top of page

என் உயிரே !!! என் உறவே !!! 17

அத்தியாயம் 17:

கீர்த்தியிடம் இருந்து சத்தியமாய் பாலா இதை எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக அவள் கோபமாய் பேசுவாள் என்றவரைதான் நினைத்திருந்தான்…ஆனால் அவள் அறைவாள் என்று நினைக்கக் கூட இல்லைதன் மேல் தவறு இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே…. தன் கோபத்தினை அடக்கியபடி கீர்த்தியை முறைத்தான்

ஏற்கனேவே கண்களில் அனல் பறக்க நின்றவளை பார்த்து பேச வாயெடுத்தவனைஅவள் வார்த்தைகள் நிறுத்தின.

உங்களை எல்லாம் எங்கேயோ வைத்திருந்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் இறங்கி விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை…. அது எப்படி பாலா அடுத்தவர் வாழ்க்கையினை, அவ்வளவு அழகாக கணக்குப் போட்டு அதில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள், இதுதான் உங்கள் முதலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு காரணமா, இதையெல்லாம் உங்க தொழிலில் காட்டுங்க, மனிதர்களிடம் காட்டாதீர்கள்என்று

பட படத்தவள் சிறிது நிறுத்தி பின் நிதானமாக

இதற்கு மேல் பேசி உங்க மரியாதையை கெடுக்க நான் விரும்ப வில்லைஎனது நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லைநான் வருகிறேன். good bye ” என்றவள்

இது எல்லாவற்றிர்க்கும்” என்றபடி கிளம்பினாள்.

ஆனாலும் அவன் அவளை விடவில்லை

கீர்த்தி ஒரு நிமிடம் , இது தவறுதான், கொஞ்சம் யோசித்துப் பார். இதன் மூலம் நம் இருவருக்கும் உள்ள எத்தனையோ பிரச்சனைகள் தீருமென்றால் அது எப்படி தவறாகும்என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் அளவிற்கு அவள் பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாள்.

கீர்த்தி நில்” என்று கத்தியவனை லட்சியம் செய்யாமல் போனவளை வேறு வழியின்றி கைகளைப் பற்றி இழுத்தான். பாலா

நான் பேசுவதைக் கேட்டு விட்டு அதன் பிறகு நீ என்ன வேண்டுமென்றாலும் தீர்மானம் செய்து கொள் . மேலும் நீ விரும்ப வில்லை என்றாலும் நீ கேட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்.”

இல்லா விட்டால்”- என்று வெட்டும் பார்வையை வீசியவள் அவனிடமிருந்து தன் கையினை விடுவிக்க முயன்றாள் கீர்த்தி.

அவளது பார்வயினால் சற்றும் பாதிக்கப்படாதவன் போல் பேச ஆரம்பித்தான். இப்போது பாலாவிற்கும் முதலில் இருந்த தயக்கம் எல்லாம் சிறிதும் இல்லை... ஆரம்பித்தாகி விட்டதுஇனி அரைகுறையாக விட்டால் அது நன்றாக இருக்காது என்பதால் தன் திட்டத்தை விளக்க ஆரம்பித்தான்…… இப்போழுதும் பற்றியிருந்த கையை அவன் விட வில்லை.கீர்த்தியோ அவனிடமிருந்து கையை மீட்க அவஸ்தையாகவும், ஆத்திரமாகவும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

கடைசியில் முடியாதவள்

கையை விடுங்க பாலாஎன்று அழுத்தமாகக் கூற

சரி விடுகிறேன், ஆனால் நான் சொல்வதை முழுமையாக கேட்டு விட்டு போ. அதன் பிறகு உன் முடிவு எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். தயவு செய்துஎன்று இறங்கி பேசினாலும் அதிலிருந்த பிடிவாதம் கீர்த்தியை இம்சித்தது.

என்ன மனிதன் இவன் தான் சொல்வதைக் கேட்டாக வேண்டுமென்ற இறுமாப்பு, இதற்கு நான் பலிகடா , கடவுளே நீதான் என்னைக் காப்பாற்ற வெண்டும்என்றபடி

கைகளை வெடுக்கென்று பறிக்க, அவன் ஏற்கனவே பிடியினை தளர்த்தியிருந்ததால் , அவளின் முயற்சி வீணாகியிருந்தது

அவள் கேட்க தன்னைத்தானே முயற்சி செய்தவதை உணர்ந்தவன், தன் நிலைமையினை விளக்க ஆரம்பித்தான்.ஆனால் கீர்த்தியோ பேருக்கு அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுக்கோ அந்த இடத்தை விட்டு எப்போது போவோம் என்றிருந்தது.

கீர்த்தி சத்தியமாக உன்னோட வாழ்க்கையை வீணடிக்க நான் நினைக்க வில்லை. எனக்கும் இக்கட்டான நிலைமை, உனக்கு எப்படி உன் அப்பாவின் கவலையோ அதே போல் எனக்கு என் அப்பாவின் உயிர் பற்றிய கவலை. உன் அப்பாவிற்காவது பணம் தான். அது எப்படி வேண்டுமென்றாலும் கிடைத்து விடும். நான் இல்லை யென்றாலும் கூட உனக்கு கிடைத்து விடும். ஆனால் எனக்கு என் அப்பாவின் உயிரைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. வேறு பொண்ணே இல்லையா என்று கூட நீ நினைப்பாய் கீர்த்தி. நான் கூட வேறு மாதிரிதான் முதலில் யோசித்தேன் ஆனால் தற்காலிகமாக, அவசரத்தில் நான் எடுத்தது. அதைப் பற்றி இப்போது பேச விரும்ப வில்லை. மதுவைத் தவிர வேறு ஒருத்திக்கு என் வாழ்க்கையில் இடம் கொடுக்க என்னாலும் முடியவில்லை. ஆனால் இன்று அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை, கடந்த 3 வருடங்களாக அவள் இருக்கும் இடம் தெரிய வில்லை. மற்றவர்களைப் பொறுத்த வரை அவள் உயிரோடு இருக்கிறாளா , என்பதே சந்தேகம். ஆனால் என் உள்ளுணர்வுக்கு மட்டும் அவள் நிச்சயமாய் உயிரோடு எங்கோ இருக்கிறாள் என்று தோண்றுகிறது. இவ்வளவு நாள் அவளுக்காக என் உயிர் போகும் வரை காத்திருக்க முடிவெடுத்திருந்த காத்திருந்த எனக்கு இப்படி நிர்பந்தம் . என் முன்னால் நிற்கும் உனக்கும் என்னால் வேதனை. சத்தியமாய் கீர்த்தி இப்படி ஒரு வார்த்தையினைக் உன்னிடம் கேட்கும் முன் நான் என் மனசாட்சியைக் கொன்று விட்டுதான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நம் இருவரின் குடும்பத்திற்காக நம் வாழ்க்கையினை நாம் விட்டுக் கொடுத்தால் என்னயோசித்துப் பார்…. ”

எங்கே இடையில் மூச்சு விட்டாலும் அவள் போய் விடுவாளோ என்ற அவசரத்தில்அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையே கை மறித்தவள்

சாரி சார் உங்க கதையை கேட்குமளவிற்கு எனக்கு பொறுமையும் இல்லை, அது எனக்கு தேவையுமில்லை. என்னை மன்னித்து விடுங்க ஏதோ ஒரு உந்துதலில் என் பொறுமையை மீறி நான் அறைந்து விட்டேன். அதற்காக வருத்தப் படுகிறேன். உங்கள் காதலில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மது நிச்சயம் உங்களுக்கு கிடைப்பாள். அதற்காக என்னைப் போன்று இன்னொரு பெண்ணின் வாழ்க்கையினை வீணாக்கி ,உங்கள் வாழ்க்கையினையும் வீணாக்கி விடாதீர்கள். நான் வருகிறேன் என்று மிகவும் பொறுமையாகப் பேசியவள், தொடர்ந்து

நீங்க இந்த முடிவு எடுப்பதற்கு நானும் ஒரு காரணம் தான் தேவை இல்லாமல் என் குடும்பத்தைப் பற்றி அலுவலகம் வரை கொண்டு வந்ததால்தானே…. இப்படி நீங்கள் யோசிக்கும் படி ஆகி விட்டது…. எது எப்படியோ இந்த முட்டாள் தனமான முடிவுக்கு நான் தயாராக இல்லை. நீங்களும் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அது மட்டும் இல்லாமல் இனி நான் உங்களின் கீழ் வேலை பார்க்க முடியாது. திங்கட்கிழமை நான் என் ராஜினாமா கடிதத்தை அனுப்புகிறேன். நான் வருகிறேன்

என்று அதற்கு மேல் அங்கே நில்லாமால், அவன் பதிலையும் எதிபார்க்காமல் வேகமாய் நடந்தாள்

அவள் போவதை உணர்ந்த பாலாவுக்கு அவளை நிற்கச் சொல்ல முடியவில்லை. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்தவன் வேகமாய் அவள் பின்னே சென்று அவளின் அருகே சென்று

என்ன கீர்த்தி இது பைத்தியக்காரத்தனமாய் பட வில்லையா , உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாய். இனி நான் ஒருபோதும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். உன் மனதைக் காயப்படுத்தி இருந்தால் நான் இப்போதே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அத்தோடு இந்த விசயம் முடிந்து விட்டது என்று நினைத்துக்கொள். அதற்காக வேலையினை ராஜினாமா செய்கிறேன் என்றால் என்ன அர்த்தம் கீர்த்தி

சாரி சார் என்னால் இனி உங்களின் கீழ் வேலை பார்க்க முடியாது. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க என்னிடம் கேட்ட வார்த்தைகள் தான் நினைவில் எழும். என்னாலும் ஒரு பிடிப்புடன் உங்களின் கீழ் வேலை பார்க்க முடியாது. என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள்” என்று சொல்வதற்கும் அவள் ஸ்கூட்டியை நிறுத்தி வைத்த இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

அதற்கு மேல் பாலாவும் அவளிடம் ஏதும் பேசவில்லை.

அவள் சென்றபிறகு வெகு நேரம் கடல் அலையினை வெறித்தபடி அமர்ந்திருந்தவன் , தன்னையே நினைத்து வெறுத்தபடி நினைவுகளின் தாக்கத்தில் வெந்து கொண்டிருந்தான். இனி கீர்த்தி வரப் போவதில்லை. அவனது அவசரத்தனமான பேச்சினால் கீர்த்தியின் வெறுப்புக்கு ஆளாகி விட்டான்அது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல எம்ப்ளாயியை வேறு இழந்து விட்டான். ஏன் அவனுக்கு மட்டும் எல்லாம் எதிர்மாறாக நடக்கிறது. அவன் வாழ்க்கையில் நிம்மதி என்று ஒன்று என்றாவது வருமா

என்று ஏக்கப் பெருமூச்சை விட்டவன் மணியைப் பார்த்த போது மணி 10 ஆகியிருந்தது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாய் ஒரே இடத்தில் இருக்கிறோமா என்று திடுக்கிட்டவன் உடனே அங்கிருந்து கிளம்பினான்.

கீர்த்திக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வர வில்லை. என்ன தைரியம் இருந்தால் அவன் இப்படிக் கேட்டிருப்பான். அவனிடம் பேசிவிட்டு அவள் எப்படி வீட்டுக்கு வந்தாள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஏன் திடிரென்று இப்படி அவள் எதிர்பாராததெல்லாம் நடக்கின்றது. இருக்கின்ற வேதனை பத்தாதென்று இவன் வேறு தன் பங்குக்கு….ச்ட்க் .அம்மா அப்பாவிடம் மட்டும் பாலா கேட்டதை மட்டும் சொல்லியிருந்தால் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனையில் அவ்வளவுதான்…. தங்களால்தான் பாலா அப்படி கேட்கும் நிலை உருவானது… என்று மாய்ந்து போவார்கள் என்று கீர்த்தி தன் பெற்றோரிடம் சொல்லி இருக்கவில்லை. ஆனால் திங்கட்கிழமை ஆஃபிஸ் செல்ல வில்லை என்றால் கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டுமே. எப்படியும் நாளை அப்பாவின் பணப் பிரச்சனை தீர்ந்தபின் தன் பிரச்சனையினை மெதுவாய் சொல்லலாம் என்று முடிவு செய்திருந்தாள் கீர்த்தி.

ஏனோ தனிமை அவளுக்கு விஸ்வரூபமாய் எடுத்து ஏதேதோ நினைவுகளை தோற்றுவிக்க, அதோடு மட்டும் இல்லாமல் தலைவலியும் நேரம் ஆக ஆக கூடிக் கொண்டிருந்தது. சரி இனிமேல் இங்கிருக்க வேண்டாம் என்று ராகவ் மைதிலி அறைக்கு போனாள் கீர்த்தி

அவள் அறையினுள் தட்டிய போது ராகவ் உறங்கிக் கொண்டிருக்க மைதிலிதான் கதவைத் திறந்தாள்.

என்னடா கீர்த்தி தூக்கம் வர வில்லையா என்று கேட்கும் போதே பேச்சுச் சத்தம் கேட்டு ராகவும் விழித்து விட்டார்.

இல்லம்மா தலைவலிக்கிறது அங்கே எனக்கு தூக்கமும் வரவில்லை , நான் இன்னைக்கு உங்க கூட படுக்கவா” என்ற படி முடிந்த வரை சகஜமாகவே பேசினாள்.

என்னடா நீ , வா… வந்து படுத்துக்கஎன்றபடி தலைவலி மருந்தை எடுத்து மகளுக்கு தேய்க்க ஆரம்பித்தாள்

கீர்த்தி மைதிலியின் மடியில் தலை வைத்து படுத்தாள்.

இதற்கிடையில் ராகவனும் எழுந்து விட்டார்.

மகளின் முகத்தை உற்றுப் பார்த்தவருக்கு அவள் முகம் வாடியிருந்தது நன்றாகவே தெரிந்தது.

கீர்த்திமா நீ என்னோட பிரச்சனையை நினைத்து உடம்பை வருத்திக் கொள்கிறாய் என்று நினைக்கிறேன். இதனால்தான் நாங்க உன்னிட்ம் சொல்லாமல் இருந்தோம். அப்பாவுக்கு ஓன்றுமில்லை டா. நாளையோடு எல்லாம் சால்வ். இதை நினைத்து நீ மனதையும் உடம்பையும் அலட்டிக் கொள்ளாதேஎனும்போதே

கீர்த்திக்கு கண்களில் நீர் கரை புரண்டது.

அப்பா நீங்க நினைப்பது மாதிரி இந்த வேதனை உங்களால் அல்ல, என்னைப் பார்த்து ஒருவன் கேவலமாக பணம் வேண்டுமா , சில நாள் எனக்கு மனைவியாக நடி என்று கேட்டதால் வந்தது. இதை மட்டும் நான் உங்களிடம் சொன்னால் உங்களால் தாங்க முடியுமாஎன்று மனதிற்குள்ளாகவே மருகியவளுக்கு இன்னும் பாரம் கூட விம்ம ஆரம்பித்தாள் .

அவளின் கண்ணீர் துளி ஈரம் மைதிலியை திடுக்கிடச் செய்ய, அவளது விம்மல் ராகவை தூக்கி வாரிப் போட்டது.

இருவரும் மகளை நிமிர்த்தி

என்னடா என்னாச்சு ஏன் இப்போ அழுகிறாய் என்ன நடந்தது என்று சொல்லுஎன்று கேட்க சட்டென்று நிலைமை புரிந்து சமாளித்தவளாய்

ஒன்றுமில்லை அப்பா , என்னமோ தெரியவில்லை எப்போ இந்த மைதிலி மடியில் படுத்தாலும் கண்ணில் இருந்து அருவியாய் கொட்டுகிறது, நான் அப்பா மடியிலே படுத்துக் கொள்கிறேன்

என்றபடி கஷ்டப்பட்டு வரவழைத்த கேலிக் குரலாய் பேசியபடி ராகவின் மடியில் படுக்க , பெற்றோருக்கு மகள் பேச்சை மாற்றியது விளங்காமல் இல்லை. இப்போது ராகவின் கண்ணில் கண்ணீர் துளிர்க்க, மைதிலிக்கோ கணவனையும் மகளையும் பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தது. அங்கு நிலவிய சூழ்நிலையில் யாரும் ஒருவரை ஒருவர் தேற்ற நினைக்கவும் இல்லை. தேற்றுவதை விரும்பவும் இல்லை.


1,033 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page