என் உயிரே என் உறவே -2

அத்தியாயம் 2:


ஸாரி சார்என்றவளிடம்,” ok, பரவாயில்லை, கவனம்என்றவன், கீர்த்தியை ஒரு வினாடி பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தன் வழியில் தொடர்ந்தான் பாலா. அவன் போன போது அவனது விழிகள் தன்னை பார்த்ததோ என்று நினைக்கும் பொழுதே, கவி கீர்த்தியின் காதில் இன்று யார் முகத்தில் விழித்தேனோ பாலா என்கிட்ட பேசிட்டாரே என்று முகம் மலர கிசுகிசுத்தாள்.

ஆமா உனக்கு இன்று நல்ல நேரம், எனக்கு காலையில் இருந்தே சொதப்புது.இப்ப வேற மாட்டிவிட்டேன்என்று அலுத்தாள்.

காலையில் நடந்த விசயம் எதுவும் தெரியாமல் கவி முழிக்க கீர்த்தி லிஃப்டில் நடந்தவற்றை கூறினாள்.

ஓ அப்படியா விசயம் என்றவள் திடிரென முகத்தை வைத்துக் கொண்டுஎனக்கு நல்ல நேரம் பாதிதான் வொர்க் அவுட் ஆனது.மீதிய நீ வந்து கெடுத்து விட்டாய்என்று கோபமாக‌ முறைத்தாள்.”

நான் என்ன கவி பண்ணினேன்.” என்றாள் அப்பாவியாய்

என்ன பண்ணலேனு கேளு, நீ மட்டும் பிடிக்காமல் இருந்திருந்தால் என்றவளின் வாயினை பொத்தி, அவள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள் கீர்த்தி.

அப்படி இப்படினு ஆகி ஏதாவது ரொமான்ஸ் ஆகியிருக்கும்இதானே சொல்ல வந்த இதெல்லாம் நாங்க வாலி படத்திலேயே பாத்துட்டோம் என்ற கீர்த்தியிடம் அசடு வழிய நின்றாள் கவி.