என் உயிரே !!! என் உறவே !!! 14

அத்தியாயம் 14:

ராகவன் சோர்வாய் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு தான் நினைத்தது போல் தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த மைதிலி கணவனின் அருகே ஓசைப் படாமல் அமர்ந்தாள்.

ஆனால் நேரிடையாகக் கேட்காமல்

என்னங்க தலைவலிக்கிறதா, இல்லை அலுவலகத்தில் மிகவும் வேலையா காஃபி போட்டு எடுத்து வரட்டுமாஎன்று மட்டும் கேட்டாள்

அவள் கேட்ட வுடன் ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவர் , சட்டென்று மைதிலியின் மடியில் படுத்து அழத் தொடங்கினார்.

இத்தனை வருட வாழ்க்கையில் ராகவ் ஒருநாளும் தன்னை மீறி இப்படி அழுததில்லை..

திடுக்கிட்ட மைதிலி

என்னங்க என்ன ஆச்சுங்க , சொல்லுங்க, , ஒண்ணுமே சொல்லாமல் இப்படி சின்னப் பிள்ளை மாதிரி அழுதால் எப்படி

மெதுவாய் தன் துக்கத்தையெல்லாம் மைதிலியிடம் இறக்கி வைக்க ஆரம்பித்தார் ராகவ்

இவரது ஒப்புதலின் பேரில் ஒரு பெரும் புள்ளிக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி அளவில் கடன் கொடுத்திருந்ததையும் இன்று அவரது கணக்கில் உள்ள‌ கடன் தொகை நிலுவையில் இருப்பதைச் சொன்ன்னவர், இது அனைத்தும் வங்கியிலும் சாதாரண் விசயம் தான். ஆனால் எங்கோ இவருக்கு தெரியாமல் அந்த தொகை தவணை வாரியாகக் தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்பது போல பொய்க் கணக்கு இருப்பதுதான் இப்போதைய பெரிய இக்கட்டு. இது எப்படி நடந்தது என்று தெரிய வில்லை. இப்போது தான் கண்டு பிடித்திருக்கின்றனர்.. கடன் கட்டிய வாடிக்கையாளரைக் காட்டிலும் இத்தனை நாள் வங்கியில் பொய்யாக பணம் இருப்பதாக மோசடி செய்ததாக ராகவ் தான் உயர் அதிகாரி என்ற முறையில் பாதிக்கப் படப் போவது.

இது எனக்கும் என் கீழே இருக்கும் மதனுக்கும் மட்டும் தான் தெரியும் மைதிலி. உடனே அந்தப் பெரும் புள்ளியை விசாரித்ததில் நடந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் இப்போது கட்ட முடியாது என்றும் நஷ்டக் கணக்கை காண்பித்து விட்டார். வங்கி விதிகளின் படி அவரை அதற்கு மேல் மிரட்ட முடியாது. போலிஸுக்கு போனாலும் அவருடன் சேர்ந்து நானும் தான் மாட்ட வேண்டும். எப்படி கணக்கில் அக்கவுண்டில் கோட்டை விட்டேன் என்றே தெரியவில்லை.நான் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் இன்று இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்க மாட்டேன். இதில் ஒரு நல்ல‌ நேரம் என்ன என்றால் அவர் கண்டிப்பாக கடனைத் திருப்பித் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

அவரும் வேண்டும் என்று ஏமாற்ற வில்லையாம். அதைக் கட்டாதது கூட இப்போது பிரச்சனை இல்லை. அதைக் கணக்கில் கொண்டு வராதுதான் இப்போதைய பிரச்சனை என்று முடித்தவர் மனைவியை பார்த்தார்.

மைதிலியோ பேச மறந்தவளாய் சில கணங்கள் அவரையே பார்த்தவள், “ இப்போ என்ன பண்ற‌துங்க என்று கேள்வியுடன் கணவனை ஏறிட்டாள்

என்ன செய்வது மைதிலி ஒன்று அவர் வாங்கிய பணத்தை செலுத்த வேண்டும்,இல்லை இருவரும் கூட்டுச் சதி செய்தததாக கைது செய்யப் படுவோம்.

இப்போது மைதிலிக்கு உலகமே சுழழ்வது போல் இருந்தது. இருந்தாலும் தலைக்கு மேல் வெள்ளம் வந்தாகி விட்டது இனி கவலை பட்டு,வேதனைப் படுவது பயனில்லாத வேலை என்றூ புரிந்தது

அந்தப் பணத்தைக் கட்டி விட்டால் இப்போதைக்கு பிரச்சனை இல்லையே,”

ம்ம்ம்ம்ம், ஆனால் அதிலும் சிக்கல் உள்ள்து மைதிலி, நாம் பணத்தை கட்டினால் அது நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. மேலும் நம்பிக்கை நாண‌யம் போகாமல் கட்டிக் காத்தாலும், நாம் பொருளாதார ரீதியில் மிகவும் துன்பப் பட நேரிடும். இவ்வளவு பெரிய தொகை நம்மை மாதிரி குடும்பங்களுக்கு மிக அதிகம் இல்லையா ஆக மொத்தம் நிம்மதி என்பது இனி எப்போதும் இல்லை நம‌க்குஎன்று தளர்ந்தார் ராகவ்

பணம் என்ன பெரிய பணம் , இன்று பணத்தை இழந்தால் நாளை கூட மீட்டுக் கொள்ளலாம்,ஆனால் நம் பேரில் இருக்கும் நம்பிக்கை ஒருமுறை போனால் மீண்டும் பெற முடியுமாஎன்ற மைதிலியின் வார்த்தையினை ஆமோதித்தவர்

தேங்க்ஸ் மைதிலி, நான் என்ன‌ நினைக்கிறேனோ அதையே நீயும் சொன்னது எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது. என்று மனைவியின் சொல்லில் ஆறுதல் கண்டவர் அதற்கு மேல் இருவருமாகச் சேர்ந்து என்ன‌வெல்லாம் செய்து பணத்தை திரட்டலாம் என்று பேச ஆரம்பித்தனர்.

சென்னையின் புறந‌கர் பகுதியில் இருக்கும் லேண்ட், இப்போது அவ‌ர்கள் இருக்கும் ப்ளாட் இதை விற்றாலே 40 ல‌ட்சம் வரும், அதன் பிற‌கு கீர்த்தியின் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருக்கும் பணம் மற்றும் மைதிலி கீர்த்தியின் நகைகள் ஒரு 10 லட்சத்திற்கு தாண்டும். மேற்கொண்டு வரும் பாதி தொகையினை வெளியில் தான் வாங்க வேண்டும். ஆனால் இதெல்லாம் இன்னும் 10 நாட்களுக்குள் முடித்தாக வேண்டும் இல்லையெனில் இவ்வளவு செய்தும் பிரயோசனமில்லை. கணக்கு முடிவு நாளைக்குள் இதெல்லாம் முடியுமா என்பதே பிரமிப்பாக இருந்தது.

அமெரிக்காவில் இருக்கும் விஸ்வம் அண்ணனிடம் சொல்லி ஏதாவது பணம் புரட்டலாம் என்றால் அங்கேயும் அவர்கள் நிலை சரி இல்லை.

ஏன் அவ‌ர்களிடம் இந்த நிலையினைக் கூட, ப்ளாட் விற்கப் போகிறோம் என்று கூட சொல்ல முடியாது. ஜாதகத்தில் இங்கு இருப்பது நல்லதல்ல என்று கூறியதால் வேறொரு வீட்டுக்கு குடியேறி விட்டோம் என்றுதான் சொல்லி சமாளிக்க வேண்டும் . அது கூட தற்காலிகமாகத்தான்,

இப்போது கீர்த்தியிடமும் சொல்லாமல் தவிர்க்கலாம் என்றெல்லாம் படுத்தவர்களுக்கு தூங்கா இரவாக‌த்தான் இருந்தது அந்த இரவு.

அதற்கு அடுத்த நாளும் ராகவ் வெகு சீக்கிரமாகவே அலுவல‌கம் சென்று விட்டார் ராகவ். முந்தைய தினத்தைப் போல் தந்தையைத் தேடாமல் அவர் கிளம்பிச் சென்றிருப்பதை உறுதி செய்தவள் மைதிலியையும் தொந்தரவு செய்யவில்லை அலுவலகம் கிளம்பும் வ‌ரையில் மைதிலியின் வெறுமை படர்ந்த வார்த்தைகளையோ கவலை தோய்ந்த முகத்தையோ கீர்த்தியால் கணிக்க முடிய வில்லை.

மைதிலியிடம் சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றாள் கீர்த்தி. கீழே வந்து வழக்கமாய் தன் தாய்க்கு கையசைப்பதற்காக நிமிர்ந்தவ‌ள், வெற்றிடத்தை மட்டும் பார்க்க என்னை மறந்து மைதிலிக்கு அப்படி என்ன வேலை என்ற‌படி ஸ்கூட்டியை ஆஃப் செய்துவிட்டு வேகமாய் படிகளில் தாவினாள் கிர்த்தி.

கீர்த்தி சென்று விட்டதும் அவள் எப்போது கிளம்புவாள் என்று பார்த்தபடியே இருந்தவள்,அவள் சென்றதுதான் தாமதம் ,தான் வழக்க‌மாய் கொடுக்கும் பால்கனி கையசைப்பைக் கூட‌ மறந்த‌வளாய் அவசர அவசரமாக் தன் தோழி அபிக்கு கால் செய்ய ஆரம்பித்தாள்

அவளிடம் தன் நகைகளை விற்றுக் கொடுக்கவும், மேலும் வ‌ட்டிக்கு க‌டன் தரும் இடங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தாள் மைதிலி

கதவைக் கூட தாழிடாமல், தான் வந்தது கூட தெரியாமல் மைதிலி பேசிக் கொண்டிருந்ததையும், அவள் பேசிய‌ விதத்தையும், விசயங்களையும் கேட்டவள் தன் அம்மாவிற்கு இப்போது எதற்கு இத்தனை பெரிய தொகை, அது மட்டுமில்லாமல் இன்னும் கடன் வேறு என்று தனக்குள்ளாக கேட்டபடி மீண்டும் தன் தாயின் தொலைபேசி உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

கீர்த்தி கேட்டுக் கொண்டு இருப்பது கூட தெரியாமல் மைதிலியும் பேசிக் கொண்டு இருந்தாள்

இல்லை அபி , எனக்கு ஒண்றும் இல்லை. கீர்த்திக்கும் திருமண வயது வந்து விட்டதல்லவா காலாகால‌த்தில் திருமணம் செய்து வைத்தால் நாமும் நிம்மதியாய் இருக்கலாம் அல்லவா. நகைகள் எல்லாம் கொஞ்சம் பழைய மாடலாக இருக்கின்றன‌. அதையெல்லாம் இன்றைய மாடலுக்கு மாற்றி புதியதாய் செய்யலாம் என்று ஒரு எண்ணம். அத‌னால்தான் என்று தோழியிடம் சமாளித்தவள் மேலும் கீர்த்திக்கு இன்னும் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை எங்களுக்கு . அவரிடமும் சம்மதம் வாங்கி விட்டேன். எனும் போதே கீர்த்தி மைதிலியின் முன் நின்றாள்.

அவளை அங்கு எதிர்பாராத மைதிலி திணறியப‌டி சரி அபி நான் மதியம் பேசுகிறென், நீ இதை பற்றி விசாரிக்க‌ மறந்து விடாதே.” என்றப‌டி போனை வைத்தவள் கீர்த்தி எப்படி , ஏன் வீட்டிற்கு வந்தாள் என்று தனக்குள்ளாகவே கேட்ட‌வளுக்கு தான் அவசர‌த்தில் செய்த தவறு புரிந்த‌து. “அய்யோ அவசரப் பட்டு விட்டோமே , கொஞ்சம் நிதானித்து அவளை வழக்கம் போல் வழி அனுப்பி இருந்தால் இப்ப‌டி மாட்டியிருக்கத் தேவை இல்லையோ, கேட்டிருப்பாளோ என்று அவள் முகத்தை ஆராந்தவளுக்கு சந்தேகத்திற்கு இடமே இல்லாத்து போல் கீர்த்தியின் முகத்தில் கேள்விக் கணைகளும், கோபமும் எதற்காக தன் அம்மாவிற்கு இவ்வள‌வு பெரிய தொகை என்ற ஆராய்ச்சியும் அப்பட்டமாகத் தெரிந்தது.

இனி சமாளிக்கத்தான் வேண்டும் என்று கீர்த்தியை பார்த்து புன்னகையை வரவழைத்தவளாய்

சாரிடாமா, அம்மா ஏதோ ஒரு அவசர‌த்தில்என்று சமாதானம் பேசிய மைதிலியை இடையிலயே கை மறித்தாள் கீர்த்தி

இப்போ உங்களுக்கு எதுக்கு பண‌ம் அதுவும் நகைகளை வேறு விற்றுஎன்றூ கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினாள் கீர்த்தி

உன்னோட திருமணத்திற்கு தாண்டா, நீதான் அபி ஆண்டியிடம் பேசிக்கொண்டிருந்தததைக் கேட்டாயே ,அதன் பிறகு உனக்கு ஏன் இந்த கேள்விஎன்று மைதிலியும் கொஞ்சம் கீர்த்திக்கு ஈடு கொடுத்துதான் பேசினாள்

கீர்த்திக்கு மைதிலி பேசப் பேச இன்னும் கோபம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

யாருக்கு எனக்காமா எனக்கென்ன இன்னும் ஒரு வாரத்தில் திருமண‌மா, இல்லை இவ்ளோ பெரிய தொகை வரதட்சணை கேட்குமளவுக்கு மாப்பிள்ளையை எனக்குத் தெரியாமல் தேடி விட்டீர்களாஎன்று தாயின் சொல்லை வைத்தே எள்ளி நகை ஆடியவள்

அழுத்தமாய் பேச ஆரம்பித்தாள்

அபி ஆன்டியிடம் வேண்டுமென்றால் என் திருமணம் என்று சாக்கு சொல்லி இருக்கலாம். எனக்கு எதற்கு என்ற உண்மைக் காரணம் மட்டும் சொல்லுங்கள் போதும், என்னை ஏமாற்ற‌ப் பார்க்காதீர்கள்

மைதிலி எரிச்ச‌லின் உச்சத்திற்கு போய் விட்டாள். வேண்டாம் என்றால் விட வேண்டியதுதானே நாங்கள் இருவர் நிம்மதி இழந்து தவிப்பது போதாத, இவளும் வேறு அனுபவிக்க வேண்டுமா,என்று யோசித்த‌வளாய்

உனக்காகத்தான், உன் திருமணத்திற்குத்தான், வெறொன்றுமில்லை, நீ இதில் தலை இடவும் தேவை இல்லை.எங்களுகக்குத் தெரியும் எது நல்லது கெட்டது என்று, நீ உன் வேலையினை மட்டும் பார், இப்பொது ஆஃபிஸிற்கு கிளம்புகிற வழியைப் பார், தேவை இல்லாத விசயத்தில் எல்லாம் தலையிட முய‌லாதே, “ என்று கடுமையாகவே கீர்த்தியை பேசினாள்

தன் தாயிடமிருந்த்து இவ்வளவு கடுமையான வார்த்தையை எதிர்பார்க்காதவள் சற்று நிலை தடுமாறினாள்தான்.இருந்தாலும் தான் அப்படி என்ன கேட்டு விட்டோம் ஏன் இவ்வளவு அதிகமாய் கடுமையை காட்டுகிறார்கள் என்றப‌டி மைதிலியை முறைத்தப‌டி அப்பாவின் சம்மதத்தோடுதான் என்று சொன்னார்களே என்றப‌டி ராகவுக்கு போன் செய்தாள்