என் உயிரே !!! என் உறவே !!! 15

அத்தியாயம் 15

அடுத்து வந்த 2 நாட்களில் ராகவ் பம்பரமாய் சுழன்றதில் வீடு, லேண்ட் ஆகியவை விற்க ஏற்பாடு செய்து விட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்த தொகைக்கு முடியவில்லை. அதற்கும் மேல் நண்பர் ஒருவரின் மூலம் கடனுக்கு கேட்டு வைத்தார். அதுதான் பெரிய தொகை. இதைத் தவிர அவர்கள் சேமிப்பு, நகை எல்லாம் சேர்த்து ஓரளவு நம்பிக்கை யாக இருந்தனர். அன்றைய தினம் வெள்ளி என்பதால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்ற் முடிவு செய்திருந்தார் ராகவ்.

கடந்த சில நாட்களாகவே பாலா கீர்த்தியை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். முதலில் கவி போனதால் தானோ என்று பெரிதாக நினைக்க வில்லை.மெல்ல சரி ஆகி விடும் என்றுதான் நினைத்திருந்தான்.ஆனால் இப்போதெல்லம் அவள் உம்மென்று இருப்பது போல் தோன்றியது. இவனே சில சமயம் வேறு ஏதாவது பேசினால் கூட நழுவுவது போல் தெரிந்தது. அவள் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். சில சமயம் இவனுக்கே பொறாமையாய் இருக்கும் எப்போதும் இவள் எப்படி இப்ப‌டியிருக்கிறாள் என்று. அனறு அவள் வீட்டிற்கு போய் வந்த பின்னர் அதற்கு விடை தெரியாமல் இல்லை. இப்படி ஒரு குடும்பத்தில் இருப்பவளுக்கு மகிழ்ச்சிக்கு குறைவேது. ஏன் அவனுக்கு மட்டும் என்ன‌ அவனுக்கும் பாசமான பெற்றோர்தான். அவனது நிம்மதியின்மைக்கு காரண்ம் எல்லாம் இந்த காதல் என்ற ஒன்று வந்த தால் தான். இல்லா விட்டால் என்றவன் தன்னைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு மீண்டும் கீர்த்தியிடமே வந்தான். அவன் கொடுத்த வேலையினை இன்னும் அவள் முடிக்க வில்லை. அவள் அறிவிற்கு அந்த டாஸ்க் பெரிய விசயமில்லை. பின் ஏன் இப்ப‌டி என்று நினைத்த வன் அவளையே அழைத்து காரணம் கேட்கலாம் என்று அவளை அவனது அறைக்கு அழைத்தான்

அறைக்குள் நுழைந்தவளை பார்த்தவ‌னுக்கு அவள் முகத்தில் இருந்த கவலைக் கோடுகள் அப்பட்டமாய் தெரிந்தது. இருந்தாலும் உடனே அவளிடம் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், அலுவலக வேலையினைப் ப‌ற்றி விசாரித்தவன் , இன்று மாலைக்குள் அதை தன‌க்கு முடித்து தர வேண்டும் என்றவுடன் அவனைப் பார்த்து விழித்தாள்

“என்ன கீர்த்தி

“சார் இன்னைக்குள் முடிக்க முடியாது, இன்று உடனே முடிக்க வேண்டுமா “ என்று குற்ற உணர்வில் தடுமாறினாள் கீர்த்தி.

அவளின் பதிலில் முகத்தைச் சுருக்கியவன் “ நான் உங்களுக்கு கொடுக்கும் போது நேற்று முடித்து தர வேண்டுமென்று சொல்லி இருந்தேன், நீங்கள் என்னவென்றால் இன்று கூட முடியாது என்கிறீர்கள்” என்றூ முடித்த போது கம்பெனியின் MD என்ற‌ முறையில் அவனது குரலில் கொஞ்சம் அனல் அடிக்கதான் செய்தது.

பாலாவின் முகச் சுழிப்பில் சிறிது அதிர்ந்தவள்

“ சார் , இந்த ஒருதடவை மட்டும் என்னை மன்னைத்துக் கொள்ளூங்கள், நான் திங்கட்கிழமைக்குள் முடித்து விடுகிறேன்” என்று கீர்த்தி மென்று முழுங்கி சொன்னது தான் தாமதம்

“ என்ன மேடம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் , இன்று முடிக்க வேண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் உங்கள் வசதிக்கு பேசினால் எப்படி , இங்கு நான் முதலாளியா இல்லை நீங்களா , எனக்கு இன்று கூட அதிகம் தான் . உங்களிடம் கொடுத்தால் முடித்துக் கொடுப்பீர்கள் என்று நினைத்தால் நீங்களும் இப்படி செய்கிறீர்கள். எனக்குத் தெரியாது இன்று மாலைக்குள் எனக்கு முடித்தாக வேண்டும் கீர்த்தி.இப்போ நீங்கள் போகலாம் “ என்று வார்த்தைகளில் அனல் கக்கினான்

அதற்கு மேல் அங்கு நின்றால் அழுது விடுவோமோ என்று கூட கீர்த்திக்கு தோன்றியது. அவளது தவறுதான் , குடும்ப பிரச்சனையில் அவள் கொஞ்சம்ம் அவள் கவன‌ம் பிசகி விட்டாள் எனும் உண்மை உறைக்கதான் செய்தது. ஏற்கனவே அவள் இருந்த மன நிலையில் பாலாவின் வார்த்தைகள் வேறு அவளைத் தாக்க , கண்கள் கசிந்து விட்டது.

இனி நிற்கக் கூடாது என்று அவசர அவசரமாய்

“ சரி சார்” என்ற் வார்த்தைகள் கூட வெளியே வராதது தொண்டைக்குள் அடைத்தது.எப்படியோ நிமிராமல் பேசி விட்டு அவள் வெளியே வந்தாலும் கண்ணீர் துளிர்த்த அவள் கண்கள் பாலாவின் கவன‌த்தில் இருந்து தப்ப வில்லை.

அவளை அனுப்பி விட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் , அவள் அப்படி போனது உறுத்த மீண்டும் அழைத்தான்.

உள்ளே வந்தவளை நன்றாக உற்றுப் பார்த்தான். தனது அறையினை விட்டு போனதிலிருந்து அழுதி்ருக்கிறாள். இவன் அழைத்த வுடன் முகம் கழுவி வந்திருக்கிறாள் என்பது அவளைப் பார்த்த வுடனே விளங்கியது.

”சொல்லுங்க சார் “ எனும் போதே அவள் குரல் கமறியது.

”உட்காருங்க கீர்த்தி முதலில், “

” நீங்கள் திங்கட்கிழமை முடித்துக் கொடுத்தால் போதும், நான் பேசி விட்டேன், இப்போதாவது நார்மல் ஆவிற்களா “ என்று சினேக‌மாய் புன்னகைத்தான்

”தேங்க் யூ சார்” என்றபடி கிளம்ப எத்தனித்தவளை “இருங்க இருங்க‌ கீர்த்தி நான் உங்களிடம் பேச வேண்டும்” என்றூ பாலா சொன்ன வுடன் குழப்பமாய் பார்த்தாள்

“நான் கேட்பது தவறா சரியா என்று தெரியவில்லை. தவறாய் இருந்தால் மன்னத்துக் கொள்ளுங்கள். உங்களைப் ப‌ற்றி யும் , உங்கள் திறமையைப் பற்றியும் எனக்கு தெரியும்.ஒரு பணியை உங்களீடம் கொடுத்தால் குறிப்பட்ட நேரத்திற்கு முன்னமே தருவதுதான் உங்கள் வழக்கம்.

ஆனால் இப்போது கொடுத்திருந்ததோ உங்கள் அறிவுக்கு சாதாரணம் வழக்கமாக