என் உயிரே !!! என் உறவே !!! 21

அத்தியாயம் 21:

திருமண நாளும் வந்தது. கோவிலில் எந்த ஒரு ஆராவாரமின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வினோத் வீட்டில் இருந்து யாரும் வர முடியவில்லை…. விரைவிலேயே அவர்கள் இந்தியா திரும்பி வர முடிவு செய்திருந்ததால் அவர்கள் தற்போது வர முடியவில்லை….

கீர்த்தியின் கழுத்தில் மங்கல நாணை பூட்டும் நேரமும் வந்தது,,,

அந்த நிமிடத்திலும் பாலாவின் மனம் மதுவின் வரவை நப்பாசயுடன் எதிர்பார்த்து நோக்கியது…..மனதில் பாரத்துடன் கீர்த்தியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் பாலா…. கீர்த்தியின் முகத்தைப் பார்க்காமலேயேகடமைக்காகஇது அவர்கள் இருவருக்கும் பொய்யானது என்ற போதும் .அவனது கைகள் அவனையும் அறியாமல் நடுங்கியதுகைகள் கட்டிய போது மனம் மதுவிடம் சிக்கித் தவித்தது…. தனக்கும் மதுவுக்குமான…. நடந்திருக்க வேண்டிய நிகழ்வுயாரோ ஒரு பெண்ணுடன்…. மனம் வலித்தது..

கீர்த்திக்கோ மாங்கல்யம் அவள் நெஞ்சத்தில் தவழ்ந்த நொடி…. அந்த நொடியில் அவள் உடல் சிலிர்த்ததுஅவளது கண்கள் கலங்கியது….. அவளையும் அறியாமல் பாலாவை நோக்கினாள்…. அவனோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சியுமின்றி மேடையை நோக்கியபடி அமர்ந்திருந்தான்…. அவன் உணர்வுகளை அவள் உணராமல் இல்லை

அவனைப் பார்த்த நொடி, அவன் மதுவை நினைத்து வருந்துகிறான்…. என்று புரிய…..அவன் உணர்வுகளை அறிந்த நொடி ஏதோ ஒன்று மனதில் அழுந்தி வலியை தந்த்து

அந்த ஏதோ ஒன்று தாலிக் கொடி ஏற்படுத்திய பந்தத்தால் வந்த வலி என்பதையும் அவளால் உணர முடிய வில்லை

கீர்த்திக்கு அவன் தன் கணவன் என்ற நினைவு என்பது அவளையும் அறியாமல் அவள் மனதில் விதையானதையும் அவள் அப்போது உணர வில்லை….

அவள் என்ன முற்றும் துறந்த முனிவரா என்ன?.... அவளும் சாதரணப் பெண் தானே…. அவளும் தன் திருமண வாழ்க்கையை கற்பனை செய்திருப்பாள் தானேஇப்படியெல்லாம் தன் வாழ்வில் நடக்கும் என்றா எதிர்பார்த்தாள்…. தன் பொய்யான திருமணம் நிதர்சனத்தை உணர்த்த அவளுக்கு கண்களின் அருவியை தடை செய்ய முடியவில்லை….

பார்த்த அனைவருக்கும் வழக்கம் போல் மணப்பெண்ணின் அழுகை போல்தான் தோன்றியது

கீர்த்தி பாலா இருவரும் தாலியின் மகிமை புரிந்தும்அதன் மகத்துவத்தை காப்பாற்ற முடியாமல் சூழ்நிலையினை நினைத்து வருந்த

அவர்களின் பெற்றொர்களோ , அவர்களின் பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடர உலகின் அனைத்து கடவுள்களையும் வேண்டியபடி அவர்களை ஆசிர்வதித்தனர்….

அன்று இரவு…..

கீர்த்திக்குதான் பட படப்பாய் இருந்ததுஎன்னதான் ஒன்றும் நடக்காது என்று தெரிந்திருந்தாலும் ஒரு ஆணுடன் தனியாக ஒரே அறையில் என்பதும்…. அவளது திருமணம் உண்மையாக இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை தெரியாதவள் இல்லையே அவள்…. அது உணர்த்திய நினைவுகளும் அவளுக்கு அவளின் படப்பிற்கு காரணமாய் இருந்த்து..

ஆனால் பாலாமிகவும் தெளிவாக இருந்தான்அந்த அறையின் அலங்காரம் அவனை இம்சிக்க வில்லைஅதன் ரம்மியம் அவனை மயக்க வில்லைதன் அறையில் தன்னுடன் தனித்து விடப்பட்ட கீர்த்தியின் அழகில் தன் வசம் இழக்கவும் இல்லை

அவன் மனதில் வேறு எந்த நினைவுகளும் அவனை அணுகாமல் இருக்க அவன் மதுவின் காதலை…. அவள் நினைவைஅரனாக அமைத்திருந்ததால்அவன் சாதரணமாக இருந்தான்..

கீர்த்தியிடம் வழக்கம் போல் பார்த்து பேசியவனின் கண்களைப் பார்த்தாள்…. அந்த இரவின் தாக்கம் எதுவும் அவன் கண்களில் சிறிதும் இல்லைஅதில் தெரிந்தது கண்ணியம் மட்டுமே….

கீர்த்தியால் தான் என்ன நினைக்கிறோம் என்று உணர முடியவில்லை….

எந்த ஒரு பெண்ணும் படுக்கை அறையில் கணவனிடத்தில் கண்ணியத்தை விரும்புவாளா என்ன? அதுவும் அவர்களின் முதல் இரவில்….. கீர்த்தி தன்னையும் அறியாமல் மனதில் அடி வாங்கினாள்….

பாலா கட்டிலில் உறங்க…. கீழே படுத்த கீர்த்தி தன் நினைவுகளுடனும் , உணர்வுகளுடனும் போராடத் தொடங்கினாள்

அவள் மூளை அவளுக்கு இது பொய்யான பந்தம்இது நிரந்தரமற்றதுஅதற்கு உன்னை தயார் படுத்திக் கொள் என்ற கடந்த ஒரு மாதமாக உருப் போட்டு அதை தன் மனதிற்கும் அனுப்பி அதையும் பழக்கிக் கொண்டிருக்க,…இத்தனை நாள் மூளை சொல்வதைக் தவறாமல் கேட்ட அவள் மனம் இன்று அவள் மூளை சொல்வதை கேட்காமல் சண்டை பிடித்தது

அவனுக்கு வேண்டும் என்றால் இது பொய்யான பந்தமாக இருக்கலாம்

ஆனால் அவன்தான் என் கணவன் …. அவனைப் பொறுத்த வரை இது பொய்யானதாக இருக்கலாம்…. எனக்கு இது தான் இனி கடைசி வரை …. என்று அவளையுமறியாமல் அவள் கைகள் மாங்கல்யத்தை பிடித்த்து

அதனால் அவள் மனம் இனி நீ சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று மூளையின் உத்தரவை நிராகரித்தது

தன் நெஞ்சத்தின் மேல் பாலா கட்டிய தாலி உறவாட ஆரம்பித்த நொடிஅது கொடுத்த உரிமை…. அது கொடுத்த உறவு …… இவற்றின் தாக்கத்தில்அவனை நினைப்பது தவறென்று புரிந்தும் பாலாவிற்கும் தனக்குமான உறவில் மூளை சொல்வதை கேட்காமல் மனம் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள் கீர்த்தி