிந்து…….. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கேட்டிருக்கிறோம்…… சீதையை மீட்கும் முயற்சியில் அணில் ராமனுக்கு உதவி செய்ததாம்….. அது போல் கீர்த்திபாலா வாழ்க்கையில் விளக்கேற்ற ……. திரியின் தூண்டுகோல் போல் அவள் அவர்கள் வாழ்வில் வந்தாள்……. ஒருமுறை….. பாலாவை அவன் கைப்பற்றி இழுத்து கீர்த்தியோடு சேர்த்து……. அவனின் மனதில் கீர்த்தி வரத் தூண்டினாள் ……. இன்னொரு முறை…… கீர்த்தியின் அடிமனதில் வெகுநாளாய் உறுத்திய முள்ளை எடுக்கவும் காரணமாகவும் இருந்தாள் …..

முதன் முதலில் கடைக்கு வருகிறோம் தனக்கென்று என்று ஒன்றும் வாங்காமல்..வெறொரு பெண்ணிற்கு வாங்குகிறோம் என்ற பொறாமை உணர்வெல்லாம் இல்லாமல் அவளுக்கு திருப்தி ஆகும் வரை சிந்துவுக்காக பார்த்து பார்த்து எடுத்தாள்அதன் பிறகு…. நகைக் கடையிலும் அதுவே நிகழ்ந்தது..

கீர்த்திக்கு அவன் வாய் மொழியாக வந்த கணவன்மனைவி என்ற வார்த்தையிலேயே குளிர்ந்த மனம் மூலமே அவன் மேல் உள்ள காதலை உணர்ந்தாள்……எப்படி வந்தது என்று அவளால் சொல்ல முடியவில்லை….. ஆனால் நிலையில்லா உறவின் மேல் வந்து விட்டதுபாலா மேல் ஏன் காதல் வந்த்து …. தன்னைக் காதலிக்காதவன்…… மனைவி என்று நினைக்காதவன்இன்னொரு பெண்ணை மனதில் சுமப்பவன்இப்படி காதலின் அடிப்படையே ஆட்டம் கொண்டிருக்க….. வெறுத்து….. தள்ளி வைக்க வேண்டிய ஒருவன் மேல் காதல் வருமா?.. வந்துவிட்டதே…. என்று அவளின் மனம் அவளிடமே எள்ளி நகையாடியது…. இதுதான் தான் அவள் வாழ்க்கை…. அவனோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் மனதில் சேமித்து வைக்க ஆரம்பித்தாள்….. அவனுக்கு தெரியாமலே..

வீடு திரும்பியவர்கள்குமாரிடம் தாங்கள் வங்கிய பொருகளை கீர்த்தி மூலமாகவே கொடுக்க செய்தான்…. கீர்த்தியின் மூலம் இதை அறிந்த மைதிலி-ராகவனுக்கு தங்கள் மருமகன் மேல் மிகவும் பெருமையாக இருந்தது.. மைதிலியின் மனம் மெல்ல மெல்ல பாலாவை மருமகனாக முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்த்து

ஜெகனாதன் இன்னும் மருத்துவ மனையில் தான் இருந்தார் அருந்த்தி யும் அவருடனே இருந்தார்வீட்டிற்கும் போகப் பிடிக்க வில்லைஜெகனாதனும் அவளை வீட்டிற்கு போகச் சொல்லி வற்புறுத்தவில்லைமகன்மருமகளின் தனிமையை கெடுக்க நினைக்க வில்லையோ என்னவோ ???